நீர்ப்பறவைகளின் தியானம்

பத்து வருடங்களுக்கு முன்பு “நீர்ப்பறவைகளின் தியானம்” கதை தொகுப்பை வாங்கினேன்.  அப்போது என்னை கவர்ந்த முதல் அம்சம் என்பது இதில் உள்ள கதைகள் எல்லாமே படிப்பதற்கு “ஜாலி”யாக இருந்தது என்பதுதான். “ஜாலி” என்பது வாசிப்பின்பம் / சுவாரஸ்யம் / சலிப்பின்மை என்ற அர்த்தத்தில் சொல்கிறேன்.  “இடம் பெயர்தல்” பேய்கதை பாணி, “காணாமல் போனவனின் கடிதங்கள்” என்பது துப்பறியும் பாணி கதை என விதிவிதமான கதை கலவையாக இருந்த யுவனுடைய கதைகள் எனக்கு பிடித்திருந்தன.