புனித கெவினும் கரும்பறவையும்

தமிழாக்கம்: இரா. இரமணன்

புனித கெவின் தனது குடிலில்
மண்டியிட்டு கை விரித்து
பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார்.
குடிலோ மிகக் குறுகியது.
ஆதலால்
விரித்த உள்ளங்கைகள் குறுக்கு சட்டமாய்
வெளியில் நீண்டிருந்தது.
அந்த நேரம்
கரும்பறவை ஒன்று அதில் முட்டையிட்டு
அடைகாக்கத் தொடங்கியது.

கதகதப்பான முட்டையும்
பறவையின் சிறிய மார்பும்
உள்ளடங்கிய தலையும் நகங்களும்
உணர்ந்த கெவின்
நிரந்தரமான வாழ்வின் வலைப்பின்னலில்
தான் இணைந்தது கண்டார்.
கருணையால் உள்ளங்கனிந்தார்
வெயிலோ மழையோ
இனி
குஞ்சு பொரித்து சிறகு முளைத்து
பறக்கும்வரை வாரக்கணக்கில்
மரக்கிளையென அவர் கரம்
நீண்டிருக்க வேண்டும்.

இந்தக் கதை முழுதும் கற்பனை தானே?
ஆதலால்
கெவினாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.
அவர் எதுவானார்?
சுயத்தை மறந்தாரா?
அல்லது எல்லா நேரமும்
கழுத்திலிருந்து கீழ்வரை
முன்கையிலிருந்து பரவும் வலியால்
துடித்தாரா?
அவர் விரல்கள் மரத்துபோனவா?
முழங்காலிருப்பதாக இன்னமும் உணர்ந்தாரா?
கீழுலகத்தின் கண்மறைக்கும் இருட்டு
அவருள்ளே படர்ந்துவிட்டதோ?
தூரம் என்றொரு சிந்தனை இருந்ததோ?
அன்பெனும் ஆழ்நதியின்
பிரதிபலிப்பில் தனித்திருந்த அவர்
‘பலன் எதிர்பாரா பணி’
என பிரார்த்தித்திருந்தார்.
சுயம் மறந்து, பேடு மறந்து
நதிக்கரையில் நதியின் பெயர் மறந்து
உடல் தனியே செய்யும் தவம் அது.
*
ஷேமஸ் ஹீனி (Seamus Heaney)-1939-2013 -ஐரிஷ் கவிஞர்.1995ஆம் ஆண்டில் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றவர். ஆக்ஸ்ஃபோர்ட மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகங்களில் கவிதைத்துறைப் பேராசிரியராக பணி புரிந்தவர்.இவருடைய கவிதைகளில் நிலம்,வீடு,நாடு ஆகியவற்றோடு நெருக்கமான பிணைப்பிறகும் தப்பித்தல், சுதந்திரம், சாகசம் ஆகிய உணர்வுகளுக்கும் இடையில் ஒரு நெருக்கடியான உணர்வுகளைக் காணலாம் எனக் கூறப்படுகிறது.’புனித கெவினும் கரும்பறவையும்’ என்கிற பாடல் சீமாஸ் ஹியானே -தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் 1988-2013 என்கிற தொகுதியிலிருந்து எடுக்கப்பட்டது.இந்தப் பாடலில் ஐரிஷ் தொன்மைக் கதையை ஏற்றுக்கொண்டும் கேள்விக்குள்ளாக்கியும் அவர் எழுதியுள்ளதாக தெரிகிறது.இந்தப் பாடலின் பொருள் குறித்து பல்வேறு இணைய தளங்களில் விளக்கங்கள் உள்ளன.குறிப்பாக thepoemoftheweek.blogspot.com/2007/02/poem-of-week-2122007-st-kevin
Poetry By Heart | St Kevin and the Blackbird
ஆகிய கட்டுரைகளை படிக்கலாம்.

St Kevin and the Blackbird
And then there was St Kevin and the blackbird.
The saint is kneeling, arms stretched out, inside
His cell, but the cell is narrow, so
One turned-up palm is out the window, stiff
As a crossbeam, when a blackbird lands
And lays in it and settles down to nest.
Kevin feels the warm eggs, the small breast, the tucked
Neat head and claws and, finding himself linked
Into the network of eternal life,
Is moved to pity: now he must hold his hand
Like a branch out in the sun and rain for weeks
Until the young are hatched and fledged and flown.
*
And since the whole thing’s imagined anyhow,
Imagine being Kevin. Which is he?
Self-forgetful or in agony all the time
From the neck on out down through his hurting forearms?
Are his fingers sleeping? Does he still feel his knees?
Or has the shut-eyed blank of underearth
Crept up through him? Is there distance in his head?
Alone and mirrored clear in love’s deep river,
‘To labour and not to seek reward,’ he prays,
A prayer his body makes entirely
For he has forgotten self, forgotten bird
And on the riverbank forgotten the river’s name.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.