பெயர்தல்

தமிழாக்கம்: இரா. இரமணன்

புலம் பெயர்தல் எப்போதுமே கடினம்.
எந்த வறட்சி,கொள்ளை நோய்
காலங்களையும் கேட்டுப் பாருங்கள்.
1947ஐ கேட்டு பாருங்கள்.
சரித்திர ஏடுகளையே கேட்டுப் பாருங்கள்.
புலம் பெயர்தலே இல்லாமலிருந்தால்
நாம் மெல்லுவதற்கு போதுமான
சரித்திர நிகழ்வுகள் இருந்திருக்குமா?

காலச்சக்கரத்தில்
பின்னோக்கிப் போவதும் கடினமே.
சர்கோதாவிற்கோ ஜீலத்திற்கோ மியான்வாலிக்கோ
பின்னோக்கிப் போகிறவர்களைக்
கேட்டுப் பாருங்கள்.
பழைய செங்கல் கட்டடிங்களில்
புதிய முகங்கள்.
நமக்கு பழக்கமில்லாதவர்கள்
கண்ணியமும் பாசமும் ஒழுக
‘இது இப்பவும் உங்கள் வீடுதான் ஐயா’
என்பர்.

காலமல்லாததாய் மாறிவிட்ட
காலம் குறித்து
தியானம் செய்வீர்களேயானால்
(கடந்த காலம்
உறைந்து போன ஒன்று.
கல்லாய் மாறிய ஒன்று.
இயக்கமும் துடிப்புமற்றது
காலமல்ல)
கழிக்கப்பட்ட அந்த காலத்தைப் பற்றி
தியானம் செய்வீர்களேயானால்
வானில் திரண்டிருந்தும்
பொழிய மறுக்கும்
மாரிக்கால மேகங்கள் போல
உணர்வுகள்
ஆத்ம சிந்தனையில் ஆழ்ந்துவிடுகின்றன.

அம்மா கேட்டுக்கொண்டேயிருப்பாள்
‘என் அம்மாவை நினைவில்லையா?
நீ சமையலறையிலேயே காத்துக் கிடப்பாய்.
தட்டில் சூடு பறக்க
அவள் பொரித்துக் கொடுத்ததை
எடுத்துக்கொண்டு ஓடுவாய்.
அவள் நினைவேயில்லையா?’
என் உணர்ச்சியற்ற தன்மை கண்டு
அவள் முகம்
மேலும் தொங்கிவிடும்..
இப்போது
என் அம்மாவை நான் நினைக்கிறேனா
என்று என் கனவுகள் வினவுகின்றன.
அதை எப்படி எதிர்கொள்வேன்
என்று தெரியவில்லை.
வருடங்களுக்கு ஊடாக
இடம் பெயர்வதும் கடினமே.


கேகி நா. தாருவாலா-1937-
லாகூரில் பிறந்தவர். பஞ்சாபைச் சேர்ந்த இந்தியக் கவிஞர், சிறுகதை எழுத்தாளர்.
காவல் துறை அதிகாரி.
படைப்புகள்-The keeper of the dead, Love Across the Salt Desert…
விருதுகள்-சாகித்திய அகாதெமி, பத்மஸ்ரீ

            ****************

Migrations are always difficult:
ask any drought,
any plague;
ask the year 1947.
Ask the chronicles themselves:
if there had been no migrations
would there have been enough
history to munch on?

Going back in time is also tough.
Ask anyone back-trekking to Sargodha
or Jhelum or Mianwali and they’ll tell you.
New faces among old brick;
politeness, sentiment,
dripping from the lips of strangers.
This is still your house, Sir.

And if you meditate on time
that is no longer time –
(the past is frozen, it is stone,
that which doesn’t move
and pulsate is not time) –
if you meditate on that scrap of time,
the mood turns pensive
like the monsoons
gathering in the skies
but not breaking.

Mother used to ask, don’t you remember my mother?
You’d be in the kitchen all the time
and run with the fries she ladled out,
still sizzling on the plate.
Don’t you remember her at all?
Mother’s fallen face
would fall further
at my impassivity.
Now my dreams ask me
If I remember my mother
And I am not sure how I’ll handle that.
Migrating across years is also difficult.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.