- புவிச் சூடேற்றம்: ஒரு விஞ்ஞான அறிமுகம்
- பனிப்பாறை உருகல்கள்: உலகம் வெள்ளத்தில் மூழ்குமா?
- புவிச் சூடேற்றம் – ஒரு விஞ்ஞான அறிமுகம் – பகுதி 3
- பருவநிலை சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள்
- புவி சூடேற்றம் – ஒரு விஞ்ஞான அறிமுகம் – பகுதி 5
- மனிதரின் பொறுப்பற்ற நடவடிக்கைகள்
- விஞ்ஞான ரீதியான குற்றச்சாட்டுகள்
- புவிச் சூடேற்றம் –விஞ்ஞானக் கேள்விகள்– பகுதி 8
- புவிச் சூடேற்றம்- பகுதி 9
- விஞ்ஞானத் திரித்தல்கள் – புவிச் சூடேற்றம் –பகுதி 10
- மறுசுழற்சி விவசாயம்
- புவி சூடேற்றம் பற்றிய திரிபுகள்
- புவி சூடேற்றம் பாகம்-13
- புவி சூடேற்றம் பாகம்-14
- பருவநிலை மாற்ற ஆர்வலர்கள்
- அசைவத்தை ஏன் கைவிடல் வேண்டும்?
- நம் ஸ்திரத்தன்மைக்கான 9 எல்லைகள் என்ன?
- உலகைக் காப்பாற்றிக் கொள்ளும் நான்கு நடவடிக்கைகள் என்ன?
- புவி சூடேற்றத்துக்கான தீர்வுகள் – பகுதி 19
- புவி சூடேற்ற தீர்வுகள் – பகுதி 20
- புவி சூடேற்றத்திற்கான தீர்வுகள் – பகுதி 21
- புவி சூடேற்றத்துக்கான தீர்வுகள் – பகுதி 22
- விஞ்ஞானத் திரித்தல்கள் – முடிவுரை
விஞ்ஞானம் என்பது பொதுவெளியில், ஒரு சக்தியாக, கடந்த 170 ஆண்டு காலமாகத்தான் வலம் வந்துள்ளது. அதுவரை,, விஞ்ஞானம் பத்தோடு பதினொன்றாக வலம் வந்த ஒரு துறையாகவே இருந்தது. அங்கீகாரத்துக்கே ஏங்கிய காலம் மாறி, இன்று, அளவிற்கு அதிகமாகவே மேற்குலகில் ஒரு சக்தியாக வலம் வருகிறது. மனித குலம், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத்தால், பல நன்மைகளைப் பெற்றாலும், கூடவே அதன் தீயமுகமும் ஏதோ ஒரு வகையில் மனிதகுலத்தை பாதித்துள்ளதை மறுக்க முடியாது.
முதலில், அரசாங்கங்களின் பார்வை விஞ்ஞானம் பக்கம் திரும்பக் காரணமே யுத்தங்களில் வெல்ல அது ஒரு நல்லக் கருவி என்பதாலே! இன்று, உலகம் வியக்கும் நோபல் பரிசின் அடித்தளம், வெடிமருந்து வியாபாரம் என்றால் பாருங்களேன். 20 –ஆம் நூற்றாண்டிலிருந்து, வியாபாரங்களின் பார்வை, மெதுவாக, விஞ்ஞானத்தை ஒரு லாபமீட்டும் சக்தியாக பார்க்கத் தொடங்கியதால், விஞ்ஞானத்தின் சக்தி, இன்னும் பெரிதாகியது.
விஞ்ஞானத்திற்கு பல முகங்கள் இருந்தாலும், யுத்தம் மற்றும் லாபம் என்ற இரு பெரும் மனித வேட்கைகளால், திர்த்தல்களுக்கு ஆளானது என்பது என் கருத்து. உண்மையான விஞ்ஞானக் குறிக்கோளான, இயற்கையைப் புரிந்து கொள்ளுதல் என்ற பாதையிலிருந்து விலகியதும் இதனாலேயே. இன்று, பல நோய்களுக்கு மருந்து மற்றும் சிகிச்சைகள் மனிதகுலத்திற்கு உதவினாலும், பருவநிலை மாற்றத் தடுப்பு முயற்சிகளில், மனிதகுலம் தடுமாறுவதும் இந்த இரு தீய வேட்கைகளினாலேயே.
21 –ஆம் நூற்றாண்டிலும், இந்தப் போக்கின் வேகம் குறையவில்லை என்பதே வேதனையான விஷயம். கடந்த 70 ஆண்டுகளாக, தொல்லெச்ச எரிபொருளுக்கு மாற்று என்பதில், மனிதகுலம் கவனம் செலுத்தாததன் மூலம், இதையே நிரூபிக்கிறது.

ஒரு கட்டுரை தொடரின் முடிவுரை எழுதும் பொழுது, ஒரு நிறைவான செய்தியை பெரும்பாலும் சொல்லப் பார்ப்பது வழக்கம். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக, 53 கட்டுரைகள் எழுதிய பின்னும், இந்த விஷயத்தில் ஒரு நிறைவு இல்லை என்பதே உண்மை. ஆரம்பத்தில் 25 கட்டுரைத் தொடர் இவ்வளவு வளர்ந்தும் இந்தக் குறை சற்று வியப்பளிக்கிறது. இதற்குப் பல காரணங்கள் உண்டு.
- மிகப் பெரிய அளவில் விஞ்ஞானத் திரித்தல்கள் நடக்கும், மருந்து தயாரிப்பு/வியாபாரம் பற்றி எழுதாதது மிக முக்கிய காரணம். இந்தத் துறையில் எனக்கு பரிச்சயம் இல்லாததால், இத்துறையை விட்டு விட்டேன்
- யுத்த ஆயுதங்கள் என்பது, ஒரு ராட்சச லாப நோக்கம் கொண்ட ஒரு தொழில். இதில் விஞ்ஞானத் திரித்தல்கள் மிகச் சாதாரணம். இந்தத் துறையப் பற்றி எழுதுவதில் பல சிக்கல்கள் உள்ளன. பொது வெளியில், இத்துறை பற்றிய விவரங்கள் மிகக் குறைவு. மேலும், இதன் அடிப்படைத் தொழில்நுட்பம் ரகசியங்களில் மறைந்து கிடக்கும் ஒரு துறை. இதனால், இத்துறை, இந்தக் கட்டுரைத் தொடரில் இடம் பெறவில்லை.
- இன்னும் பலத் துறைகளில் நடக்கும் விஞ்ஞானத் திரித்தல்கள் இந்தக் கட்டுரைத் தொடரில் இடம் பெறவில்லை. உதாரணம் – கனிமத் துறை, வட அமெரிக்காவின் இரு பெரும் துறைகள் – லாரிகள் மற்றும் காட்டு மரங்களை அறுக்கும் தொழில், அணு மின் உற்பத்தி, உணவுத் துறை என்று இந்தப் பட்டியல் நீளும்
- பல விஞ்ஞான சாட்சிகள் மற்றும் ஆவணங்கள் மேற்குலகில் நடக்கும் விஞ்ஞானத் திரித்தல்களை வெளிச்சம் போட்டுக் காட்ட உதவுகின்றன. ஆரம்பக் கட்டுரையில் சொன்னது போல, எந்த ஒரு நாடும் இந்த விஷயத்தில் உத்தமம் இல்லை. மற்ற வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகளில், சரியான நிகழ்வுப் பதிவு மற்றும் விஞ்ஞான அலசல் இல்லாததால், அவற்றில் எந்த விஞ்ஞானத் திரித்தல்களும் நிகழவில்லை என்று அர்த்தமில்லை
- சைனா, வட கொரியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் நடக்கும் விஞ்ஞானத் திரித்தல்கள், பொதுவெளிக்கு வராமல் இந்த நாடுகள் பார்த்துக் கொள்கின்றன. சைனா மற்றும் ரஷ்யாவில் விஞ்ஞான முன்னேற்றம் சற்று பயமளிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது. மேற்குலகில் நடக்காத புதிய தில்லாலங்கடிகள் வெற்றிகாமாக இங்கு நடந்து கொண்டிருக்கலாம். இவை நமக்குத் தெரிய வாய்ப்பில்லை
இந்தக் கட்டுரைத் தொடரை எழுதத் தொடங்கிய நாட்களில், புனைப் பெயரில் எழுதலாமா என்ற ஒரு எண்ணமும் இருந்தது. ஆனால், இன்று விஞ்ஞானத் திரித்தல்களைப் பற்றி வியாபாரங்கள் கவலப்படுவதே இல்லை என்ற அளவிற்கு இந்த நோய் பரவி விட்டதால், அதைக் கைவிட்டேன்.
இந்தக் கட்டுரைத் தொடரில் உள்ள சில விஷயங்கள் சிலருக்கு நெருக்கமாகப் புரிய வாய்ப்புண்டு, மற்றவை, வாசகர்களின் வாழ்க்கையில் கட்டுரை சார்ந்த நிகழ்வைச் சந்தித்தால், அக்கட்டுரையுடன் ஒரு தொடர்பு ஏற்பட வாய்ப்புண்டு. டால்கம் பவுடர் திரித்தல்கள் பற்றிய ஒரு கட்டுரையைப் படித்த வாசகர், எனக்கு, தனிப்பட்ட முறையில், பவுடரைப் பயன்படுத்தும் பழக்கத்தை விட்டு விடுவதாக எழுதியிருந்தார். இப்படி எழுதிய இத்தனை கட்டுரைகளை வாசித்த வாசகர் சிலருக்கு இப்படி ஒரு விழிப்புணர்வு ஏற்பட்டால், அதை இந்த கட்டுரைத் தொடரின் உண்மையான வெற்றியாக நினைக்கிறேன்.
பருவநிலை மாற்றம் சார்ந்த திரித்தல்கள் கட்டுரைகளில், பல விஞ்ஞான பதிவுகள் மற்றும் இணைய தளங்களில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. மேலும், இத்துறையில் உங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள, சில முக்கிய சுட்டிகள் இங்கே:
நட்சத்திரமதிப்பீடு | விளக்கம் |
* | ஆரம்பநிலை புரிதலுக்கான சுட்டி |
** | சற்று விவரமானது. அவ்வளவு டெக்னிகல் அறிவு தேவையில்லை |
*** | மிகவிவரமானது. கொஞ்சமாவது டெக்னிகல் அறிவு தேவை |
**** | மிகவும்டெக்னிகலான ஆராய்ச்சிக்கட்டுரை |
All articles contributed well in understanding the directions Science takes now a days. Very recently an investigation started in India on a pharma manufacturer. The firm, it seems, bribed around Rs 1000 crores to Doctors for recommending Dolo- 650, an widely used paracetamol tablet in general and liberally during Covid 19.