- பருவம் – சகாப்தத்தின் குரல்கள்
- ஷோபா சக்தியின் ‘கொரில்லா’ – ஒரு பார்வை
- அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன்
- ஒற்றன் – அசோகமித்திரன்
- நிறமாலை
- ரா. கிரிதரனின் “ராக மாலிகை”
- லஜ்ஜா: அவமானம்
- துருவன் மகன்
- கம்யூனிஸப் பொன்னுலகில் அகதிகளுக்கு இடமில்லை
- பாகீரதியின் மதியம் – விமர்சனம்
- புத்தக அறிமுகம்: கடலெனும் வசீகர மீன்தொட்டி
- களியோடை
- தத்வமஸி: புத்தக அறிமுகம்
- பாமாவின் கருக்கு
- பர்மா வழிநடைப் பயணம் – வெ. சாமிநாத சர்மா
- கண்ணனை அழைத்தல்
- பாரதியின் இறுதிக்காலம்
- குவெம்புவின் படைப்புலகம்
- தி.ஜானகிராமனின் மோகமுள் வாசிப்பு அனுபவம்
- “இரு புறமும் சுழலும் கடிகாரம்” பற்றி
- புறத்தைச் சொல்லி அகத்தை அடையாளம் காட்டும் எழுத்து
- இமையம் எழுதிய ‘எங் கதெ’ நாவல் பற்றி
- ஆகாரசமிதை
- உயர்ந்த உள்ளம்
- எல்லைகள் அற்ற வெளி
- மிருத்யுஞ்சய்
- ப. கல்பனாவின் குரல்: பார்வையிலிருந்து சொல்லுக்கு
- தப்பித்தல் நிமித்தம்
- ரணங்கள்: ஃ பிர்தவுஸ் ராஜகுமாரன்
- ஒளிர்நிழல் – கரிப்பின் விசாரணை
- சு. வேணுகோபாலின் ‘வலசை’ நாவல் பற்றி
- பசு, பால், பெண்
- தெய்வங்கள் ஓநாய்கள் ஆடுகள்
- வெங்கட் சாமிநாதன் – தொடரும் பயணம்
- திருவரங்கன் உலா
- ச. தமிழ்ச்செல்வனின் ’பேசாத பேச்சு’
- அஃகம் சுருக்கேல்
- அறுபடலின் துயரம் – பூக்குழி
- ஆழி, அக்னி, அரவிந்தன் நீலகண்டன்
- தீப்பொறியின் கனவு
- புத்தக அறிமுகம்: முருகவேளின் ‘முகிலினி’
- மொட்டு விரியும் சத்தம்- நூல் அறிமுகம்
- தீர்த்த யாத்திரை – தீராத யாத்திரையின் சுயமி
- இரா. முருகனின் நளபாகம்
- பின்கட்டு
- யதார்த்தங்களின் சங்கமம் – நீலகண்டம் நாவல்
- நீர்ப்பறவைகளின் தியானம்
- ஷோபாசக்தியின் இச்சாவும் மானுட அவலமும்
எஸ். ராமகிருஷ்ணனின் ‘பின்கட்டு’ – பாலியல் ஒழுக்கநியதிகளைப் பரிவுடன் களைத்துப் போடும் கதைகள்
- ஜார்ஜ் ஜோசப்
க்ரியா ராமகிருஷ்ணன் எழுதிய, ‘பின்கட்டு’ சிறுகதைத் தொகுப்பு, உடல் அவஸ்தைகளையும் உடல் தேவை என்று வந்துவிட்டால் பிறழ்ந்துவிடும் மன இயக்கத்தையும் விசாரணைக்கு உள்ளாக்கும் கதைகளைக் கொண்டுள்ளது.
இதில் இடம்பெற்றுள்ள ஐந்து கதைகளும் 1970களுக்கு முந்தின காலகட்டத்தில் நடை, கசடதபற போன்ற இதழ்களில் வெளிவந்தவை. நவீன மொழி நடையில் அமைந்துள்ளவை.
வயது மூத்தவளுடன் உறவு, தன்பால் உறவு, குடும்பத்தில் உள்ளவளோடு உறவாடும் இன்செஸ்ட் உறவு, தாயின் மீது சிறுவன் கொள்ளும் மறைமுக நாட்டம், உடலுக்கு ஏங்கி அலையும் இளைஞன் என ஐந்து பொருண்மையில் கதைகள் இடம்பெற்றுள்ளன.
இக்கதைகளின் சொல்முறையில் பெரிதாக வேறுபாடில்லை. ஒன்றின் தொடர்ச்சியே மற்றொன்று அல்லது ஒரு கதையில் நிகழ்ந்தவையே மாற்றுக்கோணத்தில் வேறு கதையாக வந்துள்ளது என பிரமை கொள்ளச் செய்யுமளவு ஒற்றுமை கொண்டுள்ளது. இதற்குக் காரணம் அனைத்து கதைகளும் பாலியல்சார் சூழலுக்கு ஆளான ஆணின் பார்வையிலிருந்தும் பாவத்திலிருந்தும் நகர்கின்றன என்பதுதான்.
’கோணல்கள்’ கதையில் இடம்பெறும் சங்கரராமன் என்பவனே ’சங்கரராமனின் நாட்குறிப்புகள்’ என்ற கதையிலும் தொடர்ந்து வருகிறான். தலைப்புகள் இடாவிட்டால் அனைத்து கதைகளையும் ஒரு நாவலின் கலைத்துப் போடப்பட்ட தொடர்கள் என்று கொள்ளலாம்.
உதாரணமாக, ’அவளிடம் சொல்லப்போகிறான்’ என்ற முதல் கதையில் ஒருவன் சிறுவயதில் தன் வயதைவிட பல மடங்கு அதிகமுள்ளவளிடம் கொண்ட உறவும் அதைத் தொடர்வதற்கான விருப்பமும் முள்ளாய் நெளிகிறது. அவன் வளர்ந்துவிட்டதால் வெளியூர்ச் சென்றிருக்கிறான். மீண்டும் அவன் ஊர்திரும்புகிறான். அவளிடம், “I shall have nothing to do with you” என்று சொல்லத் தவிக்கிறான். இந்தக் கதையை டிவுசர் போடும் பள்ளிப் பருவத்து நினைவிலிருந்து துலங்கிய கதை என்று கணக்கெடுத்துக் கொண்டால், சங்கரராமனின் நாட்குறிப்பு கதையில் வரும் சங்கரராமனோ தாயை வாஞ்சையோடு முத்தமிடுகையில் நனவிலி மனதில் சபலம் எட்டிப்பார்க்க விலகல் உண்டாவதையும் சஞ்சலமாக நினைவில் தங்கிவிட்டதையும் சிறுபிராயத்து நினைவிலிருந்து கூறுகிறான். அந்தக் கதை ஓடிபஸ் தன்மை கொண்டதுதான் என வாசகர்கள் விளங்கிக்கொள்ள ஆசிரியரே ஃபிராய்டை தொட்டுச் செல்கிறார். அக்கட்டத்திலிருந்து வளர்ந்தவனான சங்கரராமன் சங்கரன் என்பவனோடு உறவில் ஈடுபடுகிறான். அவனுடைய விருப்பம் தன்பால் உறவாக மாற்றமடைகிறது. சங்கரராமனின் நாட்குறிப்பு – கோணல்கள் கதைக்குமான கால இடைவெளியை நிரப்பும் காலத் தன்மையோடு அமைந்திருக்கிறது ’பின்கட்டு’ என்னும் கதை.

பின்கட்டு கதை தனது கணவனை நீங்கிய சித்தி மகளோடு வளரிளம் ஆண் இணைவதாக முடிகிறது. அச்சூழல் அமைவதற்கான விழைவின் படபடப்பு (Sexual tension) அவர்களுக்குள் நிகழ்வதைச் சரளமாகவும் நெருடலின்றியும் கட்டமைத்துச் செல்கிறது.
இப்படி நான்கு கதைகளையும் இடம்மாற்றி வாசித்தால், குறிப்பாக அதில் கதைச்சொல்லிகளாக, சிறுவன் – காளை – விடலை என வரும் ஆண்களை ஒரே நபராகக் கொள்ளவும் இடமுண்டு.
கதைகளில் அனைவரும் எதிர்கொள்வது பாலியல் தொடர்பான ஈடுபாட்டுச் சிக்கல்களையே. எல்லோருக்குள்ளும் அதுகுறித்த குற்றவுணர்வு இழைந்தே உள்ளது. இந்தக் கதைகளில் மற்றவையுடன் தொடர்பற்றிருப்பது, ‘மழைக்காகக் காத்திருப்பவன்’ என்னும் இறுதி கதை மட்டுமே. ஆனால் கதைக்கரு என்ற அளவில் அதுவும் உடலுக்காக ஏங்கித் தவிக்கும் இளைஞனது போராட்டத்தையே குறிக்கிறது. கதையில் அவன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் மழை அவன் யாசிக்கும் பெண்ணாகிறாள். மழைக்கு எதிர்பார்த்து, காலத்தை அவன் ஏரியைக் கடக்கிறேன் என்னும் வழியில் துரத்திட, பருந்து சமூக மனம் என்ற அம்சத்தில் அவனைத் துரத்தித் தாக்குகிறது. என்னை மிகவும் ரசிக்க வைத்தது இக்கதையே.
அனைத்து கதைகளும் வளரும் – வளர்ந்த ஆணின் பார்வையில், அவன் விரும்பும் – எதிர்கொள்ளும் பாலுறவைக் குறித்துச் சொல்லப்பட்டவை என்றாலும் அவற்றில் இடம்பெறும் பெண் பாத்திரங்களும் வலுவாகவே கட்டமைக்கப்பட்டுள்ளன.
கோணல்கள் கதையில் சங்கரராமன் சொல்லும் குடும்பக் கதையில் அவனது தாய் ராட்சசியாக, அவச்சொற்களால் காயப்படுத்துபவளாக, காரணமின்றி அச்சமூட்டும் முன்கோபியாக, இருப்பிடத்தை நரகமாக்கும் ஒருத்தியாகச் சித்திரிக்கப்பட்டுள்ளாள். இதுவெல்லாம் அவளது பெரிய மகன் அவளைவிட்டு நீங்கிய பின்பே நடக்கிறது. மேலும் மேலும் மூர்க்கமடைகிறது. சங்கரராமனின் குறிப்புகள் கதையில் மட்டுமல்லாது கோணல்கள் கதையிலும் ஃபிராய்டியத் தன்மை உள்ளது. என்ன அதில் வெளிப்படையாக இதில் கொஞ்சம் மறைவாக.
முதல் கதையான ’அவளிடம் சொல்லப்போகிறான்’-இல் பெரிய பெண்ணுடன் அவன் உறவில் இருக்கும்போதும் அவள் இவனை மிகத் துச்சமாகக் கையாளும் விதம் வெளிப்படுத்தப்படுகிறது. அவன் என்னதான் வளர்ந்தாலும் அவனை அவள் சிறுவனாகவே பாவிக்கும் பார்வை அழுத்தமாகச் சொல்லப்படுகிறது. இதுவே அவனிடம் ஒரு விலகலையும் காயத்தையும் உண்டு பண்ணிவிடுகிறது. அவள் ஏன் இப்படி இருக்கிறாள்? வயது மட்டும்தான் காரணமா? என்கிற விசாரணையிலிருந்து தனித்து வாழும் பெண்ணின் உளவியல் மர்மம் என கதை விரிந்துகொண்டே செல்கிறது.
இதில் இடம்பெறும் எல்லாப் பெண்களும் ஒருவிதத்தில் ஆண்களால் துன்பத்துக்கு ஆளாக்கப்பட்டவர்களாக, துரோகமிழைக்கப்பட்டவர்களாக, புறக்கணிக்கப்பட்டவர்களாக, பயன்படுத்தப்பட்டவர்களாகச் சித்தரிக்கப்பட்டுள்ளனர். அப்படியெனில், ஆணினால் உண்டான வாதையைத் தனக்குக் கிடைக்கும் வேறு ஆண் மூலமாக (சிறுவனாயினும்) மருந்திட்டுக் கொள்ள விழைகின்றனர் பெண்கள் என்று கொள்வதா! இந்தக் கோணத்தில் கதைச்சொல்லி சாகடிக்கப்பட்டு கதையை நகர்த்தும் பெண்கள், மையமாகிவிடுகின்றனர். கதையும் நிகழ்வுகளும் அர்த்தங்களும் அவர்கள் வசம் சரணடைந்துவிடுகின்றன. இந்த அம்சத்திலிருந்து தள்ளி நிற்கும் கதையாக, ‘மழைக்காகக் காத்திருந்தவன்’ மட்டுமே எஞ்சியுள்ளது.
ஒரே அமர்வில் வாசிக்கக்கூடிய தொகுப்பாயினும் வெகுநாட்கள் மனதில் ரீங்காரமிடக் கூடிய கதைகளாக உள்ளன.
சமூகத்தின் அறமதிப்பீடும் உறவுகள் குறித்த கட்டுப்பாட்டு விதிகளும் எத்தனை லஞ்சையாய் மீறப்படக்கூடியவை, நெகிழ்வுத்தன்மை கொண்டவை எனக் காட்சிப்படுத்துகின்றன ராமகிருஷ்ணனின் கதைகள்.