தமிழாக்கம் : இரா. இரமணன்

ஞாயிற்றுக் கிழமைகளிலும் என் தந்தை
அதிகாலையில் எழுந்து
விறைக்கும் குளிரில் ஆடைகளை சரி செய்து கொள்கிறார்.
வார நாட்களின் உழைப்பில்
வெடித்துப் போன விரல்களினால்
குவித்திருக்கும் தணல்களை
எரிய விடுகிறார்.
யாரும் ஒருபோதும்
அவர்க்கு நன்றி சொன்னதில்லை.
நான் விழித்து
குளிரை சிதறடிக்கும்
ஓசை செவி மடுக்கிறேன்.
அறைகள் கதகதப்பானதும்
அவர் அழைப்பார்.
மெதுவாக எழுந்து ஆடைகள் அணிவேன் .
அந்த வீட்டில் காலா காலமாக
நிறைந்திருக்கும் சினங்களுக்கு
முகம் கொடுக்கிறேன்.
குவிந்திருக்கும் குளிரை விரட்டியதோடு
என் நல்ல காலணிகளையும் மெருகேற்றியிருக்கும்
அவரிடம் வேண்டா வெறுப்பாக பேசுகிறேன்.
அன்பின் எளிமையும் தனிமையும் குறித்து
எனக்கென்ன தெரியும்?
எனக்கென்ன தெரியும்?
Sundays too my father got up early
and put his clothes on in the blueblack cold,
then with cracked hands that ached
from labor in the weekday weather made
banked fires blaze. No one ever thanked him.
I’d wake and hear the cold splintering, breaking.
When the rooms were warm, he’d call,
and slowly I would rise and dress,
fearing the chronic angers of that house,
Speaking indifferently to him,
who had driven out the cold
and polished my good shoes as well.
What did I know, what did I know
of love’s austere and lonely offices?
தமிழாக்கம்: இரா. இரமணன்
ராபர்ட் ஹேய்டன் ( 1915-1980) அமெரிக்க கவிஞர். மிச்சிகன் பல்கலைக் கழகத்தில் படிக்கும்போது பிரபல கவிஞர் W.H.ஆடன் இவருக்கு ஆசிரியராக இருந்திருக்கிறார். ஹேடன் முதலில் பிஸ்க் பல்கலைக்கழகத்திலும் பின் மிச்சிகன் பல்கலைக் கழகத்திலும் ஆசிரியராக இருந்தார்.
‘ Those Winter Sundays’ என்கிற இந்தப் பாடலும் ஆசிரியர் குறிப்பும் கொலம்பியா பல்கலைக்கழக பதிப்பகம் வெளியிட்ட ‘The Top 500 Poems’ என்கிற நூலிலிருந்து எடுக்கப்பட்டது.
Very good translation. Especially the last lines touch our hearts. Congratulations to the translator….கோரா