அனாமதேயமாக காப்பி குடித்தல்

தமிழாக்கம்: இரா. இரமணன்

என் நினைவின் ஓரங்களில்
காப்பியின் பழுப்பு
சிற்றலையாய் மோதுகிறது.
சொகுசான தூக்கத்தில் புரண்டு கொண்டிருக்கும் நான்
முழுவதும் விழிப்பதை சில நொடிகள் தள்ளிப் போட முயற்சிக்கிறேன்.
‘ காபி ‘ என்றவள் புன்னகைக்கும் குரலில் கேட்கிறாள்.
பரிமாறும்
அந்தக் காப்பியைப் போலவே
பழுப்பின் தீற்றோடு
செழுமையும் கருமையும் கொண்டவள்.

உருவற்ற நகரில்
நியான் சத்தங்களுக்கிடையே
மெலிதான புழுக் கூண்டாய்
நீலத் திரைகள் மூடிய
எங்கள் அறையில்
புன்னகைத்து
அதை உறிஞ்சுகிறேன்.

தொலைவுப் பகுதிகளிலிருந்து
செய்திகளை தருகிறது.
தலையணை அருகிலுள்ள
அதிதெளிவு திரை.
நிலநடுக்கம், ‘தீவிரவாதிகள்,’
பெரும்தொற்றும் ஊரடங்கும்,
போராட்டங்கள்.

நகரின் விகாரமான அனாமதேயம்;
ஆனாலும் அதைத் தொட்டிலாக்கி
என் அறையெனும் புழுக்கூட்டில்
பாதுகாப்பாகவும் சொகுசாகவும்
இருக்கும் நான்
செய்திகளைப் படித்து
தலையசைத்து விட்டு
காப்பியை உறிஞ்சுகிறேன்

நீண்ட எறும்பு வரிசையாய்
கணக்கிட முடியாத தூரங்கள் நடக்கும் புலம் பெயர்வோர்.
வாழவைக்கவும் வரவேற்கவும் செய்யாத நகரங்கள் தாண்டி
செங்கல்,சுண்ணாம்பு,கண்ணாடி, சாக்கடைகள்
தாண்டி செல்கின்றனர்.

நம் நகரத்தின் உயிர் நாளங்கள்.
அவர் உழைப்பில்லாமல் எதுவும் இயலாது இங்கே.
நீலம் பாரித்த நம் பார்வைத் திரைகளுக்குப் பின்னால்
இவையெல்லாம் மறைந்திருக்கும்..

நேற்று என் ஊரில்
ஒரு ஆணவக் கொலை.
உயர் சாதிப் பெண்ணும் கீழ் சாதிப் பையனும்.
தண்டவாளத்தில் இறப்பு.
ஒரு குடும்பத்தின் பழிவாங்கும் கவுரவம்.

என் காதலியை நோக்கும்போது
ஒரு கணம் நடுங்குகிறேன்.
பஞ்சாகக் கலையும் மேகம் போல்
அவள் அலைக் கருங்கூந்தல்.
அவளின் ஆழ் மைக்கண்.
சூரிய ஒளிபட்டு வானவில் வண்ணம்
காட்டும்.
சாக்லேட் பழுப்பான சருமம்
இசையாய் எழும் அவள் மென் குரல்.

இரண்டு பெண்கள்
அடையாளங்கள் ஏதுமில்லாமல்
ஒரு அறையை
ஒரு காதலை
ஒரு வாழ்க்கையைப் பகிர்ந்து கொண்டு
பெரு நகரின் ஜன சமுத்திரத்தில்
கரைந்து போக முடிவதற்கு
வேறுபட்ட எங்களின் கடவுள்களுக்கு
நன்றி செலுத்துகிறேன்.


Coffee in Anonymity by Gitanjali Joshua
A coffee brownness laps the edges of my consciousness,
As I stir in luxurious sleep
Resisting for a few seconds more, the totality of awakening
“Coffee?” asks her smiling voice,
Rich and dark with shades of brown
As the drink she offers me
I smile and sip,
In our blue-curtained room,
Our cocoon set delicately in the neon noise
Of the anonymous city.
The high-definition screen by my pillow
Brings stories from far away
Earthquakes, ‘terrorists’, pandemic lockdowns and protests
I shake my head and sip
Safe and comfortable in my cocoon
Cradled in the garish anonymity of the city.
A long ant-line of migrants marching incomprehensible distances
Past inhospitable cities
Past brick, mortar, glass, sewer systems
The lifeblood of our city
All impossible without their toil
All invisible behind our curtained-blues.
Honour killings’ in my hometown, yesterday.
A high caste girl, a low caste boy
Death on the railway tracks,
The vengeful honour of a family.
For a moment I shudder,
As I look at my love.
Her wavy black curls, wispy unruly cloud-like
Her deep dark eyes
Her chocolate-brown skin, rainbow tinted in a ray of sunshine
Her soft lilting voice…
And thank our different Gods
For the anonymity of two young women
Sharing a room, a life, a love,
Blending into the milling crowds
Of the big city.
கீதாஞ்சலி ஜாஷுவா எழுதுவது,படிப்பது,ஓவியம்,நீச்சல் என பல தரப்பட்ட ஆர்வம் உடையவர்.தற்போது தனது முனைவர் பட்டத்திற்காக சட்டம், மதம் மற்றும் பால் ஆகியவற்றின் குறுக்கு வெட்டு குறித்து ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். காமன்வெல்த் 2022 சிறுகதைப் போட்டியில் இவரது கதை குறும்பட்டியலில் இடம் பெற்றுள்ளது.
இவரது படைப்புகளை linktr.ee/gitanjalij என்கிற இணைப்பில் காணலாம்.
மேலே உள்ள கவிதையும் ஆசிரியர் குறிப்பும் pineconereview.com தளத்திலிருந்து எடுத்தாளப்பட்டது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.