இருவரும் பயணிக்க தொடங்கினோம்
அந்த படகில்
சேர்ந்திருப்போம்
காத்திருப்போம் என்றவாறு
காதமும் கடக்கவில்லை
சிறுதுளை படகிலும் உன்னிடமும்
நானோ கைகள் நம்பிக்(கைகள்) கொண்டு துளை அடைத்துவிட
மீண்டும் ஒரு துளை
மீண்டும் ஒரு துளை
முடிந்தவரை அடைத்துவிட்டேன்
கால்கள் துணை கொண்டும் கூட
நகர இயலாமல்
நீ அமர்ந்தே இருக்க
இறுக்கமும் உன்னுள் தொற்றி கொள்ள
இனியும் இருப்பதில்லையென்று
குதித்து
பத்திரமாக நீ கரை சேர
நான்
துடுப்பிடவும்
நீந்தவும்
கைவிடவும்
அறியாமல் எங்கோ சென்றுகொண்டிருந்தேன்
நீ கூரிய
கடந்து செல்லுங்கள் என்ற சொல்லில் முழ்கியவாறு ஓட்டை படகுடன்
என்ன செய்வதென்றறியாமல்
உணர்தேன் பின்னறிந்தேன்
நீ எடிசன் வீட்டு செல்லபிள்ளையென்றும்
நான் டெஸ்லா வீட்டு குழந்தையென்றும்
கார்பொரேட் முத்தங்கள் கடைசி வரை பயணிப்பதில்லையென்று.
