தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்

வாசக அன்பர்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துகள். சுபகிருது எனப்படும் இந்த ஆண்டில் இந்திய மக்களும், தமிழகத்து மக்களும் கடந்த ஈராண்டுகளாக அனுபவித்த பெரும் தொல்லைகள் முற்றிலும் நீங்கி, சமூகத்தின் பொதுநலம், அன்றாட வாழ்க்கை, மேலும் பண்பாட்டு இயக்கங்களில் சிறந்த அனுபவங்களையும், மேம்பட்ட வளங்களையும் பெறவேண்டும் என்பது எங்கள் விருப்பம்.

இந்தப் புத்தாண்டில் வருகிற மே 8ஆம் தேதி வெளியாகவிருக்கும், சொல்வனம் பத்திரிகையின் 270 ஆம் இதழில் இருந்து மாற்றங்கள் துவங்கும்.

சுமார் ஐம்பது ஆண்டுகளாகத் தமிழிலக்கியத்தில் படைப்புகளை அளித்து ஏராளமான வாசகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் திரு.வண்ணநிலவன் அவர்களின் புது நாவல், ‘வாக்குமூலம்’ என்பது 270 ஆம் இதழில் துவங்குகிறது.

இந்த ஆண்டில் இந்திய இலக்கியத்திலிருந்து நல்ல படைப்புகளைக் கொணரும் எங்கள் முயற்சியை மேம்படுத்த முயலவிருக்கிறோம்.  பல இந்திய மொழிகளிலிருந்து படைப்புகளைத் தமிழுக்கு மொழிபெயர்ப்புகள் மூலம் கொணர்வதன் மூலம் இந்திய ஒருமைப்பாட்டை மேம்படுத்த எண்ணுகிறோம். இதற்கு வாசகர்கள், படைப்பாளிகள், மொழிபெயர்ப்பாளர்களின் ஒத்துழைப்பு தேவை.

இந்த வருடம் ஏப்ரல் 23  உலகப் புத்தக தினமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. புத்தக வாசிப்பையும், கல்வியறிவையும் உலகில் மேம்படுத்தும் இந்தத் தினத்தன்று வாசகர்கள் தம் வட்டாரப் பொது நூலகங்களுக்குத் தம்மாலான நிதியுதவிகளையோ, அல்லது சேவைகளையோ அளித்து உதவ வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இந்த இதழில் இருந்து மேலும் பல தொடர்கள் துவங்குகின்றன:

  1. Michael Marshall Smith எழுதிய The Burning Woods என்னும் நெடுங்கதை
  2. ச. கமலக்கண்ணன் எழுதும் ஜப்பானியப் பழங்குறுநூறு
  3. அபுல் கலாம் ஆசாத் எழுதும் கவிதை காண்பது
  4. வட இந்தியா முழுதும் வரலாற்றுடன் சுற்றுலா கூட்டிச் செல்லும் உத்ரா எழுதும் எங்கிருந்தோ

அனைவருக்கு எங்களின் இனிய ரம்ஜான் வாழ்த்துகள்!

One Reply to “தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.