- கோன்ராட் எல்ஸ்ட்டின் ‘இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்’
- இந்துக்கள் கோழைகளா?
- யோகாப்பியாசம் இந்துக்களுடையதா?
- ராமகிருஷ்ணர் முகம்மதியரா அல்லது கிருத்துவரா?
- ராமகிருஷ்ணர் பல மதங்களைக் கையாண்டவரா?
- சர்வதேச யோகா நாளில் ‘ஓம்’ சின்னம் இடம்பெற்றதா? வெளியேற்றப்பட்டதா?
- யோகம் இந்துக்களுடையதா எனும் கேள்வியின் முகமதிப்பு என்ன?
- கோன்ராட் எல்ஸ்ட்டின் இந்து மதமும் அதன் கலாசாரப் போர்களும் – ஏழாம் அத்தியாயம்
- கொன்ராட் எல்ஸ்ட்டின் ’இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்’
- புனித தாமஸின் மரணம்: ஓர் இட்டுக்கட்டல்
- இலா நகரில் பன்மைத்துவம்
- சதி எனும் சதி
- தார்மீக விழிப்புணர்வு யாருக்குத் தேவை – ஹிந்துக்களுக்கா? பா.ஜ.க.வினருக்கா?
- “கல்வித் துறையின் ஹிந்து வெறுப்பு” புத்தக விமர்சனம்
- ஔரங்கசீப்பைப் பற்றிய சர்ச்சை
- அயோத்தி: ரொமிலா தாப்பருடன் பாதி வழி சந்திப்பு
- குஹாவின் கோல்வால்கர் – கோன்ராட் எல்ஸ்ட்
- குஹாவின் கோல்வால்கர் – 2ம் பகுதி
- ஆர்.எஸ்.எஸ் பற்றி ஊடகத் திரிப்புகள்
- கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக…..
- மெக்காலேயின் வாழ்க்கையும் காலமும்
- ‘இந்திரப்ரஸ்தா’ – வகுப்புவாதப் பெயரல்ல
- கல்வித் துறைக் கொடுமையாளர்கள்
- மேற்கத்திய மீட்பாளர்களின் பன்முகத்துவம்
- மேற்கத்திய மீட்பாளர்களின் பன்முகத்துவம் (இரண்டாம் பகுதி)
இந்திரப்ரஸ்தா எனும் பேரூர் மஹாபாரதம் மூல பிரபலமான பாண்டவ சகோதரர்களால் தங்களது தலைநகராக நிர்மாணிக்கப்பட்டது. மூத்த சகோதரரான யுதிஷ்டிரர் தர்மராஜாவாக பதவி ஏற்றார். மூவாயிரம் வருடங்களுக்கு பிறகு 2016 நவம்பர் 22-23 தேதிகளில், திரௌபதி கனவு அறக்கட்டளை (Draupathi Dream Trust) முதல் இந்திரப்ரஸ்தா மாநாட்டை டில்லி தேசிய அருங்காட்சியகத்தில் நடத்தியது. இம்மாநாடு, இந்திரப்ரஸ்தாவைப் பற்றிய பெரிய அளவு துவக்க முயற்சியில் ஒரு பகுதி. மற்றொன்று, புரானா க்விலா (Purana qila) கோட்டையில் நடந்த கண்காட்சி. இந்த கோட்டை, முன்பு இந்திரபிரஸ்தா பேரூர் இருந்த இடத்தில் கட்டப்பட்டது என்பது தொல்பொருள் அகழாய்வு மூலம் தெரிய வந்துள்ளது.
மதச்சார்பற்றவர்கள், எதிர்பார்த்தது போல், இது சந்தேகத்திற்கிடமானது என்ற எண்ணத்தை விதைக்கப் பார்க்கிறார்கள். ராணா சாஃவி, 2015ம் ஆண்டில் அவரெழுதிய “கற்கள் என்ன சொல்கின்றன: டில்லியின்முதல் நகரமான மெஹ்ராலியில் வரலாற்றுப் பாதைகள் (Where Stones Speak:Historical Trails in Mehrauli,The first City of Delhi) புத்தகத்தில்,கோட்டையின் கீழ் கண்டெடுக்கப்பட்ட அகழ்வுகள் புராணக் கதையான பாண்டவர்களின் நகரம் இருந்தது என்பதற்கான சான்றுகளை முன்வைக்கவில்லை என வாதிடுகிறார். முக்கியமாக, 1954 நடத்திய அகழ்வாராய்ச்சியில் இந்தியாவின் முதன்மை தொல்வியல் ஆய்வாளர்,. பி.பி..லால் முக்கிய அம்சமான சாம்பல் வர்ணம் பூசிய பொருட்களை கண்டெடுக்கவில்லை என எழுதியுள்ளார். ஆனால், அறுபத்திரண்டு வருடங்களுக்கு பிறகு,இந்த கண்காட்சியின் சிற்றேட்டை தொகுத்த தொண்ணுறு வயதான லால் பின் நடத்திய பல அகழ்வாராய்ச்சிகளில் சாம்பல் வர்ணம் பூசிய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன என்றும் அவ்விடம் நிச்சயமாக பாண்டவர்களின் நகரம்தான் என அடித்துக் கூறியுள்ளார். ( சாஃவி இதை அறியாதது போல் புறக்கணிக்கிறார்). டில்லியின் மிகப் பழைய நகரம் மெஹ்ராலி அல்ல, இந்திரபிரஸ்தாதான்.

மின்னல் (Lightning)
பிரஸ்தா என்றால் திறந்த வெளி, அடர்த்தியான காட்டில் மரங்களில்லாத ஒரு இடத்தை அடைந்து அங்கு ஒரு காலனி உருவானால் அவ்விடம் பிரஸ்தா எனப்படும். ஒரு வயோதிகர் சமூகத்திலிருந்து விலகி நாட்டை விட்டு காட்டில் வாழ்க்கையை மேற்கொண்டால் அவர் வானப்பிரஸ்தர் (वानप्रस्थ) என்றழைக்கப்படுவார்.
பாண்டவர்கள் நிர்மாணித்த புதிய நகரம் இந்திரனுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது. கோடை வெய்யிலை தணிக்கும் மழைக்காலத்தை அறிவிக்கும் இடியுடன் கூடிய மழைக் கடவுள் இந்திரன். பன்னிரண்டு வேத சூரிய மாதங்கள் அல்லது அரைப் பருவங்களில், மழைப்பருவத்தின் முதல் மாதத்திற்கு இந்திரன் ஆட்சியாளர். ரிக் வேத முனிவர் வசிஷ்டரின் கொண்டாடப்படும், ‘தவளைகளின் சங்கீதம்’ பூசாரிகளும் தவளைகளும் முதல் இடியோடு கூடிய மழையை கண்டு சந்தோஷமாகக் கூக்குரலிடுகின்றனர் என்கிறது. தவளைகள் தண்ணீரைக் கண்டும், பூசாரிகள் தங்களது கடவுள் இந்திரனின் வெளிப்பாடாகவும் இதைக் கண்டு மகிழ்கின்றனர் என்கிறது. மறைமுகமாக, பூசாரிகளின் தோத்திரம் தவளைகளின் கூக்குரலோடு ஒத்துள்ளது என்ற நகைச்சுவையையும் புகுத்துகிறது.
மேலும், விருத்திரன் எனும் வேத கால பறக்கும் நாகத்தை முதன் முதலில் கொன்றவர் இந்திரன். இவர்தான்இதில் ஜீயூஸ் (Zeus), புனித ஜார்ஜ் (Saint George), ஜீக்பிரிட் (Siegfried), பியோஉல்ப் (Beowulf) போன்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்கிறார். ஈரானில், இந்திரனையே துர்தேவதையாக மாற்றிவிட்டனர். ஆனால் இந்திரனின் மறுபெயரான விருத்திரக்னா (வேதத்தில் விர்த்திருகன் என்றால் விருத்திரனை கொல்பவர்) பிரபலமான கடவுளாக மாறிவிட்டார். இந்திரன் நன்மை தீமை என்ற இரு பக்கங்களிலும் வைத்துப் பார்க்கப்படுகிறார்.
பாடலைத் தவிர்த்து தத்துவ ரீதியாக பார்க்கும்போது, அதர்வ வேதம் இந்திரனை இந்திரஜாலம் (Indra’s net) எனும் அதிநவீன கருத்தின் மத்தியில் அவரை நிறுத்துகிறது. இந்த வலையில் ஒவ்வொரு முடிச்சிலுமுள்ள வைரம் மற்ற முடிச்சுகளிலுள்ள வைரங்களை பிரதிபலிப்பதால் அனைத்துமே ஒரே சமயத்தில் பிரதிபலிக்கும். மேற்கு நாடுகள் இதற்கிணையான முப்பரிமாண படிமத்தை (Holographic Paradigm) உருவாக்க நாலாயிரம் ஆண்டுகள் பிடித்தன.
இந்திர வழிபாடு மஹாபாரத காலத்திற்குப் பின் சிறிது சிறிதாக குறைந்து விட்டது. ஆண்மை வீரத்திற்கு உருவகமாயிருந்த இந்திரன் பின்பு பாலியல் திறமைகளைப் புகழும் பாடல்களின் (அவரது மனைவி ஷாச்சியுடன்) கருப்பொருளாக மாறுகிறார். அவரது கிரேக்க எதிரிணையான ஜீயூஸ் மாதிரியே, கௌதம முனிவரின் மனைவி அகல்யையிடம் நடந்து கொண்டது போன்ற குறுகிய களியாட்டங்களில் ஈடுபடுகிறார். இவ்வாறு உல்லாசப்பிரிய பேர்வழியாக மாறியதால், மஹாபாரதத்தில் கிருஷ்ணர் அவரை மேலும் சிறுமைப்படுத்துகிறார். பிரபலமான ஒரு சம்பவத்தில், இந்திரனுடைய சீற்றத்தினால் விளைந்த மழையிலிருந்து தன் மக்களைக் காப்பாறுவதற்காக கிருஷ்ணர் கோவர்த்தன மலையைக் குடை போல் அவர்கள் தலை மேல் தூக்கிப் பிடித்துக் காப்பாற்றி இந்திரனுடைய சக்தியின்மையை அனைவருக்கும் தெரியப்படுத்தினார். இது வேதக் கடவுள்களின் சரிவை மேலும் விரைவுபடுத்தி அவர்களுடைய இடத்தில் இப்போது எல்லோரும் அறிந்துள்ள ஹிந்துக் கடவுள்களை நிலைநிறுத்தியது. கிருத்துவிற்கு முன் சில நூற்றாண்டுகளில் ஹிந்துக்கள் ஆலயங்களை ஸ்தாபிக்க ஆரம்பித்த சமயம் இந்திர வழிபாடு முழுவதுமாக நின்று போனது.
ஆனால், மீண்டும் இந்திரனுக்கு புத்தர் வளர்ச்சியில் ஒரு பங்கு கிடைத்தது. புத்தர் ஞானோதயம் அடைந்தபின் அவரது புதிய வழியைப் பரப்புமாறு இந்திரன்தான் அவருக்கு அறிவுறுத்தினார். புத்த பிட்சுக்கள் இந்திர வழிபாட்டு மரபை வெளிநாடுகளுக்கும் ஜப்பான் வரையிலும் எடுத்துச் சென்றனர். இந்திரனுடைய வஜ்ராயுதம் (மின்னல்) உடனடியாகக் கிடைக்கும் ஞானோதயத்தின் சின்னமாக மாறியது. நாமெல்லோரும் தேடுவது நமது சுபாவமாகவே (self nature, Chinese Zixing) எக்காலமும் நம்முள்ளிருக்கிறது. ஆனால் நாம் தியான மார்க்கத்தில் செல்லும்போது அது மின்னல் போன்ற ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது.
தின்பனாஹும் மதமும் (Dinpanah and the religion)
முஸ்லிம் வெற்றியாளர்கள், இந்திரப்ரஸ்தா இருந்த இடத்தை தங்கள் தலைநகரத்துடன் இணைத்துக் கொண்டபின், ஹிந்துக்களின் புனிதமான இடத்தை அழித்து தங்கள் வலிமையை எடுத்துக்காட்டும் காட்சிப்பெட்டியாக்க வேண்டும் என நினைத்து முன் கூறிய கோட்டையைக் கட்டவில்லை . முஸ்லீம்கள் இவ்விடத்தை ஆக்கிரமித்த சமயம், இந்திரப்ரஸ்தா மிக மோசமாகச் சிதிலமடைந்து பல நூற்றாண்டுகளாகி விட்டன. டில்லியின் இதர பகுதிகள் பெருமை மிக்கதாக மாறி விட்டன. ஆனால் முஸ்லிம் வெற்றியாளர்கள் தங்கள் கோட்டையை இந்திரபிரஸ்தா இருந்த இடத்தின் மேல்தான் கட்டுகிறோம் என்பதை நன்கு அறிந்திருந்தனர். முகலாய நிகழ்வுகளை வரிசைப்படுத்திய அபுல் பாசல் (Abu’l Fazl) அவருடைய ஏயின்-இ-அக்பரிAin-i-Akbari) யில் இக்கோட்டை ‘இந்திரபட்’ இடத்தின் மேல்தான் எழுப்பப்பட்டுள்ளது என எழுதியுள்ளார். முஸ்லீம் ஆட்சியாளர்கள் இந்திரப்ரஸ்தா இடத்தை தேர்ந்தெடுத்தற்கு வெளிப்படையான வகுப்புவாதக் கோணம் இருந்ததாக தெரியவில்லை.
ஆனால் , இரண்டாம் முகலாய மன்னர் ஹுமாயுன் இந்த இடத்தை தின்பனாஹ் அல்லது ‘ இஸ்லாத்தின் அடைக்கலம்’ என்ற சுவர்க்கபூமியாக மாற்றியமைக்கும் நோக்கத்துடன் பார்வையிட்டபோது இக்கோணம் மாறியது. தின் என்ற சொல் யூத மொழியில் பொதுவாக நீதி, நேர்மை, மதம், தர்மம் ஆகியவற்றை குறிப்பிடும். இரு மதங்களையும் அருகே கொண்டு வர விரும்பிய பேரரசர் அக்பர் தின் இ இலாஹி (Divine Religion) எனும் மதத்தை நிறுவியபோது இந்த பொருளில்தான் பயன்படுத்தினார். இந்து மதத்தையும் இஸ்லாத்தையும் ஒன்றிணைக்கும் இம்மதத்தை அடையாளப்படுத்துவதற்காக கங்கையும் யமுனையும் ஒன்று சேருமிடத்தில் உருவாக்கப்பட்ட நகரம்தான் இலாஹ் – அபாத் (Divine City) பின்னர், தவறாக ஆங்கிலேயர்களால் அலஹாபாத் என்றழைக்கப்பட்டது. ஆனால் இம்மதம் ஹுமாயுன் காலத்தில் இல்லை.
தின் என்ற சொல்லை அக்பர் உபயோகித்தது போலவே உருவ வழிபாடு செய்த அரேபியர்களும் உபயோகித்தனர். ஆனால், முகம்மது நபி ஆட்சிக்கு வந்த பின் இச்சொல் இஸ்லாம் மதத்தை மட்டுமே குறிப்பிடுவதாக மாறியது. இந்த குறுகிய அர்த்தத்தில்தான் சைபியூதின் [Saifu d-din(Sword of Islam)], ஹுமாயூனுடைய தின்பனாஹ் போன்ற வார்த்தைகள் புழக்கத்திற்கு வந்தன. ஹுமாயூனின் ஆட்சி குறுகிய காலமே நீடித்தது. முடிவாக டில்லி நகரம் அவர் கைவசம் வந்தபோது, தின்பனாஹ் சீர்குலைந்திருந்தது. இதை மீண்டும் கட்டுமுன் அவர் காலமாகி விட்டார். எனவே, தின்பனாஹ் ஒரு குறுகிய காலகட்டம் மட்டுமே நிலைத்திருந்தது. டில்லி நகரத்தின் விரிவான வரலாற்றில் தின்பனாஹ் எவ்வித அடையாளத்தையும் விட்டுச் செல்லவில்லை. மாறாக,இதற்கு முன்னிருந்த இந்திரப்ரஸ்தா பல நூற்றாண்டுகள் நிலைத்திருந்தது.
சமீபத்தில் வரலாற்று அறிவில்லாத சில அரசாங்க அதிகாரிகள் லூட்டியன்ஸ் உருவாக்கிய டில்லி நகரத்தின் பெயரை தின்பனாஹ் என மாற்ற வேண்டும் என நினைத்தனர். ஆனால், டில்லியின் மத்தியிலுள்ள இடத்தின் பெயரை ஒரு குறிப்பிட்ட மதச் சார்புடைய பெயராக மாற்றுவது, மதச்சார்பற்ற மனப்பான்மையுடையவர்கள் அதிகமாக உள்ள அதன் சுற்றுப்புறங்களில் சுமூகமாக சென்றிருக்காது. இந்த இடத்தின் வளர்ச்சி திட்டத்தை தின்பனாஹ் எனப் பெயரிட விரும்பிய அதிகாரிகள் இதை கருத்தில் கொள்ளாததற்கு காரணம் தின் என்ற சொல்லின் உண்மையான பொருள் இவர்களுக்குத் தெரியாததுதான். அது எவ்வாறிருந்தாலும்,இந்திரபிரஸ்தாவிற்கான சான்றுகள் மிகப் பலமாக இருந்ததால், தின்பனாஹை புறந்தள்ளி வைத்தனர்.
“இந்திரன்’ என்ற வேதக் கடவுள் பெயரைக் கேட்டவுடன், நாம் வழக்கமாக சந்தேகப்படும் ஆசாமிகள், இந்து மதத்திற்கு ஆதரவு என எதிர்ப்புக் குரல் எழுப்புவர். அது தவறானது. முப்பரிமாணப் படிமம் இந்து மதத்தை சார்ந்ததல்ல, திடீர் விழிப்புணர்வும் இந்து மதத்தினுடையதல்ல. உலகெங்கும் பலவிதமான மழைக் கடவுள்களை பார்க்கிறோம். கிரேக்கர்களிடையே ஜியூஸ், ரோமானியர்களிடையே ஜூபிடர், வைகிங் இடையே தோர், பாபிலோனில் மர்டுக், மற்றும் லெவாண்ட் பகுதியில் பால், (Ba’al). இந்திரனை காளை மாட்டுடன் ஒப்பிடுவது போல், ஜீயூஸ் இளவரசி யூரோப்பாவை எருது வடிவத்தில் கெடுத்தார், பால் ‘தங்கக் கன்று’ எனும் பைபிள் அத்தியாயத்தில் காளையாகத்தான் வணங்கப்படுகிறார்.மேலும் இதிலுள்ள நிகழ்வுகளில் மழைக்கடவுளின் இரு முகங்கள் எதிரெதிராக மோதுகின்றன. பால் மட்டுமல்லாமல், மோசஸின் கடவுள் யாவே ஆகிய இருவருமே ஒரே கடவுளின் இரு வடிவங்களாகக் காட்சியளிக்கின்றனர். யாவே,மேற்சொன்ன அளவிற்கு அறியப்படாத ஒரு மழைக்கடவுள்; வடமேற்கு அரேபியாவின் நாடோடிகளான, மிடியனைட் பெடுவின் சமூகம் வழிபட்ட மழைக்கடவுள். ஜெத்ரோ என்பவன் இச்சமூகத்தின் தலைவனாக இருந்த சமயத்தில்தான் அகதியாக வந்த இளவரசர் மோசஸ், இவர்களிடையே அடைக்கலம் புகுந்தார். இங்குதான் தனது துணைவியையும் புதிய மதத்தையும் கண்டெடுத்தார். ஆம்! முதலில் யாவே ஒரு அரேபிய மழைக் கடவுளே. பிறகுதான், பைபிள் நூலாசிரியர்கள் ‘இவரே அவர்’ (He who is)எனும் புதிய ஆனால் தவறான விளக்கத்தை கொடுத்தனர். ஜூலியஸ் வெல்ஹாசன் கூறுவது போல் யாவே என்ற பெயர் “ஹ்வ்’ (‘h-w-h’) எனும் வினைச்சொல்லின் மூலத்திலிருந்து உருவானது. குரானிலும் ‘வானில் நகரும்’ என்ற அர்த்தத்தில் காணப்படுவதும் இதற்கான சான்று. இச்சொல் இரு விதமாக உபயோகிக்கப்பட்டுள்ளது. புயல் காற்றுடன் பொழியும் மழையையும் (சூட்சுமமான சுவர்க்கம் தெளிவாகவும் அறியப்படுவது போல்), ஒரு கழுகு தனது இரையைப் பிடிக்கக் கீழே பாய்வதையும் (விதியின்விருப்பங்கள் திடீரென மாறுவது போல்) வருணிக்க உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
கோபம் நிறைந்த மழைக்கடவுள் யாவே பின் எகிப்து நாட்டிற்கு எடுத்துச் செல்லப்படுகிறார். அது எகிப்திய மன்னர் அக்நாட்டனுடைய (Akhnaton)ஒரே கடவுள் என்ற ஏகத்துவ சீர்திருத்தம் காற்றில் பரவியிருந்த காலம். இதன் பிறகு, யாவே, மோசஸையும் இஸ்ரேலியர்களையும் பாலைவனம் வழியாக வெளிநடத்திச் செல்கிறார் (Legendary Exodus). இப்போதும் அவர் சக்தி நிறைந்த, இறையாண்மையுடைய, கோபம் மிகுந்த கடவுள்தான். ஆனால், இறையியல் ரீதியாக அவர் பைபிளில் பொறாமை மிகுந்த கடவுளாக, தன்னைத்தவிர வேறெந்த கடவுளையும் பொறுத்துக் கொள்ளாத கடவுளாக மாற்றம் அடைகிறார். தீர்க்கதரிசிகளை உருவாக்கும் இந்த யாவேவைத்தான் முகம்மது நபி அல்லா (Al-Ilah-The God) எனும் பெயருடைய கடவுளாக வரித்துக் கொள்கிறார்.
இந்திரபிரஸ்தா நீடுழி வாழட்டும்! (Long Live Indraprastha)
இந்திரபிரஸ்தா என்ற பெயர் அனைவரையும் மகிழ்வூட்டும். எந்த ஒரு முஸ்லீம் படையெடுப்பாளரும் இந்திரனுடைய ஆலயத்தை இடிக்கவில்லை. ஏனென்றால், ஹிந்துக்கள் ஆலயங்களில் விக்கிரகங்களை நிறுவி வழிபடுமுன்னரே, இந்திர வழிபாடு இருந்துள்ளது. இந்திரன் மின்னலை வீசுவது, (பிற இடங்களில் தோருடைய ஈட்டியாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது) உலக விவகாரங்களில் தேவலோகத்தின் தலையீட்டைஉணர்த்தும் அருமையான படிமம். இடியும் மின்னலும் நம்மிடம் மேலோகத்திற்குள்ள கட்டிலடங்காத சக்தி என்பது அனைவரும் சாதாரணமாக ஏற்றுக் கொள்ளும் ஒன்றுதான். எனவே இதில் வகுப்புவாதத்திற்கு இடமேயில்லை. மாறாக, இந்திரனுடைய இடியோடு கூடிய மழைக்காற்று அனைத்து மதங்களுடைய சின்னம். எனவே அது பன்மைத்துவ மதங்களிடையே உள்ள அடிப்படை ஒற்றுமையின் உருவகமாகும்.
இந்திரபிரஸ்தா பாண்டவர்களுடைய குறுங்கால இராஜ்ஜியமாக நிறுவப்பட்டது. ஆனால் விதிவசமாக, டில்லி சுல்தானுடைய தலைநகராகவும், முகலாய சாம்ராஜ்ய நகராகவும், சிறிது காலம், ஹேமச்சந்திராவின் பேரரசாகவும், பின் இந்திய துணைக்கண்டம் முழுவதும் பரவியிருந்த பிரிட்டிஷ் இந்திய பேரரசின் தலைநகராகவும் தற்சமயம் இந்தியக் குடியரசின் தலைநகராகவும் மாறியுள்ளது. இது பெருமைப்பட வேண்டியதும் கொண்டாடப்பட வேண்டியதுமாகும். நேர்மைக்கு பெயர் போன ஒரு அரசன், உலகமுழுதும் மதிக்கும் பண்புகளுக்கு ஆளுமையாக இந்திரனை முன்னிலைப்படுத்த தேர்வு செய்து எழுப்பிய நகரம். எனவே பரந்த மனப்பான்மை கொண்ட தில்லிவாசிகள் எல்லாருமே ஒப்புக் கொள்வது, ஹிந்தியில் “இந்திரபிரஸ்தா அமர் ரஹே“. என்பதாகும்.
(Published in Swarajya 3 December 2016)