மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்: தஸ்தயெவ்ஸ்கி, டால்ஸ்டாய்,நிக்கோலாய் கோகோல்,ஆண்டன் செக்காவ் ஆகியோரின் சிறுகதை மொழிபெயர்ப்புக்கள் கொண்ட எம்.ஏ. சுசீலாவின் தொகுதி இப்போது நற்றிணை வெளியீடாக வெளிவந்திருக்கிறது. அவருக்கு சொல்வனத்தின் வாழ்த்துகள்!

முனுரையில் இருந்து…
உலக இலக்கியத்தின் தலை சிறந்தபுனைகதைப் படைப்பாளியாகிய ஃபியதோர் தஸ்தயெவ்ஸ்கியின் 200 ஆவது பிறந்த நாள் உலகெங்கும் உள்ள இலக்கிய ஆர்வலர்களால் கோலாகலமாகக்கொண்டாடப்படும் இவ்வேளையில் அவரது அரிய சிறுகதைகளில் ஒன்றான ”‘மரேய்’என்னும்குடியானவன்“ என்ற தலைப்பைத் தாங்கியபடி இந்தச் சிறுகதைத் தொகுப்பு வெளி வருவது எனக்குமகிழ்ச்சியும் நிறைவும் அளிக்கிறது.
தஸ்தயெவ்ஸ்கி, டால்ஸ்டாய், ஆண்டன் செக்காவ், நிகோலாய் கொகோல் ஆகிய பல எழுத்தாளர்களின் சிறுகதை மொழிபெயர்ப்புக்கள் அடங்கியது இத்தொகுப்பு. இக்கதைகளில் பலவற்றைப் பொது முடக்க காலகட்டத்தில் வெளியிட்ட சொல்வனம், கனலி ஆகிய இணைய இதழ்களுக்கும் என் நன்றி.