கமல தேவி : குறுங்கவிதைகள் நான்கு

1. கல்

தன்மீது கடந்து செல்ல
தாகத்துடன் நதிநீரில் கிடக்கும் கூழாங்கல்

2. மலர்

எட்டுதிசைகளிலும் மத்தகம் உயர்த்தி நிற்கும் யானைகளின் காலடிகளில்
பத்திரமாய் உறங்குகிறது
நெருஞ்சியின் சிறுமுகை.

3. பாலை

ஒருசொட்டு நீர்போதும்
அந்த ஓவியத்தை நிறம் மாற்ற…

4. உகிர்

தன் மீது கால்பதித்து தத்தி நடந்து முதன்முதலாக பறக்கக் கற்றுக்கொண்ட பறவை கட்டிக்கொண்ட கூட்டை
வேடிக்கை பார்த்தபடி இருக்கிறது கிளை

4 Replies to “கமல தேவி : குறுங்கவிதைகள் நான்கு”

  1. சில வார்த்தைகளில் வெவ்வேறு உணர்வுகளை அழுத்தமாக உணர்த்துகின்றன இக்கவிதைகள்.

    இரண்டு வரிகளே மனதை பெரும் தூரத்திற்கு கடத்துவதுடன் ஆழத்திற்குள்ளும் அழுத்துகிறது…

    கமலதேவி, கதைகள் மட்டுமல்லாமல் கவிதைகளையும் தொடர்ந்து எழுதவேண்டுமென வேண்டிக்கொள்கிறேன்.

    -கா.சிவா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.