
என்னறையில்
உருவில்லா விருந்தினருடன்
உரையாடுகிறேன்.
அவர்கள்
விவாதம் எதுவும் செய்வதில்லை.
நான் களைத்துப் போகும்வரை
காத்திருக்கின்றனர்.
பின்பு
உணர்வெதுவும் காட்டா
முகத்தினராய்
நழுவிச் செல்கின்றனர்.
அவர்களின் கடவுள்களை
நான் நேசித்தாலும்
அவர்களின் இன் முறைகளை
மாற்றும் வழியறியேன்.
மொழியே இடையே
தடையாய் நிற்கும் .
மற்றவை எல்லாம்
பொதுவாய் சிறக்கும்.
மறு புறம்
அன்னை தெரசாவிடம்
அடைக்கலாமானோர்
அவர் மடியில் மரணிப்பது கண்டு
அனைவரும் அவர் திறம் அறிகின்றனர்.
நீங்கள் அறிந்துகொள்ள வேண்டியது
புராணங்களோ திருமணச் சடங்குகளோ அல்ல.
ஊசிமுனைக் காதுக்குள்ளே நுழைந்து
சுயத்தை மறக்கும்
உறுதியே வேண்டும். .
திருப்தி அடையா விருந்தினர்
கலைந்து செல்கின்றனர்.
பழையதோ புதியதோ
அவர்கள் மந்திரத்தை
ஒருபோதும் கைவிடப்போவதில்லை.
அவர்களின் இன நினவெளியில்
பொருந்தா அனாதைகளான
நீங்கள் .
நகரம் பற்றி எரியும்போது
அன்னியமான உங்கள்
அவதானிப்பு திறன்களை
சும்மா புதுக்கிக் கொண்டிருக்கிறீர்கள்.
Nissim Ezekiel