சொல்வனம் வாசகர்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துகள். இந்த வருடமாவது தொற்று நோய்கள் முற்றிலுமாக அகன்று இயல்பு வாழ்க்கை திரும்பும் என்று எதிர்பார்க்கிறோம். இயற்கையின் சீற்றங்களும் தணிந்து உலகெங்கும் மனிதர் நன்னிலைக்குத் திரும்பினால் அது உபரி நன்மை.
***

ஓரிரு தினங்கள் முன்பு எழுத்தாளர் அம்பை அவர்களுக்கு சாஹித்ய அகதமியின் பரிசு வழங்கப்பட்ட தகவல் கிட்டியது. இந்தப் பரிசு அவருடைய சிறுகதைத் தொகுப்பான ‘ சிவப்புக் கழுத்துடன் ஒரு பச்சைப்பறவை’ என்ற புத்தகத்துக்கு வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
சொல்வனத்தில் பல படைப்புகளையும், கட்டுரைகளையும் அம்பை அவர்கள் வழங்கி இருக்கிறார்கள். அம்பை அவர்களைச் சிறப்பிக்க ஒரு முழு இதழையும் சொல்வனம் பிரசுரித்திருக்கிறது. (இதழ்-200 – சொல்வனம் | (solvanam.com))

இனி வரும் இதழ்களில் அம்பை அவர்கள் சில பத்தாண்டுகளாகச் சார்ந்து இயக்கி வரும் ஓர் ஆவணக் காப்பகமான ஸ்பாரோ வெளியிட்டிருக்கும் சில பதிப்புகளிலிருந்து பல கட்டுரைகளைப் பிரசுரிக்கவிருக்கிறோம். இவை இந்தியாவின் சிறந்த பெண் சாதனையாளர்களைப் பற்றிய தகவல் கட்டுரைகளாக இருக்கும்.
சொல்வனம் பதிப்புக் குழுவினர் அம்பை அவர்களுக்குத் தங்கள் வாழ்த்தைத் தெரிவிக்கின்றனர்.
***
Great news!
காலதாமதமாக கிடைத்திருக்கிறது.
அம்மையாருக்கு வாழ்த்துக்கள்.