தேள் கொட்டிய இரவில் – நிஸ்ஸிம் எஸிகியொல்

நிஸ்ஸிம் எஸிகியொல்

[தமிழாக்கம்: இரமணன்]

அம்மாவை
ஒரு தேள் கொட்டிய இரவு
நினைவிலிருக்கிறது.
பத்து மணி நேரம் விடாது பெய்த மழை
அந்த தேளை
ஒரு அரிசி மூட்டைக்கடியில்
பதுங்க வைத்தது.
அந்த இருட்டு அறையில்
அதன் விஷக் கொடுக்கால்
சுளீரென கொட்டிவிட்டு
மீண்டும் மழைக்கே
சென்றுவிட்டது.

ஈக்கள் கூட்டமென
மொய்த்தனர் குடியானவர்கள்.
விஷத்தை முறிக்க கடவுளின் நாமத்தை
நூறு முறை உச்சரித்தனர்.
சுட்ட மண் சுவற்றில்
ராட்சச தேள்களென
நிழல்கள் விழும் விளக்குகளுடன்
அதை தேடினர்.
கிடைக்காத சலிப்பில் ‘உச்’ கொட்டினர்.

தேள் அசையும் ஒவ்வொரு நிமிடமும்
அம்மாவின் இரத்தத்தில்
விஷம் ஏறிக்கொண்டேயிருக்கிறது என்றனர்.
அது அசையாமலும் இருக்கலாம் என்றனர்.
‘உன் கடந்த பிறவிப் பாவங்கள்
இன்றிரவு தொலைந்து போய்விடும்’ என்றனர்.
‘இன்று நீ படும் துன்பம்
அடுத்த பிறவியின் துயரை குறைக்கும்’ என்றனர்.
‘நீ அனுபவிக்கும் வலி
இந்த மாய உலகில்
உன் தீய செயல்களுக்கும்
நற் செயல்களுக்கும் இடையேயான
சமன்பாட்டை குறைக்கலாம்.’ என்றனர்.
‘இந்த விஷம்
ஆசையில் அமைந்த உடலையும்
பேராவலின் உணர்வையும்
தூய்மைப்படுத்தட்டும்’ என்றனர்.

ஒவ்வொருவரின் முகத்திலும்
எல்லாம் அறிந்த அமைதி.
தரையிலிருந்த அம்மாவை சுற்றி
அவர்கள் அமர்ந்தனர்.
அக்கம்பக்கத்தார்கள் கூட்டம்,
மெழுகுவர்த்திகள்,லாந்தர் விளக்குகள்
பூச்சிகள் எல்லாம் கூடிக்கொண்டே போயின.
மழையும் விடாது பெய்தது.

பாயில் படுத்திருந்த அம்மா
வலியால் துடித்து முனகிக் கொண்டிருந்தார்.
எல்லாவற்றையும் ஐயுறும்
பகுத்தறிவாளர் அப்பா
சாபங்களையும் வாழ்த்துகளையும்
பொடிகளையும் மிக்சர்களையும்
மூலிகைகளையும் எல்லாம் கலந்து
முயற்சித்தார்.
கடிவாயில் பரஃபின் மெழுகு ஊற்றி
பற்றவைத்தும் பார்த்தார்.
அம்மாவின் உடலை
சூடு பதம் பார்த்ததையும்
பூசாரி ஒருவர் மந்திர உச்சாடனத்தால்
விஷம் இறக்கும் சடங்கையும்
நான் கவனித்துக் கொண்டிருந்தேன்.

இருபது மணி நேரத்திற்குப் பிறகு
விஷத்தின் கடுப்பு மாறியது.
‘கடவுளே உனக்கு நன்றி .
என் பிள்ளைகளைக் கடிக்காமல்
தேள் என்னைக் கடித்ததே’
என்று மட்டும்
அம்மா கூறினாள்.

(புதன்கிழமை, 28 மார்ச், 2012)

                    *******************
Night of the scorpion 

I remember the night my mother
was stung by a scorpion. Ten hours
of steady rain had driven him
to crawl beneath a sack of rice.

Parting with his poison - flash
of diabolic tail in the dark room -
he risked the rain again.
The peasants came like swarms of flies
and buzzed the name of God a hundred times
to paralyse the Evil One.

With candles and with lanterns
throwing giant scorpion shadows
on the mud-baked walls
they searched for him: he was not found.
They clicked their tongues.
 
With every movement that the scorpion made his poison moved in Mother's blood, they said.
May he sit still, they said
May the sins of your previous birth
be burned away tonight, they said.
May your suffering decrease
the misfortunes of your next birth, they said.


May the sum of all evil
balanced in this unreal world
against the sum of good
become diminished by your pain.
May the poison purify your flesh
of desire, and your spirit of ambition,
they said, and they sat around
on the floor with my mother in the centre,
the peace of understanding on each face.
More candles, more lanterns, more neighbours,
more insects, and the endless rain.

My mother twisted through and through,
groaning on a mat.
My father, sceptic, rationalist,
trying every curse and blessing,
powder, mixture, herb and hybrid.
He even poured a little paraffin
upon the bitten toe and put a match to it.
I watched the flame feeding on my mother.
I watched the holy man perform his rites to tame the poison with an incantation.

After twenty hours
it lost its sting.
My mother only said
Thank God the scorpion picked on me
And spared my children.

Nissim Ezekiel
 Wednesday, March 28, 2012

One Reply to “தேள் கொட்டிய இரவில் – நிஸ்ஸிம் எஸிகியொல்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.