முதல் அற்புதம்

நாளை கி.பி முதலாம் ஆண்டு ஆரம்பிக்கிறது, ஆனால் அவனிடம் யாரும் சொல்லவில்லை. அப்படி யாரும் சொல்லியிருந்தாலும் அவனுக்கு அது புரிந்திருக்கபோவதில்லை, ஏனெனில் அவன் அது பேரரரசரின் ஆட்சியில் நாற்பத்து மூன்றாம் வருடம் என எண்ணிக்கொண்டிருந்தான், அதை விட, அவனது எண்ணங்களில் வேறு விடயங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அவனது தாயாருக்கு இன்னும் அவன் மீது கோபம் இருந்தது. ஒரு சராசரி பதின்மூன்று வயது சிறுவனை விடவும் தான் அன்று அதிக குறும்புத்தனம் செய்துவிட்டதை அவனும் ஒத்துக்கொள்ளத்தான் செய்தான். அவனது தாயார் கிணற்றுக்கு தண்ணீர் எடுக்க கொடுத்தனுப்பிய குடத்தை உடைக்கவேண்டும் என அவன் நினைக்கவில்லை. காலில் கல் தடுக்கியது தன் தவறு அல்ல என…