நெருப்பு
யாவரும் அஞ்சுவர் நெருப்பை
ஓ ஆம்! முற்றிலும்!
எதையும் இரையாக்கும்
அடியோடு அழித்துவிடும்
தீ கங்கைத் தீண்டினால் நீ
எரிந்து சாம்பர் ஆகி விடலாம்
அல்லது
அல்லது புடம் போட்ட தங்கம்
போல் மிளிரலாம்
ஆனால் அது பெரிய சூது –
பகடை ஆட்டம்
கிளை விட்டுக் கிளை தாவும் மந்தியின்
திண்மை வேண்டும்
பலரும் துணிவதில்லை
எனவே
ஒரு அக்காவைப் போலவோ
ஒரு மீராவைப் போலவோ அல்லது
தியாகேசரைப் போலவோ
சுடர் விட்டு எரியாமல்
கணப்பில் குளிர் காயவே விரும்புகின்றனர்:
விரும்பி
மந்திர தந்திரங்களை யாசித்து
ஒரு குருவையோ, மனித சாமியையோ
வேறு பல அகட விகடர்களையோ
நம்பி வழி நடக்கின்றனர்
அவர்களால்
உயிரற்ற கவிதையைத் தான்
சமைக்க முடிகிறது

நீர்
ஆசைக் கடல் நீந்திய
கப்பலின் ஏரா –
ஓடி ஆய்ந்த இந்த எலும்புக் கூடு
இன்று விடுதலை இரக்கும்
புவி ஈர்ப்புக்கு நல்கி
ஆழியுள் மூழ்கி
அடித்தளம் எய்தி அங்கு
விசித்திர மீன்களின் நடுவே
மண்ணில் புதைந்து
அணுக்களாய்ச் சிதறி
புவியின் பிரம்மாண்ட
வெளியிடையே
உறங்க விரும்பும்
ஆயினும்..
ஆயினும்?
ஆயினும் எருமை மேலூர்ந்து
காலன் வரும் நேரம்
ஓ வென்று அழுது ஓலமிட்டு
ஊர் கூட்டி நீ
காலுதைத்து முரண்ட
தரதர வென்று இழுத்துத் தான்
செல்ல வேடும் உன்னை
நன்கறிவேன் நான்