மூன்று சிறிய பறவைகள் ஒரு வரிசையில்
கவனிப்பிலாழ்ந்தபடி அமர்ந்திருந்தன.
ஒரு மனிதன் அந்த இடத்திற்கருகே கடந்து சென்றான்.
அதன் பின்னேதான் அந்த சிறிய பறவைகள் ஒன்றையொன்று இடித்துக் கொண்டன.
அவை சொல்லின, “அவனால் பாட முடியுமென அவன் நினைக்கிறான்”
சிரிப்பதற்காக அவை தங்கள் தலைகளைப் பின்னுக்குச் சாய்த்தன
விசித்திரமான முகபாவத்தோடு
அவை அவனைக் கவனித்தன.
மிகுந்த ஆர்வத்தோடு இருந்தன,
ஒரு வரிசையில் இருந்த அந்த மூன்று சிறிய பறவைகள்.

ஆங்கிலத்திலிருந்து தமிழில், நளினி
Very nice