- கொரொனா காலத்தில் ஹைக்கூ
- “அலர்தலும் உதிர்தலும்” – ஹைக்கூ கவிதைகள்
- “தோன்றி மறையும் மழை” – ஹைக்கூ கவிதைகள்
- கடிகாரச் சுவர் – அந்தரத்தில் கணங்கள்
- “முடிவிலா பயணம்” – ஹைக்கூ கவிதைகள்
1.
அலைநீர் கொத்தி
அளையும் உள்ளான் குருவி
அலையெழு செங்கதிர்.
2.
ஓயாத விழுதலிசை
வேரூறும் பாறை நிசப்தம்
மனமெங்கும் அருவி.

3.
உதிக்கும் முழு நிலா
மர நிழல்கள் தழுவ நகரும் –
நெருங்கவியலா அண்மை.
4.
இலை திரும்பும் காடு
கூடு சேரும் பறவை – அங்கு
எதேச்சையாய் நான்.

5.
கரிய வானம்
ஒளிர்வெண் கிரண மலர்
தெளி மென்னகை.
6.
இரவு நகரும் வெளி
புது நிலவின் கீற்று ஒளி
மலைப்பாதை வழி.
7.
வானும் வழியும்
உதிர்பனி வெள்ளை – காட்டுச்செடி,
நகரும் சக்கரங்கள்.
***
