செயற்கைச் சர்க்கரை ரசாயனங்கள் – பகுதி 2

This entry is part 27 of 30 in the series விஞ்ஞான திரித்தல்

இதற்கு முந்தைய பகுதியில், சில செயற்கைச் சர்க்கரை ரசாயனங்களைப் பற்றிப் பார்த்தாலும், இந்தப் பகுதியில் அலசப்போகும் ஆஸ்பர்டேம் (Aspartame) என்ற செயற்கைச் சர்க்கரை ரசாயனம், மற்ற எல்லாவற்றையும்விட அதிக சர்ச்சைக்குள்ளான ஒன்று. சர்ச்சைகள், சதித் திட்டங்கள் என்று ஒரு தமிழ் சினிமாவே எடுக்கும் அளவுக்கு விஞ்ஞான, சமூக வலைத்தளங்கள், வியாபாரம் என்று பல பரிமாணங்கள் இதற்கு உண்டு. சுருக்கமாகச் சொன்னால், முற்றிலும் முடிவாகாத எல்லா செயற்கைச் சர்க்கரை ரசாயனங்களைப்போல, இதுவும் இழுபறியில் இருக்கும் ஒன்று. ஆனால், அதிகம் சேற்றை வாரி இறைத்ததால், இதைப் பற்றிய பல விவரங்கள் இன்று வெட்ட வெளிச்சமாகியுள்ளது. அத்துடன், வியாபாரங்கள் மற்றும் அரசாங்கங்கள் இந்த விஷயத்தில் எடுக்கும் முன்னுக்குப்பின் முரணான முடிவுகள், மேலும் இந்த ரசாயனத்தின் பயன்பாடு மற்றும் வியாபார லாபம், இதைச் சந்தேகத்திற்கு ஆளாக்கியுள்ளது உண்மை.

ஆஸ்பர்டேம் – பின்னணி

1965–ல் ஜேம்ஸ் ஸ்லேட்டர் என்னும் விஞ்ஞானி, சியர்ல் (Searle) என்னும் நிறுவனத்தில் வேலைசெய்யும்போது உருவாக்கப்பட்டது ஆஸ்பர்டேம். சாக்கரீனைப்போல, இதுவும் யதேச்சயாகக் கண்டுபிடிக்கப்பட்டது. சியர்ல் நிறுவனம், ஆஸ்பர்டேமுக்கு உரிமைக்காப்பும் பெற்றது மட்டுமல்லாமல் ஆஸ்பர்டேம் விற்பனையால் ஏராளமான லாபமும் சம்பாதித்தது மறுக்க முடியாத உண்மை. உலகின் மிகப் பெரிய உணவுத் தயாரிப்பாளர்கள், எடைத்தடுப்பு தாரக மந்திரமாக ஆஸ்பர்டேம் கலக்கப்பட்ட பிஸ்கட்டுகள், கேக்குகள், மிட்டாய்கள், குளிர்பானங்கள் என்று விற்றுத்தள்ளி வந்துள்ளார்கள்.

ஆஸ்பர்டேம் – விஞ்ஞானம்

ஆஸ்பர்டேம், இயற்கைச் சர்க்கரையைவிட 200 மடங்கு இனிப்பானது. வியாபாரத்தில் இதற்கு Nutrasweet மற்றும் Equal என்ற வணிகப் பெயர்கள் உண்டு. இதன் இனிப்புக்கு கலோரி (சக்தி) விலை அதிகம் கொடுக்கத் தேவையில்லை. மிகக் குறைவான கலோரிகளை உட்கொண்டபின் உடலில் சேர்க்கிறது. உதாரணத்திற்கு, ஒரு பாக்கெட் Nutrasweet–ல் உள்ள இனிப்புக்குச் சமமான இரண்டு டீஸ்பூன் சர்க்கரையில் இருப்பதோ 32 கலோரிகள். ஆனால், நான்கு கலோரிகளையே இந்த Nutrasweet பாக்கெட் நம் உடலில் சேர்க்கிறது. ஆஸ்பர்டேம், அதிக வெப்பச் சூழலில் உறுதியான நிலையை இழந்துவிடுவதால், கேக் போன்ற விஷயங்களுக்குப் பயன்படாது. ஆஸ்பர்டேம் என்பது இரு அமீனோ அமிலம் மற்றும் ஒரு மீதைல் மூலக்கூறுகள் கொண்ட கலவை.

ஆஸ்பர்டேம் – வியாபாரம்

ஆஸ்பர்டேம் மற்றும் சியர்ல் நிறுவனத்தைப் பல சந்தேகமான நடவடிக்கைகள் என்றும் சூழ்ந்து வந்துள்ளன. இதனிடையில், 1985–ல், சியர்ல் நிறுவனம் அமெரிக்க விவசாய ராட்சச நிறுவனமான மோஸோண்டோவுடன் இணைந்தது. GMO விஷயத்தில், பல சர்ச்சைகளுக்கு மத்தியில் இயங்கும் மோஸோண்டோவுடன் சியர்ல் இணைந்தது பொதுவெளியில் சந்தேகங்களை அதிகரித்ததே தவிர, குறைக்கவில்லை.

உலகின் ராட்சச குளிர்பானத் தயாரிப்பாளர்களான கோக் மற்றும் பெப்ஸி, ஆஸ்பர்டேம் விஷயத்தில் கண்ணாமூச்சி ஆடி வருவது பலராலும் கவனிக்கப்படுவதில்லை. உதாரணத்திற்கு, கோக் ஜீரோ என்ற பானத்தில் ஆஸ்பர்டேம் கிடையாது; ஆனால் டயட் கோக்கில் உண்டு. அதேபோலப் பெப்ஸி, திடீரென்று ஆஸ்பர்டேம் கலந்த குளிர்பானத்தை அறிமுகப்படுத்தும்; சில நாள்களிலேயே, விற்பனை சரியில்லை என்று மற்றொரு செயற்கைச் சர்க்கரை ரசாயனமான ஸ்ப்லெண்டாவிற்கு மாறும். இது நுகர்வோரின் சுவை சார்ந்த விஷயம் என்று குழப்புவது இவர்களது வழக்கம்.

ஆஸ்பர்டேம் – அரசாங்கக் கட்டுப்பாடு

1965–ல் முதன் முறையாக இது அமெரிக்காவில் விற்பனைக்கு FDA–வால் அனுமதிக்கப்பட்டது. ஆனால், அதைத் தொடர்ந்து அடுத்த 20 ஆண்டுகள், அரசாங்கக் கட்டுப்பாடு அதிகாரிகளுக்கும், லாப நோக்குடன் இயங்கிய வியாபரத்திற்குமான ஒரு நிழலான தொடர்பு, இந்தக் கட்டுப்பாட்டைக் கேள்விக்குறியாக்கியது.

  • ஆஸ்பர்டேமின் உற்பத்தியாளரான சியர்ல், இந்த ரசாயனத்தின் பாதுகாப்புப் பற்றிய விஷயங்கள் பலவற்றில் பொய்யான தகவல்களை அரசாங்கத்திற்குத் தந்து தந்திர நாடகமாடியது என்பது ஒரு சாராரின் குற்றச்சாட்டு
  • 1975–ல், (அனுமதி வழங்கி 10 ஆண்டுகளுக்குப் பிறகு) FDA, தான் இன்னும் சரியாக இந்த விஷயத்தை ஆராயவில்லை என்று சொல்லி, சியர்ல் நிறுவனம் ஆஸ்பர்டேமை விற்பதற்குத் தடை விதித்தது. நம்மூரில் நடப்பதுபோல, இதற்காக ஒரு விசாரணைக் கமிஷனும் நியமிக்கப்பட்டது
  • விசாரணைக் கமிஷன் அமைக்கக் கோரிய ஸ்கின்னர் என்னும் வழக்கறிஞர், சியர்ல் நிறுவனத்தின் சிகாகோ சட்ட நிறுவனத்தில் சேர்ந்தது இந்த விஷயத்தில் மேலும் சந்தேகத்திற்கு இடம் தந்தது. இந்த விசாரணைக் கமிஷன் இன்றுவரை எந்த வேலையையும் செய்யவில்லை. அத்துடன், இதற்கு ஒரு காலக்கெடு இருந்ததால், விசாரணைக் கமிஷன் மூடப்பட்டது
  • 1977 முதல் 1978 வரை FDA, சார்பற்ற பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குழு ஒன்றை ஆஸ்பர்டேம் பற்றி ஆராயும்படி கேட்டுக்கொண்டது. பரவலாகப் பேசப்பட்ட புற்றுநோய் விஷயம் தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படாத பட்சத்தில், மீண்டும் ஆஸ்பர்டேமை விற்க சியர்ல் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது
  • 1981–ல், ஹேய்ஸ் என்னும் FDA கமிஷனர், சியர்லின் ஆஸ்பர்டேமில், சில சந்தேகத்திற்குரிய மூளைப் புற்றுநோய் வரக்கூடிய சாத்தியங்கள் இருப்பதாகக் கூறி, அதைக் காய்ந்த உணவுப் பொருட்களில் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என்று ஆணையிட்டார். ஆனால், அடுத்த ஆண்டே இவர் FDA–வை விட்டு நீங்கி சியர்ல் நடத்தும் பொதுத் தொடர்பு நிறுவனம் ஒன்றில் சேர்ந்தார்
  • 1987–ல் இந்தச் சிக்கலான விஷயத்தை ஆராய, அரசாங்க அமைப்பு (US Govt Accountability Office) ஆஸ்பர்டேம் மனித உடல்நலத்திற்குப் பாதுகாப்பானதா என்பதை ஆராய துறை சார்ந்த 67 விஞ்ஞானிகளிடம் கருத்து கேட்டது. 12 விஞ்ஞானிகள் பாதுகாப்பற்றது என்று பதிலளித்தனர். 26 விஞ்ஞானிகள் ஓரளவிற்குப் பாதுகாப்பானது என்றும், 29 விஞ்ஞானிகள் முற்றிலும் பாதுகாப்பானது என்றும் சொன்னார்கள்
  • 1987–க்கு பிறகு ஆஸ்பர்டேம், இன்றுவரை பயனில் உள்ளது

இந்த விஷயத்தை இவ்வளவு விவரமாக இங்கு சொல்லக் காரணம், சில விஞ்ஞான ஆய்வுகள் உடல்நலம் சார்ந்த விஷயத்தில் முற்றிலுமாக நிரூபிப்பது கடினம். ஓஸோன் விஷயத்தில், அண்டார்டிகாவில் மிகப் பெரிய ஓட்டை இருப்பதுபோல ஒரு தெளிவான முடிவைச் சொல்வது கடினம். அத்துடன், ஒழுங்குபடுத்தும் அமைப்புகள் FDA–வைப்போல, முரணான முடிவுகளை எடுப்பது, பொது மக்களைக் குழப்பவே உதவுகிறது. அத்துடன் பல நிழல் வேலைகள், வதந்திகள் மற்றும் சதிக் கோட்பாடுகளை உலவவிட்டுச் சரியான விவாதங்களை மழுங்கச் செய்துவிடுகின்றன.

ஆஸ்பர்டேம் – வதந்திகள்

  • 1996–ல் ஒளிபரப்பான ’60 நிமிடங்கள்’ என்ற மிகவும் பிரபலமான டிவி நிகழ்ச்சி, மனிதர்களுக்கு ஆஸ்பர்டேமால் புற்றுநோய் உருவாகும் என்று விஞ்ஞான ஆராய்ச்சி எதையும் பின்புலமாகக் கொள்ளாமல் சர்ச்சையை எழுப்பியது
  • ”ஆஸ்பர்டேம் விமான எரிபொருளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது மனித உடல்நலனுக்குக் கேடு விளைவிக்கும்.” இத்தகைய வாட்ஸாப் கட்டுக் கதைகள், இல்லாத ஒரு நாசா விஞ்ஞானியின் பெயரை நம்பகத்தன்மைக்காகச் சேர்த்துக்கொள்வது வேதனைக்குரிய விஷயம்
  • ஜெர்மெனிய நாட்சீக்களால் உருவாக்கப்பட்ட ஒரு விஷ ரசாயனம் ஆஸ்பர்டேம் என்று இன்னொரு தமாஷான வதந்தியும் உண்டு

ஆஸ்பர்டேம் – சதிக் கோட்பாடுகள்

  • ஆஸ்பர்டேமிற்கு எதிரான ’நான்சி மெர்கிள்’ என்ற புனைப்பெயரிலான சதிக் கோட்பாடு மிகவும் பிரபலம். 1990–களில், ஆஸ்பர்டேமால் மனிதர்களுக்கு மூளைப் புற்றுநோய், கண்பார்வை போகுதல், தலைவலி, நியாபகமின்மை போன்ற பயங்கர வியாதிகள் பரவ அதிக வாய்ப்புண்டு என்று இந்தப் புனைப்பெயரில் (இன்று வரை இதை யார் எழுதினார்கள் என்பது தெரியாது) ஒரு மின்னஞ்சல் உலகத்தை வலம் வந்தது. சியர்ல் நிறுவனத்திற்கும் இந்த மின்னஞ்சலுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகப் பலர் கட்டுக் கதைகளைச் சொல்லிவந்தார்கள். இதற்கு எந்த ஆதாரமும் இதுவரை இல்லை
  • ஆஸ்பர்டேம் உடலில் கலந்தபின் மெதனாலாக மாறுகிறது. பல கெட்ட நோய்கள் வர இதுதான் காரணம் என்று சிலர் சொல்லி வந்துள்ளார்கள். அத்துடன் மனிதர்களைக் கொன்றுவிடும் என்றும் வதந்தியைப் பரப்பி வந்தார்கள். இதை ஆராய்ந்ததில் ஒருவர் 22,000 டயட் கோக்குகளை உட்கொண்டால், இந்த அபாயம் நேர வாய்ப்புண்டு என்று தெரியவந்தது. இது எவ்வளவு அபத்தம் என்றால், 300-வது கோக்கிலேயே அதிக கெஃபீன் உட்கொண்டதால், அந்த மனிதர் இறந்திருப்பார்!
  • சில நிழலான நிகழ்ச்சிகள் சியர்ல் நிறுவனத்தில் நிகழும் காலத்தில், அவையெல்லாம் டோனால்டு ரம்ஸ்ஃபீல்ட் என்ற புஷ் அரசாங்கப் பாதுகாப்பு அமைச்சரின் கைவண்ணம் என்றும் சதிக் கோட்பாடு உண்டு. ரம்ஸ்ஃபீல்ட் சியர்ல் நிறுவனத்தின் தலைவராக பணியாற்றியது உண்மை. ஆனால், அவரது புஷ் காலச் செயல்பாட்டுடன் இதனை முடிச்சு போடுவது நிரூப்பிக்க முடியாத ஒரு கோட்பாடு

பல சர்ச்சைகள் இருந்தாலும், இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சிப்படி (2020), சில உண்மைகள் பல விஞ்ஞானிகளாலும் ஒப்புக் கொள்ளப்படுகின்றன. இன்னும் எல்லோராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட முடிவாக ஆக சில ஆண்டுகள் சோதனை தேவை. கண்ணதாசன் வரிகள்போல, ‘அதில்வழியைக்காண்பதுஉன்திறமை’, இதற்கும் பொருந்தும். மிக எளிமையாக, பலராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட விஷயம் இதுதான்:

  1. செயற்கைச் சர்க்கரை ரசாயனம் பயன்படுத்தும் குளிர்பானங்களை அதிகமாக அருந்துபவர்கள் பருமானாகி விடுகிறார்கள் (increased obesity). இதற்கு என்ன காரணம்?
  2. நாக்குச் சுவைக்காக நாம் 200 மடங்கு, 500 மடங்கு அதிகமான இனிப்புத் தரும் செயற்கைச் சர்க்கரை ரசாயனங்களை உட்கொள்கிறோம். அது நம் சுவை அரும்புகளுக்குச் செயற்கைச் சர்க்கரை என்று தெரியும். ஆனால், இனிப்பைச் சமாளிக்கும் மூளைக்குத் தெரியாது
  3. சாதாரணச் சர்க்கரையை உண்டால், நம்முடைய மூளை, ‘சர்க்கரையைச் சமாளிக்க கணையநீரை (insulin) அதிகரிக்கிறது’. இதனால், சர்க்கரையைக் கலோரிகளாக (சக்தி) மாற்றி உடலுக்குப் பயன் தருகிறது. இது இயற்கை பல்லாயிரம் ஆண்டுகளாகச் செய்து வரும் விஷயம்
  4. செயற்கைச் சர்க்கரை ரசாயனத்தை நாம் உட்கொண்டால், மூளை குழம்பிவிடுகிறது. ‘ஏராளமான சர்க்கரையை உண்கிறான் இந்த மனிதன்.’ இதைச் சமாளிக்க நிறைய கணையநீரை (insulin) உற்பத்தி செய்கிறது. இப்படி உற்பத்தி செய்யப்படும் அளவுக்குக் கணையநீர் தேவையில்லை. இதனால், அநாவசியமாக உணவைக் கொழுப்பாக மாற்றுகிறது. இதனாலேயே, செயற்கைச் சர்க்கரை ரசாயனம் பயன்படுத்தும் குளிர்பானங்களை அதிகமாக அருந்துபவர்கள் பருமானாகி விடுகிறார்கள்

இது இன்னும் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட வேண்டும். ஆனால், வெறும் புரளி மற்றும் சதிவேலை என்று சொல்லிக் காலத்தை ஓட்டாமல், சரியான விஞ்ஞான அணுகுமுறை இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணும் என்று நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. முடிவு தெரியும்வரை, செயற்கைச் சர்க்கரை ரசாயனம் பயன்படுத்தும் குளிர்பானங்களை ஓர் அளவோடு அருந்துவது உடல்நலத்திற்கு நல்லது.

இத்துடன், உடல்நலம் சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் பாகம் நிறைவடைகிறது. மிக முக்கியமான ஒரு விஷயம் விட்டுப்போனது கவனக்குறைவினால் அன்று. அது, மருந்து நிறுவனங்கள் செய்யும் விஞ்ஞானத் திரித்தல்கள். இதற்குத் தனியாகச் சில ஆண்டுகள் ஆராய்ச்சி தேவை. இந்தத் தொடரின் வெற்றியைப் பொருத்து, நான்காம் பாகமாக எதிர்காலத்தில் எழுதப்பட வாய்ப்பிருக்கிறது.

அடுத்த பாகம், புவிச் சூடேற்றம் சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்களை விரிவாக ஆராயும்.

உடல்நலம் சார்ந்த திரித்தல்கள் கட்டுரைகளில், பல விஞ்ஞானப் பதிவுகள் மற்றும் இணைய தளங்களில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. மேலும், இத்துறையில் உங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள, சில முக்கியச் சுட்டிகள் இங்கே:

நட்சத்திர மதிப்பீடுவிளக்கம்
*ஆரம்பநிலைப் புரிதலுக்கான சுட்டி
**சற்று விவரமானது. அவ்வளவு தொழில்நுட்ப அறிவு தேவையில்லை
***மிக விவரமானது. கொஞ்சமாவது தொழில்நுட்ப அறிவு தேவை
****மிகவும் டெக்னிகலான ஆராய்ச்சிக் கட்டுரை
திரித்தல் தலைப்புசுட்டிநட்சத்திர மதிப்பீடு
ஓஸோன் அடுக்கின் ஓட்டைhttps://debunkingdenial.com/the-ozone-layer-controversy/ 
*

https://www.acs.org/content/acs/en/education/whatischemistry/landmarks/cfcs-ozone.html***

https://en.wikipedia.org/wiki/Ozone_depletion **

https://e360.yale.edu/features/thirty-years-after-the-montreal-protocol-solving-the-ozone-problem-remains-elusive***

https://www.smithsonianmag.com/science-nature/ozone-hole-was-super-scary-what-happened-it-180957775/****

https://rationalwiki.org/wiki/Ozone_layer**
சிகரெட் மற்றும் புகையிலைhttps://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC4465196/ **

 https://www.cancer.ca/en/about-us/for-media/media-releases/national/2013/war-on-tobacco-turns-50/?region=on**

https://www.nature.com/articles/d41586-019-02991-w **

https://www.who.int/tobacco/media/en/TobaccoExplained.pdf*

https://www.businessinsider.com/the-world-is-losing-the-war-on-the-tobacco-industry-2016-11***

https://www.pbs.org/wgbh/pages/frontline/shows/settlement/timelines/fullindex.html****

https://www.drugabuse.gov/publications/research-reports/tobacco-nicotine-e-cigarettes/how-does-tobacco-deliver-its-effects**

https://www.fda.gov/tobacco-products/products-ingredients-components/chemicals-cigarettes-plant-product-puff**
மின் சிகரெட்டுகள்https://www.theguardian.com/society/2020/feb/18/the-great-vape-debate-are-e-cigarettes-saving-smokers-or-creating-new-addicts**

http://www.casaa.org/historical-timeline-of-electronic-cigarettes/**

http://headsup.scholastic.com/students/e-cigarettes-what-you-need-to-know****

https://www.hopkinsmedicine.org/health/wellness-and-prevention/5-truths-you-need-to-know-about-vaping**

https://www.healthline.com/health/smoking/electronic-cigarettes*

https://en.wikipedia.org/wiki/2019%E2%80%932020_vaping_lung_illness_outbreak**

https://en.wikipedia.org/wiki/Electronic_cigarette**

https://www.youtube.com/watch?v=B2myg-4zkE8**
டிடிடி பூச்சி மருந்துhttps://www.panna.org/resources/ddt-story***

https://en.wikipedia.org/wiki/DDT**

https://web.stanford.edu/group/sjph/cgi-bin/sjphsite/shoot-to-kill-control-and-controversy-in-the-history-of-ddt-science/***

https://www.epa.gov/ingredients-used-pesticide-products/ddt-brief-history-and-status***

https://www.scientificamerican.com/article/ddt-use-to-combat-malaria/**

https://e360.yale.edu/features/rachel_carsons_critics_keep_on_but_she_told_truth_about_ddt***

https://debunkingdenial.com/scientific-tipping-points-the-banning-of-ddt-part-i/ ***
ஆஸ்பெஸ்டாஸ்https://www.acsh.org/news/2018/07/18/acsh-explains-whats-story-asbestos-13206**

https://www.asbestos.com/featured-stories/cover-up/*

https://www.newstatesman.com/health/2008/08/asbestos-victims-company*

https://www.academia.edu/4575308/Asbestos_The_Controversy***

https://pdfs.semanticscholar.org/78da/2b7ea695b4ca3458ddde39ea291cd6d321de.pdf*****

https://en.wikipedia.org/wiki/Asbestos**
டால்கம் பவுடர்https://www.allure.com/story/johnson-johnson-talc-asbestos-baby-powder-report**

https://www.asbestos.com/companies/johnson-johnson/**

https://www.reuters.com/investigates/special-report/johnsonandjohnson-cancer/**

https://www.reuters.com/article/us-johnson-johnson-babypowder/johnson-johnson-to-stop-selling-talc-based-baby-powder-in-u-s-and-canada-idUSKBN22V32U**

https://www.thenational.ae/business/j-j-talcum-powder-controversy-scares-consumers-in-india-1.804635*

https://www.cancer.org/cancer/cancer-causes/talcum-powder-and-cancer.html**

https://www.lundylawllp.com/understanding-the-science.html***

https://en.wikipedia.org/wiki/Talc**

https://www.jnj.com/our-products/5-important-facts-about-the-safety-of-talc**

https://www.waterskraus.com/johnson-johnson-knew-asbestos-along/**

https://www.cbc.ca/documentarychannel/m_docs/toxic-beauty***

https://www.fda.gov/cosmetics/cosmetic-ingredients/talc**
ம.மா.உhttps://www.nongmoproject.org/gmo-facts/***

http://www.ift.org/Knowledge-Center/Learn-About-Food-Science/Food-Facts/Biotechnology-Genetic-Engineering-GMOS.aspx***

https://en.wikipedia.org/wiki/Genetically_modified_food_controversies**

https://www.nature.com/scitable/topicpage/genetically-modified-organisms-gmos-transgenic-crops-and-732**

https://www.iflscience.com/environment/myths-and-controversies-gmos-0/***

https://gmo.geneticliteracyproject.org/FAQ/why-is-there-controversy-over-gmo-foods-but-not-gmo-drugs/****

https://www.canr.msu.edu/news/gmos-101-getting-down-to-basics***

https://allianceforscience.cornell.edu/blog/2018/02/bacteria-invented-genetic-engineering-we-made-it-controversial/***
செயற்கைச் சர்க்கரைhttps://science.howstuffworks.com/innovation/edible-innovations/artificial-sweetener3.htm***

https://en.wikipedia.org/wiki/Aspartame_controversy **

https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC2802046/***

https://naturallysavvy.com/eat/this-is-how-msg-aspartame-and-saccharin-sweet-talked-their-way-into-your-food/***

https://vtuhr.org/articles/10.21061/vtuhr.v4i0.33/****

https://rationalwiki.org/wiki/Aspartame**



Series Navigation<< செயற்கைச் சர்க்கரை ரசாயனங்கள் – பகுதி-1விஞ்ஞானக் கருத்து வேறுபாடுகள் – பாகம் மூன்று >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.