
கனவு…
நீண்ட கனவொன்றில் நிம்மதியாய்
வாழ்ந்து கொண்டிருந்தான் அவன்
நிஜத்தில் வாழாத வாழ்க்கை கனவில் கிடைத்த
பூரிப்பில் எம்பி குதித்து குதூகலத்துடன்,
தூக்கமும் கனவும் கலைந்தது
வாட்டமுகத்துடன் திரும்பவும்
உறங்க முயற்சிக்கிறான் கரை சேரா கனவொன்று
கைக் கூடுமெனும் ஏக்கத்துடன் ..
தண்டனை
தோற்றால் தண்டனை உண்டென்கிறாள்
வெற்றி பெற அதீத முயல்வில் இருக்கும்
தருணத்தில் தோற்காவிட்டாலும் தண்டனை
உண்டென்கிறாள்..
தண்டனை கொடுப்பதாய் முடிவு செய்து விட்டு
எதற்கு பந்தயமென்று அவன் யானை வேஷம் போடுகிறான்
பாகானாய் மாறி ஏறிக் கொள்கிறாள் செல்ல மகள்
கையால் அடித்து யானையை நகர செய்கிறாய்
ஒவ்வொரு அடியிலும் இதம் பெறுகிறான்
பெற்றவன் என்பதற்காக…