பிரான்சில் தமிழ் நவீன இலக்கிய விழா அறிவிப்பு

பிரான்சு வரலாற்றில் முதன்முறையாக பாரீசுக்கு அருகில்  Centre- Val de Loire மாகாணத்தில் இரண்டு நகரங்களில் (Jargeau & Châteaudun) ‘ Tu Connais la nouvelle எனும் இலக்கிய அமைப்பு இருவாரங்கள் தமிழ் நவீன இலக்கியம், தமிழ் பண்பாடு சார்ந்த விழாவை எடுக்கின்றது. பிரெஞ்சு பதிப்பாளர் Editions Zulma எனது பெயரை முன்வைக்க சிறப்பு விருந்தினராக அழைத்திருக்கிறார்கள்.

நவீன தமிழிலக்கியம் பற்றிய இன்றைய நிலை, பற்றிய கட்டுரைகள்

  • புதுமைபித்தன்,
  • ஜெகயகாந்தன்,
  • சு.ரா,
  • பிரபஞ்சன்,
  • சா. கந்தசாமி,
  • தி. ஜானகிராமன்,
  • கி.ரா ,
  • அம்பை,
  • பாமா

சிறுகதை மொழிபெயர்ப்புகள்:

  • வண்ண நிலவன்,
  • பிரபஞ்சன்,
  • எஸ். ராமகிருஷ்ணன்
  • கி.ரா,
  • சோ.தர்மன்,
  • மாலன்

புலம்பெயர்ந்த எழுத்து, பெண் கவிஞர்களின் கவிதைகள் வாசிக்கப்பட உள்ளன. இந்நிகழ்வில் என்னுடன் Yanne Dimai என்கிற பிரெஞ்சு படைப்பாளியும் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்.

விழா பற்றிய செய்திகள் கீழுள்ள கோப்புகளில் உள்ளன


அன்புடன் அழைக்கிறோம்

நாகரத்தினம் கிருஷ்ணா & யான் திமே

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.