நண்பன்

ந்த எஸ்டேட் ஒரு பட்டிக்காடு!

(1)‘கருப்புப் பிரதேச’ காலத்தைத் தாண்டாத (2)மேக்கட லயங்கள்.‘ துரை பங்களா, கிராணிமார்கள் பங்களா, ஆபீஸ், ‘மருந்து காம்பரா’, பால் ஸ்டோர் என்று தன் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொண்ட மின்சார நாகரிகம்!. ஒவ்வொரு இரவும் இருட்டை விரட்ட முடியாமல் குளிரைப் போர்த்திக்கொண்டு நடுங்கும் மண்ணெண்ணை அநாகரிகம்! ஜனங்களின் வாழ்க்கைப் போலவே ஒளியேற்ற வந்த அதுவும், நாறியது; ஒளி மங்கித் தவித்தது!.

சகலவிதமான மாசுகளுக்கும் உட்பட்டு ஓடிய பெரிய ஆற்று நீரோ, எஸ்டேட் நிர்வாகத்தால் குளோரின் கலந்து சுத்திகரிக்கப்பட்டிருந்ததால் பொது குழாயடிகள் வரை மட்டுமே வந்து, தன் தூய்மையைப் பேணிக்கொண்டது. வீட்டு குசினி  வரை  வருவதற்கு வசதி செய்து தந்து, ஜனங்களுக்கு ‘குளுவுரு வுட்டுப்போக’.. நிர்வாகம் தயாராய் இல்லை!.. ஆகவே, இரவு வரையில் யாராவது குழாயடியில் இருந்துக்கொண்டே இருந்தனர். துணி துவைத்தனர்; சட்டி, பானைகள் கழுவினர்; பிள்ளைகளைக் குளிப்பாட்டினர்; புழங்குவதற்கு தண்ணீர் பிடித்தனர்; சமயங்களில் அந்தத் தண்ணீருக்காகவே ஆபாசமாய் பேசி, சிண்டைப் பிடித்திழுத்து சண்டையும் போட்டுக்கொண்டனர். பின்னர் அவர்களும் குளித்தனர்! வானம் பார்த்த குளியல்தான்!.. முகம், கை கால்களெல்லாம் உப்பு சவர்க்காரம் போட்டு தேய்த்த பிறகு, மாரோடு கட்டிய கைலியை அவிழ்த்து, இரண்டு கைகளாலும் குவித்துப் பிடித்து, அந்தப் பிடியை பற்களால் கடித்துக்கொண்டு கைகளை கைலிக்குள் விட்டு, மறைவிடங்களை சவர்க்காரத்தோடு முகத்தில் படர்ந்த வெட்கத்தையும் கொஞ்சம் கலந்து,  சுத்தம் செய்து கொள்வதோடு நிறைவுபெறும் குளியல்!..                                           

 கக்கூஸ் ‘வசதி’யென்றெல்லாம் அதை சொல்லக்கூடாது. உள்ளே நுழைவதற்கே அசாத்தியமான தைரியம் தேவை. காரியத்தில் மட்டுமே கண்ணாயிருக்க வேண்டும்!.. உட்கார்ந்த கையோடு கண்களை மூடி, சுருட்டின் புகையில் ஆழ்ந்துப் போவதானால் காரியம் சித்தி பெறும். இல்லையேல், கதவைத் திறந்த கையோடு வாந்தி எடுத்துக்கொண்டு திரும்ப வேண்டியதுதான். கதவிற்கு பின்னால் கரிக்கொட்டையால் வரையப்பட்ட ஆண், பெண் குறிகளையோ; அவை யாருடையவை என்பதை படித்துப் பார்க்கும் ஆசையோ படவே கூடாது!.. கக்கூஸ் என்ற, ‘சாபக்கேடு’ என்று வேண்டுமானால் அதைச் சொல்லிக் கொள்ளலாம். அதனாலேயே பலரும், கையில் ஒரு காகிதத்தோடு பெரிய அல்லூருக்கோ, தங்களின் கொல்லைக்கோ அல்லது காட்டுச் செடிகளின் மறைவிலோ போய் கால்களை ‘மடக்கிக்’ கொண்டனர். வயிற்று வலியின் அவசரத்தில் காகிதத்தைக் கொண்டுவர மறந்தவர்கள், அருகிலிருந்த செடிகளில் கையகல இலையைப் பறித்து வழித்துக்கொண்டனர்.  

 பக்கத்து டவுனிலிருந்து காலை, மத்தியானம், மாலை என்று ஒரு நாளைக்கு மூன்று முறை, முக்கி; முனகி     ‘ நீங்க நாசமா போவ..’ என்று சபிப்பதுபோல் முகத்தில் செம்மண் புழுதியையும்; மழைக்காலங்களில் சேற்று நீரையும் வாரி அடித்துக்கொண்டு போகும் (3)மூக்கு பஸ். 

 அடுப்புகளில் இன்னும் அதே விறகு கட்டைகள்.. எண்ணெய் பிசுபிசுக்கும் உலர்ந்த செம்பனைப் பழங்கள்.. பூனைகள்..

ஆமாம், கந்தசாமி வாழ்ந்த எஸ்டேட் ஒரு பட்டிக்காடேதான்!..

ஆனால், ஒரு காலத்தில் இவனுடைய அம்மாவை; ‘மேக்கட’ சொர்க்கத்தை; மாரியம்மன் கோவிலை; அரசு வேம்பு மரத்தடியை; பெரிய ஆற்றை; கங்காணி மகளை; கூட்டாளிகளை ஆமாம், அந்தப் பட்டிக்காட்டையேதான் பிரிய முடியாமல்  இவன் தவித்த தவிப்பு!.. அப்பப்பா!.. மணி ஏழரையாகியும்  படம் காண்பிக்கும் ‘ஷா பிரதர்ஸ்’ வேன் வராதபோது, எஸ்டேட் சிறுவர்கள் படும் தவிப்பிற்கு ஒப்பானது.

 ஒவ்வொரு முறை கோலாலம்பூரில் வேலை கிடைத்து போன போதும், நிறைய கனவுகளோடும், கற்பனைகளோடும்தான் வேலைக்குப் போனான். ஆனால் மறுநாளே, மீண்டும் அந்தப் பட்டிக்காட்டிற்கு ஓடிப் போக மனம் ஏங்கித் தவிக்க, கால்கள் பரபரத்துத் துடிக்கும். ஒன்பது மணி வேலைக்கு எழு மணிக்கே எழுந்து, ஏழரை மணியிலிருந்து பஸ்சிற்கு காத்திருக்க வேண்டும். முதல் இரண்டு பஸ்களில் நிச்சயமாக இடம் கிடைக்காது. மூன்றாவது பஸ்சிலேயே மந்தையில் ஒருவனாய் அடைப்பட்டு வேலைக்குப் போனால், கேவலம் வறண்ட வாய்க்கு ஒரு கிளாஸ் (4)ஆயர் சுவாமிற்குகூட காசு கொடுக்க வேண்டிய நாகரிகம், கந்தசாமியை மீண்டும் பட்டிக்காட்டிற்கே விரட்டியது…

ஆனால் அந்தப் பட்டிக்காட்டிலோ, யார் வீட்டிற்கு போனாலும் உடனே, “வாப்பூ, என்ன தண்ணிப்பூ குடிக்கிற? மிலோவா கோப்பியா..” என்ற ‘அநாகரிகம்’ இவனை வரவேற்றது!…

இவன் மீண்டும், அந்தப் பட்டிக்காட்டிற்கே ஓடிப் போனான்!… 

 இவன், இந்த எஸ்டேட்லேயே ‘கொட்ட போடத்தான் லாயிக்கு..’ என்று எஸ்டேட் ஜனங்களால் கேலி பேசப்பட்டதை இவனே நம்பத் தொடங்கி, (5)வெளிக்காட்டு வேலைக்கு போக ஆரம்பித்திருந்தபோது… 

– ஒரு நாள், இவனுடைய அம்மா ஏணிக்கோடு மரங்களை சீவிக்கொண்டிருந்தபோது ஏணியிலிருந்து வழுக்கி விழுந்து இடுப்பை உடைத்துக்கொண்டு, ஒரு மாத ஆஸ்பத்திரி அவஸ்தையோடே இறந்துப் போனார். 

 –  பல வருடங்களுக்கு முன்னரே ‘பெரிய மனுசி’ ஆகியிருந்த கமலா, முருகம்மா, பாப்பாத்தி, தர்மதேவி ஆகிய எஸ்டேட் பெண்களின் கல்யாண முயற்சிகள் எல்லாம் தடங்களிலேயே முடிய, ஒரு தீமிக்கு மாரியம்மன் சாமியிடம் பரிகாரம் வேண்டி நின்றபோது, கோவிலுக்கு எதிரே இருந்த அரச வேம்பு மரங்களுக்கு கலியாணம் செய்து வைக்கச் சொல்லி சாமி சொன்னது. அதன்படி மூன்றாவது வாரமே நான்கடி உயரத்திற்கு சுற்றுச்சுவர் ஒன்றை எழுப்பி, அம்மரங்களுக்கு விமரிசையாக  கல்யாணம் செய்து வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அதிசயமாக, ஒரு சில வருடங்களிலேயே அப்பெண்கள் ஒவ்வொருவராக கல்யாணமாகிப் போயினர். கங்காணி மகளும் கல்யாணமாகிப் போனாள்.

 –  ஒரு சில வருடங்களில், நண்பர்களும் ஒவ்வொருவராக வேலை கிடைத்து கோலாலம்பூர் பக்கம் போனபோது இவன் தனிமைப்பட்டு போனான். அதற்கு மேல் இவனால் அங்கே இருக்க முடியவில்லை.

நண்பர்களின் அரவணைப்பில் கடைசியில், இவனும்  நிரந்தரமாகவே கோலாலம்பூர் பக்கம் போய் சேர்ந்தான்.

இந்த இருபது வருஷங்களில் எஸ்டேட்டை பொருத்தவரை இவன், ஒரு (6)புவாங் நெகிரியைப்போல் ஒதுங்கியிருக்கக் கற்றுக்கொண்டாலும் ஒவ்வொரு வருஷ தீமிதி திருவிழாவிற்கும் தவறாமல் எஸ்டேட்டிற்கு போய் வருவதை பழக்கமாக்கிக்கொண்டான்.  இருந்தும்  கடந்த நான்கு வருஷங்களாக ஏதேதோ காரணங்களால் தீமிதிக்கு போக முடியாமல் போய்விட்டது. எனவே, இந்த வருஷம் கட்டாயமாக போய் விடுவதென்று தீர்மானித்துக் கொண்டான்..  


இதோ!.. நாளை நடக்கவிருக்கும் தீமிதி திருவிழாவிற்காகத்தான் இவன் இப்போது, எஸ்டேட்டிற்கு போய் கொண்டிருக்கிறான்…

வழக்கம்போல் ‘ காளிமுத்து ‘ என்ற தன் பெயர் தனக்கே அந்நியமாகிப்போன கூட்டாளி, ‘ பூச்சி‘தான் தீமிதி உற்சவப் பத்திரிக்கையை அனுப்பி, ‘இந்த வருஷமாவது கட்டாயம் வரவும்’ என்று அடியில் கிறுக்கி, செய்தி சொல்லியிருந்தான். 

பூச்சி!.. சிறு வயதிலிருந்தே அவன், காடு மேடெல்லாம் ஒரு பூச்சியை  போல் அவ்வளவு இயல்பாகச் சுற்றித் திரிந்தான். வெறும் அரைக்கால் சிலுவார் மட்டுமே அணிந்து சட்டையோ, சப்பாத்தோ போட்டுக்கொள்ளாமல் எஸ்டேட்டே சுற்றுக்கொண்டிருப்பான். அதனாலேயே அவனுக்கு அந்தப் பெயர் ஒட்டிக்கொண்டது. சமயங்களில் ஸ்டீரிங்கை பிடித்திருக்கும் பாவணையில் கைகளை வைத்துக்கொண்டு ‘ஒய்ய்ய்..’ என்று காடியில் வருவான். அதனால்  சமயங்களில் அவன், ‘டேய் ஒய்ய்யி..’ என்றும் அழைக்கப்பட்டான். பார்வைக்கும் அவன், கருத்துத் திரண்ட உடலும்; பருத்து விரிந்த கால்களும்; அம்மிக்கல்லின் சொரசொரப்பை ஒத்த முகமுமாக ஒரு காட்டிவாசியைப் போலவே தெரிந்தான்.    பாவம், இவனுடன் எஸ்டேட் ஸ்கூலில் படித்தவர்களில் அவனும், இன்னும் இரண்டு மூன்று பேர்கள் மட்டுமே எஸ்டேட்டிலேயே முடங்கிப் போயினர். 

இந்த இருபது வருடங்களில் வாழ்க்கைதான் அங்கே, எப்படியெல்லாம் சிதைந்துப் போனது!…

சங்கிலிக் கிராணி, வெளிக்காட்டு கங்காணி, அருளாந்து என்ற பெயரைக் கொண்ட ஒன்னாவது,  வெள்ளைக்கார துரைக்கு ஜீப் ஓட்டிய பெருமாள் டிரைவர், டோபி சீனன், துரை பங்களாவில் (7)கோக்கி வேலை செய்த சின்னையா, இன்னும் பலரும் செத்துப் போயினர்!.. மீன்கார நீலமேகம் இனிப்புநீர் கண்டு, முட்டிக்காலோடு இரண்டு கால்களையும் இழந்து, தள்ளு வண்டியில் முடங்கிப் போனார். ரசியாவின் பெண்டாட்டி, பெரிய ஆற்றில் குதித்து, செத்துப் போனாள்.  

தமிழ்ப் பள்ளிக்கூடம் மூடப்பட்டுவிட்டது.  எஸ்டேட் சிறுவர்கள் எல்லோரும் பக்கத்து கம்பத்திலிருந்த மலாய்ப் பள்ளிக்கு போய் வந்து, வீட்டில் மலாய் பேசிக்கொண்டிருந்தனர். 

ஒவ்வொரு வருஷ தீமிதிக்கும், எஸ்டேட்டிற்கு போன போதெல்லாம் இப்படிப்பட்ட சின்னாபின்னங்களைத்தான் கண்கூடாகவும், சொல் கேள்வியாகவும் சொல்லக்கேட்டு எஸ்டேட்  நிலவரங்களை புதுப்பித்துக்கொண்டு வந்தான்.  

என்னதான் இவன் உடையாலும்; பேச்சு மொழியாலும்; வாசஸ்தலத்தாலும் ஒரு பட்டணத்தானாக மாறியிருந்தாலும் கடந்த நான்கு வருஷங்களாக தீமிதிக்கு போகாததால், ஊர் வெறி,  தலைக்கேறியிருந்தது!   உள்ளமெல்லாம் அந்தப் பட்டிக்காட்டின் நினைவுகளே பிரயாணம் முழுக்க நிறைந்திருந்தன. அந்த எஸ்டேட்!. அந்த வாழ்க்கை!. அதன் நினைவுகள்!. ஆஹா!. இவன் மீண்டும் வயதுப் பையனாகிப் போனான்.         

– ஸ்கூல் முடிந்து வீட்டிற்கு வந்த கையோடு பேக்கை தூக்கி வாங்குக்கடியில் வீசிவிட்டு, பெரிய ஆற்றுப் பாலத்துக்கடியில் கூட்டாளிகளோடு ஊடான்; நண்டு பிடித்து, சுட்டுத் தின்று, முகம் சுளிக்கிறான்.  

– முன்னிரவு பெய்த ‘மேம் மழையில்’, பெரியாற்றில் கரைப்புரண்டோடிய கலங்கல் நீரில் பொழுதெல்லாம் நீந்தி விளையாடி, கண்கள் சிவந்து, உடம்பெல்லாம் செம்மண் பூத்துப்போக, வீட்டிற்கு போய் ‘வெளக்குமாரால்’ நன்றாக வாங்கிக் கட்டிக்கொண்டு அப்படியே தூங்கிப் போகிறான்.

– பஸ்ஸோ லாரியோ தூரத்தில் வரும்போதே கூட்டாளிகளுடன் (8)சடக்கின் மேட்டில் ஏறி நின்றுக்கொண்டு, அது சரியாக அவர்களை கடந்து போகும்போது, சட்டென்று சிலுவாரை ‘அவுத்து’ காட்டிவிட்டு, ‘ஆயில் பாம்’ காட்டிற்குள் ஓடி, ஒளிந்துக் கொள்கிறார்கள்!…

– வெள்ளைக்கார துரை ஜீப்பில் போகும்போது, சடக்கு ஓரத்தில் விறைத்து நின்று, வலது கையின் உட்பகுதி வெளியே தெரிய நெற்றிப்பொட்டில் கையை வைத்து, (9)’தபே துவான்!’ சொல்லி சல்யூட் அடிக்கிறான்.

– எஸ்டேட்டே கூடி திடலில் படம் பார்த்துக் கொண்டிருந்தபோது கங்காணி மகளும், இவனும் அவள் வீட்டு குசினிக்குள்…

“ எனக்கு பயமா இருக்கு…”

“ என்ன பயம்?.. ம்?…”

“ மாசமாயிட்டியினா?..”

“ ஆவ மாட்டன்!…”

“ ஏனாம்?…?”

“ அது அப்பிடிதான்…”

“ அது அப்பிதான்னா?…”

“ ஐயே, எல்லாத்தியும் வெளக்கமா சொல்லனுமாக்கும்!.. கெட்ட ரத்தம் போறது நின்னு ரெண்டு நாளுதான் ஆவுது!.. போதுமா?…” என்று கிசுகிசுத்து, இவனைக் கட்டியணைத்து முத்தம் கொடுத்து, வெட்கத்திற்குள் ஒளிந்துக்கொள்கிறாள்… 

 ஈரத்தரையிலும், இடைஞ்சல்மிக்க நெருக்கடியிலும் இவர்களின் தேடல்; தேவை மிகுந்த  உக்கிரம் கொள்கிறது!…


 அட!.. எஸ்டேட்டை நினத்துக்கொண்டால், எங்கிருந்துதான் இந்த நினைவுகள் எல்லாம் இப்படி, வெட்டிச் சாய்த்த செம்பனைக் குலையிலிருந்து சிதறித் தெறிக்கும் பழங்களைப்போல் உதிர்ந்து, உள்ளத்தைத் தீண்டுமோ தெரியவில்லையே!

அந்த நினைவுகளின் மலர்ச்சியில் முகம் கனிந்து ஒளிர, இவன் வெளியே பார்த்தான். கார், பெரியாற்று பாலத்தில் கடகடத்து, எஸ்டேட்டிற்குள் நுழைந்தது.

திருவிழாவை முன்னிட்டு கோவிலுக்கு எதிரே போகும் சடக்கில் ரதம் நின்றுக்கொண்டிருந்தது. சடக்கின் நடுவில், ‘வாகனங்கள் போகமுடியாது’ என்று  எழுதப்பட்ட பலகையை ஏந்திக்கொண்டிருந்த சட்டம் ஒன்று குத்திவைக்கப்பட்டிருந்தது.  

இவனுக்காக காத்திருக்கும் நேரத்தில், (10)தேம்பா  சிகரெட் ஒன்றை புகைத்துக்கொண்டு, (11)மருந்து காம்ப்ரா வாசலில் கைகள் கட்டி குந்தியிருந்த ‘பூச்சி’, காரில் வரும் இவனைப் பார்த்ததும் சிகரெட்டை ஆட்காட்டி மற்றும் கட்டை விரல்களால் பிடித்து, கடை வாயில் வைத்து இரண்டு இழுப்பு இழுத்து, தரையில் வீசி, குதிக்காலால் நசுக்கித் தேய்த்துவிட்டு, எழுந்து நின்றான். 

எஸ்டேட்டில் இவனுடன் ஒன்றாகப் படித்தவர்களில் அவன் மட்டுமே இன்னும் நட்பு பாராட்டி, இவனுடன் தொடர்பிலிருந்தான். 

கல்யாணமாகி மூன்று பிள்ளைகள் ஆகிவிட்ட நிலையில், அவன் விதி அந்த எஸ்டேட்டிலேயே முடியப்போவது அவன் நெற்றியில் எழுதியிருந்தது! இந்த வயசிலேயே அவன் இப்படி மெலிந்துக் கிடப்பதைப் பார்க்க, மனசுக்கு சங்கடமாய் இருந்தது. 

எஸ்டேட் வாழ்க்கையில், ‘எப்பிடியோ, நாசமா போய் சாவுங்கடா’ என்ற சாபத்திற்குள்ளானவன் போல் அவன் நலிந்துக்கொண்டிருந்தான். 

“ என்னப்பூ, சௌக்கியமா? காடி புதுசா இருக்கு. உன்னோடதா?.“ வார்த்தையில் இருந்த மலர்ச்சி முகத்தில் இல்லாமல் இவனுடைய கைகளைப் பற்றிக்கொண்டான் பூச்சி.

“ சௌக்கியந்தாம்பூ.. நீ எப்பிடிப்பூ இருக்க?.. ஆமா, காடி என்னோடதாம்ப்பூ. போன வருஷம் வாங்குனது ” என்று அவன் கரங்களைப் பற்றினான். விரல்கள் என்ற பெயரில் வெறும் எழும்புக் குச்சிகள், காப்பேறிப்போய் மரமரத்தன.

“ நாலு வருஷமாதான் வர முடியாம போச்சி… அதுக்குள்ளியும் நீ இன்னாப்பூ இப்பிடி எளச்சி போயிட்ட? ஒடம்புக்கு ஏதும் சொகமில்லியா?..”  

“ அப்பிடியெல்லாம் ஒன்னும் இல்லப்பூ… எல்லாம் இந்த (12)கொலகுத்து வேலதாம்பூ!.. (13)சுலோப்ப தூக்கி, எகிறி எகிறி குத்தரதுலேயே பாதி உசுரு போயி நெஞ்சு வலி வந்துருது!… சரி, எழவு அது கெடக்கட்டும்… எதாவது சாப்பிட்டியாப்பூ?…”                                 

“ இல்லப்பூ!… வா, மொதல்ல போயி வயித்துக்கு ஏதாவது போட்டுக்குவோம்!…” என்று சொல்லி, சீனன் கடைக்கு கிளம்பிப் போயினர். காரில் உட்கார்ந்ததும் பூச்சி ஆர்வத்துடன் உள்ளே பார்த்தான். 

“ காடி என்ன வெலப்பூ?..”

“ முப்பதாயிரம்ப்பூ..”

“ அடேயப்பா!.. அவ்ளோ வெலையா?..”

“ என்னப்பூ சாப்புடுற?…”

“ ஏதாவுது சொல்லுப்பூ!…”

“ ஹொக்கியன் மீ?..”

“ ஓக்கேப்பூ…”

கந்தசாமி அவன் காதருகே குனிந்து, 

(14)சம்சு குடிக்கிறியாப்பூ?…” என்று கேட்டதும், உடனே அவன் நுனிநாக்கு வெளியில் வந்து, மேலுதட்டை நனைத்துச் சென்றது!.. 

நேராக கடையின் பின்கட்டுக்குச் சென்று, வரிசையாக பிளாஸ்டிக் படுதாக்கள் போட்டு தடுத்திருந்த அறைகளில், (15)கோசமான அறையாய் தேடிப்  போய் உட்கார்ந்தனர். கொஞ்ச நேரத்தில், கையில் (16)திகா லீமா நோட்டும், அணிந்திருந்த பனியனில் இரண்டு மார்களுக்கிடையே சொருகிய பேனாவுமாக சீன மாது ஒருத்தி வந்தாள். 

 “ அம்மோய், சம்சு சுக்கு சத்து, (17)அஞ்சிங் கிச்சி சத்து, ஹொக்கியன் மீ, டுவா..” – அவள் ஆர்டர் எடுத்துக்கொண்டு போனாள்.

“ மீ ஏம்பூ ரெண்டு பிளேட்டு?.. பெரிய பிளேட்டு ஒன்னு சொன்னா போதுமேப்பூ” என்றான் பூச்சி.                                             

“ பரவால்லப்பூ… நா சாப்புட்டு ரொம்ப நாளு ஆவுதில்ல.. நல்லா ஒரு கை புடிக்கனும்.. “ என்று இவன் சமாளித்தான். ஒரே  பிளேட்டிலிருந்த உணவையே நண்பனுடன் பகிர்ந்துக்கொள்வது, இவனை அசூயை கொள்ள வைத்தது. என்னதான் நண்பர்களாய் இருந்தாலும் இவன் இப்பொழுது பட்டணத்தான் அல்லவா!

 பூச்சி, சம்சை கிளாசில் ஊற்றி, தண்ணீர்கூட கலக்காமல் இரண்டு கைகளாலும் பயபக்தியுடன் ஏந்தி, பாதி குடித்துவிட்டு வைத்தான். 

குடிக்கும்போது கண்களை அப்படி இறுக முடிக்கொள்ள அவனை  யார் ஹிம்சித்ததோ தெரியவில்லை.

திருவிழா பொருட்டு, நிறையபேர் – தெரிந்தவர்களும் – குடிக்க வருவார்கள் என்பதால் சீக்கிரமே சாப்பிட்டுவிட்டு புறப்பட்டனர். 

விளக்குக் கம்பங்கள் எல்லாம் விழாக்கோலம் பூண்டிருந்தன. சடக்குதோரும் மாவிலையும் தென்ன ஓலைகளும் தொங்கி, மெல்லிய காற்றில், நல்வரவு கூறி வரவேற்றன. வேலை நிமித்தமும், கல்யாணமாகியும் வேறு எஸ்டேட்டிற்கும்; பட்டணங்களுக்கும் குடி பெயர்ந்த முன்னால் எஸ்டேட் வாசிகள், திருவிழா பார்க்க வந்துக்கொண்டிருந்ததில் எஸ்டேட்டின் இரைச்சலும்; மனித சஞ்சாரமும்; குழந்தைகளின் ஆட்டமும் ஆர்ப்பாட்டமும் கூடி, விழா களை கட்டியது!.. கோவிலிலிருந்து, ‘வேல் முருகா… வேல் முருகா, வேல்!… ’ அலறிக்கொண்டிருந்தது. 

“ கங்காணி மவ கமலாதேவி எங்கப்பூ இருக்கு? தீமிதிகெல்லாம் வருதாப்பூ?.”

அவன் இவனை திரும்பிப் பார்த்தான். 

“ அவள இன்னுமா ஞாபகம் வேச்சிருக்க? ம்.. எங்கியோ பாங்கி பக்கம் இருக்குறதா கேள்விப்பூ! முந்தியெல்லாம் வருஷா  வருஷம் வந்துட்டுதான் இருந்துச்சி. ரெண்டு வருஷமா அதையும் காண்லப்பூ..” 

பூச்சியும் இவனும் கோவிலிக்கு எதிரே, சடக்கிற்கு இந்தப் பக்கம், சுற்றுச் சுவர் எழுப்பப் பட்டிருந்த அரசு வேம்பு மரத்தடியில் போய் உட்கார்ந்தனர். அவன், யார் யாருக்கு எந்தெந்த ‘சாமி’ வந்திருக்கிறது என்பதை விளக்கிக் கொண்டிருந்தான். 

கந்தசாமி கோவிலுக்குள் பார்த்தான்!.. நண்பன் சொன்ன எல்லோருமே உள்ளே தென்னங்குறுத்துகளில் தோரணங்கள் பின்னிக்கொண்டிருந்தனர். அவர்களின் மணிக்கட்டில் காப்பு கட்டப்பட்டு, விரலி மஞ்சள் பூத்துக்கிடந்தது. அவர்களில் இவனுக்குத் தெரிந்த மொட்டையன் -அவனுக்கு ‘சுப்ரமணிய சாமி’ வந்திருந்தது – இவனைப் பார்த்ததும், சிரித்தால் தீட்டு பட்டு விடுவதுபோல் தலையை மட்டும் ஆட்டிவிட்டு, பார்வையை திருப்பிக்கொண்டு புனிதம் காத்தான்.  

 அருகில் நிறுந்தப்பட்டிருந்த ரதத்தை, சில இளைஞர்கள் அலங்கரித்துக் கொண்டிருந்தனர். 

 இன்னும் சிலர், பக்கத்திலேயே – நண்பனின் தகவல் படி –  மூன்றடி அகலமும் இருபதடி நீளமும் கொண்ட  தீக்குழியை வெட்டிக் கொண்டிருந்தனர். குழியருகே, மூன்று (18)டக்கு கித்தாக் கட்டைகளும், எட்டு சாக்கு அடுப்புக்கரியும் தயாராக குவித்து வைக்கப்பட்டிருந்தன.                                                    

எதிரே, படம் காண்பிக்கப்படும் திடலில், ‘வழுக்கு மரம்’ நடுவதற்கான ஆயத்தம் நடந்துக் கொண்டிருந்தது. அதை ஒரு பெரிய கூட்டமே நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது. அந்த நிகழ் கால நடப்பில், ஓர் இறந்த கால சம்பவம் உடனே இவன் நினைவுக்கு வந்தது!..

‘ அப்போது இவன் எஸ்டேட்டில்தான் வேலை செய்துக்கொண்டிருந்தான். அந்த வருட தீமிதிக்கு அவர்களின் வகுப்பு கூட்டாளியான சாமியின் அப்பா, சரியான ‘மப்பில்’, ‘என்னடா வழுக்கு மரம் ஏற்றீங்க, பொட்ட புள்ளிங்க மாரி’ என்று வீராப்புடன்  ஏறப்போய் அலங்கோலமாய் சரிக்கி கீழே விழுந்து, இடுப்பு உடைந்துப்போய் படுத்த படுக்கையே நிரந்தரமாகி செத்துப் போனார்!..’

பூச்சி, தன் முழங்கை முட்டியால் இவனை இடித்து, கோவில் பக்கம் கண்ணைக் காட்டினான். 

அங்கே, நடுத்தர வயது மனுஷி ஒருத்தி, கோவில் வாசலில் அம்மனைப் பார்க்க நின்று, தலைக்கு மேல் கைகளை உயர்த்தி கும்பிட்டு, இரண்டு கன்னங்களிலும் போட்டுக்கொண்டு உள்ளே போனாள். அவளைப் பார்க்க, தெரிந்த முகமாய் இருந்தது. ஆனால், தோற்றமும்; காலமும் அந்த முகத்தை கலைத்துப் போட்டிருந்தன.

இவன் நண்பனைப் பார்த்தான்!…

“ யார்ன்னு தெரியிதாப்பூ?..”

இவன் உதட்டைப் பிதுக்கினான்.

“ அதாம்பூ!.. நம்ப கூட படிச்சானே பாலய்யா!.. ‘ஓட்டவாயா’ன்னு பட்டப்பெயர வெச்சிதான் எல்லாரும் கூப்புடுவோம். அவுனோட சின்னம்மாதாம்பூ அது!..”

“ என்னது!.. அவுங்களா இது!… பேருகூட சாமந்தியோ என்னமோ?..”

“ ஆ.. அவுங்களே தாம்பூ!…”

“ என்னாப்பூ இது? முடியெல்லாம் இப்பிடி நரைச்சு போச்சி!.. புள்ளிங்க இருக்கா? எத்தன புள்ளீங்க?.. “                              

“ அட நீ ஒன்னுப்பூ!..  அந்த பொம்பல கல்யாணமெல்லாம் ஒன்னும் பன்னிக்கலப்பபூ… அதுக்கெல்லாம் அவசியமும் இல்லப்பூ!.. மசிரு நரைச்சாலும் ஆச நரைக்கலுப்பூ அந்த பொம்பளக்கி!.. “

“ ஆமாம், பாலய்யா என்ன ஆனான்?..  அவன் எங்கப்பூ  இருக்கான்?..”               

“ அவனுக்கு என்னா கொறச்சலு? நாயி, நல்லாதான் இருக்கான்!.. பக்கத்து எஸ்டேட்லதாம்பூ இருக்கான். ரெண்டு புள்ளிங்க இருக்குப்பூ அவுனுக்கு. அவங்கூடல்லாம் இப்ப பேச்சு வார்த்த இல்லப்பூ. த்தூ… அவன்ல்லாம் ஒரு மனுசன்? “

 சாமந்தி, நெற்றி நிறைய திருநூறு துலங்க, கோவிலை மூன்று முறை சுற்றிவிட்டு, அம்மனைப் பார்த்து மீண்டும் ஒரு கும்பிடு போட்டு விட்டு, வீட்டைப் பார்க்க நடந்தாள்.

பூச்சி, ‘அட கடவுளெ!..’ என்பதுபோல் தலையை ஆட்டி, அவள் போன திக்கில் காறித் துப்பினான்.

 இவன் ஆர்வத்துடன் அவனைப் பார்த்தான். அவர்களின் பள்ளித் தோழனுடைய  சின்னம்மாவின் அந்தரங்கத்தை அறிந்துக்கொள்ள துடிக்கும் அசிங்கத்தில் திளைத்தான். 

“ நல்ல நாளும் அதுவுமா அந்த கண்றாவிய ஏம்பூ கேக்குற? பெறவு சொல்றேம்பூ.. ” என்று சுற்றுச் சுவரிலிருந்து தரையில் குதித்து,  தடுமாறி நின்றான். அவனைப் பிடித்து நிதானித்துக்கொண்டே இவனும் இறங்கி நின்றான்.      

 இவனுக்கு மனசு பொறுக்கவில்லை. என்னதான் அந்த கண்றாவி? நினைக்கவே காமம் கிளர்ந்தது.  துருவிக் கேட்கவும் அசிங்கமாக இருந்தது.

 இருவருக்கும் பசித்தது!.. மதிய சாப்பாட்டிற்கு பந்தி பரிமாறப்பட்டுக் கொண்டிருந்த (19)‘ஆயாக்கொட்டாயிற்கு’ கிளம்பிப் போயினர். வேம்புலி மற்றும் செல்லப்பன் சமையலின் ருசி இன்னும் அப்படியே இருந்ததால் இவன் நாகரிகமெல்லாம் பார்க்கவில்லை. சாம்பாரை கையில் ஊற்றச் சொல்லி குடித்தான். பாயாசத்தையும் இலையிலேயே ஊற்றச்சொல்லி கையோடு வழித்து நக்கி சாப்பிட்டான்.  

கொஞ்ச நேரம் அங்கேயே சுற்றித் திரிந்து, இவன் பட்டணவாசி ஆகிப் போன பெருமையை காட்டிக்கொண்டு தெரிந்தவர்களேயானாலும் சற்று விலகியே நின்று கலந்துறவாடி மாலையில் இருவரும் பூச்சியின் வீட்டிற்கு கிளம்பிப் போயினர். போகும் வழியில் பூச்சி சொன்னான்.

“ ப்பூ.. கையோட இன்னொரு போத்த வாங்கிகிட்டோம்ன்னா வீட்ல கொஞ்ச நேரம் பேசிக்கிட்டே குடிக்கலாம்பூ..”

சீனன் கடையைக் கடக்கும் போது, இவனுக்கு ஒரு போத்தல் ‘கின்னஸ் ஸ்டவுட்’ பியரும் அவனுக்கு அரை போத்தல் சம்சும் வாங்கிக்கொண்டான். 


பூச்சியின் வீட்டில் மேசை நாற்காலியெல்லாம் ஒன்றும் இருக்கவில்லை. ராத்திரியில் படுத்துக்கொள்ளும் வாங்கிலேயே போத்தல் குவளைகளுடன் உட்கார்ந்துக்கொண்டு குடிக்க ஆரம்பித்தனர். வாங்கின் ஓர் ஓரத்தில் தலகாணிகளும் போர்வைகளும் குவிக்கப்பட்டிருந்தன. அந்தத் துணிக் குவியலிலிருந்து வேர்வை கலந்த ஒருவித ஈரவாடை வீசிக்கொண்டிருந்தது. நல்ல வேளையாக, இரவு தனது காரிலேயே படுத்துக்கொள்வதற்கு தேவையான ஒரு போர்வையையும், தலகாணியையும் மறக்காமல் வீட்டிலிருந்தே கொண்டு வந்திருந்ததற்கு இவன் சந்தோஷம் பட்டுக்கொண்டான்.  அப்போது, பூச்சியின் மனைவி,

“ அண்ணே, குடிக்க ஆரம்பிச்சிட்டா இந்த மனுசனுக்கு கண்ணு மண்ணு தெரியாதுண்ண. கொஞ்சம் பாத்துகுங்க. ரொம்ப குடிக்க உடாதிங்க..” என்று சொல்லி மகளோடு கிளம்பிப் போனாள். மகள், மாவிளக்குத் தட்டை ஏந்திக்கொண்டு பெரிய மனுசியைப்போல் இவனை ஓரக்கண்ணால் பார்த்து சிரித்துக்கொண்டாள். மூத்தப் பையன்கள் இருவருக்கும் தாய் கிளம்பும்வரை காத்திருக்க முடியவில்லை.  

“ அடப் போடி. கண்ணு மண்ணு தெரியாம குடிசிர்றாங்கலாம். ஊங்கூட ஒக்காந்து குடிக்கிலியேன்னு வயித்தெரிச்சலா?.”

அவள் திரும்பி, இவனிருந்த  சங்கடத்தில், ‘ வாயில நல்லா வருது..’ என்பதுபோல் புருஷனை முறைத்துப் பார்த்துவிட்டு சென்றாள்.

பூச்சி, தன் குவளையில் சம்சை ஊற்றி தண்ணீர் சேர்க்காமலேயே ஒரு மடக்கு குடித்துவிட்டு வைத்தான். இவனுக்கு பயமாக இருந்தது. ஏற்கனவே அவன்,  நிதானம் குறைந்தே இருந்தான். 

“ என்னாப்பூ… இந்த வாட்டியும் தன்ணீ கலக்காமியே குடிக்கிற? பாத்துப்பூ..”

“ அட.. நீ ஒன்னுப்பூ? இதெல்லாம் ஒரு தண்ணீயாப்பு? முந்தி மாரியெல்லாம் இல்லப்பூ இப்ப. ரொம்பவே கலப்படமாயி போச்சு. எம்பொஞ்சாதியே கா போத்த குடிச்சும் மப்பே ஏறலன்னு சொல்றா!..” என்று சொல்லிவிட்டு, அவர்களுடன் படித்த பாலய்யாவின் சின்னம்மாவைப்பற்றி சொல்ல ஆரம்பித்தான். 

கந்தசாமி, மூடியைத் திறந்த ‘கின்னஸ் ஸ்டவுட்’ பீரைப்போல் பொங்க ஆரம்பித்திருந்தான். பூச்சி, நிதானத்தை இழந்துப் போனதில் பேச்சு, பச்சையாகிப் போனது. பெண்ணின் உறுப்பு, துவேஷத்திற்குரிய சொல்லாய் மாறியது. பாலய்யாவின் சின்னம்மா, ஒரு பெண் என்பது போய்  அரிப்பெடுத்த ஓர் உறுப்பாய் சபிக்கப் பட்டாள். பாலய்யாவோ அந்த உறுப்பின் மகனாய் கண்டிக்கப்பட்டான். நீண்ட நாட்களுக்குபிறகு அந்த வார்த்தைகளை எல்லாம் இவன் செவிகள் கேட்டு கூசின. ஆனால் இவன் அவற்றின் அர்த்தத்தில் திளைத்து சிரித்துக்கொண்டிருந்தான். அருந்தியிருந்த பியர் இவனையும் கிறங்கடித்துக்கொண்டிருந்தது. பூச்சி சொல்லிகொண்டிருந்தக் கதைக் கேட்டு இவன் கிளர்ச்சிகுள்ளாகியிருந்தான். அவனோ, சாமந்தி என்ற பெயரையே மறந்துவிட்டவன் போல், பெண்னுறுப்பாலேயே அவளை அசிங்கப்படுத்திக் கொண்டிருந்தான். அவள் செய்யும் சரசங்களை வாய் குழற, சொன்னதையே திரும்பத் திரும்பத் சொல்லி சரீர கிளர்ச்சிக்கு உள்ளானவன்போல் தோன்றினான். இவனும் அப்படித்தான் ஆகியிருந்தான். ஆனால், ஏனோ பாலய்யாவை நினைத்து மிகவும் அசூயைக்கொண்டான். ‘எப்படி அந்த நாயீனால இப்படியெல்லாம் செய்ய முடியுது. பாவம், அவன் பொண்டாட்டிக்கு தெரிஞ்சா எவ்ளோ சங்கடப்படுவா? அவன நம்பி பெத்த புள்ளியகூட உட்டுட்டு போவ முடியாதே?  ச்சீ.. நெனச்சி பாக்கவே ஒடம்பெல்லாம் கூசுது.’ எப்படி  பூச்சி, அடிக்கடி  பாலய்யாவ ‘அஞ்சடிக்கார ……..மகன்’ என்று சொல்லி திட்டினானோ அப்படியே  இவனும் பாலய்யாவை மனசுக்குள் அசிங்கமாய் திட்ட  ஆரம்பித்திருந்தான். அப்போது,

“ இந்த அஞ்சடிக்கார …….மவன்ல்லாம் ஒரு மனுஷன்.. த்தூ..” என்று குழறிக்கொண்டே துப்பிய எச்சில், சிலந்தியின் இழுவை நூலைப்போல் அவன் வாயிலிருந்து தொங்கி கைலியில் பட்டதுகூடத் தெரியாமல் பூச்சி, அப்படியே வாங்கில் சாய்ந்தான். இவன் செய்வதறியாத குழப்பத்திலும், லேசான குடி மயக்கத்திலும் அவனையே பார்த்து ஸ்தம்பித்து நின்றான். துணிக் குவியலிலிருந்து ஒரு தலகாணியை உருவி அவனுடைய தலைக்கடியில் வைத்தான். வெளியில் பார்த்தான். கண்களைபோல் சில வீடுகளில் விளக்குகள் விழித்துக்கொண்டிருந்தன. அந்த விளக்குகளைச்சுற்றி படர்ந்த பனியில், குளிருவதுபோல் அவை தம் சுடர் ஆடித் தவிப்பது தெரிந்தது. இருட்டின் காவலர்கள்போல்  ஆயில்பால்ம் மரங்கள், தூக்கக் கலக்கத்தில் தலைவிரிக்கோலமாய் கிடந்தன. வண்டுகளின் இடையறாத குறட்டைச் சத்தம் வேறு ஆரம்பமாகி வலுத்துக்கொண்டு வந்தது. பூச்சியின் மனைவி வரும்வரை அவனை அப்படியே விட்டுவிட்டு தன் காரில் போய் தூங்க முடியாதுதென்று தெரிந்தது. தன் சட்டைப் பையிலிருந்து சிகரெட் ஒன்றை எடுத்து பற்றவைத்துக் கொண்டான். 

யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது. வாசலைப் பார்த்தான். ஒரு கணம் உடல் சிலிர்த்துத்தான் போனது. அந்த இருட்டில் நடக்க பயப்படவேண்டிய தோற்றத்தில் சிறியதாய் ஓர் உருவம்! மாவிளக்கு தட்டை ஏந்திச் சென்ற  பூச்சியின் மகள்தான் வந்திருந்தாள். நான்கு வருடங்களுக்கு முன்னர் அளவு சிறியதாகிப்போன சுறுக்கு சிலுவாரை மட்டுமே அணிந்துக்கொண்டு வெற்றுடம்புடன் ‘வாய்க்கும் வயித்துக்கும்’ பத்தாத தோற்றத்தில் பார்த்த சிறுமியா அவள்! போகும் போது அவள் கையில் பத்து வெள்ளி கொடுத்துவிட்டு போனது ஞாபகம் வந்தது? அப்போது அவளுக்கு வயது ஆறோ, ஏழோ? ஏழ்மை, தோற்றத்தை மட்டுமா நறுங்கடிக்கிறது?    காசை வாங்க கூச்சப்பட்டுக்கொண்டு நண்பனின் பின்னால் நெளிந்துக்கொண்டு நின்றவள் நண்பன் சொன்ன பிறகே காசை வாங்கிக் கொண்டாள். அந்த சிறுமியின் பெயர்கூட இவனுக்கு ஞாபகமில்லை.  

“ இந்த இருட்ல நீ ஒண்டியாவ வந்தே?..”

“ ஏன்.. இன்னா பயம்? எங்க எஸ்டேட்டுதானே? அம்மாதான் அப்பாவ பாத்துட்டு வரச்சொன்னாங்க. அம்மா சொன்னமாரியே ஆளு கவுந்துதான் கெடக்குறாரு. இனி மனுசன் இன்னிக்கு எழுதிரிச்சமாரிதான் ” அவள் ரொம்ப துடுக்காக பேசினாள். பேச்சும் அனுபவமும் வயதுக்கு மீறியதாய் இருக்கும்போல் தோன்றியது. வறுமையும் வாழ்க்கையும் வயதிற்கே உரிய அப்பாவித்தனத்தை அழித்துவிட்டிருந்தது. அவள் ஏனோ ஒரு பருவப் பெண்ணைப்போல் பார்த்து, வெட்கத்தைக் காட்ட பழகியிருந்தாள். அப்பனின் சம்சு போத்தலையும் குவளையையும் எடுத்துக்கொண்டுபோய் குசினியில் வைத்துவிட்டு வந்தாள். நண்பன் நல்ல தூக்கத்திலும் மயக்கத்திலும் ஆழ்ந்துப்போயிருந்தான். 

“ உம் பேரு என்னா?..”

“ எங்கி ராணி!.”

“ என்னாது,. எங்கி ராணி?..”

“ ஆமா!.. என்ன எல்லோரும் அப்பிடிதான் கூப்புடறாங்க. அம்மா அப்பாகூட ஆச்சீன்னுதான் கூப்புவாங்க. மாரியாயின்னு யாருமே கூப்புட மாட்டாங்க..” என்று சொல்லி இவன் பக்கத்தில் வந்து நின்று கூச்சத்தோடு சிரித்தாள். 

அந்தச் சிறுமியின் வயதிற்கு மீறிய பார்வையும் வெட்கமும் இவனை சங்கடத்திற்குள்ளாக்கின. வயதுப் பையனைப் போல் இவன் நெளிந்தான். அவளின் மேல் வேர்வை நாறியது.

அவள் இன்னும் நெருங்கி வந்து இவன் தொடையில் கையை வைத்து மேலும் கீழும் தடவிக்கொண்டே

“ எனக்கு காசு குடுப்பீங்களா?.” என்று ரகசியக் குரலில் கேட்டாள். அவள் விரல்களின் மென்மையான தடவலில் அனுபவத்தின் சாகசம் தெரிந்தது. இவன், நாக்கு வரண்டுப்போவதாக உணர்ந்தான். குவளையில் இருந்த பியரை ஒரே மடக்கில் குடித்துவிட்டு வைத்தான். 

“ நீங்க ஒன்னும் எனக்கு சும்மா குடுக்க வேணா. உங்களுக்கு இன்னா செய்யினுமோ சொல்லுங்க செய்யிறேன்..” என்று ரகசியமாய் கொஞ்சி, இவன் கையை எடுத்து தன் மார்பில் வைத்துக்கொண்டாள். ரவிக்கையின் பொத்தான்கள் அவிழ்க்கப்பட்டிருந்தன. இவனுக்கு விரல்கள் நடுங்கத் தொடங்கின. இது ஒரு புது அனுபவம். அந்த அனுபவத்தில் இவன் புத்தி கிறங்கிப் போக குடித்திருந்த பியர் உதவியது.. 

ரகசியக் குரலில் பேச அவள் இவனையும் இழுத்துவிட்டிருந்தாள்.

“ இதயெல்லாம் எங்க கத்துக்கிட்ட?.. யாரு சொல்லிக்கொடுத்தா?..”

அவள், தன் விரல்களின் சரசத்தில் இவனை மயங்கடிக்க முயன்றுக்கொண்டிருந்தாள்.

“ நீ சொன்னாதான் காசு குடுப்பேன்..”

அவள் உடனே  இயக்கத்தை நிறுத்தி, தன் விரல்களால் இவனின் வாயைப் பொத்தினாள். அவளின் விரல்களில் இவன் தன் வாசம் உணர்ந்து கிளர்ந்தான். 

“ யாருகிட்டியும் சொல்லக்கூடாது..” என்று பாவத்தில் இவனுக்கும் பங்கு வைத்தாள். 

“ சரி.” இவனும் பங்கு சேர்ந்தான். கொஞ்ச நேரம் தயங்கியே இருந்துவிட்டு பிறகு சொன்னாள்.

“ ம்ம்.. வந்து.. உங்க அம்மா மேல சத்தியமா யாருகிட்டியும் சொல்லக்கூடாது. பக்கத்து வீட்டு தாத்தா, ஸ்கூலு வாத்தியாரு அப்பறம் வங்சாக்கட ராவுத்தரு மாமா”

“ எவ்ளோ குடுப்பாங்க?..” 

“ அம்பது காசுலேர்ந்து பத்து வெள்ளி வரிக்கும் குடுப்பாங்க.. பத்து வெள்ளியெல்லாம் ராவுத்தரு மாமாதான் குடுப்பாரு..”

“ அந்த காசல்லாம் என்னா செய்வ?.”

“ சில்லற காசா இருந்தா நா எடுத்துக்குவேன். வெள்ளியெல்லாம் அம்மா  சாமிபடத்துகிட்ட காசு வெக்கிற சூடம் டப்பி கீழ யாருக்கும் தெரியாம வெச்சிருவேன். “

அவள் மீண்டும் இவனின் கால்களுக்கிடையில் இவன் மேல் உரசிக்கொண்டு நின்றாள். மங்கலாய் எரியும் மண்ணெண்னை விளக்கொளிதான்! கருப்பிலிருக்கும் கவர்ச்சியைக் காண்பிக்காதா என்ன? சற்றுமுன் அவள் மேல் வீசிய வேர்வை நாத்தத்தைவிட இப்போது,  தலையில் அவளைப்போலவே கசங்கி, ஓரு மயிரிழையில் தொங்கிய மல்லிகைப் பூங்கொத்தின் வாசம் தூக்கலாய் இருந்தது. இவன் நெஞ்சு விரிய அந்த வாசத்தை முகர்ந்துக்கொண்டான்.   இவனது இரண்டு கைகளும் அவளின் வற்றிக் கிடந்த பிருஷ்டத்தையும் இறுகப் பிடித்து வருடத் தொடங்கின. நாவோ, துளிர்த்து மொட்டாகிக் கொண்டிருந்த  முலைகளை வெறியுடன் துளாவிச் சப்பியது. அவள், ஆதாரம் வேண்டி இறுகப் பற்றி,  அப்படியே இவன் மேல் சாய்ந்தாள். 

கொஞ்ச நேரத்திற்கு பிறகு, இவனுக்கு  எல்லாமே ஒரே வெறுப்பாய் தோன்றின. சட்டென அவளைப் பிடித்து, தள்ளி வைத்தான். அவள், உடனே அங்கிருந்து போனால் தேவலை என்று பட்டது. ‘என்னோட ரெண்டாவது மவளோட வயசுதான் இருக்கும் அவளுக்கு..’ மனசாட்சியிடம் நியாயம் கேட்பதுபோல் இவனுக்கு நெஞ்சு படபடத்து துடித்தது. ஏறியிருந்த கொஞ்சம் போதையும் சட்டென இறங்கிப் போக, தன் ஆண்குறியைப்போல் இவன் துவண்டுப் போனான். தன்னை நினைக்க அசிங்கமாகவும் அவமானமாகவும் ஆத்திரமாகவும் இருந்தது. முடிந்தால், இப்போதே இரவோடு இரவாக நண்பனிடம் சொல்லாமல்  கோலாலம்பூருக்கு ஓடிப் போனால்கூட நல்லது என்று தோன்றியது. நாளை முழுவதும் நண்பனின் முகத்தைப் பார்த்துக்கொண்டு அவனுடனேயே திரிய வேண்டியதை நினைக்க நரக வேதனையாய் இருந்தது. தீமிதி பார்க்க வந்து இப்போது இவனே அக்குழிக்குள் விழுந்துவிட்டதுபோல் தவித்தான்.   

நண்பனைப் பார்த்தான். அவன் புறமுதுகு காட்டி ஒருக்கழித்து படுத்திருந்தான். அவனின் குறட்டை ஒலி, இவனிடம் ஏதோ முறையிட்டு கெஞ்சுவதுபோல் இவனுக்கு பட்டது. மீண்டும் நண்பனின் முதுகைப் பார்த்தான்.  ‘த்தூ..’ என்று தன்னை நினைத்தே துப்பிக்கொண்டான். அவளைத் தேடினான். எங்கும்  காணவில்லை!. எழுந்து, தலையைக் குனிந்துக்கொண்டே வெளியில் போய், மீதமிருந்த பியரை அல்லூரில் ஊற்றிவிட்டு  உள்ளே வந்து வாங்கில் உட்கார்ந்து சுவரில் சாய்ந்துக்கொண்டான். 


மறுநாள், நண்பனைப் பார்க்கவும் பேசவும் மிகவும் சங்கடப் பட்டான். அவனிடன் பேசுவதற்கு வார்த்தைகளே இல்லாததுபோல் உமையாகிப் போனான். நண்பன் கூட இவனைப் பார்த்து, ‘ ஏம்பூ, ஒடம்பு சொகமில்லியா?’ என்று கேட்டு வைத்தான். எங்கோ இருந்த தீக்குழியின் அனலில் இவன் நாளெல்லாம் வெந்துக்கொண்டிருந்தான். எப்போது தீமிதி முடியும், வீட்டிற்கு கிளம்பிப் போவோம் என்று துடித்தான். 

தீமிதி முடிந்த கையோடு கந்தசாமி புறப்பட தயாரானான். பூச்சி, ஞாயிற்றுக்கிழமை போகச் சொல்லி எவ்வளவோ வற்புறுத்தியும் மறுத்துவிட்டான். இவனுக்கு அந்த நரக வேதனையிலிருந்து உடனே தூரமாய் ஓடிப்போக வேண்டுமென்று இருந்தது.   பெத்தவர்களின்  முன்னிலையிலேயே மாரியாயின் கையில் நூறு வெள்ளியை கொடுத்துவிட்டு நண்பனிடம் கேட்டான். 

“ ஏம்ப்பூ.. ஒரே பொம்பளபிள்ள. அவ கல்யாணத்துக்கின்னு ஏதாவது சேத்து வெக்கிறியாப்பூ?”

“ இன்னாப்பூ நீ? நெலம தெரியாத மாரி கேக்குற? எடுக்குற சம்பளம் வயித்துக்கே பத்தல. இந்த லட்சணத்துல என்னத்தப்பூ சேக்கறது?.”

இவன், நிலைமை தெரிந்தே, அவன் வாயிலிருந்தே அந்த வார்த்தை வரட்டுமென்று அதைக் கேட்டு வைத்தான்.  

“ சரி, நா சொல்றாப்ல ஒரு வேல செய்யிறியாப்பூ..”

“ இன்னா வேல?.. சொல்லுப்பூ.”

“ அடுத்த வாராமே உம்மவள ரவாங் டவுனுக்கு கூட்டிப் போயி அவ பேருல பேங்க்ல கணக்கு ஒன்ன தொறந்து அந்த புக்க எனக்கு அனுப்பி வையிப்பூ. நா அவ பேருல மாசா மாசம் என்னால முடிஞ்சத போட்டு வெக்கிறேன். அவ கல்யாணத்துக்கு ஆவும்.. ” 

பூச்சி, உடனே நண்பனின் கைகளை இறுகப் பற்றிக்கொண்டான். கண்கள் கலங்கிக்கொண்டிருந்தன. அவன் மனைவியோ, கைகளைக் கூப்பி வாயில் வைத்துக்கொண்டு இவனையே பார்த்துக்கொண்டு நின்றாள். மகள் மாரியாயி, குனிந்தத் தலை நிமிரவேயில்லை.   

பூச்சி சொன்னான்.

“ ஆச்சி, போயி மாமா கால தொட்டு கும்புட்டுக்க புள்ள..”

“ ஐயோ.. அதெல்லாம் ஒன்னும் வேணாப்பூ..”   

“ நீ சும்மா கெடப்பூ..”

மாரியாயி, இவன் காலைத் தொட்டு கும்பிட்டு எழுந்தாள். அந்த மரியாதையை ஏற்க முடியாமல் இவன் கால்களை உள்ளே இழுத்துக்கொண்டு அவமானத்தில் கூசிக் குறுகிப் போனான்.     

“ புக்க அனுப்பி வெக்க மறந்துறாதப்பூ..” மீண்டும் ஞாபகப்படுத்திவிட்டு கந்தசாமி கிளம்பினான். 

பூச்சி, காரை நோக்கி விரைவாக நடந்துப் போகும் நண்பனையே கூப்பிய கரங்களுடன் கண்கள் கலங்க பார்த்துக்கொண்டு நின்றான்.       


வட்டாரச்சொல் விளக்கம்

(1) கருப்புப் பிரதேசம்        –    மலாயா கம்யூனிச கிளர்ச்சிக் காலம் (1948 – 1960) 

(2) மேக்கட லயங்கள்       –    அடுப்பு மட்டுமே  தரை தலத்திலும் அறைகள் மேல் தலத்திலும் அமைந்த நீண்ட திறந்தவெளி வரிசை லயங்கள்                                           

(3) மூக்கு பஸ்                    –        முன்பக்கம் மூக்கு போல் நீண்ட பஸ் 

(4) ஆயர் சுவாமிற்கு       –        தண்ணீர் கலந்த சுடுநீர் (மலாய்)

(5) வெளிக்காட்டு வேலை       –        செடி கொடிகளை வெட்டி சீர் செய்யும் வேலை. Field work

(6) புவாங் நெகிரி                    –         நாடு கடத்தப்பட்டவன் (மலாய்)                                        

(7) கோக்கி                         –          துரை பங்களாவில் சமையல் செய்பவர்

(8) சடக்கு                          –          சாலை

(9 ) தபே துவான்’              –          துரைக்கு சல்யூட் அடித்து வணக்கம் சொல்வது (மலாய்)                                                                     

(10) தேம்பா சிகரெட்         –      1960, 1970-ல் பிரபல்யமான சிகரெட். Rough Rider Brand. குதிரைமேல் ஒருவன் துப்பாக்கியில் குறி பார்த்துக்கொண்டிருக்கும் படம் பொறிக்கப்பட்டது. தேம்பா – சுடுவது (மலாய்)

(11) மருந்து காம்ப்ரா   –     டிஸ்பென்சரி 

(12) கொலகுத்து                –         தலைக்கு  மேல் காய்த்துத் தொங்கும் செம்பனை குலைகளை கீழிருந்து சுலோப் என்ற ஈட்டியைப் போன்ற ஆயுதத்தால் கொண்டு குத்தி சாய்க்கும் வேலை

(13) சுலோப்                         –       இரும்பு குழாயின் ஒரு முனையில் ஆறு அங்குல அகலத்தில் சப்பட்டையாக சானை தீட்டப்பட்ட இரும்பை சொருகி குலைகளை குத்திச் சாய்க்க பயன்படுத்துவது.   

(14) சம்சு                                        –     ஒரு வகை நாட்டு சாராயம்

(15) கோசமான                             –        காலியான (மலாய்)

(16) திகா லிமா’                          –        555 என மூன்று ஐந்துகள் அட்டையில் பொறிக்கப்பட்ட  கையடக்க நோட்டு புத்தகம். (மலாய்)

(17) அஞ்சிங்                                 –         (நாய்) முத்திரை பீர் (மலாய்)

(18) டக்கு                                       –         டிராக்டர்     

(19) ஆயாக் கொட்டாய்            –     எஸ்டேட்டில் இருக்கும் குழந்தைகள் பராமரிப்பு இல்லம்                

4 Replies to “நண்பன்”

  1. மலேசிய தோட்டப்புற வாழ்க்கைச் சூழலையும், அந்த வாழ்க்கையின் மறைபகுதிகளையும் பேசும் கதை.
    தனக்கொரு மகளில்லாமல் போயிருந்தால்
    அந்தப் பெண் பிள்ளையின் நெருக்கத்தை அனுமதித்திருப்பாரா? பால் இச்சைகள் எல்லா நாகரீக பாசாங்குளையும் உடைத்துப் போட்டுவிடுகிறன.

  2. ‘நணபன்’ சிறுகதை.. நல்ல வேலை கந்தசாமி நான்கு வருடங்களாக தீமிதி திருவிழாவிற்கு எஸ்டேட் வரவில்லை.நண்பனுக்கு செய்த பாவத்தை பாஸ் புக் மூலம் கழுவ நினைத்து.. மனசுக்குள் ஒரு நெருடல்..

    1. கந்தசாமி பூச்சிக்கு ஒரு நல்ல நண்பனே. நடந்தது ஒரு விபத்து. அது புறக்காரணிகளால் நடந்தது. அதனாலேயே அவன் மிகுந்த அவஸ்தைக்கு ஆளாகிப் போகிறான். அதன் பிராயசித்தமாகவே நண்பனிடம் அந்த ஆலோசனையை வைக்கிறான்.

      கருத்து சொன்னதற்கு நன்றி தோழார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.