- கோன்ராட் எல்ஸ்ட்டின் ‘இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்’
- இந்துக்கள் கோழைகளா?
- யோகாப்பியாசம் இந்துக்களுடையதா?
- ராமகிருஷ்ணர் முகம்மதியரா அல்லது கிருத்துவரா?
- ராமகிருஷ்ணர் பல மதங்களைக் கையாண்டவரா?
- சர்வதேச யோகா நாளில் ‘ஓம்’ சின்னம் இடம்பெற்றதா? வெளியேற்றப்பட்டதா?
- யோகம் இந்துக்களுடையதா எனும் கேள்வியின் முகமதிப்பு என்ன?
- கோன்ராட் எல்ஸ்ட்டின் இந்து மதமும் அதன் கலாசாரப் போர்களும் – ஏழாம் அத்தியாயம்
- கொன்ராட் எல்ஸ்ட்டின் ’இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்’
- புனித தாமஸின் மரணம்: ஓர் இட்டுக்கட்டல்
- இலா நகரில் பன்மைத்துவம்
- சதி எனும் சதி
- தார்மீக விழிப்புணர்வு யாருக்குத் தேவை – ஹிந்துக்களுக்கா? பா.ஜ.க.வினருக்கா?
- “கல்வித் துறையின் ஹிந்து வெறுப்பு” புத்தக விமர்சனம்
- ஔரங்கசீப்பைப் பற்றிய சர்ச்சை
- அயோத்தி: ரொமிலா தாப்பருடன் பாதி வழி சந்திப்பு
- குஹாவின் கோல்வால்கர் – கோன்ராட் எல்ஸ்ட்
- குஹாவின் கோல்வால்கர் – 2ம் பகுதி
- ஆர்.எஸ்.எஸ் பற்றி ஊடகத் திரிப்புகள்
- கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக…..
- மெக்காலேயின் வாழ்க்கையும் காலமும்
- ‘இந்திரப்ரஸ்தா’ – வகுப்புவாதப் பெயரல்ல
- கல்வித் துறைக் கொடுமையாளர்கள்
- மேற்கத்திய மீட்பாளர்களின் பன்முகத்துவம்
- மேற்கத்திய மீட்பாளர்களின் பன்முகத்துவம் (இரண்டாம் பகுதி)
(கொன்ராட் எல்ஸ்ட்டின் இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் – அத்தியாயம் 10)
முன்னுரை:
2016ம் ஆண்டுவ் அலஹாபாத் பல்கலைகழகத்தின் ஸம்ஸ்க்ருத துறை “ஏகம் சத் விப்ரா பஹுதா வதந்தி“ (விவேகிகள் ஒரே சத்தியத்தைத்தான் பலவிதமாக விவரிக்கிறார்கள்) எனும் வேத மந்திரத்தைத் தலைப்பாகக்கொண்ட ஒரு சர்வதேச மாநாட்டைக் கூட்டியது. அதன் ஆரம்ப நாள் விழாவில் கலந்துகொள்ள என்னை அழைத்திருந்தார்கள். எனது உரை கனமானதாக இல்லையென்றாலும் சபையினர் முன்பே அறிந்திராத எனது சொந்தக் கருத்துகளைக் கேட்டு அனுபவித்தனர்.
“பத்ரஜனா, மம நாம கொன்ராட் எல்ஸ்ட் அஸ்தி, அஹம் பஸ்மத்வீபாத் பெல்ஜியம் தேஶாத் ஆகதோஸ்மி” துரதிருஷ்டவசமாக, இதற்குமேல் என்னால் சம்ஸ்க்ருதத்தில் பேச இயலவில்லை. அரசியல் மற்றும் தத்துவ நுண்ணறிவு பெரிய அளவில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள இந்த தேவ பாஷையில் எனக்கிருக்கும் இலக்கிய அறிவு எளிய பேச்சுத்திறனை எனக்களிக்கவில்லை. ஆகவே, எனது எண்ணங்களை சுலபமாக வெளிப்படுத்தக்கூடிய ஆங்கில மொழிக்கு எனது உரையை மாற்றிக்கொள்கிறேன். “இஸ்லியே, மை அபி, அங்க்ரேசி மெ போல் தூங்கா. க்ஷமா கீஜியே” இருந்தாலும், நான் வேலையை விட்டபின், இறப்பதற்குமுன் மற்றவர்களுடன் சுலபமாகப் பேசக் கற்றுக்கொண்டு விடுவேன். அப்பொழுதுதான், சுவர்க்கத்தில் வருணன், மிதுரன் போன்ற தேவர்களுடன் உரையாட இயலும்.

பன்மைத்துவம்:
“உண்மை ஒன்றுதான்: ஞானிகள் அதற்குப் பல பெயரிட்டுள்ளாரகள்” என்பதைப் பற்றி ஆழ்ந்து சிந்திப்பதற்காக இங்கு கூடியுள்ளோம். இந்த அலஹாபாத் நகரம் 1575ல் முகலாயப் பேரரசர் அக்பரால் நிறுவப்பட்டது. அவர் இறந்தபின் “மதச் சார்பின்மையை ஆதரித்த முதல் அருட்தொண்டர்“ எனப் பட்டமளிக்கப்பட்டவர். சமீப காலத்தில் இதன் கோட்பாடுகளைப் பரப்பிய முதல் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு அவர்களின் சொந்த ஊர் என்பதாலும் பிரபலமான ஒன்று. இதையே மையக் கருத்தாக வைத்துப் பேசுவதற்கான பலரின் உட்கிடக்கையையும் வெளிப்படையாகவே உணர முடிகின்றது. பொதுக்கூட்ட விவாதங்களில் இந்த வேத மந்திரம் மதச்சார்பின்மையை உறுதிப்படுத்துவற்காகவே உபயோகிக்கப்படுகின்றது. ஆனால், இம்மந்திரம் பன்மைத்துவத்திற்குத்தான் குரல் கொடுக்கிறது; மதச்சார்பின்மைக்கு அன்று என்பதை நான் விளக்க வேண்டியுள்ளது.
மதச்சார்பின்மை (Secularism – French Laicite) என்ற பதம் முதலில் ஐரோப்பிய நாடுகளில், கிருத்துவ ஆலயங்கள் அரசாங்க விஷயங்களில் தலையிடுவதை அடக்குவதற்காக ஏற்பட்டதாகும். தளிர் விட்டுக்கொண்டிருந்த அமெரிக்காவில் இவ்வார்த்தை, அரசாங்கம் கிருத்துவ ஆலய விஷயங்களில் தலையிடுவதை நிறுத்துவதற்காக மாற்றியமைக்கப்பட்டது. எவ்விதமாகப் பார்த்தாலும் அரசாங்கத்தையும் மதத்தையும் பிரித்து வைப்பதற்காகப் புழக்கத்தில் வந்த சொல்லாகும். ஒரு மதச்சார்பற்ற நாட்டின் பண்பு, அதன் குடிமக்கள் எம்மதத்தினரானாலும் சட்டத்தின் கண்களில் சமமானவர்கள் என்பதாகும். பெரும்பான்மை மக்களின் மதமாகிய இந்து மதத்தைச் சார்ந்த நிறுவனங்களிலும் ஆலயங்களிலும் தலையிடுவதை இந்திய அரசியலமைப்பு அனுமதிப்பதால், இந்துக்கள் பாரபட்சமாக நடத்தப்படுவது மட்டுமல்லாமல் இந்தியா மதச்சசார்பற்ற நாடன்று என்பதும் வெளிப்படை. மேலும், மதச்சார்பற்ற கொள்கையின் முக்கிய அம்சம் சட்டச் சமத்துவம் ஆகும். மாறாக, இந்தியாவில் இந்து, முஸ்லீம், கிருத்துவர், பார்சி போன்ற பல மதத்தினருக்கும் தனிப்பட்ட சட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, எல்லோரும் அறிந்த வேறுபாடு, முஸ்லீம் மதத்தினர் நான்கு பெண்களை மனைவிகளாக ஒரே சமயத்தில் ஏற்றுக்கொள்ள அனுமதிக்கும் சட்டம், மற்ற மதத்தினரிடம் இது சட்ட விரோதம் என்கிறது. பல காலமாக இந்தியாவில் புழங்கிவந்த பலதாரத் திருமணத்தை ஒரு மதத்தினரைத் தவிர மற்ற மதத்தினரிடமிருந்து நீக்கி மக்களிடையே ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கிய சட்ட அமைப்பு உள்ள நாட்டை எவ்வாறு மதச்சார்பற்ற நாடு என ஏற்றுக்கொள்ள முடியும்? இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு எனக் கூறும் இந்தியப் பார்வையாளர்களைத் தகுதியற்றவர்கள் என்றுதான் கூறவேண்டும்.
அதிருஷ்டவசமாக, இந்த வேத மந்திரம் உண்மையான அல்லது நேருவின் மதச்சார்பின்மையைப் பற்றியது அன்று. பன்முகங்களையோ, ஒரே மக்களிடையே பலவித சட்ட அமைப்புகள் ஒன்று சேர்ந்திருப்பதைப் பற்றியும் அன்று. கருத்து வேறுபாடுகள் ஒன்றோடொன்று மோதாமல் கூடியிருப்பதை அறிவுறுத்தும் மந்திரம் இது.
ஒரே நபர், பெற்றோர்கள் இட்ட பெயர், குடும்பத்தினரிடையே செல்லப் பெயர், நண்பர்களிடையே ஒரு பெயர், கதாசிரியரானால் ஒரு புனைப் பெயர், சீனரானால், இறந்த பிறகு ஒரு பெயர் எனப் பல பெயர்களால் அறியப்படுவது போலவும், அதே நபர் பிள்ளையாகவும் சகோதரனாகவும் தந்தையாகவும் பக்கத்து வீட்டுக்காரராகவும் முதலாளியாகவும் தொழிலாளியாகவும் இருப்பதைப்போலச் சத்தியம் என்பதும் ஒன்றுதான். அது பல விதமாக அறியப்படுகிறது.
மேற்கோளிலிருந்து வாக்கியத்தைத் தனியாகப் பிரித்தெடுத்து உபயோகிப்பதால் பல அனர்த்தங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. நான் ஒரு மேற்கோளைக் கேட்டால் அதன் சூழலையும் அதற்கு முன்னும் பின்னும் உள்ள வரிகளையும் அதன் காலத்தையும் தெரிந்துகொள்ள விழைவேன். பிரபலமான மேற்கோள்கள் அதைக் கூறியவரின் எண்ணத்திலிருந்து நழுவுவது மட்டுமல்லாமல் அதற்கு எதிர்மறையான எண்ணத்தைத் தழுவுவதும் உண்டு. பிரபலமான “East is East and West is West, and never the twain shall meet” – எனும் மேற்கோள் மும்பை வாசியான ருட்யார்ட் கிப்ளிங்கால் அவர் மும்பை வாசியாக இருந்தபோது எழுதப்பட்டது. இதற்கடுத்த வரிகளைப் படித்தால்தான் இதற்கும் அவர் சொல்ல நினைத்ததிற்கும் உள்ள வித்தியாசம் புரியும்.
‘But there is neither East nor West, Border, nor Breed, nor Birth,
When two strong men stand face to face, though they come from the ends of the earth!’
திசைகாட்டியில் கிழக்கும் மேற்கும் ஒன்று சேராது. ஆனால், இரண்டு சம நபர்கள் சந்திக்கும்போது அவர்கள் பிறந்து வளர்ந்த இடம் அவர்களை எவ்விதத்திலும் பாதிக்காது என்பதாகும். “அஹிம்சா பரமோ தர்மா” – எனும் பதம் தற்காலத்திற்குப் பொருந்தும் என்பதால் காந்தீயத்தைப் பின்பற்றுவோரை முழு வன்முறை இன்மையைத்தான் எப்போதும் கையாள வேண்டும் என தவறாக எண்ணவைக்கும் வாக்கியம். ஆனால், இது பாதியாக துண்டு செய்யப்பட்ட பதம். மஹாபாரதத்தில் வரும் இப்பதத்தின் மறுபாதி “தர்மா ஹிம்ஸா ததைவ ச“ – என்பதால் தர்மத்தை நிலைநிறுத்தப் பயன்படும் வன்முறையை இப்பாடல் அனுமதிப்பது தெரியவருகிறது. வன்முறையோ வன்முறை இன்மையோ சந்தர்ப்பத்தைப் பொருத்தது, எக்காலத்திற்கும் பொருந்தாது என்பதுதான் உண்மை. உதாரணமாக, ஆளற்ற ஒரு காட்டில் ஒரு பெண்ணை சில அயோக்கியர்கள் கற்பழிக்க முயலும்போது திடீரென்று வலிமையான ஓர் ஆள் அங்கே வந்து அவர்களை அடித்து விரட்டினால், இது வன்முறை; எனவே தவறானது என்று யாராவது கூறுவார்களா? வன்முறையற்ற சமூகத்தை நிறுவப் பாடுபடுவதில் தவறொன்றுமில்லை. ஆனால், நாமிருக்கும் சமூகத்தில் வன்முறை எப்போதுமே அதர்மம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. “வசுதைவ குடும்பகம்“ என்ற மற்றொரு அரைகுறை மேற்கோள் ஹிந்து மதக் கோட்பாடாக பொதுமக்களின் நுகர்வுக்கு வைக்கப்படும் ஒன்று. பல ஹிந்துக்கள் இதை வேத மந்திரமாகவோ பகவத் கீதையில் இருப்பதாகவோ நினைக்கிறார்கள். ஆனால், இது ஹிதோபதேசம் என்ற நீதிக் கதை தொகுப்பில் வரும் வாக்கியம். ஒரு குள்ளநரி ஒரு மானை சாப்பிடக் குறிவைத்து அதன் நம்பிக்கையை பெற முயல்கிறது. மானுடைய நண்பனாகிய காக்கை மானிடம் நரியை நம்பாதே எனும்போது, நரி வசுதைவ குடும்பகம் – நாமெல்லோரும் ஒரே குடும்பத்தினர் எனக் கூறி மானை அழைத்துச் செல்கிறது. மானை நரி கொல்லப்போகும் தருணத்தில் காக்கை மானை தப்பியோட வைத்துவிடுகிறது. இதிலுள்ள நீதியென்ன? இந்த உலகமே நம் குடும்பமென்று ஏமாற்றுக்காரர்கள்தான் கூறுவர். ஏமாளிகள்தான் அதை நம்புவர் என்பதாகும். காக்கைபோல் இப்போலிக் கோட்பாடுகளை நம்பாத சிலரும் உள்ளனர். இந்த வார்த்தைகளின் பின்னுள்ள அர்த்தத்தை அறியாமல் இதுதான் எங்களுடைய உலக நோக்கு எனப் பறைசாற்றும் நவீன ஹிந்துக்களைப் பற்றி என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
இத்தகைய கோட்பாடுகளை எல்லாம் தவிர்த்து ஒரு சம்ஸ்க்ருதக் கோட்பாட்டை மட்டும் நான் எப்போதும் பின்பற்றுகிறேன். இது எவராலும் அசைக்க முடியாத ஒன்று. எக்காலத்தும் நம்பத்தகுந்த வழிகாட்டி. “சத்யமேவ ஜயதே“ – வாய்மையே வெல்லும் என்ற முண்டகோபநிஷத் வாக்கியம். வேறுவிதமாக திருப்பவோ மாற்றியமைக்கவோ முடியாதது. இந்தியாவின் தேசியப் பொன்மொழி. என்னை மிகவும் கவர்ந்த இவ்வாக்கியத்தைத்தான் என்னுடைய பெயர் அட்டையில் பதிந்துள்ளேன்.
இனி, ஒரு கோட்பாட்டின் சூழல் இம்மாநாட்டின் கருப்பொருளைப் பற்றி என்ன சொல்கிறது என்று பார்க்கலாம்.
பல கடவுள் நம்பிக்கை:
“ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி.” (ரிக் வேதம் 1:164:46.) விவேகம் உள்ளவர்கள், ஒரே சத்தியத்தைதான் பலவிதமாகக் கூறுகிறார்கள் என்னும் வாக்கியம் தற்போது ஓர் உண்மையே பலவாகத் தெரிகிறது என்பதை உறுதிப்படுத்த உபயோகமாக உள்ளது. ஆனால், இம்மந்திரத்தின் அடுத்த வரிகள், “விவேகிகள் சத்தியமான ஒன்றைதான் இந்திரன், யமன், மாத்ரீஸ்வான், கருத்மான் (கருடன்), அக்னி போன்ற பல கடவுள்களாக வழிபடுகிறார்கள் என்கிறது. எனவே, இம்மந்திரம் பல கடவுள் வழிபாடுடைய ஒரு மதத்தை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இம்மந்திரத்தின் பிரகாரம் தெய்வத்தைக் கருடன் போன்ற பறவையாகவோ, நெருப்பை அக்னி பகவானாகவோ, மற்ற உருவங்களாகவோ வழிபடுவது தவறன்று என்பதாகும்.
இதை வலியுறுத்த வேண்டியது அவசியமாகவுள்ளது. ஏனெனில், கடந்த 200 வருடங்களாக இந்து சீர்திருத்தவாதிகளும் நவீன ஹிந்துக்களும் ஹிந்து மதமும், கிருத்துவ இஸ்லாமிய மதங்களைப்போல் ஒரு கடவுள் மதமே என திரித்துச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். ஒரு கோட்பாட்டை மதிப்பீடு செய்யும்போது பலர் அது வெளிப்படையாகக் கூறும் உண்மையைப் புறக்கணித்து, சமூகத்தில் அவர்களுக்கு ஆதாயத்தையும் அந்தஸ்தையும் கொடுக்குமாறு உருவமைத்துக் கொள்கிறார்கள். ஒரு கடவுள் வழிபாடு கௌரவமான கோட்பாடாக மாறியவுடன் அநேக ஹிந்துக்கள் ஹிந்து மதமும் அதையேதான் வலியுறுத்துகிறது என கூற ஆரம்பித்துவிட்டனர். வேதமும் இதைத்தான் சொல்கிறது என்பதற்கு ஆதாரமாக இம்மந்திரத்தின் முதல் வரியை முன்வைக்கின்றனர். பல கடவுள்களின் பெயர்கள் அடிக்கோடாகவுள்ள ஒரு கடவுளை மறைக்கிறது; எனவே, இந்து மதம் மற்ற மதங்களிலிருந்து வேறுபட்டதன்று என்கின்றனர்.
கடன் வாங்கிய கருத்தியல்களைத் தலையில் ஏற்றிக்கொண்டுள்ள வேரூன்றாத ஹிந்துக்கள், ஒரு கடவுள் வழிபாடு போன்ற புரியாத சொற்றொடர்களை உள்வாங்கிக் கொண்டுள்ளனர். சரியான அர்த்தம் தெரிந்தால் இச்சொற்றொடர்களின் மேல் உள்ள ஆசை குறைந்துவிடும். பைபிள், குரான் இரண்டுமே ஒரு கடவுள் என்று சொல்வதோடு நிறுத்தவில்லை. மற்ற கடவுள்கள் எல்லாம் போலி என்கின்றன. இதை யார் மதிப்பிற்குரிய வேத மந்திரமாக விரும்புவார்கள்? மேலும், நாம் எடுத்துக்கொண்டுள்ள வேத மந்திரம் போலிக் கடவுள் என்ற வார்த்தையை எங்குமே பிரயோகிக்கவில்லை. அது மட்டுமல்லாமல், மந்திரத்தில் வரும் எல்லா கடவுள்களும் சமமானவர்கள் என்கிறது.
ஆனால், கிருத்துவ இஸ்லாம் மதங்கள் கூறும் ஒரு கடவுள் வழிபாட்டு முறையைப் பின்பற்றுவதாக நினைக்கும் ஹிந்துக்கள் தவறான எண்ணத்தைக் கொண்டுள்ளனர். உதாரணமாக, எல்லாக் கடவுள்களின் பெயர்களையும் மந்திரங்களிலிருந்து நீக்கிவிட்டுக் கடவுள் என்று மட்டும் குறிப்பிடுவதால், ஆரிய சமாஜம் அது ஒரு கடவுள் வழிபாட்டு நிறுவனம் என்கிறது. ஒரு கடவுள் வழிபாடு பன்மைத்துவத்தை அனுமதிக்காது என்பது அவர்களுக்கு தெரியாது போலிருக்கிறது. கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் சிலைகளையும் ஜூபிடர், அப்போல்லோ, ஹோரஸ், இஷ்டார், மார்டுக் போன்ற தெய்வங்களின் கோவில்களையும் இடித்துத் தரைமட்டம் ஆக்குவதற்கு இக்கொள்கையே காரணம். இது இந்து மதத்திற்கு ஏற்ற கொள்கையா? இதற்குப் பெயர்தான் மதச்சார்பின்மையா? வேதம் இத்தெய்வங்களை எவ்வாறு குறிப்பிடும்? முனிவர்கள் கடவுளை ஜூபிடர், அப்போல்லோ, ஹோரஸ், இஷ்டார், மார்டுக் போன்ற பல பெயர்களால் அழைக்கிறார்கள் என்று சொல்லும்.
ஒரு கடவுள் வழிபாட்டினர் (Monotheists) என்று தங்களைத் தாங்களே அழைத்துக்கொள்ளும் ஹிந்துக்கள் ஹனுமான் சாலிஸாவை மாற்றி எழுதினால், “ஹனுமான், சிவன் கோவில்களை அழியுங்கள்! சரஸ்வதியின் சிலைகளையும் மற்ற சிலைகளையும் உடைத்தெறியுங்கள் என்கிறார். ஹனுமானை மட்டுமே ஒருவர் வணங்க வேண்டும்” என்பது போன்ற வரிகளை சேர்க்கவேண்டி வரும். ஹிந்துக்களின் ஒரு கடவுள் வழிபாட்டைத் துல்லியமாக வரையறுக்க வேண்டுமென்றால் Henotheists என்ற சொல்தான் சரியானதாகும். ஹிந்துக்கள் ஒரு கடவுளை மட்டும் வழிபட்டால்கூட மற்ற கடவுள்களை மறுப்பதில்லை, வெறுப்பதில்லை. சில சமயங்களில், தாங்கள் வழிபடும் ஒரே கடவுளை மாற்றிக் கொள்வதும் உண்டு.
ஒரே கடவுள் வழிபாட்டினரோ (மானோதீயிஸ்ட்) தங்களுடைய கடவுளைத் தவிர மற்ற கடவுள்களைப் போலி அல்லது தீயவையாக கருதுபவர்கள்.
கிரேக்க வார்த்தையான மானோ என்றால் “ஒன்று” அன்று; “ஒன்று மட்டுமே” என்பதாகும். மிகவும் பிரத்தியேகமான சொல். இம்மாநாட்டின் தலைப்பாக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள வேத மந்திரமோ எந்தக் கடவுளையுமே எதிர்த்துப் பேசவில்லை. மானோதீயிஸம் என்ற கருத்துரையை இம்மந்திரத்துடன் இணைத்துப் பேச ஆசைப்படுபவர்கள் இவ்வேத மந்திரம் அதற்கு எதிரானது என்று முறையிடுவதுதான் சரியானது.
தீர்க்க தமஸ்:
நாம் எடுத்துக்கொண்டுள்ள இந்த வேத மந்திரம் தீர்க்க தமஸ் என்னும் வேத ரிஷி எழுதிய புதிர் துதிப் பாடல்களில் (Riddle Hymns) இறுதிப் பாடலாகும். தீர்க்க தமஸ் அல்லது நீண்ட இருள் என்ற பதம் சில சமயம் பார்வையற்றவரைக் குறிக்கும், சில சமயம் கூறிய சிந்தனையாளரையும் ஆய்வாளரையும் குறிக்கும். கிரேக்க கவிஞர் ஹோமரும் இதனால்தான் பார்வையற்றவர் என அழைக்கப்பட்டார். தீர்க்க தமஸ் வான சாஸ்த்திர நிபுணர். பிரபஞ்ச வட்டத்தை 360 பாகைகளாகவும் 12 பகுதிகளாகவும் பிரித்தவர். எனவே இரண்டாவது அர்த்தம்தான் இவருக்குப் பொருந்தும்.
இந்து மதச் சிந்தனையில் முக்கியமான இரண்டு அம்சங்கள் துறத்தல் (Renuncition) மற்றும் பொருண்மை வாதம் (Monism) ஆகும். தீர்க்க தமஸ்தான் இவற்றைக் கண்டுபிடித்தார் என்று சொல்ல முடியாவிட்டாலும் தமது பாடல்கள்மூலம் இன்றுவரை இந்த அம்சங்களை நிலைத்திருக்கச் செய்தவர் என்பதில் சந்தேகமேயில்லை.
துறத்தலுக்கு வழிகாட்டியான ரிக் வேத மந்திரம் 1:164:20 ஒரே மரத்தில் அமர்ந்திருக்கும் இரண்டு பறவைகளின் வித்தியாசமான போக்கை வெளிப்படுத்துகிறது. ஒன்று, மரத்திலுள்ள கனிகளைத் தின்றுகொண்டே இருக்கிறது. மற்றொன்று அதில் கவனம் செலுத்தாமல் அமைதியாக உட்கார்ந்திருக்கிறது. முதல் பட்சி போகத்தில் ஆழ்ந்திருக்கிறது. இரண்டாவது பட்சி சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறது. இப்பாடல்தான் உலகத்திற்கு இந்தியாவின் மிகச் சிறந்த பரிசளிப்பான தியான அறிவியலுக்கும் அஸ்திவாரமாகும். பிற்காலத்தில் பலர் இதை வெவ்வேறு விதங்களில் வளர்ச்சி பெறச் செய்திருந்தாலும் இதன் சாரம் இப்பாடலில் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
மற்றொரு அம்சமான பொருண்மை வாதம் அல்லது மோனிசம் நாம் எடுத்துக்கொண்டுள்ள வேத மந்திரத்தில் வெளிப்படுகிறது. பல விதமான கருத்துகள் எவ்வாறு ஒரே உண்மைத் தத்துவத்தைப் போதிக்க முடியும் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டும் மந்திரம். பன்முகத் தன்மையில் உள்ள ஒற்றுமையை எடுத்துக் காட்டும் மந்திரம். பலவற்றை ஒருங்கிணைக்க வைக்கும் மந்திரம். வெளிப்படையாகத் தெரியும் பன்மைத்துவத்தின் பின்னுள்ள ஒருமைப்பாடுதான் ஆதியிலிருந்தே வேதத்தின் கண்ணோட்டமாக இருந்து வருகிறது.
மூன்றாவதாக, புதிர் துதிப்பாடலில் தீர்க்க தமஸ், ஓம் எனும் பிரணவ மந்திரம் ஒரு பசு தன் கன்றைக் கூப்பிடும்போது கன்று பதிலுரைக்கும் சப்தம்போல் உள்ளது என்கிறார். இங்கு கூடியிருக்கும் சமஸ்கிருத பண்டிதர்கள் இதைவிடச் சிறந்த விளக்கத்தைக் கொடுக்கக்கூடும். இருந்தாலும், பண்டைய காலத்து வேத முனிவர்கள் பிற்காலத்துப் படிப்பாளிகளைவிட நகைச்சுவையில் தேர்ந்தவர்கள் என தோன்றுகிறது.
மேற்கத்திய நாடுகளின் தத்துவ சிந்தனைப் பாரம்பரியம் அனைத்துமே கிரேக்கத் தத்துவ ஞானி பிளேட்டோவின் அடிக்குறிப்புகள்தாம் என்று கூறுவார்கள். அதுபோல இந்தியத் தத்துவச் சிந்தனைகளெல்லாம் தீர்க்க தமஸின் அடிக்குறிப்புகள்தான் என்று கூறுவது மிகையாகாது.
இஸ்லாம்:
இனி, நீங்கள் இங்கு அழைத்ததற்கான விஷயத்திற்கு வருவோம்; பல்லாயிரம் மைல்கள் நான் கடந்து வந்தது, பெரும்பான்மையான ஹிந்துக்கள், அதிலும் முக்கியமாக, பல மதக் குழுக்களில் சேர்ந்திருக்கும் ஹிந்துக்கள் பேசப் பயப்படும் பொருள் பற்றியது. அதுதான் இஸ்லாம். நாளைய தினம் இதே இடத்தில் பல மதங்கள் இணைந்த மன்றம் கூடவிருக்கிறது. சேர்ந்து வாழ்வதில் பிரச்சினை இல்லாத புத்த மதம் போன்ற தார்மீக மதங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்கிறார்கள். கிருத்துவ மதத்தைச் சேர்ந்த ஒருவரும் இதில் கலந்துகொள்கிறார். சற்று சங்கடம்தான். ஆனால் இக்கூடத்தில் அடுத்து நுழையப்போவது இஸ்லாம் என்னும் பெரிய யானை. ஹிந்துக்கள் நிரம்பியுள்ள அச்சபையில் இம்மந்திரத்தை முதலில் கூறும்போது இஸ்லாமிய மதத்தைச் சந்தேகப்பட வேண்டாம் என வலியுறுத்துவதாகவே ஹிந்துக்களின் காதில் ஒலிக்கும். ஹிந்துக்கள் இஸ்லாம் பற்றிய தங்கள் கருத்துகளை இம்மாநாட்டிற்கு வெளியே நிறுத்தி வைக்கவேண்டும்; ஆனால் முஸ்லிம்கள் ஹிந்துக்களை பற்றிய எந்த கருத்துகளை நிறுத்தி வைக்கவேண்டும் என்பதை முறைப்படுத்த ஒருவருக்கும் தைரியம் கிடையாது.
இத்தகைய கருத்தரங்குகளில், முஸ்லீம் மக்கள் இந்து மதத்தைப் பாராட்டுமளவிற்கு இஸ்லாமை எதிர்த்துச் சொற்பொழிவுகள் ஏதாவது நடைபெறுகின்றதா என்று யோசிக்கிறேன்.
முஸ்லிம்களுடன் சமாதானமாகப் போகவேண்டும் என்பதற்கு இந்துக்கள் கூறும் காரணம், ”நாம் அவர்களுடன் ஒத்து வாழவேண்டும்” என்பதாகும். ஹிந்துக்கள் ஏன் அவர்களை எங்களுடன் சேர்ந்து வாழக் கற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லத் தயங்குகிறார்கள்? குரானில் மற்ற மதங்களுடன் ஒத்து வாழுங்கள் என்ற பாடல் வரிகள் ஏதாவது அவர்களுடன் மற்ற மதத்தினர் இணைந்து இசைக்குமாறு உள்ளதா?
இதுதான் இம்மாநாட்டின் பின்னணியிலுள்ள நோக்கமா என்று இதை ஏற்பாடு செய்தவர்களை வினவி அவர்களைச் சங்கடப்படுத்த நான் விரும்பவில்லை. அது எங்கள் நோக்கமன்று எனக் கூறினால் அதை ஒப்புக்கொள்ளத் தயாராக உள்ளேன். முஸ்லீம்களை எப்பொழுதும் திருப்திகரமாக வைத்துக் கொள்ளவேண்டும் என்ற மனோவியல் ஹிந்துக்களை பலமாகப் பீடித்துள்ளதால் இம்மாநாட்டைக் கூட்டியவர்களும் இதிலிருந்து தப்பித்திருக்க முடியாது என்று நம்புகிறேன். இன்று காலை ஒரு ஹிந்து நபர், தயவுசெய்து அயோத்தி சர்ச்சையைப் பற்றிப் பேச வேண்டாம்,. ஏனெனில் இங்கு ஒரு முஸ்லீம் நபர் வரவிருக்கிறார் என்றார். அயோத்தியைப் பற்றிக் கட்டாயமாகப் பேசத்தான் போகிறேன்; ஆனால் சர்ச்சையைப் பற்றி அன்று.
நூற்றுக்கணணக்கான ஹிந்துக்களிடையே ஒரு முஸ்லீம் இருக்கிறார் என்று தெரிந்தவுடன் எல்லா ஹிந்துக்களும் தங்கள் எண்ணங்களை பதுக்கிக் கொள்கிறார்கள். அது மட்டுமல்லாமல், அனைத்து ஹிந்துக்களும் அந்த ஒரு முஸ்லீம் நபரை அவர் கேட்பதற்கு முன்னரே அவரைச் சந்தோஷப்படுத்தத் தலைகீழாக நிற்கின்றனர். இவர்கள் முஸ்லீம்களுக்கு பயந்து நிலத்தடியில் வாழும் சமூகத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பார்களோ?
நான் அவ்வாறு பயந்தவன் அல்லன். முஸ்லீம்களும் பன்மைத்துவத்தின் சில சுரசுரப்பான விளிம்புகளைத் தொட்டவுடன் விலகி ஓடும் நகைச்சுவையற்ற மனிதர்கள் அல்லர். எனவே ஒரு முஸ்லிமோ, பல முஸ்லிம்களோ, முஸ்லீம்கள் மட்டுமே இருந்தாலும் நான் சொல்லப் போவதை மாற்றிக் கொள்ளப்போவதில்லை. அவர்கள் எல்லோரும் இந்த நாட்டினர். நம்மைப் போன்ற ஆசைகளும் அபிலாஷைகளும் நிறைத்த சக மனிதர்கள்தான். ஒரு குறிப்பிட்ட மதக் கோட்பாடுகளினால் வெளிப்புறத்தில் சிறிது மாற்றங்கள் இருந்தாலும் மற்றபடி நம்மைப் போன்றவர்களே. எனவே, உரையாற்றல்கள், கோட்பாடுகளினால் மூடப்பட்ட அவர்களது மேற்புறத்தைத் தவிர்த்து உட்புறத்திலுள்ள மனித நேயத்தைக் கவர்வதாக அமையவேண்டும்.
இந்த முயற்சியில் நானும் சேர்ந்துகொண்டு நாம் அனைவரும் ஒரே படகுக்காரர்கள்தான் என்ற உணர்வை ஏற்படுத்த முயல்கிறேன். ஏற்கெனவே ஹிந்துக்களை மகிழ்விக்கும் ஏற்றிய விளக்கு, பூமாலை, தேங்காய், சரஸ்வதி சிலை போன்றவை இங்கே இருப்பதால், முஸ்லிம்களிடையே நல்லுணர்வை ஏற்படுத்தும் சில விவரங்களைக் கூறப்போகிறேன்.
முகம்மது நபிகளைப் பற்றிய என்னுடைய விமர்சனங்களைப் பற்றி அறிந்தவர்கள் நான் அவரைப் போற்றிப் பேச ஆரம்பித்தால் அதை நம்பமாட்டார்கள். ஆனால், அவருடைய ஒரு நல்ல குணத்தை நான் சொல்லியே ஆகவேண்டும். நபிகள் ஓர் அனாதை. அவரை வளர்த்த உறவினர்கள் அவரது பெற்றோர்களின் மரபுரிமைகளைக் கொடுக்காமல் ஏமாற்றிவிட்டனர். இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட நபிகள் பெற்றோர்கள் தங்கள் வம்சத்தினரின் மரபுரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்பதை எப்போதும் வலியுறுத்தியுள்ளார். இந்த ஒரு விஷயத்தில் நாமெல்லோரும் நபிகளைப் பின்தொடர வேண்டும். உங்களுடைய மரபுரிமைகளை இழக்கக் கூடாது. உங்கள் இயற்கை இயல்புகளைவிட்டு உங்கள்மேல் திணிக்கப்படும் செயற்கை இயல்புகளைத் தழுவாதீர்கள். உங்களது உண்மை மரபுடனும் வேர்களுடனும் இணைந்து இருங்கள். இதைத் தவிர, நபிகளைப் பற்றிய எனது எண்ணங்கள் உங்களிடமிருந்து வேறுபடலாம்.
அல்லா, இலா:
நம் கவனத்தை அல்லாவின் பக்கம் திருப்புவோம். நான் அல்லாவை முழுமையாக விரும்புவன். இஸ்லாமிய மதத்தில் உயர்ந்த தத்துவம் அல்லாதான். அல்லா உயர்ந்தவர் என்று சொன்னால் போதாது. உயர்ந்தவர்களைவிட உயர்ந்தவர் என்றே கூறவேண்டும். அல்லா என்ற சொல்லைப் பகுத்தாய்வு செய்யலாம். சம்ஸ்க்ருதம் என்ற தேவ மொழியைப் படிப்பவர்களுக்குத் தேவன், கடவுள் என்றால் பிரகாசமான ஒன்று என்பது தெரியும். விண்ணில் பிரகாசமாக ஒளிர்வது நட்சத்திரங்கள். 5,000 வருடங்களுக்கு முந்தைய சுமேரிய சித்திர வடிவ எழுத்துகள் கடவுளைப் பிரகாசமான நட்சத்திரமாக வரைந்துள்ளன. இந்த வடிவத்தின் சுமேரிய மொழி உச்சரிப்பு ‘டிங்கிர்’ (Dingir) என்பதாகும். அக்கேடியன் யூதர்கள் இதை ‘இலு / எல் (Ilu / El)‘ என உச்சரிக்கிறார்கள். இதே ‘எல்’ஐத்தான் ஹீப்ரு மொழியில் கேபிரியேல் (என் வலிமையே கடவுள்), யுரியேல் (என் ஒளியே கடவுள்), மைக்கேல் (கடவுளைப் போன்றவர்) என்ற சொற்களில் காண்கிறோம். இதே ‘எல்’தான் பொதுவாகக் கடவுளை ஒட்டியிருக்கும் சொற்களில் (God / Godhead, Deus / deity, Deva / Devata)கணிசமாக உபயோகிக்கப்படுகிறது. ஹீப்ரு மொழியில் ‘எலோஹா’ என்றும் அரேபிய மொழியில் ‘இலா’ என்றுமாகிறது. ‘அல்‘ என்ற சொல்லைச் சேர்த்து ‘அல் – இலாஹா எனும்போது கடவுள் அல்லது சிறந்த கடவுள் என்றாகிறது. இந்த இரண்டு சொற்களின் சுருக்கமே அல்லா அல்லது கடவுள் அல்லது ஒரே கடவுள் (The God).
அல்லா உயர்ந்தவர் என்பது எல்லோரும் அறிந்ததே. அவர் மிகவும் உயர்ந்தவர் (Alla Akbar) என்ற சொற்றொடர், சற்றே மோசமான பெயரைச் சமீபத்தில் பெற்றுள்ளது என்றாலும் ஆழ்ந்த அர்த்தத்தைக் கொண்டது. இது, போடும் திட்டங்கள் மிக புத்திசாலித்தனமாக இருந்தாலும் கடைசியில் நடக்கும் திட்டம் கடவுள் வகுத்ததுதான் என்பதை முஸ்லீம்களுக்கு நினைவூட்டும் சொற்றொடர். கடவுளிடம் பணிவு தேவை என்பதற்கு ஓர் அடையாளம். நாம் பெரிதுபடுத்துவதை மிகச் சிறியதாகச் செய்யக்கூடிய வல்லமையுடையவர். அல்லா என்ற பெயர் ஒரே ஒரு கடவுளை மட்டும்தான் குறிக்கும் என்ற மாற்றம் அரேபியா முழுவதும் இஸ்லாமிய மத ஆதிக்கித்தின்கீழ் 620களில் வந்தபோது ஏற்பட்டதாகும். அதற்கு முன்னால் அல்லா கடவுளைக் குறிக்கும் பொதுவான சொல்லாகத்தான் இருந்தது. அதனால்தான், சந்திரக் கடவுள் ஹுபால்முன் மண்டியிட்டு அல்லாவை (கடவுளை / ஹுபாலை) துதிக்கவேண்டும் என்பது போன்ற வழிபாட்டு முறைகளைப் பார்க்கிறோம். எனவே, அல்லா என்ற சொல் பல கடவுள்களை வழிபடுவோருக்கும் பொதுவாக இருந்தது தெரியவருகிறது.
ஹுபால்தான் விண் பாறையைச் சுற்றிக் கட்டப்பட்டுள்ள “காபா” சந்நிதியின் பிரதானக் கடவுள். செதுக்கப்படாத இப்பாறையில் ஹிந்துக்கள், சந்திரனின் கடவுளான சோமநாதர் என்றழைக்கப்படும் சிவனுடைய லிங்க வடிவத்தைச் சுலபமாக அடையாளம் கண்டுகொள்ள முடியும். சிவன் தலையில் சூடியுள்ள பிறைச் சந்திரன்தான் அல்லாவின் முக்கியச் சின்னம். சிவனுடைய மூன்று சக்திகளான பார்வதி, துர்க்கை, காளி போலவே ஹுபாலுக்கும் மூன்று பெண் தெய்வங்கள் உண்டு; அல்லாட் (al-ilahat, the goddess, the sun) , அல் உஸ்ஸா (the strong one, planet venus), அல் மனாட் (fate, doom, night). அரேபிய மொழியும் ஜெர்மன் மொழியும் சூரியனைப் பெண்ணாகவும் சந்திரனை ஆணாகவும் வருணிக்கின்றன. ஆகவே, ஹுபால் ஆண் தெய்வம்; சூரியன் பெண் தெய்வம்.
ஹிந்துக்களும் முஸ்லீம்களும் வித்தியாசமானவர்களா என்று எனக்குத் தெரியாது; ஆனால், ஹிந்துக்களுக்கும் அரேபியர்களுக்கும் நிறைய ஒற்றுமை இருப்பதாகத் தெரிகிறது. அவர்களுடைய தெய்வீகக் கற்பனைகள் இணையான தெய்வக் குடும்பங்களை உருவாக்கியுள்ளன.
வளமான கற்பனையுள்ள ஹிந்துக்கள் காபாவே ஒரு சமயம் சிவன் கோவிலாகத்தான் இருந்தது என்று நம்புகிறார்கள். இது கொஞ்சம் மிகையானது என்றாலும் காபாவிற்குச் சந்திரன் கடவுள் என்பதால் சந்திரசேகரனாகிய சிவனுக்கும் இக்கோவிலுக்கும் ஓர் இணைப்பு இருக்கத்தான் செய்கிறது. இந்திய வணிகர்கள் அரேபியாவிற்குச் சென்றால் காபாவில் வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள. அரேபிய வணிகர்கள் இந்தியாவில் குஜராத் கடற்கரையில் இருந்த சோமநாதர் ஆலயத்தில் வழிபாடு நடத்தினார்கள். முகம்மது கஸ்னாவி, நபிகள் அரேபியாவிலிருந்து வெளியேற்றிய மூன்று பெண் தெய்வங்களும் சோமநாதர் ஆலயத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர் என நம்பினான்.
எனவே, “ஈஸ்வர் அல்லா தேரே நாம்” என்று பாடுவது தவறில்லை. காந்தீயவாதிகளும் நேருவாதிகளும் “எம்மதமும் சம்மதமே; மதங்களெல்லாம் ஒன்றே” என்பது போன்ற கடைந்தெடுத்த முட்டாள்தனங்களை நம்பினாலும் இந்தப் பாட்டு வரிகளை அவர்கள் அடிக்கடிப் பிரயோகிப்பதில் தவறொன்றுமில்லை. ஹிந்துக்கள் அயோத்தி, சபரி மலை, கைலாயம், கும்ப மேளாவிற்கு இலஹாபாத் போன்ற இடங்களுக்கு யாத்திரை போவதைப்போல் முஸ்லீம்கள் மெக்காவிலுள்ள காபாவிற்கு யாத்திரை போவதும் சரியே. ஹஜ் என்பது இஸ்லாமைவிடப் பழமையானது. இஸ்லாம் அதைக் கடன் வாங்கியுள்ளது. எப்போதும் நிலைத்திருக்க வேண்டிய ஒன்று என்றாலும் அரசாங்கத்திடமிருந்து மானிய உதவி பெறுவது தவறு. ஏனென்றால் யாத்திரை போவதென்பது ஒரு தியாகமாகும். ஆகவே, வரி செலுத்துவோரின் பணத்தை எதிர்பாராமல் சொந்தப் பணத்தைச் செலவுசெய்து ஹஜ் யாத்திரை செல்வதுதான் முறையானது.
மேற்கு நாடுகளில், முஸ்லீம்களை எதிர்த்துப் போராடும் சிலர் காபாவின்மேல் குண்டு வீசவேண்டும் என்கின்றனர். மாறாகப் புனிதமான காபாவிற்கு எவ்வித ஆபத்தும் நேர அனுமதிக்கக் கூடாது. காபாவின்மேல் ஆயுதப் படையெடுப்பு நடந்தால்,- ஈராக்கிலும் சிரியாவிலும் ராணுவத் தலையீட்டினால் ஏற்பட்ட பேரழிவைத்தான் காணமுடியும். முஸ்லீம் மக்கள் வேண்டுவது தனிமைப்படுத்தலும் யுத்தங்களும் அன்று. இத்தகைய இறுக்கங்கள் தளர்ந்தால்தான் சமாதானம் நிலவும், நாடு செழிக்கும், மனமும் கண்ணோட்டமும் விரிவடையும். அண்டை நாடுகள் வழங்கும் ஆன்மீகத்தில் ஆர்வம் உண்டாகும். உதாரணமாக, யோகி ரவிசங்கர் மத்தியக் கிழக்கு நாடுகளில் பயிற்றுவிக்கும் தியான முறைகள் போன்றவற்றில் பங்கேற்கத் தோன்றும். நான் ஒரு தீவிர இஸ்லாமிய விமர்சகனாக இருந்தாலும்கூட அவர்களிடையே நான் வேண்டுவது சமாதானம் ஒன்றே.
தின்–ஐ–இலாஹி:

பேரரசர் அக்பர், 13வது வயதிலேயே காஜீ (நாஸ்திகர்களைத் தாக்குபவர்) என்ற பெயர் பெற்றவராயிருந்தும், பேரரசர் ஹேமச்சந்திராவை வெறும் கைகளால் கொன்றவர் என்ற புகழை அடைந்திருந்தாலும், மெதுவாக இஸ்லாமைவிட்டு விலகித் தனது சொந்த, கோட்பாடுகளற்ற, தின்-இல்-இலாஹி அல்லது தெய்வீக மதம் என்ற மதத்தை நிறுவினார். யார் இதை எதிர்க்க முடியும்? பகல் கடவுள் மித்ராவா? இரவுக் கடவுள் வருணனா? காலைக் கடவுள் உஷாவா? 33 வேதக் கடவுள்களும், நயமற்ற ஒரு கடவுள் வழிபாடு என்ற கோட்பாடு பல கடவுள் வழிபாடாகவும் தெய்வீகத் தர்மமாக மாறுவதையும் கண்டு புன்னகை புரிவதாக அமைந்தது.
இந்த மிகப் பெரிய மாற்றம் ஆபத்துகள் நிறைந்தது என்பதில் சந்தேகமில்லை. அக்பர் சபையின் மதகுரு அஹமத் சிர்ஹிந்தி “இது கடவுள் தூஷனை” எனக் கண்டனம் செய்தார். அக்பர் இறந்தபின் இப்புதிய மதம் சீர்குலைந்து பழைய நிலைக்குத் திரும்பியது. இம்மதத்தின் அடிப்படை,”எம்மதமும் அதன் கோட்பாடுதான் சத்தியம் என ஏகபோக உரிமை கொண்டாடுவது நியாயமற்றது” என்பதாகும். இது இம்மாநாட்டின் கருத்தாகிய “ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி”யை ஒட்டியுள்ளது.
இப்புதிய மதத்திற்கு ஏற்றாற்போல் அக்பரால் நிறுவப்பட்ட நகரம்தான் இலஹாபாத் அல்லது தெய்வீக நகரம் என்பதாகும். இது இந்துக்களின் மிகப் புனிதமான கங்கையும் யமுனை நதியும் சங்கமமாகும் இடத்தில் நிறுவப்பட்ட நகரமாகும். ஆங்கிலேயர்கள் இதை அலஹாபாத் எனத் தவறாக உச்சரித்ததனால் அப்பெயரே நிலை பெற்றுவிட்டது. இலஹாபாத் என்ற பெயருக்கு மற்றொரு காரணம் உள்ளது. அதையும் பார்ப்போம்.
முதல் அன்னை இலா:
“On the Sangam is a city / where the girls are pretty.”
அக்பர் காலத்திற்கு 5,000 ஆண்டுகளுக்கு முன்னரே இது மனுவின் மூத்த பெண் இலாவின் இடமாக இருந்தது. பெண்ணாக இருந்ததால் மூத்தவளாக இருந்தாலும் இவளது தம்பி இஷ்வாகு அரசனாகப் பட்டம் பெற்றான். தந்தையின் தலைநகரான அயோத்தியில் சூரிய வம்சத்தை ஸ்தாபித்தான். அரச பதவி ஏற்றபின்னும் தமக்கை இலாவிடம் பெருமதிப்பு வைத்திருந்தான். அவளிடம் கடன் பட்டிருந்ததாகவே எண்ணினான். இலா, அக்பர் பிற்காலத்தில் நிறுவிய நகரத்திற்கு அருகிலுள்ள பிரதிஸ்தனாபுரம் என்ற இடத்திற்கு குடி பெயர்ந்தாள். அவளுடைய மகன் புரூரவஸ் இவ்விடத்தில் சந்திர வம்சத்தை ஸ்தாபித்தான்.
அவனுடைய சந்ததியில் ஒருவனாகிய நகுஷன் மேற்கேயுள்ள சரஸ்வதி பள்ளத்தாக்கிற்குக் குடிபெயர்ந்தான். இவனுடைய சந்ததியில் ஒருவனாகிய யயாதியின் ஐந்து மகன்களின் பெயர்களில் ஐந்து பிரிவுகள் தோன்றின. புரு என்ற மகன் பௌரவா பிரிவின் தலைவர். இந்தச் சந்ததியில் வந்தவர்தான் பரதர், பாரத நாடு என்ற பெயருக்குக் காரணமானவர். பாடல்கள் எழுதுவதும் அதற்கு இசையமைப்பதும் இவரது குலத்தைச் சேர்ந்தவர்களின் பாரம்பரியமாக இருந்தது. இப்பாடல்களெல்லாம் வேதங்களாகத் தொகுக்கப்பட்டன. பிற்காலத்திய ஆதாரங்கள், தீர்க்க தமஸ் பரதரின் ராஜ குருவாக இருந்தவர் என்கின்றன. வேத ரிஷிகள் முதல் அன்னை இலாவைக் கடவுளாகவே பாவித்தனர். இலா, பாரதி, சரஸ்வதி ஆகிய மூவரும் மூன்று பெண் தெய்வங்களாக வணங்கப்பட்டனர்.
பல நகரங்களின் பெயர்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அலகாபாத்தையும் இலஹாபாத் என மாற்ற வேண்டும் என நான் முன்மொழிகிறேன். இப்பெயரின் புதிய விளக்கம் அன்னை இலாவின் நகரம். இப்பெயர் இலாபாத் என சுருங்குவதற்கு வாய்ப்புண்டு. ஆனால், இந்நகரம் ஒரு பெண்ணை நித்தியப்படுத்துவதனால் ஹகரத்தை விட்டுவிடாமல் இலஹாபாத் என்றே எப்போதும் கூறவேண்டும்.
இலாஹாபாத்தின் பெண்மணிகளுக்கு எனது வந்தனங்கள். நீங்கள் மூதாதையப் பெண்மணி இலாவின் பாரம்பரியத்தை வழிநடத்திச் செல்பவர்கள். அவளில்லாமல் தீர்க்க தமஸ் இம்மாநாட்டின் கருப்பொருளான பாடலை இயற்றியிருக்க இயலாது. மேலும் நபிகள் கட்டளையை மறக்காதீர்கள்! உங்களுக்கே உரித்தான பாத்தியதையை எவரும் பறிக்க விடாதீர்கள்! இலாவின் நினைவிற்குப் புத்துயிரூட்டுங்கள்! அவள் ஆரம்பித்து வைத்த வேதப் பாரம்பரியத்தை விடாமல் தொடருங்கள்! உங்கள் எல்லோருக்கும் என் நன்றி.
(Talk by the author at the international conference hosted by the Sanskrit department of the Allahabad University in 2016.)