- கோன்ராட் எல்ஸ்ட்டின் ‘இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்’
- இந்துக்கள் கோழைகளா?
- யோகாப்பியாசம் இந்துக்களுடையதா?
- ராமகிருஷ்ணர் முகம்மதியரா அல்லது கிருத்துவரா?
- ராமகிருஷ்ணர் பல மதங்களைக் கையாண்டவரா?
- சர்வதேச யோகா நாளில் ‘ஓம்’ சின்னம் இடம்பெற்றதா? வெளியேற்றப்பட்டதா?
- யோகம் இந்துக்களுடையதா எனும் கேள்வியின் முகமதிப்பு என்ன?
- கோன்ராட் எல்ஸ்ட்டின் இந்து மதமும் அதன் கலாசாரப் போர்களும் – ஏழாம் அத்தியாயம்
- கொன்ராட் எல்ஸ்ட்டின் ’இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும்’
- புனித தாமஸின் மரணம்: ஓர் இட்டுக்கட்டல்
- இலா நகரில் பன்மைத்துவம்
- சதி எனும் சதி
- தார்மீக விழிப்புணர்வு யாருக்குத் தேவை – ஹிந்துக்களுக்கா? பா.ஜ.க.வினருக்கா?
- “கல்வித் துறையின் ஹிந்து வெறுப்பு” புத்தக விமர்சனம்
- ஔரங்கசீப்பைப் பற்றிய சர்ச்சை
- அயோத்தி: ரொமிலா தாப்பருடன் பாதி வழி சந்திப்பு
- குஹாவின் கோல்வால்கர் – கோன்ராட் எல்ஸ்ட்
- குஹாவின் கோல்வால்கர் – 2ம் பகுதி
- ஆர்.எஸ்.எஸ் பற்றி ஊடகத் திரிப்புகள்
- கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக…..
- மெக்காலேயின் வாழ்க்கையும் காலமும்
- ‘இந்திரப்ரஸ்தா’ – வகுப்புவாதப் பெயரல்ல
- கல்வித் துறைக் கொடுமையாளர்கள்
- மேற்கத்திய மீட்பாளர்களின் பன்முகத்துவம்
- மேற்கத்திய மீட்பாளர்களின் பன்முகத்துவம் (இரண்டாம் பகுதி)
தமிழாக்கம்: கடலூர் வாசு
அத்தியாயம்- 8
ஹிந்து வலதுசாரிகளுடன் வாதமிடுதல்
மேற்கத்திய நாடுகள் எவ்வாறு இந்தியாவைப் பார்க்கின்றன? மேலை நாட்டு மக்களும் இந்தியாவைக் கூர்ந்து கவனிப்பதை ஒரு தொழிலாகக் கொண்டுள்ளவர்களும் நேருவியத்தில் ஊறியவர்களின் குறுகிய கண்ணாடிக் கழுத்து வழியாக வெளிச்செல்லும் செயதிகளையே நம்பியுள்ளவர்கள். இவர்கள், இந்தியாவையும் இந்தியத்தின்மீதும் தார்பூச அமெரிக்கச் சதிகாரர்களால் ஏவப்பட்ட சிப்பாய் அறிவுஜீவிகள் என்றெண்ணுவது தவறு. இது இருவழிச் சாலை; அமெரிக்க நாகரீகத்திற்கு ஏற்றவாறு வாழ ஆசைப்படும் இந்தியர்கள் ஒரு பக்கம்; இந்தியர்களின் கருத்தியலோடு இணைந்திருக்க ஆசைப்படும் மேற்கத்தியர்கள் மற்றொரு பக்கம்.

இந்த இருசாரினரும் இந்தியத்தை நோக்கிச் செல்லும் அரசியலைத் தடுப்பதற்காக ஒத்துழைப்பதை எடுத்துக்காட்டும் ஒரு புத்தகம் 2015ல் வெளியானது. (Pluralism and Democracy in India: Debating the Hindu Right – Oxford university Press, New York 2015.) இப்புத்தகம் 2005ல், சிகாகோ மாநகரக் கருத்தரங்கில் பங்கேற்ற, பின்னர் சீர்படுத்தப்பட்ட, 20 கட்டுரைகளின் தொகுதியாகும். இதன் பதிப்பாசிரியர்கள், சிகாகோ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த வெண்டி டோனிகர் என்ற மத வரலாற்று ஆசிரியையும் மார்த்தா நுஸ்பாம் என்ற சட்ட வல்லுனரும் ஆவர். வெண்டி டோனிகர் இந்தியர்களுக்கு ஏற்கெனவே , The Hindus: An alternative History, என்ற புத்தகத்தின் வழியாக அறிமுகமானவர். இப்புத்தகம், இந்துக்களின் எதிர்ப்பினால் பதிப்பாளர்களால் திரும்பப் பெற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். (20ம் அத்தியாயத்தில் இதைப்பற்றி விரிவாக எழுதப்பட்டுள்ளது.) ஒருதலைப் பட்சமாகவும் அசட்டுத்தனமாகவும் தவறுகள் நிரம்பியதாகவுமுள்ள இப்புத்தகம் இந்துக்களின் அனாவசியமான எதிர்ப்பினால் தியாக பூமிக்குக் கொண்டுசெல்லப்பட்டது. இப்புத்தகத்திலுள்ள தவறுகளையெல்லாம் எடுத்துக்காட்டும் விஷால் அகர்வால் அவர்களின் புத்தகம் ஏற்கெனவே வெளிவந்துவிட்டது. இந்துக்களின் வலியுறுத்தல்கள் வெண்டி டோனிகரிடம் கிளப்பும் பகைமையை நுஸ்பாமுடன் சேர்ந்து எழுதியுள்ள முகவுரையில் நன்றாகவே காணமுடிகின்றது.
இப்புத்தகத்தின் இடதுபக்கச் சாய்வுத் தன்மை மறைமுகமாக இல்லாமல் வெளிப்படையாகவே இருப்பதால், இதைச் சுட்டிக்காட்டச் சுருக்கமாக சில விவரங்களே தேவைப்படுகின்றது. இந்திய ஜனநாயகத்தை விவரிக்க வேண்டுமென்றால் இந்திரா காந்தியின் அவசரச் சட்டப் பிரகடனமும் அதைச் சங் பரிவார் எதிர்த்ததையும் சொல்லாமல் விடமுடியாது. ஆனால், இதை இப்புத்தகம் மிக ஜாக்கிரதையுடன் ஒதுக்கிவிட்டது. இப்புத்தகத்திலுள்ள விவரங்கள் 2002லிருந்துதான் ஆரம்பிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. குஜராத்தில் 2002ல் நடந்த கலவரமே இதற்குக் காரணம். இதைப்பற்றிய விவரங்களும் முற்போக்குக் கட்சி கண்ணோட்டத்தினுடனே எழுதப்பட்டுள்ளது என்பது, மோடி இக்கலகத்திற்கு உடந்தையென விவரிப்பதிலிருந்தே தெரிகின்றது. எந்த நீதிமன்றமும் இவரைக் குற்றவாளி என்று தீர்மானம் செய்யவில்லை என்ற கசப்பான உண்மையையும் ஒதுக்கிவிட்டார்கள். கலகங்கள் முக்கியமாகத் தோன்றினால், 1984ல் குஜராத்தைவிட அதிக அளவில் சீக்கியர்கள் காங்கிரஸ் கட்சியினரால் படுகொலை செய்யப்பட்டதும், 1974ல் ஹிந்துக்கள் இனவாதப் படுகொலைக்கு ஆளாகியதும் ஏன் இவர்கள் நினைவுக்கு வரவில்லை? ஹிந்துக்கள் கொலைகாரர்களாகவோ அல்லது அவ்வாறு சித்திரிக்கப்பட்டால்தான் இக்கட்டுரையாளர்களின் கண்களில்படும் போலிருக்கிறது.
அயோத்யா சர்ச்சை பலமுறை எழுப்பப்பட்டாலும் முடிவான விவரத்தைச் சொல்ல மறுக்கிறது இப்புத்தகம். ஒரு காலத்தில் இது இந்துக்களின் கோவில் என்ற பாத்தியதைக்குச் சட்டபூர்வமான ஆதாரங்கள் உள்ளன என்ற புதிய விவரம் எங்குமே தலைகாட்டவில்லை. மேலும், பல நூற்றாண்டுகளாக இந்துக் கோவில் என்ற ஒருமித்த அபிப்பிராயத்தைக் கடுமையாகக் கண்டித்ததோடல்லாமல், 1989ல் இந்துத் தீவிரவாதிகள் கோரும் உரிமை என மதச்சார்பற்றவர்கள் மறுபெயரிட்டு அமெரிக்கக் கல்வித்துறையினரிடம் எடுத்து சென்றது தவறான ஒன்றாகும். அயோத்யாவிலிருந்து செல்லும் பாதை (The road from Ayodhya) என்ற கட்டுரை 40 அடிக்குறிப்புகளைக் கொண்டுள்ளது அதில் பா. ஜ . க. நீண்ட நாள் அங்கத்தினர் ராம் மாதவ் அளித்துள்ள சில முக்கியமான குறிப்புகளைத் தவிர மற்ற 39 அடிக்குறிப்புகளும் இந்தியத்தின் எதிராளிகளிடுடையதுதான். கிட்டத்தட்ட எல்லா கட்டுரைகளும் இவ்வாறே அமைந்துள்ளன. ஆனால், மேற்கோள் காட்டுவதற்கேற்ற அறிவுபூர்வமான கட்டுரைகளை இந்தியர்கள் எழுதுவதில்லை என்பதும் இந்தியர்களே ஒப்புக்கொள்ள வேண்டியதாகும்.
முதல் பக்கத்திலேயே, பதிப்பாசிரியர்கள் மோடியின் பிரதமர் பதவியேற்றம் இந்தியாவின் வருங்கால ஜனநாயகத்தின் தீய அறிகுறி என்று எழுதியுள்ளனர். அமெரிக்கக் கல்வித்துறையில் அறிஞர்களாக அங்கீகாரம் பெறுவது அவர்களுடைய சொற்களும் எழுத்துகளும் உண்மையிலிருந்து வழுவாதிருப்பதையே பொருத்துள்ளது. ஆனால், இந்திய அரசியல் என்று வரும்போது, எதனாலோ இந்த நியதி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது.
இப்புத்தகத்தின் துணைத் தலைப்பு எவ்வாறு ஹிந்து வலதுசாரிகளுடன் வாதிடவேண்டும் என்பதை விளக்கும் என வாசகர்கள் நினைத்தால் அது தவறான அபிப்பிராயமாகும். இதில் வாதமிடுபவர்கள், மதச்சார்பற்ற இடதுசாரியினர் ஆவர். உதாரணமாக, “The argumentative Indian” என்ற புத்தகத்திற்கு ராமச்சந்திர குஹா எழுதிய விமரிசனத்திற்கு, அதன் ஆசிரியர் அமர்த்தியா சென் பதிலளிக்கும் கட்டுரையைக் கூறலாம். இதற்கு விதிவிலக்கு, ஹிந்து ஸ்வயம் சேவக் சங்க முன்னாள் தலைவர் வேத் நந்தா அமெரிக்காவில் ஹிந்துயிசத்தின் வரலாற்றுக் குறிப்புகள் பற்றி எழுதியுள்ள கட்டுரை ஒன்று மட்டும்தான். இக்கட்டுரையில் வாதிட உந்தும் விவரங்கள் ஒன்றுமில்லை.
இப்புத்தகத்திலுள்ள பல கட்டுரைகள், படிப்பதற்கும் விரிவான விமர்சனத்திற்கும் தகுதியானவை. இதற்கும் ஓர் உதாரணமே போதும். முஷிருல் ஹஸ்ஸான் என்பவர் பள்ளிப் பாடப் புத்தகங்களில் பா. ஜ . க. வின் சீர்திருத்தங்களைப் பற்றி எழுதியுள்ள கட்டுரை. இக்கட்டுரை, மதச்சார்பற்றவர்கள் பா. ஜ . க.வின் பட்டியலை எவ்வாறு நோக்குகிறார்கள் என்பதைப்பற்றிச் சுவாரசியமான குறிப்புகளைக் கொண்டுள்ளது. இது, ஹிந்துக்களுடன் சண்டையிடும் முகாமொன்றின் நீண்ட நாள் அங்கத்தினரின் நினைவுக் குறிப்பு எனப் புரிந்துகொண்டால் இக்கட்டுரை படிப்பதற்கு மிக்க தகுதியுள்ளதாகிறது. இக்கட்டுரையில் (பக்கம் 255) ஹஸ்ஸான், ஹிந்துக்கள் இந்திய வரலாற்றை மீண்டும் எழுதுவதைத் தாலிபான் கூட்டத்தின் அராஜகத்தோடு ஒப்பிடுவதால் இந்துக்களைத் தாலிபான் போன்ற மதவெறி பிடித்த கீழ்த்தனமானவர்களாகச் சித்திரித்துள்ளார். இந்தியாவில் இவர் எதிர்க்கும் பாடப் புத்தக மாற்றங்கள் பாகிஸ்தானில் தினசரி உண்மையாக நடந்துகொண்டிருப்பதை மறைமுகமாக ஒப்புக்கொள்கிறார் அல்லது ஏற்றுக்கொள்கிறார் என்றே சொல்லவேண்டியுள்ளது.
இப்புத்தகத்தின் முக்கிய குறைபாடு, கட்டுரையாளர்கள் கவனமெல்லாம் சங் பரிவாரிடமே இருந்தாலும் ஹிந்து வலதுசாரியினர் எல்லோருமே இதில் அடக்கம் என்ற தவறான எண்ணத்தை படிப்பவர் மனதில் உருவாக்குவதுதான். 2005ல் இது செல்லுபடியாகி இருக்கலாம். ஆனால் தற்போதைய ஹிந்து சித்தாந்தத்தைப் பற்றிச் சுமாராகத் தெரிந்தவர்கள்கூட 2015ல் இதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். இந்தியாவின் நிலைமையை நன்கு அறிந்தவர்கள், ஹிந்து சம்ஹதி என்ற ஹிந்து சுயபாதுகாப்பு வலையமைப்பு ஆர். எஸ். எஸ். அதன் தொழிலைச் சரியாகச் செய்யவில்லை என்ற விசனத்தால் அதிலிருந்து விலகிய ஒருவரால் தொடங்கப்பட்டது என்பதை நன்கறிவர். ஆர். எஸ். எஸ்.ஸின் விரோதிகள் அதை ஒரு தகர்க்க முடியாத நிறுவனமாகக் கருதுகின்றனர். ஆனால், நிறுவனத்தில் உள்ளிருப்பவர்களே இதை நம்பவில்லை. இச்சங்கத்தின் அங்கத்தினர் தொகை அதிக அளவில் இருந்தாலும் பலர் அரசியல் பதவிகளில் இருந்தாலும்கூட ஹிந்துக்களின் வெற்றிக்கான அர்ப்பணிப்பு அரைகுறையாகவும் உற்சாகமற்றதாகவுமே உள்ளது. ஹிந்துக்கள் மேலும் மேலும் சங்கத்திற்கு வெளியேதான் தங்களது உள்ளூரமைப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சங்கம் பதவியில் இருக்கும் இடங்களில்கூட இவ்வாறே நடந்துகொண்டிருக்கிறது. மோடியின் தலைமையைப் பற்றி மகிழ்வுற்றிருந்தாலும் ஹிந்துக்களின் அரசியல் என்ற பரிணாமத்தை அடைவதற்கு நிறையத் தேவைப்படுகிறது. அரசியலில் இதன் போக்கு, விளிம்பைத்தான் தொட்டுள்ளது என்றாலும் ஊடகங்களில் இதன் வளர்ச்சி கண்கூடாகவே தெரிகிறது. வலைத்தளச் செய்தித் தாள்கள் , சங்கத்தின் மூட்டை முடிச்சுகளை அறவே ஒதுக்கித் தள்ளிய புதிய ஹிந்து சமுதாயத்தின் ரத்தக் குழாய்களாக உள்ளன. விஜயவாணி, India Facts, Hindu Human rights, Swarajya, Bharata-Bharathi, India Inspires Foundation போன்றவை புதிய ஆய்வுகள் வழியாக இந்தியத்திற்கும் ஹிந்துக்களுக்கும் பணிசெய்கின்றன. அதிகாரம் இல்லையென்றாலும் இவற்றை நடத்துபவர்களிடம் கருத்துகள் நிறையவே உள்ளன. மூப்படைந்த சங்கத்தைப் போலல்லாமல் நவீன அரசியல் நடைமுறைப் போக்குகளைச் சர்வதேச அளவில் இவை தெரிந்துவைத்துள்ளன. இதனால், அவர்களின் எண்ணங்களும் சுவாரசியமாக உள்ளது. கடன் வாங்கிய தேசியவாதத்திலேயே உழலும் 1920லேயே நின்றுகொண்டிருக்கும் பழைய இந்தியத்தைப் போலல்லாமல் இந்தப் புதிய அமைப்பு இந்தியாவில் நன்றாகவே வேரூன்றிக் கொண்டிருக்கிறது.
(Published as “How the West Looks at India” in The Pioneer 6 September 2015}