ஆசிரியர் குழு
சொல்வனம் இணையப் பத்திரிகையின் அடுத்த இதழ் (240) வங்க மொழி இலக்கியம், கலை ஆகியவற்றைச் சிறப்பிக்கும் இதழாக அமையும்.
இந்த இதழுக்குப் பல நண்பர்களும் படைப்பாளிகளும் ஒத்துழைத்து வருகின்றனர். கடந்த இரு மாதங்களில், மொழியாக்கம் செய்யப்பட்ட பல படைப்புகள் கிட்டியிருக்கின்றன.
இருப்பினும் இதழ் வெளியாக இன்னும் பத்து தினங்களே இருப்பதால் வாசகர்களோ, எழுத்தாளர்களோ இந்த இதழுக்கு ஏதும் அளிப்பதானால், அதைச் செய்ய இன்னும் அவகாசம் இருக்கிறது.
வங்காளப் பகுதியின் இசை, வேளாண்மை, நில வளம், நீர் வளம், சங்கீதம் ஆகியன வங்காள மொழி இலக்கியத்தில் பிரதிபலிக்கப்பட்டதைப் பற்றி ஏதும் எழுதி அனுப்பினால் உடனடியாகக் கவனிக்க முயற்சி செய்வோம். இப்போதைக்கு அவை பற்றிய படைப்புகள் எதுவும் எங்களுக்கு இன்னும் கிட்டவில்லை.
உங்கள் படைப்புகளை அனுப்ப வேண்டிய முகவரி: solvanam.editor@gmail.com
(பிப்ரவரி 4, 2021.)
