அருணா சுப்ரமணியன்

வெறுமை பூசிய சுவர்கள்
தாங்கி நிற்கும் மேற்கூரை
நினைவுகளின் தயவால்
அழகிய வீடாகின்றது..
ஒவ்வொரு முறை
வீடு மாறும் பொழுது
தட்டு முட்டு சாமான்களுடன்
நினைவுகளும் குடிபெயர்கின்றன…
வெற்றுத் தரை
பாதச்சுவடுகளால்
உயிர் பெறுகிறது…
நினைவுகளால்
நிரம்பி வழியும்
வீடாகினும்
புது நினைவுகளுக்கு
கதவடைப்பதில்லை…
இல்லத்தின் இதயத்தில்
எப்பொழுதும்
நினைவுகளுக்கு
இடமுண்டு…
யாருமற்ற
மௌனத்தின்
தருணங்களிலும்
வாஞ்சையுடன்
அணைத்துக்கொள்ளும்
வீட்டின் நினைவுகள்…