எழுத்து பத்திரிகை – 1968 – தலையங்கம் – சி.சு.செல்லப்பா

எழுத்து பத்திரிக்கையின் பத்தாம் ஆண்டு (1968) நிறைவுபெறும் தருவாயில் சி.சு. செல்லப்பா அவர்கள் எழுதிய தலையங்கம் எங்கள் பார்வைக்கு வந்தது.

ஒரு சிறுபத்திரிகை, தீவிர கவிதை, சிறுகதை மற்றும் விமர்சனக் கட்டுரைகளைத் தொடர்ந்து பத்தாண்டுகளாக இடைவெளியில்லாமல் 114 ஏடுகளாக வெளியிடுவது என்பது இன்றளவும் மிகவும் பிரமிப்பான சாதனைதான். வெறுமனே நடத்திக்கொண்டிருந்தோம் என்றில்லாமல், ஓர் இயக்கமாகவும் தமிழ்க் கவிதை மற்றும் விமர்சன மரபுக்குப் பெரும் கொடையாகவும் திகழ்ந்த எழுத்து பத்திரிகை, சி.சு. செல்லப்பா மற்றும் அது சார்ந்தோர் அனைவருக்கும் சொல்வனம் இதழின் வணக்கங்கள்.

இந்த ஏட்டோடு எழுத்துக்கு பத்து வயது நிரம்புகிறது. அதாவது இங்கிலீஷில் ‘டிகேட்’ என்கிறோமே-பத்து ஆண்டுகள், என்று குறிப்பிடும்படியான கால அளவை எட்டிவிட்டது. ஒரு சின்னப் பத்திரிகை. விமர்சனம், புதுக் கவிதை , இரண்டில் மட்டும் முதன்மையான அக்கறை காட்டி வந்திருக்கும் ஒரு இலக்கிய ஏடு பத்து ஆண்டுகள் வந்து விட்டது என்றால் நம்புவது சிரமமாகத்தான் இருக்கிறது. ஆனால் இது நடப்பு, தமிழ் இலக்கியப் பத்திரிகைத் துறையில் இதுவரை காணாத ஒன்று. இந்த சாதனையுடன் அடுத்த ஏடு முதல் பதினோறாவது ஆண்டுக்குள் நுழைந்து அடுத்தகால அளவான மாமாங்க காலத்தை நோக்கி முன்னேற இருக்கிறது.

ஆனால் வெறுமனே கால அளவை மட்டும் கொண்டு எழுத்துவின் சாதனையை பெரிசுப் படுத்திப் பேசுவதும் சரியாகாது. எழுத்து தன் வயதுக்கேற்ற ஆளுமையை சாதனையாகப் பெறக்கூடுமானால்தான் அதன் வாழ்வு நாட்கள் முக்கியமானதாகும். குறிப்பிடத்தக்கதாகும். எழுத்துக்கு ஆளுமை என்று எந்த அர்த்தத்தில் கூறுவது, கணிப்பது? முதலில் அதுக்கு ஒரு தனித்தன்மை இருக்க வேண்டும். மற்றவைக்ளிலிருந்து மாறுபட்டு ஒலிக்கும் ஒரு தொனி இருக்க வேண்டும். அந்தத் தொனியும் .எடுப்பானதாக இருக்க வேண்டும். அதோடு திட்ட வட்டமான நிச்சயமான முக்கியத்வம் வாய்ந்த, பொருட்படுத்தத்தக்க பொருள் கொண்டதாக இருக்க வேண்டும். அதோடு முத்திரை இட்ட குணம் கொண்டதாக இருக்கவேண்டும். இவை எல்லாம் சேர்ந்துதான் ஒன்றை தனித்து தூக்கிக்காட்டும்


நடத்தும் கூட்டங்களில் பேசி, எழுதி வெளியாகும் பேச்சு கட்டுரை கருத்துக்களும் எழுத்துவின் பாதிப்பை நிரூபிப்பவை. ஒரு அன்பர் ‘மணிக்கொடி’ காலச் கட்டத்துக்குப்பின் எழுத்துதான் காலகட்டமாக அமைவது’ என்று குறிப்பிட்டதுபோல், எழுத்துவின் சாதனை ஆகும். இதில் நமக்கு கொஞ்சம் திருப்தி.

கொஞ்சம் என்றதை வாசகர்கள் கவனிக்க வேண்டும். எழுத்துக்கு ஆதர்சமாயும் அதன் முதல் ஏடு முதல் படைப்புத் தொடர்பு கொண்டும், புதுக்கவிதைத் துறையில் எழுத்துவில் வளம் பெருக மூல காரணமாயும் இருந்து வரும் பிச்சமூர்த்தியும் எழுத்துவின் பத்தாண்டு போக்கு, சாதனை பற்றி கொஞ்சம்தான் திருப்தி தெரிவிக்கிறார். ‘தீபம்’ பேட்டியில் எழுத்து இலக்கிய வட்டம் போன்ற பத்திரிகைகள் இத்துறையில் (விமர்சனத் துறையில்) செய்துள்ள முயற்சி போதாது’ என்று கூறி இருக்கிறார் அவர் அபிப்ராயத்தை நாம் மதிப்போடு ஏற்றுக் கொள்கிறோம். விமர்சனம் சம்பந்தமாக இந்த பத்தாண்டுக் காலத்தில் ஒரு ஆரம்பம் செய்திருக்கிறது எழுத்து நல்ல ஆரம்பமாக இருக்கிறது என்று தான் கருதுகிறோம், புதுக்கவிதை சம்பந்தமாக ஒரு வார்த்தை. இந்த பத்தாண்டு காலத்தில் வளம் பெருகி, மற்ற பத்திரிகைகள் சிலவும் அதை வரவேற்றுப் போடும் ஒரு சூழ்நிலை ஏற்பட எழுத்து சாதித்திருக்கிறது. சிறந்த கவிதைகள் பல தமிழில் பிறந்திருப்பது தமிழ் கவிதைக்கு இன்னும் நல்ல எதிர்காலம் இருப்பதுக்கு அறிகுறியாகும்.

கடைசியாக- வெளிநாடுகளில் வெளியாகும் சிறந்த இலக்கிய ஏடுபோல் எழுத்து ஆக வேண்டும் என்பதே லட்சியம், வரும் ஆண்டில் அதுக்

இந்த ‘குணங்களை வைத்து எழுத்துவின் பத்தாண்டுகால 114 ஏடுகளை மொத்தமாக பார்த்ததில் தெரியவருவது என்ன? எழுத்துவில் இதுவரை வெளியாகி இருக்கும் ஏறக் குறைய 500 கட்டுரைகளும், 700 கவிதைகளும் மற்றும் சிறுகதைகள், மதிப்புரைகளும் இதர அம்சங்களும் பொருட்படுத்தத் தக்கனவா? விமர்சனத் துறையிலும், கவிதைத் துறையிலும் ஒரு திருப்பம் விளைவித்திருக்கிறதா? வளர்ச்சி, முன்னேற்றம் தெரிகிறதா? இவைகளில் வெளியான கருத்துக்களின் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா? இவைகளில் தொனித்த படைப்பு அனுபவம் மதிப்புள்ளதாக தற்காலத்ததாக இருந்திருக்கிறதா? இதுமாதிரி எல்லாம் இன்னும் பல கேள்விகளைக் கேட்டுக்கொண்டு பதில் கிடைக்கிறதா, எந்த மாதிரியான பதில் என்று பார்க்க வேண்டும். இந்த சிறிய தலையங்கத்தில் நாம் கேள்விகளைத்தான் எழுப்பி யிருக்கிறோம் பதிலை நாம் சொல்வதைவிட எழுத்துவோடு ஆரம்ப முதல் தொடர்புகொண்ட வாசகர்கள் ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறோம். தங்கள் கருத்தையும் தெரியப்படுத்தும்படியும் கேட்டுக்கொள்கிறோம்.

ஆனால் இதை மட்டும் நாம் சொல்ல முடியும். விமர்சனம், புதுக்கவிதை துறைகளில் 1958 க்கு முன் அதாவது எழுத்து வருமுன் இருந்த சூழ்நிலையையும் சாதனையையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது எழுத்துவின் பாதிப்பு நன்றாக தெரிகிறது. புதிதாக வெளிவரும் பத்திரிகைகளில் வரும் விமர்சனக் கட்டுரைகளும், சென்னையிலும் இடங்களிலும் உள்ள வாசகர் சங்கங்கள்


கான செயல் முறையைக் கையாள உத்தேசம். வாசகர்கள் தங்கள் சத்தா ஆதரவை தொடர்ந்து தருவதுடன் அதிகப்படுத்தியும் தரும்படி கேட்டு கொள்கிறோம். இது சம்பந்தமாக ஒரு முயற்சி யாக இந்த ஏட்டின் பின் அட்டையில் படும் வேண்டுகோள் அறிவிப்பை வாசகர்கள் கவனித்து நிறைவேற்றித் தரும்படி கேட்டுக் கொள்கிறோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.