- விஞ்ஞான திரித்தல் – ஒரு அறிமுகம்
- சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள்: பெட்ரோலில் ஈயம்
- சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – பெட்ரோலில் ஈயம்
- சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை
- சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை (2)
- சக்தி சார்ந்த திரித்தல்கள் – அமில மழைப் பிரச்சினை (3)
- பனிப் புகைப் பிரச்சினை- பாகம் 1
- பனிப்புகைப் பிரச்சினை – பகுதி 2
- விஞ்ஞானத் திரித்தல் – தார் மண்ணிலிருந்து பெட்ரோல்
- விஞ்ஞானத் திரித்தல் – சக்தி சார்ந்தன
- விஞ்ஞானத் திரித்தல்கள் – சக்தி சார்ந்தன
- ராட்சச எண்ணெய்க் கசிவுகள்
- ஓஸோன் அடுக்கில் ஓட்டை
- உடல்நலம் சார்ந்த திரித்தல்கள் – ஓஸோன் அடுக்கில் ஓட்டை
- சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள்
- சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 2
- சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 3
- சிகரெட் மற்றும் புகையிலை சர்ச்சைகள் – பகுதி 4
- மின் சிகரெட் சர்ச்சைகள் – பகுதி 1
- மின் சிகரெட் சர்ச்சைகள் – பகுதி 2
- விஞ்ஞானத் திரித்தல் – டிடிடி பூச்சி மருந்து
- விஞ்ஞானத் திரித்தல் – ஆஸ்பெஸ்டாஸ் தகடுகள்
- டால்கம் பவுடர்
- டால்கம் பவுடர் – பகுதி 2
- விஞ்ஞானத் திரித்தல் – ஜி.எம்.ஓ. சர்ச்சைகள்
- செயற்கைச் சர்க்கரை ரசாயனங்கள் – பகுதி-1
- செயற்கைச் சர்க்கரை ரசாயனங்கள் – பகுதி 2
- விஞ்ஞானக் கருத்து வேறுபாடுகள் – பாகம் மூன்று
- விஞ்ஞானத் திரித்தல் முறைகள் – பகுதி 1
- விஞ்ஞானத் திரித்தல் முறைகள் – பகுதி 2
ராட்சச எண்ணெய்க் கசிவுகள், கடந்த 120 ஆண்டுகளாகக் கடலிலும் நிலத்திலும் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. இன்று வரை, எந்த எண்ணெய் நிறுவனமும் இதற்காக மூடப்படவில்லை. கடந்த ஐம்பது ஆண்டுகளாக இந்தப் பிரச்சினை வளர்ந்து, எண்ணெய்க் குழாய்களால் நிலத்தில் கசியப்பட்டுக் காடுகள், மலைகள், விலங்குகள், பறவைகள் என்று இயற்கையை அழித்தும் வந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள், இதை ஓர் அன்றாட வியாபார ரிஸ்க் என்று மழுப்பி வெற்றி பெற்றுள்ளன. ஆனால், நம்முடைய தொல்லெச்ச எரிபொருள் தாகத்தால், இந்த ராட்சச நிறுவனங்கள் சட்டத்திலிருந்து தப்பிய வண்ணம் இருக்கின்றன. பெரும்பாலும், அமெரிக்க மற்றும் யுரோப்பிய கண்டங்களின் நிகழ்வாக இருந்தாலும், மெதுவாக, இது ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா என்று எந்த கண்டத்தையும் விடவில்லை.
விரிவாக இந்தப் பிரச்னையை அலசுவதற்குமுன், இவ்வகை எண்ணெய்க் கசிவுகள் எப்படி நிகழ்கின்றன என்று பார்ப்போம்:
- அதிகமாக எண்ணெய்க் கசிவுகள், கடல் வழியே ராட்சச டாங்கர் கப்பல்கள் (giant oil tankers) மூலம் கொண்டு செல்லும்பொழுது ஏற்படும் விபத்துக்களினால் நடப்பவை. நடுக்கடலில் கசியும் எண்ணெயை அப்புறப்படுத்துவது இயலாத செயல் என்று முன்னமே பார்த்தோம்
- சில எண்ணெய் சுத்திகரிக்கும் ஆலைகள், நடுக்கடலில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் நிகழும் விபத்துக்களும் எண்ணெய் கசிய முக்கியக் காரணம். உதாரணத்திற்கு, Taylor Energy என்ற எண்ணெய் நிறுவனம், மெக்ஸிகோ வளைகுடாவில் 15 ஆண்டுகளாக எண்ணெயைக் கசிய விட்டுள்ளதைச் சமீபத்தில் ஒப்புக்கொண்டது
- கடலின் நடுவே எண்ணெய்க் கிணறுகள், கடந்த 50 ஆண்டுகளாக, அதிகமாகிவிட்டன. இந்தியாவில்கூட, Bombay High என்ற நடுக்கடல் எண்ணெய்க் கிணறு உண்டு. இவற்றில் நேரும் விபத்துக்களாலும் கடலில் எண்ணெய் கசிய வாய்ப்புண்டு
- கனடா, அமெரிக்கா இரு நாடுகளுக்கும் இடையில் சில லட்சம் கி.மீ. தூரத்திற்கு ராட்சச எண்ணெய்/இயற்கை வாயு குழாய்கள் தரைக்கடியில் புதைக்கப்பட்டுள்ளன. இவை அதிக அரவமற்ற பகுதிகள் வழியாக மெக்ஸிகோ வளைகுடாவில் உள்ள எண்ணெய் மையங்களுக்கு சுத்திகரிப்பு செய்வதற்காக, கச்சா எண்ணெய் , ராட்சச பம்புகள் உதவியுடன் அன்றாடம் நகருகிறது. சில லட்சம் கி.மீ. நீளமுள்ள இந்த குழாய்களில், அவ்வப்பொழுது கசிவுகள் நேருகின்றன. பெரிய கசிவுகள் செய்திகளில் வந்தாலும், சிறிய கசிவுகள் நேர்ந்த வண்ணம் இருக்கின்றன. காட்டுப்பகுதிகளில் கசிந்த எண்ணெய் பெரும்பாலும் நீக்கப்படுவதில்லை
- சில இடங்களுக்கு எண்ணெய்க் குழாய்கள் போடுவதில் சிக்கல்கள் இருப்பதால், தோண்டப்பட்ட எண்ணெய் ரயில் மூலம் நகர்த்தப்படுகிறது. இப்படி நகரும் டாங்கர் ரயிலில் தீ விபத்து நேர்ந்தால், சுற்றியுள்ள ஊர்களுக்கு சேதம் ஏற்படும். உதாரணத்திற்கு, கனடாவின் குபெக்/அண்டேரியோ மாநிலங்களில் இவ்வகை விபத்துக்கள் நடந்துள்ளன. இன்றும் குபெக் வாசிகள் எண்ணெய் நிறுவனங்கள் மீது, சரியான நஷ்டஈடு தராததால், கடுப்பில் உள்ளனர்
உலகின் மிக மோசமான சில எண்ணெய்க் கசிவுகள் மற்றும் அதன் விளைவுகள் பற்றிப் பார்ப்போம்.
- ஜனவரி, 1, 1909 – உலகின் மிக மோசமான எண்ணெய் சார்ந்த விபத்து நிகழ்ந்தது இந்நாளில்.லேக்வ்யூ கஷர் (Lakeview Gusher) என்ற எண்ணெய் கிணறு வெடித்து, உலகில் இதுவரை அதிகமான கச்சா எண்ணெயைக் கசிந்தது. செப்டம்பர் 1911 –ல், கட்டுப்பாட்டிற்குள் கிணறு வருவதற்குமுன், 9.4 மில்லியன் பேரல்கள் எண்ணெய் விரயமானது. இந்த கிணற்றிலிருந்து வெளியான எண்ணெய் நிலத்தில், பசிபிக் சமுத்திரத்தில் என்று எல்லா இடங்களையும் விடவில்லை. நீர், நிலம் எல்லாவற்றையும் விட சக்தி வாய்ந்தது எண்ணெய்! இன்று, இந்தப் பகுதியில் எந்தச் செடி கொடிகளும் வளர்வதில்லை. பாதிக்கப்பட்டவர்கள் பற்றிய சரியான கணக்குகளும் கிடையாது. இன்று நெடுஞ்சாலை 33-ல், இதை ஒரு சுற்றுலாத் தளமாகக் காசு பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். எண்ணெய் தொழில் வழக்கப்படி, இதற்காக யாருக்கும் நஷடஈடு கொடுக்கப்படவில்லை. இந்த, அதிகம் பதிவு செய்யப்படாத எண்ணெய் கசிவைப் பற்றி இங்கு சொல்லக் காரணம், எதிர்கால எண்ணெய் கசிவுகளுக்கும் இதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. சட்டத்தின் பிடியில் எண்ணெய் நிறுவனங்கள் அன்றும், இன்றும் தப்பியே வந்துள்ளனர்
- வளைகுடா போரின் பொழுது பின் வாங்கும் ஈராக்கிய படை கொளுத்த விட்ட எண்ணெய் உலகின் மிகப் பெரிய கசிவுகளின் வரிசையில் இரண்டாம் இடம் வகிக்கிறது. முன்னமே சொன்னது போல, இதைப் பெரிதாகப் பதிவு செய்யவில்லை குவைத் அரசாங்கம். இதை பின்வாங்கிய இராக்கிய துருப்புகளின் போர்க்கால குற்றமாக மழுப்பியது குவைத் மற்றும் அமெரிக்க அரசாங்கம்
- அதன் பிறகு, உலகின் மிகப் பெரிய எண்ணெய் கசிவு, நிறைய பதிவு செய்யப்பட்ட மெக்ஸிகோ வளைகுடா எண்ணெய் கசிவான Deepwater horizon (ஏப்ரல் 20, 2010) என்ற BP –யின் மிகப் பெரிய விபத்து. நடுக்கடலில் நிறுவப்பட்ட எண்ணெய் தோண்டும் அமைப்பு, இந்த Deepwater horizon. இந்த எண்ணெய்த் தளம் வெடித்து, 4.9 மில்லியன் பேரல் எண்ணெய், கடலில் கொட்டியது. சமீப நிகழ்வுகளில், உலகின் மிகப் பெரிய சுற்றுப்புற சூழல் விபத்து இதுவென சொல்லப்படுகிறது. இந்த விபத்தைப் பற்றிய சில தகவல்கள் உலகை திடுக்கிடச் செய்தாலும், வெகு விரைவில் இந்த விபத்து மறக்கப்பட்டது
- சில மில்லியன் பேரல் எண்ணெய் கடலில் எரிக்கப்பட்டது
- 18,600 அடிவரை தோண்டி எண்ணெய் எடுத்துக் கொண்டிருந்தது இந்த அமைப்பு
- 126 ஊழியர்கள் வேலை செய்த இந்த அமைப்பில், 11 ஊழியர்கள், இந்த விபத்தில் உயிரிழந்தனர்
- 87 நாட்கள் இந்த எண்ணெய்க் கசிவு நேர்ந்த்து என்று கணிக்கப்பட்டுள்ளது
- செயற்கை கோள் புகைப்படங்களிலிருந்து, இந்த விபத்து, கடலில் 180,000 சதுர கி.மீ. அளவு நேரடியாக பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. தமிழ்நாடு, 130,000 சதுர கி,மீ பரப்புள்ள ஒரு மாநிலம். இது தமிழ்நாட்டைவிட இன்னும் பெரிய பரப்பளவு
- மெக்ஸிகோ வளைகுடா மாநிலங்களான ஃப்ளோரிடா, லூயிசியானா, மிஸ்ஸிஸிப்பி மற்றும் அலபாமாவின் 1,728 கி,மீ. கடற்கரைப் பகுதிகளில், கசிந்த எண்ணெய், பல விதத்திலும் இந்த மாநிலங்களின் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தை பாதித்தது என்று கணக்கிடப்பட்டுள்ளது. BP நிறுவனம், அரசாங்க கணக்குகள் யாவும் ஊதி வாசிக்கப்பட்டன என்று சொன்னதில் யாரும் வியப்படையவில்லை!
- 2013 வரை, BP நிறுவனம் 14 பில்லியன் டாலர்கள் இந்த எண்ணெய் விபத்தில் செலவிட்டதாகச் சொல்லுகிறது. முன்னமே நாம் பார்த்த dispersants (1.84 மில்லியன் கேலன்கள்) அதிகமாக பயன்படுத்தப்பட்ட விபத்துக்களில் இதுவும் ஒன்று, 7,000 கப்பல்கள் மற்றும் 47,000 மனிதர்கள் இந்த விபத்தைக் கட்டுக்குள் கொண்டுவரப் போராடினர். அமெரிக்க அரசாங்கம், 850 மில்லியன் டாலர்கள் செலவிட்டதாகச் சொல்லுகிறது
- இரண்டு மில்லியன் கடல் பறவைகள் இந்த விபத்தால் இறந்திருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இங்கு வாழும் பெல்லிகன் பறவைகள், ஆமைகள், எத்தனையோ மீன் வகைகள், டால்ஃபின்கள், இந்த கடல் சமாதியில் அடக்கம்
- அமெரிக்க அரசாங்கத்தின் ஆணைப்படி நஷ்டயீட்டிற்காக 20 பில்லியன் டாலர்களை ஒதுக்க BP ஒப்புக் கொண்டது. கோர்டில், பல கேஸ்கள் இழுத்தடித்த வண்ணம் இருக்கின்றன. 2012 –ல், முதன் முறையாக, BP, 4.5 பில்லியன் டாலர்களை அபராதமாகக் கட்டியது
- 2015 –ஆம் ஆண்டில், கடைசியாக 18.7 பில்லியன் டாலர்களை நஷ்டயீடாகக் கட்ட ஒப்புக் கொண்டது. இதுவரை 54 பில்லியன் டாலர்கள், தான் செலவிட்டதாகச் சொல்லுகிறது BP
- செப்டம்பர் 30, 2019 – BP –ன் கடந்த வருட வருமானம் 287.33 பில்லியன் டாலர்கள். மேலே சொன்ன விவரங்களை இந்தப் பின்ன்ணியுடன் பார்த்தால் தெரிய வரும், இந்த அபராதங்களால் BP போன்ற நிறுவனத்திற்கு பெரிய பாதிப்பு இருக்கப் போவதில்லை என்பது
- வியாபாரத்தில் இதெல்லாம் சகஜம் என்று இன்றும் இவர்கள் இயங்குவது மிகவும் வேதனைக்குரிய விஷயம்
- நான்காம் இடத்தை வகிப்பது, இக்ஸ்டாக்ஸ் என்ற மெக்ஸிகோ நாட்டின் நடுக்கடல் எண்ணெய்க் கசிவு.கிட்டத்தட்ட BP –யின் அளவு, 3.3 மில்லியன் பேரல் எண்ணெய், மெக்ஸிகோ வளைகுடா பகுதியில் ஜூலை1979 –ல் ஆரம்பித்து அடுத்த சில ஆண்டுகளில் கசிந்தது. இந்த எண்ணெய்த் தளம், ப்ரீமெக்ஸ் (Premex) என்ற மெக்ஸிகோ அரசாங்க நிறுவனத்தால் இயக்கப்பட்டது. வளைகுடாப் பகுதியில், எத்தனை விபத்துக்கள் நடந்தாலும் அமெரிக்க எண்ணெய் தாகம் என்றும் வெற்றி பெற்றுள்ளது. இந்த விபத்து பற்றிய சில தகவல்கள்:
- 11,800 அடி, தோண்டப்பட்ட ஒரு கிணறு இது
- இந்த கிணற்றில் விபத்து நேர்ந்தவுடன், நாளொன்றிற்கு, 30,000 பாரல்கள் கடலில் கலந்த வண்ணம் இருந்தது
- இந்தக் கிணற்றிற்குள் சகுதியை பம்ப் செய்து, மெதுவாக முப்பதாரயிரத்திலிருந்து, இருபதாயிரமாக ஆகஸ்ட் மாதத்தில் குறைத்து, படிப்படியாக இதை சில மாதங்களில் 10,000 பேரலாக குறைத்தார்கள். நான்கு மாதத்தில் கணக்குப் பாருங்கள் – 2.1 மில்லியன் பாரல்கள் கடலில் கலந்துவிடும்
- எண்ணெய் தொழில் வழக்கப்படி, Premex நிறுவனம், பாதி எண்ணெய் வெளி வந்தவுடன் எரித்து விட்டோம், கொஞ்சம் ஆவியாகிவிட்டது, மற்றதைக் கவனத்துடன் அப்புறப்படுத்தி விட்டோம் என்று மார் தட்டிக் கொண்டது. இதில் எதுவும் தனிப்பட்ட பாரபட்சமில்லாத எந்த ஓர் அமைப்பும் உறுதி செய்யவில்லை
- கசிந்த எண்ணெய்மீது, dispersant Corexit 9527 முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது
- 100 மில்லியன் டாலர்களை, கசிந்த எண்ணெயைச் சுத்தம் செய்யச் செலவிட்டதாக Premex சொல்லியது
- இறந்த உயிரனங்கள் பற்றிய ஒரு கணக்கீடுகூடக் கிடையாது
இப்படி ஒரு பெரிய பட்டியலே உள்ளது.
https://en.wikipedia.org/wiki/List_of_oil_spills
எண்ணெய் நிறுவனங்கள், அன்றும் (Exxon Valdez) இன்றும், சட்டம் மற்றும் அரசாங்கத்திடம் மாட்டிக்கொள்ளாமல் தப்பித்தே வந்துள்ளன. இத்தனைக்கும், நம்முடைய குறையாத எண்ணெய் தாகத்தைப் பயன்படுத்திக் கொள்ளை லாபமீட்டும் இந்த நிறுவனங்கள், சரியான நஷ்டஈடுகூடக் கொடுத்ததகச் சரித்திரம் இல்லை. விஞ்ஞானத் திரித்தலில் மிகவும் கொடுமையான திரித்தல், நம் எண்ணெய் தாகத்தை வைத்து இந்த நிறுவனங்கள் நிகழ்த்தும் தில்லாலங்கடிகள்.
கடந்த 11 கட்டுரைகளில், சக்தி சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்களைப் பார்த்தோம். பெட்ரோலில் ஈயம் கலப்பது, அமில மழையை உண்டாக்குவது, பனிப்புகையாக நம் நகரங்களை மாற்றுவது என்பவை எல்லாம் எண்ணெயின் பயன்பாட்டால் வரும் வினைகள். எண்ணெயை உருவாக்கும் சர்வ வல்லமை படைத்த எண்ணெய் நிறுவனங்கள், எண்ணெயைத் தோண்டி எடுக்க ஆடும் தில்லாலங்கடிகள், தார் மண்ணாகட்டும், பாதாள நீரழுத்த நிலமுறிவாகட்டும், எண்ணெய்க் கசிவாகட்டும், எல்லாவற்றிலும் விஞ்ஞானம் பின்னுக்குத் தள்ளப்படுகிறது. பணபலம், அரசியல் செல்வாக்கு யாவும் நம்முடைய பூமியைப் பாழடைய வைத்துள்ளன.
மனிதப் பேராசை, சக்தியை உருவாக்குவதில் மட்டும் அடங்கும் ஒரு விஷயமன்று. நம் உடல்நலத்துடன் பல நிறுவனங்கள் விஞ்ஞானத்தைத் திரித்து, லாபம் பார்க்கின்றன. அடுத்த பகுதியில் உடல்நலம் சார்ந்த விஞ்ஞானத் திரித்தல்களை விரிவாக அலசுவோம்.
சக்தி சார்ந்த திரித்தல்கள் கட்டுரைகளில், பல விஞ்ஞானப் பதிவுகள் மற்றும் இணைய தளங்களில் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. மேலும், இத்துறையில் உங்கள் அறிவை வளர்த்துக்கொள்ள, சில முக்கியச் சுட்டிகள் இங்கே:
நட்சட்த்திரமதிப்பீடு | விளக்கம் |
* | ஆரம்பநிலைப் புரிதலுக்கான சுட்டி |
** | சற்று விவரமானது. அவ்வளவு டெக்னிகல் அறிவு தேவையில்லை |
*** | மிக விவரமானது. கொஞ்சமாவது டெக்னிகல் அறிவு தேவை |
**** | மிகவும் டெக்னிகலான ஆராய்ச்சிக் கட்டுரை |