“அலர்தலும் உதிர்தலும்” – ஹைக்கூ கவிதைகள்

This entry is part 2 of 5 in the series ஹைக்கூ வரிசை

1

குவி அதர
முகிழ்சொல் மோனத்திலே
மலருமுன் மொட்டு.

2

படர் கருமை
சாம்பல் பூத்தகுடை – மழை
உலவு வான்.

3

மலரிடை பூத்த
சிலந்தி வலை – சிக்கியது
சூரிய பொன்னிழை.

4

முதலொளியில்
அலர்ந்த வண்ணம் – தலைகீழாக
விழுந்த மலர்.

5

வண்டு மறைக்கும்
சிறுபூக்களின் பின் – உதிர
சிலிர்க்கும் காடு.

 6

மீண்டும் இக்கணம்
கடக்கும் காற்றில் – சருகாய்
கலையும் மரம்.

7

ஒற்றைக் காம்பில்
தவமிருக்கும் இலை – தரை
நோக்கிய தழல்.

Series Navigation<< கொரொனா காலத்தில் ஹைக்கூ“தோன்றி மறையும் மழை” – ஹைக்கூ கவிதைகள் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.