மனுசி

கீள வுளுந்துடப் போறானோங்கிற கெலியும் அவளுக்குப் புடிச்சது. நல்லவேளயா அஞ்சல அங்கயே நின்னுருந்தா. அந்தப் பொண்ணு பாக்குற மாதிரித் தெரியல. தெவ்வானைக்குப் பின்னாடி ரெண்டு மூணு பேரு வந்து நின்ன பொறவு அவ, தாயீன்னா. தலையத் தூக்கிப் பாத்த அது இவளப் பாத்து மொறச்சதுல வாப்பேச்சிக் கெளம்புவேனான்னது. ஒனக்குப் புண்ணியமா போவுதும்மா… இம்புட்டு நாளிக் காத்துக் கெடக்கேன்னு கண்ணுத் தண்ணியவுட்டா. பொறவு அது சீட்டு எளுதிக் குடுத்திச்சி.