நூல் அறிமுகங்கள்

This entry is part 6 of 8 in the series கைச்சிட்டா

பாண்டியாட்டம்

ஒப்பீடுகள், தரவரிசைகள், சமூக அக்கறைகள், கோட்பாட்டு லட்சியங்கள், யதார்த்த உண்மைகள், என்ற இலக்குகளின்றி பராக்கு பார்ப்பவனின் லாகிரியுடன் புத்தகங்களும் தனி வாழ்வும் சந்திக்குமிடங்களை உள்ளிருந்து விவரிக்கின்றன. கடந்த நூற்றாண்டுகள் ஐரோப்பிய இலக்கியத்துக்கு உரியவை, சென்ற நூற்றாண்டின் பிற்பகுதியும் இந்த நூற்றாண்டும் அமெரிக்க ஆங்கில இலக்கியத்துக்கு உரியது என்று நம்புகிறேன். அது தமிழில் மிகக் குறைவாகவே பேசப்பட்டுள்ளது என்ற குறையை இங்குள்ள கட்டுரைகளில் சில சிறிதளவு போக்குகின்றன. 

எழுத்தாளர் நம்பி கிருஷ்ணன் அவர்களின் “பாண்டியாட்டம்” உலக இலக்கிய கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு நூலின் விலை 320/- முன்பதிவு விலையாக 250/-…

  • A/c no.34804520231
  • (yaavarum publishers)
  • SBI bank Chinmaya nagar branch
  • IFSC code: SBIN0007990 or
  • Gpay 9841643380
  • நூல் & அட்டை வடிவமைப்பு : கோபு ராசுவேல்
  • எழுத்தாளர்கள் கோட்டோவியம் : ஓவியர் ஜீவநாதன்
  • இது ஒரு யாவரும் & பதாகை கூட்டு வெளியீடு

The WEIRDest People in the World: How the West Became Psychologically Peculiar and Particularly Prosperous

இந்த மதிப்புரை எழுதியவர் டேனியல் டென்னெட். மதிக்கக் கூடிய சிந்தனையாளர். அவர் இந்த மதிப்புரையில் கவனமாக கருத்தியல் சிதைப்புகளையும், திரிப்புகளையும் தாண்டி மானுடவியல், வரலாற்றியல், உளவியல், மதவியல், சமூகவியல் போன்றன இயங்கக் கற்க வேண்டும் என்று சுட்டுகிறார். அதற்குப் புள்ளியியல் ஒன்றே வழி என்று நினைப்பதும் மடமை என்றும் சுட்டுகிறார். ஆனால் புள்ளியியலின் உதவி தேவை, அதன் எல்லைகளும், அதன் வழிமுறைகளில் உள்ள புதைகுழிகளையும் பற்றிய தீர்க்கமான கவனம் தேவை என்று சொல்கிறார். செய்யப்பட வேண்டிய வேலையை அவர் வருணிப்பதைப் பார்த்தால் இது ஒரு மனிதராலோ சில மனிதர்களாலோ செய்யப்பட முடியாத அடாத வேலையாகத் தெரிகிறது. இத்தனை துறைகளின் தகவல்களையும் திரட்டி, அவற்றின் முடிவுகளை அலசி, அவற்றின் இண்டு இடுக்குகளைக் கவனித்து இயங்குவது எத்தனை பெரிய வேலை? இதற்கு உலகளாவிய இணைப்புக்குத் தேவையான பேரறிவு தனி மனிதருக்குச் சாத்தியமானதாகத் தெரியவில்லை. ஆனால் இப்படி சஞ்சீவி மலையைத் தேடும் முயற்சியை மனிதர் நிறுத்த மாட்டார்கள். 

  • விலை: $35.00
  • பதிப்பகம் : Farrar, Straus and Giroux;
  • Illustrated Edition
  • Publication Date : September 8, 2020
  • File Size : 26589 KB
  • Language: : English
  • Print Length : 706 pages
  • ASIN : B07RZFCPMD
  • ISBN-13 : 9780374173227

நடுநிலைமை அற்றவனின் தமிழ் சினிமா குறிப்புகள்

முதலாம் பாகத்திற்கான முன்னுரையில் இருந்து:

இப்போதெல்லாம் திரைப்படங்கள் மிக நேரிடையாகவே விஷத்தைத் தம்முள் கொண்டு வருகின்றன. அப்படிப்பட்ட திரைப்படங்களை வெறும் திரைப்படங்களாக மட்டுமே பார்ப்போம் என்பது முட்டாள்தனம். இனியும் ‘படம்தானே’ என்று சொல்வதில் பொருளில்லை. துளிவிஷம் என்றாலும் அதைக் கண்டுகொள்வது முக்கியமானது. அதையே இப்புத்தகம் செய்ய நினைக்கிறது. சோஷியல் மீடியா உலகத்தில் ஒரு திரைப்படம் வெளிவந்த அரை மணி நேரத்தில் ஆயிரம் விமர்சனங்கள் சிறியதும் பெரியதுமாக வந்துவிடும் இக்காலத்தில், இக்கட்டுரைகள் விரிவான விமர்சன வகைக்குள் போகாமல், இப்படங்களில் இருக்கும் அரசியலையும் குறியீடுகளையும் அதன் நடுநிலையின்மையையும் மட்டுமே பார்க்கின்றன.

இரண்டாம் பாகத்திற்கான முன்னுரையில் இருந்து:

தமிழ்த் திரையுலகம் ஹிந்து எதிர்ப்புச் சொல்லாடல்களை மூன்று வகைகளில் பயன்படுத்துகிறது. ஒன்று மிக நேரிடையான அரசியல் படங்கள். காலா, ஜிப்ஸி போல. அடுத்ததாக, படத்தில் குறியீடுகளைப் பரப்புவது. ஆர்.கே.நகர் போல. அடுத்ததாக, தேவையே இல்லாமல் காட்சிகளையோ அல்லது வசனத்தையோ வைப்பது. ப்ரேம் ப்யார் காதல் (கதாநாயகன் அணிந்திருக்கும் ஒரு டீ ஷர்ட்டில் சிலுவையுடன் பிலீவ் மி என்று இருக்கும்) அல்லது சிலுக்குவார்பட்டி சிங்கம் போல. அல்லது கொஞ்சம் கூட முக்கியமற்ற ஒரு நடிகர் ஒரு வசனத்தைச் சொல்லிவிட்டுப் போவது.

இவையெல்லாம் சாதாரணமாக நடப்பது, அதற்கு தேவையற்ற கவனம் தருகிறோம் என்று சிலர் சொல்வதைக் கேட்கிறேன். திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சியும் எத்தனை மெனக்கடலுடன் எத்தனை பேர் ஈடுபாட்டில் வருகிறது என்று புரிந்தால் இப்படிச் சொல்ல மாட்டார்கள்.

  • எழுதியவர்: ஹரன்பிரசன்னா
  • வெளியீடு: தடம் பதிப்பகம்
  • விலை: முதல் பாகம் ரூ 140.
  • இரண்டாம் பாகம் ரூ 170.
  • இரண்டு புத்தகங்களையும் சேர்த்து ஆன்லைனில் டயல் ஃபார் புக்ஸ் மூலம் ஆர்டர் செய்ய: https://dialforbooks.in/product/1000000030652_/ (தனித்தனியாகவும் வாங்கிக் கொள்ளலாம்.)
  • போன் மூலம் ஆர்டர் செய்ய: டயல் ஃபார் புக்ஸ்: 044-49595818 | 9445901234
  • வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய (மெசேஜ் மட்டும்): டயல் ஃபார் புக்ஸ்: 9500045609
Series Navigation<< கைச்சிட்டா – 5கைச்சிட்டா – 7 >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.