கமலா ஹாரிஸால் ஜனநாயகக் கட்சி முன்னிலையா?
தூங்கி வழிந்து கொண்டிருந்த ஜனநாயக கட்சியின் தேர்தல் பணிகள் கமலா ஹாரிஸ் புண்ணியத்தால் உயிர்த்தெழுந்திருக்கின்றன. “திறமையான, அரசியல் அனுபவமிக்க, தலைமைப் பண்புகளுடன் பணியாற்றக்கூடிய ஒருவரைத்தான் துணை அதிபராகத் தேர்ந்தெடுப்பேன்,” என்று ஜோ பைடன் தேர்தல் பிரசாரம் ஒன்றில் தெரிவித்திருந்தார். அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக வெள்ளையரல்லாத பெண் துணை அதிபரை ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் முன்மொழிந்தபிறகு, அரசியலில் பல்வேறு அலைகளை ஏற்படுத்தியுள்ளது பைடன் – ஹாரிஸ் கூட்டணி. மறுபக்கம் இந்தத் தெரிவை எதிர்பாராத ட்ரம்ப் தரப்பு, தங்கள் பதட்டத்தை வெளிப்படையாகவே காட்டிக்கொண்டிருப்பது கவனிக்கத்தக்கது.
அதிபரால் அரசியல் பொறுப்புகளைத் தொடரமுடியாத நிலையில் துணை அதிபராகப் பதவியேற்பவர், வெள்ளை மாளிகையின் கடமைகளை நிறைவேற்ற வேண்டியுள்ளதால் இப்பதவிக்கான வேட்பாளர் தேர்வும் மிகவும் இன்றியமையாதது. தனது கொள்கைகளோடும் கட்சியோடும் ஒத்துச்செல்லும் நபரையே அதிபர் வேட்பாளரும் பரிந்துரைப்பார். தற்போதைய சூழலில் மக்களிடையே பிரபலமான, அரசியல் அனுபவமும் எதிர்க்கட்சியினரை வீழ்த்தும் திறனும்கொண்ட ஒரு நபரே சரியான தேர்வாக இருக்கமுடியும். துணை அதிபராக ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுப்பதில் திட்டவட்டமாக இருந்த ஜோ பைடனின் பட்டியலில் நால்வர் இடம் பெற்றிருந்தார்கள். ஜோ பைடனின் ஆதரவாளர் மிச்சிகன் கவர்னர் க்ரட்ச்சேன் விட்மேர், ஒபாமா ஆட்சிக்காலத்தில் தேசியப் பாதுகாப்பு ஆலோசகராக இருந்த சூசன் ரைஸ், அதிபர் வேட்பாளர் போட்டியில் ஜோ பைடனுக்கு எதிராகக் களம் இறங்கிய கமலா ஹாரிஸ் மற்றும் எலிசபெத் வாரன். தற்போது நடந்துகொண்டிருக்கும் இனவெறி எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாகக் கறுப்பர்கள் இனத்தைச் சார்ந்த ஒருவரை நியமிப்பதில் வெற்றி நிச்சயம் என்ற கணிப்பும் ட்ரம்ப் – பென்ஸ் கூட்டணியை எதிர்த்து நிற்கும் துணிவும்கொண்ட நபராக இருப்பார் என்பதனாலேயே 55 வயது கமலா ஹாரிஸ் முன்னிலைப்படுத்தப்பட்டுத் தேர்வாகியிருக்கிறார்.
அமெரிக்கத் தேர்தல் முடிவுகளை மாற்றும் வல்லமை படைத்தவரா கமலா ஹாரிஸ்? யார் இந்த கமலா ஹாரிஸ்?
தமிழகத்து ஷ்யாமளாவிற்கும், ஜமைக்காவின் ஹாரிஸுக்கும் அமெரிக்க மண்ணில் பிறந்தவர்தான் கமலா ஹாரிஸ். தன் பெயரைத்தவிர வேறெந்த இந்திய அடையாளங்களையும் முன்னிறுத்தாதவர் கமலா. அவரின் சிறுவயதிலேயே பெற்றோர்கள் பிரிந்து, தாயிடம் வளர்ந்திருந்தாலும் தந்தையின் வழியில் தன்னை கறுப்பினக் கிறிஸ்தவப் பெண்ணாக, ஆஃப்ரிக்கன் அமெரிக்கனாகவே அடையாளப்படுத்திக் கொள்கிறவர். கறுப்பின அமெரிக்கர்களுக்காக, தனியாரால் நடத்தப்படும் ‘ஹாவர்ட் பல்கலை’யில் படித்துப் பட்டம் பெற்றிருக்கிறார். தன் பெற்றோர் கலந்துகொண்ட சமூக உரிமைகள் இயக்கப் போராட்டங்களே தன்னை இரண்டாவது “கறுப்பின செனட் உறுப்பினராக” தேர்ந்தெடுக்க வழிவகுத்துள்ளதெனப் பெருமையுடன் நினைவுகூர்ந்துள்ளார். இவருடைய தமக்கை மாயா ஹாரிஸும் சட்ட வல்லுநர். 2016 தேர்தல் பிரச்சாரத்தில் ஹிலாரி கிளிண்டனின் கொள்கை ஆலோசகராகப் பணியாற்றியிருக்கிறார். 2014ல் வழக்கறிஞர் டக்ளஸ் எம்ஹாஃப்பை மணந்துள்ளார் கமலா ஹாரிஸ்.
2017ல் செனட்டராக பதவியேற்ற இரண்டாவது கறுப்பினப் பெண் என்ற பெருமையைப் பெற்றவர் ஹாரிஸ். அதற்கு முன்பு 2004 முதல் 2011 வரை ஏழு வருடங்கள் சான்ஃப்ரான்சிஸ்கோ நகரின் முதல் பெண் மாவட்ட வழக்கறிஞராகவும் , 2011 முதல் 2017 வரை கலிஃபோர்னியா மாநிலத்தின் முதல் ஆஃப்ரிக்கன் அமெரிக்கப் பெண் அட்டர்னி ஜெனரலாகவும் பதவிகள் வகித்திருக்கிறார். ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளராகப் போட்டியிட்டு, விவாத மேடைகளில் பைடனுக்கு எதிராக முழங்கி மக்களிடையே கணிசமான ஆதரவு பெற்றிருந்த நேரத்தில் தடாலடியாகப் போட்டியிலிருந்து விலகிவிட்டார். சட்ட நுணுக்கங்கள் அறிந்தவரும் மக்களிடையே பிரபலமானவரும் அரசியல் அனுபவமும் கண்டிப்பும் திறமையான பேச்சும் செயலாற்றும் திறனுமே அவரைத் தகுதியான துணை அதிபர் வேட்பாளராகப் பரிந்துரைத்திருக்கிறது.
கலிஃபோர்னியா மாநில அட்டர்னி ஜெனரலாகக் கருப்பு, வெள்ளை இனப் பிரச்னைகள் மட்டுமின்றி, சிறைக் கைதிகளின் உரிமைகள், லெஸ்பியன்கள், ஓரினச் சேர்க்கையாளர்கள், கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் ஆகியோரின் உரிமைகளுக்காகச் சட்டத் திருத்தங்களைக் கொண்டுவந்தார். போதை மருந்துக் கடத்தலில் குற்றம் சாட்டப்பட்டவர்களைச் சீர்திருத்த அவரால் முன்னெடுக்கப்பட்ட “Back on Track program”, சிறைத் தண்டனையைவிட குற்றவாளிகளுக்குக் கல்வி , வேலை என நிரந்தர வாழ்க்கையைத் தரும் திட்டம் நல்ல வரவேற்பைப் பெற்றது. குற்றவியல் நீதி அமைப்பில் சீர்திருத்தங்களைக் கொண்டுவரும் முயற்சியில் அவருடைய அணுகுமுறை தோல்வியடைந்தது மட்டுமில்லாமல் விவாதத்திற்கும் உள்ளானது. அதிபர் வேட்பாளர் போட்டியிலிருந்து விலக அதுவும் ஒரு காரணமாக அமைந்தது. அது போலவே, 10 சதவிகித பள்ளி நாள்களுக்கு அதிகமாக வகுப்புகளுக்குச் செல்லாத குழந்தைகளின் பெற்றோர்களைக் குற்றவாளிகளாகக் கருதி $2000 அல்லது ஒரு வருட சிறைத் தண்டனை என அவர் அறிவித்ததும் கடும் எதிர்ப்பைக் கிளப்பியது. சிறுபான்மையின மக்களுக்காகப் பல சட்டத் திருத்தங்களைக் கொண்டுவரும் அதிகாரம் இருந்தபொழுதும் அதைப் பயன்படுத்தத் தவறியதாகவே அவர் மேல் விமர்சனம் உள்ளது. அதனாலேயே பலரும் 2016ல் நடந்த அதே பிழையை ஜனநாயகக் கட்சி செய்துவிட்டதாக அஞ்சுகிறார்கள். வழக்கறிஞர் பதவிக்காலத்தில் அவருடைய தவறான அணுகுமுறைகளையும் அதன் பாதிப்புகளையும் எதிர்க்கட்சிகள் விமர்சிக்கும் வாய்ப்புகள் அதிகம்.
செனட் உறுப்பினராக, நடுத்தர வர்க்க மக்களின் வரிச்சுமையைக் குறைக்கவும் குறைந்தபட்ச ஊதியமாக மணிக்கு $15 வழங்கும் வகையில் சட்டத்தை மாற்றியமைக்கவும் முறையான ஆவணங்களின்றி நாட்டில் குடியேறியவர்களுக்கும் அடைக்கலம் தேடிவந்தவர்களுக்கும் மருத்துவ வசதிகளும், குடியேற்ற உரிமையைப் பெற்றுத்தரவும் ஜார்ஜ் ஃப்லாய்ட்ன் மரணத்திற்குப் பிறகு குற்றவியல் நீதி அமைப்பில் சீர்திருத்தங்களைக் கொண்டுவரவும், பெர்னி சாண்டர்ஸ்ன் ‘Medicare for All’ மூலம் அனைவருக்கும் சுகாதாரப் பராமரிப்பு , பெரும்பாலான அமெரிக்க மாணவர்களுக்கு இலவசக் கல்லூரிப் படிப்பு கிடைத்திடவும் பிற செனட்டர்களுடன் இணைந்து மக்களுக்குப் பயனுள்ள வகையில் பல சட்ட மாறுதல்களை முன்னெடுத்ததில் பெரும் பங்கு இவருக்கும் உண்டு.
செனட் நீதித்துறை, செனட் இன்டெலிஜென்ஸ் கமிட்டி, உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை, நிதி நிவாரணத்துறை குழுக்களில் இடம் பெற்றிருக்கிறார். ஆளும் கட்சியின் ரஷ்யத் தொடர்பு விசாரணையில் “செனட் இன்டெலிஜென்ஸ் கமிட்டி”யை இவர் கையாண்ட விதம் இரு கட்சியினரிடம் நற்பெயரையும் அதிபர் பொறுப்பிற்கான தகுதியுடையவராகவும் மக்களிடையே அடையாளப்படுத்தியுள்ளது. அட்டர்னி ஜெனரலாக அதிபர் டிரம்ப்பால் தேர்வு செய்யப்பட்ட ஜெஃப் செஷன்ஸ் , உச்ச நீதிமன்ற நீதிபதி பிரெட் கவன்னாவுடனான விசாரணைகள் இவரை தனித்தாளுமை கொண்ட அரசியல் தலைவராக வாஷிங்டனில் பிரபலப்படுத்தியது.
சிறுபான்மையினர் மற்றும் புலம் பெயர்ந்தவர்களின் வலியையும் உணர்ந்தவர் என்பதால் நிறப் பாகுபாடு மற்றும் குடியேற்றப் பிரச்சனை குறித்துப் பேசுபவர்கள், இளம் வாக்காளர்கள் மற்றும் சிறுபான்மையினரின் வாக்குகளை ஹாரிஸ் கவர்ந்துவிடும் சாத்தியக்கூறுகள் அதிகமாக இருக்கிறது என்று கட்சியும் இவர்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறது. இவரை விரும்பாத பலரின் வாக்குகளையும் பெற்றுவிடக் கட்சியின் முன்னாள் அதிபர்கள் முதல் இந்நாள் வேட்பாளர்கள்வரை பலரும் இவருக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துவருகிறார்கள்.
எங்கும் தன்னை இந்தியராகப் பிரகனப்படுத்திக்கொள்ளாத ஹாரிஸின் அரசியல் நிலைப்பாடுகளும் அவர் சார்ந்த கட்சியின் கொள்கைகள் பலவும் இந்தியாவிற்கு எதிரானவையே. இவருடைய முஸ்லீம் பக்கச்சார்பு அரசியலால், அமெரிக்க இந்தியர்கள் பலரின் அதிருப்திக்கும் உள்ளாகியிருக்கிறார். இந்த தேர்தலில் ஆசியர்களின் வாக்குகளில் பெரும்பாலானவை இந்தியர்களின் வாக்குகளாக இருப்பதால் இந்திய வம்சாவளியினரான ஹாரிஸ் கணிசமான அமெரிக்க இந்தியர்களின் வாக்குகளைப் பெற்றுவிடுவார் என்ற நம்பிக்கையும் இவரைத் தேர்ந்தெடுக்கக் காரணமாக இருந்திருக்கலாம்.
அதிபர் வேட்பாளர் போட்டியில் பெர்னி சாண்டர்ஸ்-ன் “‘Medicare for All” திட்டத்திற்கு ஆதரவு அளித்து அதிரடியாக அதிலிருந்து பின்வாங்கி விட்டார். கலிஃபோர்னியா மாநில அட்டர்னி ஜெனரல் பதவிக்காலத்தில் காவல் துறையினரின் குற்றங்களை நிராகரித்தவர், ஜார்ஜ் ஃப்லாய்டின் மரணத்திற்குப்பிறகு அவர்களுக்கு எதிராகத் தீர்மானங்களைக் கொண்டுவந்ததும், மாவட்ட வழக்கறிஞராக மரண தண்டனைக்கு எதிர்ப்புத் தெரிவித்தவர், அட்டர்னி ஜெனரலாக அதனை முற்றிலும் தடைசெய்யும் முயற்சிக்கு ஆதரவளிக்காததும் தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்காகக் கொள்கைகளை மாற்றிக்கொள்ளும் நிலையற்ற ஹாரிஸின்மேல் பலரும் நம்பிக்கையற்று இருக்கிறார்கள். அவர்களுடைய வாக்குகளைப் பெறுவதுதான் ஜனநாயக கட்சிக்குப் பெரும் சவாலாக இருக்கும். கலிஃபோர்னியா சட்டசபை சபாநாயகர் வில்லி ப்ரவுனின் ஆதரவால் இவருடைய அரசியல் வாழ்க்கை ஆரம்பமாகியுள்ளது. மாவட்ட வழக்கறிஞராக, அட்டர்னி ஜெனரல் பதவியில் நடந்த சில பாதகமான நிகழ்வுகளும் இவருடைய தீவிர முஸ்லீம் ஆதரவு நிலைப்பாடும் இவருக்குப் பின்னடைவே.
சிறந்த பேச்சாளரான கமலா ஹாரிஸுக்கும் குடியரசுக் கட்சியின் துணை அதிபர் மைக் பென்ஸிற்கும் நடக்கவிருக்கும் விவாதங்கள் நிச்சயம் சுவாரசியமானதாகவும் எதிர்க்கட்சியின் அரசியலை விமர்சித்து மக்களிடையே ஆளும் கட்சியின் குறைகளை எடுத்துச்சொல்லும் நிகழ்வாகவும் இருக்கும் என்பதில் ஐயமில்லை. தற்போது அமெரிக்காவில் நடந்து கொண்டிருக்கும் இனவாதம், தொற்று நோய்ப் பரவலை ஆளும் கட்சியினர் கையாண்ட விதத்தில் மக்களிடையே ஏற்பட்டிருக்கும் அதிருப்தியைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொள்ள ஹாரிஸ் தகுதியானவராக இருப்பார் என்று ஜோ பைடனும் ஜனநாயக கட்சியினரும் நம்பிக்கை கொண்டுள்ளார்கள். பெர்னி சாண்டர்ஸின் தீவிர ஆதரவாளர்களின் வாக்குகளையும், இந்தியர்களின் ஆதரவையும் எப்படி பெறப்போகிறார் என்பதை இனிவரும் நாள்கள் தீர்மானிக்கும். 2016ல் ஹிலாரி க்ளிண்டனின் தேர்தல் தோல்விக்கு அதிக அளவில் ஆஃப்ரிக்கன் அமெரிக்க வாக்குகளை இழந்ததே காரணம். அந்த வாக்குகள் ஹாரிஸ் மூலம் பைடனுக்கு ஆதரவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அதிபர் தேர்தலில் அதிபர் வேட்பாளர்களின் தகுதிகள்தான் அவர்களுடைய வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும். இந்தத் தேர்தலில் ஹாரிஸைத் தேர்வு செய்ததன் மூலம் பைடன் பாதிக் கிணற்றைத் தாண்டிவிட்டதாக அரசியல் விமர்சகர்கள் விவாதிக்க துவங்கியிருக்கிறார்கள். ட்ரம்ப் எளிதாக வெற்றி பெற்றுவிடுவார் என நேற்றுவரை தீவிரமாக நம்பிக்கொண்டிருந்தவர்கள்கூட கமலா ஹாரிஸின் வருகைக்குப் பிறகு தங்களுடைய நம்பிக்கையை மறுபரிசீலனை செய்யத் துவங்கியிருக்கிறார்கள்.
உலக நாடுகளில் பெண்கள் அதிபர்களாக, பிரதமர்களாக பதவி வகித்தபோதும் அமெரிக்காவில் அதிபர், துணை அதிபர்களாக ஆண்களே கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். பெண்கள் தங்களை ஆள விரும்பாத ஆண் பேரினவாதிகளின் நாட்டில் முதல் முறையாகச் சிறுபான்மையினத்தைச் சார்ந்த பெண் ஒருவர் துணை அதிபர் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, புலம்பெயர்ந்த தலைமுறையினருக்கும் வெள்ளை மாளிகைக் கனவை நனவாக்கியுள்ளது. இதற்குமுன் 1984ல் ஜனநாயகக் கட்சியின் சார்பாக ஜெரால்டின் ஃபெர்ராரோ, 2008ல் குடியரசுக் கட்சியின் சார்பாக சாரா பாலின் போன்று வெள்ளையினத்தவரே துணை அதிபர் பெண் வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றனர். அமெரிக்க அரசியலில் மூன்றாவது பெண் துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ்.
2020 தேர்தலில் பைடன் – ஹாரிஸ் கூட்டணி வெற்றி பெற்றால் அமெரிக்காவின் முதல் கறுப்பினப் பெண் துணை அதிபர் என்ற வரலாற்றுப் பெருமையையும் பெற்றவராவார். மேலும் 2024, 2028ல் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராகும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. கட்சிக்குள்ளும் வெளியிலும் இவருக்கு ஆதரவு தருபவர்களும் வெறுப்பவர்களும் இருக்கிறார்கள். இவருடைய தேர்வு ஜனநாயக கட்சியின் வெற்றியை நிர்ணயிக்குமா என்பதை வரும் நவம்பர் மாதத் தேர்தல் தீர்மானிக்கும்.
என்னதான் கடுமையாகப் போராடினாலும் உழைத்தாலும் தனக்கிருக்கும் அத்தனை தடைகளையும் தாண்டி வருவதும் அதில் வெற்றிபெறுவதும் எல்லோருக்கும் சாத்தியமில்லை. அதிலும் பெண்கள் நிலை இன்னும் மோசம். மாவட்ட வழக்கறிஞராக , மாநில அட்டர்னி ஜெனரலாக, செனட் உறுப்பினராகத் தன்னுடைய நிர்வாகத் திறமையினால் படிப்படியாக உயர்ந்து, இன்று துணை அதிபர் வேட்பாளராகப் பலத்த எதிர்பார்ப்புகளுடன் களமிறக்கப்பட்டுள்ள முதல் சிறுபான்மையின துணை அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸுக்கு வாழ்த்துகள்.
https://www.youtube.com/watch?v=BS5HCi-zsYE&vl=en
பிடனின் மோனிகர் “ஒரு காஃப் இயந்திரம்”. இயந்திரமும் மிகவும் பழமையானது. எந்த நேரத்திலும் விட்டுவிடலாம், மேலும் காஃபிங்கை விட்டுவிடலாம். பின்னர் அது கமலாவின் கிக் ஆகும். மேலேயுள்ள வீடியோ டெலாவேர் சமூக நீச்சல் குளம் ஒன்றில் அவர் அளித்த கருத்துக்களில் இருந்து ஒரு பாடல்.
[Original input to Google Translate: Biden’s moniker is “a gaff machine”. The machine is also very old. Can give up any time, and quit gaffing. Then it would be Kamala’s gig. The above video is a songify from his comments made at a gathering by a Delaware community swimming pool. ]
Unfortunately, this article is written in perspective of someone who did not grew up in USA. May be you should talk to someone who grew up here in the 60’s and 70’s. Talk to Thoguluva family members or anyone. Even your kids who grew up here might provide you a perspective. They are expected to be the perfect Sourashtrian at home, good american outside, and yet they are not fully accepted as by their peers. When they go back to India, they are judged by their accent and not being 100% Indian, and Americans in school never accept them as fully American. This was infinitely worse in the 60’s and 70’s. Even though I grew up in Chennai, my wife and her siblings grew up here. So it is first hand account. If you are from a mixed race marriage, the pressure is triple fold, and identifying as a Black is easier because of the immediate acceptance and available peers is easier.
I am just shocked and disappointed by the inability to see someone’s else’s perspective .
Ragu ji,
I understand perfectly what my kids are going through growing up in this land. They are trying to fit themselves here. I agree with the immigrants kids problems and confusions. The only thing with Kamala Harris is, she is focusing more on her Indian roots in this election and people in India too cheer her for that. Lots of Immigrants are seeing her as an Indian and she will favor India and so we should vote for her is wrong. All I am saying is, see her as an American politician which she herself is identifying.This is my perspective and you seem to miss that.
Every politician tries to identify themselves with as many groups as possible, that is what politics is about. Kamala is identifying with her Indian roots, and as a American. There is nothing wrong with that. Our kids do the exact same thing. They do identify as Indians with their Indian friends and as Americans with white/back friends. She is a product of two immigrants. There is nothing wrong in identifying with either group. You and me identify ourselves as Sourashtrian, Tamilian, Indian or American based on the situation
Almost every person that have run for President or Vice President of US, has been White. Obama was of mixed race, but identified himself as Black. So now Kamala comes along, but according to you she cannot identify herself as Indian? Why the partiality or judgement against her?