குமுதம் இதழில் லக்ஷ்மி எழுதிய தொடர்கதை “ஸ்ரீமதி மைதிலி””- கோபுலு வரைந்த அழகிய ஓவியங்களுடன்:
எழுத்தாளர் லஷ்மி குறித்து
- கடுகு தாளிப்பு: எழுத்தாளர் லக்ஷ்மி
- லக்ஷ்மி – சிலிகான் ஷெல்ஃப்
- மிதிலா விலாஸ்: படித்தவை ரசித்தவை – 7 | arusuvai
- Tamilonline – Thendral Tamil Magazine – எழுத்தாளர் – லக்ஷ்மி
- பசுபதிவுகள்: லக்ஷ்மி -1
லக்ஷ்மியின் நாவல்களில் பெரும்பாலும் கூட்டுக் குடும்ப வாழ்வில் ஏற்படும் குடும்ப உறவுகள் பற்றிய சித்திரிப்பே அதிகம் காணப்படுகிறது. லஷ்மியின் குடும்ப அனுபவமும் தொழிலில் பல்வேறு நபர்களுடன் பழகிய அனுபவமும், அவருடைய நாவல்களில் குடும்ப உறவு நிலை மிகுதியாகச் சித்தரிக்கப்படக் காரணமாக அமையலாம்.
லக்ஷ்மியின் படைப்புக்களில் குடும்ப அமைப்பும் அதில் குடும்பப் பெண்களுக்குத் தரப்படும் முக்கியத்துவமும் மையப்பொருளாக அமைந்துள்ளன. இவரது கதை முடிவு நல்லதொரு குடும்பம் உருவாவதையே கூறுகிறது; நலமாக முடிகிறது. தவறு செய்தவர் மனம் திருந்தி மீண்டும் நல்வாழ்வை மேற்கொள்வதாக அமைகிறது. லஷ்மியின் “ஸ்ரீமதி மதிலி” என்னும் நாவலில் “வீட்டின் மூத்த மருமகளாக வந்து முழுப் பொறுப்பேற்று, குடும்பத்தைச் சீராக நடத்தும் மைதிலி, பொறாமைக்காரர்களில் சூழ்ச்சியில் வீட்டைவிட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டு வறுமையில் வாடிய பிறகு, கணவனின் துணையால் மறுபடியும் வாழ்க்கையில் முன்னேறுவதோடு, தன்னைத் துன்பத்திற்கு உள்ளாக்கிய நாத்தி, ஓரகத்தி முதலியோரின் வாழ்வையும் செழிக்கச் செய்கிறாள். மைதிலியின் மன உறுதியும் இரக்கம் நிறைந்த உள்ளமும் அவளுக்குத் துணை நிற்கின்றன”
பணக்கார வீட்டுப் பெண்ணான பத்மினி படித்தவள். கணவன் வீட்டினர் மதிப்புடன் நடத்துகிறார்கள். ஆயினும் கணவனைத் தன் விருப்பம் போல் ஆட்டி வைக்கின்றாள். கணவரின் குடும்பத்தில் நிலவும் வறுமையும், கணவனின் உடல்நலக் குறைவும் அதன் காரணமாக ஏற்பட்ட குடும்பப் பொறுப்பும் பத்மினி புகுந்த வீட்டாரை வெறுக்கச் செய்கிறது. இந்நிலையிலேயே கணவனை விட்டுவிட்டுப் பத்மினி பிறந்த வீட்டிற்கு வந்துவிடுகின்றாள். மனைவியின் உண்மைப் பண்புகளை உணர்ந்து கொண்ட கணவன் அவளை வெறுக்கின்றான்.
இவருடைய எழுத்துக்கள் இன்றைய வேறு பல எழுத்துக்களை நோக்க தீமை குறைந்தவை. எந்தக் கட்டத்திலும் கவர்ச்சி என்பது இவருடைய நோக்கமாக இருப்பதில்லை. இளம் உள்ளங்களைத் திரிக்கும்படியான, ஈர்க்கக் கூடியவைகளை இவர் சொல்லவில்லை. அந்தப் போக்கில் இவர் போக வில்லை. சில செய்திகளை இவர் விளக்குவதில்லை.
மற்ற ஆக்கங்கள்

ஸ்ரீமதி மைதிலியைப் பற்றி எழுதும் போதே, மிதிலா விலாஸ் ஞாபகம் வருகிறது. இரண்டுக்கும் அசாத்தியமான ஒற்றுமைகள் பல உண்டு. தர்மாம்பாள் ஸ்ரீமதி மங்களம்; ஈஸ்வரன் நீலகண்டன்; சாம்பு அய்யர் சாமண்ணா என்று பல, அதே மாதிரியான கூட்டுக் குடும்பக் கதை; ஆனால் முக்கியமான வேறுபாடு என்னவென்றால், மிதிலா விலாசில் கிரிஜாவின் பழைய காதல் சஸ்பென்ஸாகக் கடைசியில் தெரியவரும்.
சினிமாவிலும், கிரிக்கெட்டிலும் இரண்டாவது இன்னிங்ஸ் என்று சொல்லுவார்கள். அதுமாதிரி தென் ஆப்பிரிக்காவிலிருந்து திரும்பி வந்து (1976) மீண்டும் பல பத்திரிகைகளில் எழுதினார். பூக்குழி (கல்கி), அத்தை (குமுதம்),வானம்பாடிக்கு ஒரு விலங்கு (விகடன்), ஒரு காவிரியைப் போல (குங்குமம்), புதை மணல் (சாவி), மங்களாவின் கணவன் (கதிர்) மேலும் நிறைய மாத நாவல்கள்.
“அடுத்த வீடு நாவலைப் பற்றி ஒன்று சொல்லணுமே? கவுண்டர் சமுதாயத்தை சேர்ந்த பெண் வேற்று சாதி பையனைக் காதலிப்பாள். அதற்காக கோவையைச் சேர்ந்த சமூக சேவகி கண்டனம் தெரிவித்து, வாசனுக்கு எழுதினார். ஆனால், வாசன் கவலைப் படவேண்டாமென்றும் என்று தைரியம் கொடுத்தாரென்றும், நன்றியுடன் சொன்னார்”
தினமணி

லக்ஷ்மியின் “ஒரு காவிரியைப் போல’ என்னும் நாவலை “சாகித்ய அகாதெமி’ விருதுக்குப் பரிந்துரைத்துப் பரிசு கிடைக்குமாறு செய்தவர் நா.பார்த்தசாரதி. லக்ஷ்மியின் எல்லா நாவல்களிலும் தென்படும் ஓம் அம்சத்தைக் குறிப்பிட வேண்டும். பழைய சம்பவங்களை கொணரும் போது ஒரே அத்தியாயத்தில் மொத்தமும் எழுதாமல், விட்டு விட்டு வேறு வேறு அத்தியாயங்களில் பொருத்தமான நிகழ்வுகளுடன் இணைத்து கூறுவது. சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நாவலில், காவேரிக்குக் கராத்தே தெரியும் என்பதை 25-ஆவது அத்தியாயத்தில் விவரிக்கிறார்.

சில தகவல்கள்
திருச்சி மாவட்டம் “தொட்டியம்’ என்ற சிற்றூரில், “லக்ஷ்மி’ என்னும் புனைபெயர் கொண்ட திரிபுரசுந்தரி, 1921-ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் தேதி சீனிவாசன்-பட்டம்மாள் தம்பதிக்குப் பிறந்தார்.
தொட்டியத்தில் தொடக்கக் கல்வி, முசிறியில் மேல்நிலைக் கல்வி முடித்து, திருச்சி கல்லூரியில் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். சிறுவயதிலிருந்தே மருத்துவராக வேண்டும் என்ற கனவு திரிபுரசுந்தரிக்கு இருந்தது. டாக்டர் படிப்புக்காகச் சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். அப்போதுதான் எழுத்தாளரானார்.
- லக்ஷ்மியின் முதல் சிறுகதை “தகுந்த தண்டனையா?”
- முதல் நாவல் “பவானி”

லக்ஷ்மியின் இரண்டு நாவல்கள் திரைப்படமாக வெளி வந்துள்ளன. காஞ்சனா (காஞ்சனையின் கனவு), இருவர் உள்ளம் (பெண் மனம்) 1963. இருவர் உள்ளத்திற்கு திரைக்கதை வசனம் கலைஞர் மு. கருணாநிதி. அவருடைய பெண் மனமும், மிதிலா விலாசமும் தமிழ் வளர்ச்சிக் கழகம் பரிசு பெற்றது. 2009-இல் தமிழக அரசு லக்ஷ்மியின் படைப்புக்களை, நாட்டுடைமையாக்க முன் வந்தபோது, அவர் வாரிசுகள் மறுத்து விட்டார்கள். துணிவுக்கும், தன்னம்பிக்கைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கிய லக்ஷ்மி, 1947-57 காலகட்டங்களில், தொடர்கதைகளுக்கு ஒரு முக்கிய அந்தஸ்து கொடுத்தவர்களில் முக்கியமானவர்.
எழுத்தாளர் லக்ஷ்மியின் முதல் சிறுகதையான ‘தகுந்த தண்டனையா?’, 10-3-1940 தேதியிட்ட விகடன் இதழில் வெளியாகியது. பவானியில் தொடங்கி ஏறத்தாழ 150 புதினங்களும், எட்டுச் சிறுகதைத் தொகுதிகளும் எழுதியுள்ளார். “கதாசிரியையின் கதை’ என்னும் தலைப்பில் தன் வரலாறு உள்பட ஐந்து கட்டுரைத் தொடர்களும், “தாய்மை’ உள்பட ஆறு மருத்துவ நூல்களும் எழுதியுள்ளார்.
1987-ஆம் ஆண்டு ஜனவரி 7-ஆம் தேதி லக்ஷ்மி, தமிழர்களையும் நண்பர்களையும் எழுத்தையும் விட்டுப் பிரிந்தார்.
இவரைப் பற்றிய ஆய்வு நூல் எழுதிய பேராசிரியை கலா தாக்கர் “எழுத்தும் ஒரு வகை மருத்துவமே’ என்று பொருத்தமாகத் தலைப்பிட்டுப் பயனுள்ள நூலொன்றை 1998-ஆம் ஆண்டு படைத்துள்ளார்.
லக்ஷ்மி நூற்றாண்டு 21 மார்ச் 1920-2020
நன்றி:
- லக்ஷ்மியின் கதாசிரியையின் கதை – பூங்கொடிப் பதிப்பகம் 1985
- தமிழ் இலக்கிய வரலாறு – மது.ச.விமலானந்தம்
- அகிலன் எழுதிய “கதைக்கலை, பாரி புத்தக்ப் பண்ணை
- சித்ரலேகா இர. எழுதிய “லட்சுமி சூடாமணி நாவல்கள்”, சிநேகா வெளியீடு, குற்றாலம்
- கலாதாக்கர் எழுதிய “எழுத்தும் ஒருவகை இலக்கியமே”, வானதிப் பதிப்பகம்
- சசிரேகா சிவ. எழுதிய “தமிழ் இதழ்கள் காட்டும் மகளிர் நிலை”, பார்த்திபன் பதிப்பகம், மதுரை
- சண்முகசுந்தரம் எழுதிய “தமிழில் வட்டார நாவல்கள்”, காவ்யா, பெங்களூர்
- சிட்டி சிவபாதசுந்தரம் எழுதிய “தமிழ் நாவல் நூறாண்டு வரலாறும் வளர்ச்சியும்”, கிறிஸ்தவ இலக்கியச் சங்கம்
- சிதம்பர சுப்புரமணியன் எழுதிய “தமிழ் நாவல்களில் பெண் கதை மாந்தர்கள்”, பாரி நிலையம்
- சீதாலெட்சுமி வே. எழுதிய “தமிழ் நாவல்கள் (அகர வரிசை)”, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
- “பெண்கள் படைப்பில் பெண்கள்”, அன்னை தெரசா பல்கலைக் கழகம்

நூல் விவரங்கள்:
- பதிப்பாளர்: பூங்கொடி பதிப்பகம் (Poonkodi Pathippagam)
- பக்கங்கள்: 432
- விலை: ரூ. 190.00
- ஆண்டு: ஆகஸ்ட் 1983
- தொடர்புக்கு: பூங்கொடி பதிப்பகம் , 14, சித்திரைக்குளம் மேற்கு வீதி, மைலாப்பூர், சென்னை-600004.
- தொ.பேசி எண்: 4943074
Nice write-up about Lakshmi’s novels.
‘Mithila vilas’ is not the ‘only’ suspense novel by her. Her novel ‘Pannaiyaar Magal’ is the nicest one among all her novels. Full of unexpected turns, it weaves a nice family story. Great to read. I strongly recommend it to fans of Lakshmi’s novels/ writing.
“it weaves a nice family story”..:-) லக்ஷ்மி கதை எழுதின காலத்திலே ‘nice’ என்று கட்டுப்படுத்தப்பட்டார். அது அவருடைய வாழ்க்கையின் அனுபவிப்பாகவும் இருக்கலாம். ‘nice’ க்கு எதிர்மொழி ‘கரடுமுரடு’இல்லையா? உப்புமாவுக்கு அரிசி அரைச்சது போல! இந்தக்காலத்துல ‘nice family’ கதை எழுதினால், படிக்கும் மக்கள் அதை ‘clueless writer’ன்னு சொல்லிடுவார்கள். லக்ஷ்மியோட மைதிலி கதையை ஏன் இந்தக்கால மனுஷா யாரும் ‘quaint!’ ன்னு சொல்லலை? [மேல இருக்கும் Shreya-ங்கற பேரை click செய்து பாருங்கோ… லக்ஷ்மி மாதிரி எழுதறது ரொம்ப கஷ்டம் 🙁 ]
ஷ்ரேயா அவர்களுக்கு,
உங்கள் குறிப்பில் ஃபாண்ட் பிரச்சனையால் மேற்கோள் குறிகள் இங்கிலிஷ் சொற்களாக இருந்தன. அவற்றைத் திருத்தி வெளியிட்டிருக்கிறோம். உங்கள் பெயரில் சுண்டினால் உங்களுடைய ப்ளாக் பக்கத்திற்குப் போகிறது. நல்ல உத்தி.
பதிப்புக் குழு
“ஸ்ரீமதி மைதிலி” ஆனந்தவிகடனில் தொடராய் வந்தது. ( குமுதத்தில் அல்ல) . 1954-இல் என்று நினைவு.