கைச்சிட்டா – 5

This entry is part 5 of 8 in the series கைச்சிட்டா

அ) Sameer Pandya’s Members Only

அமெரிக்காவில் குடிபுகுந்த பெரும்பாலான இந்தியர்களுக்கு வரும் குழப்பம் ராஜ் பட் கதாபாத்திரத்திற்கும் ஏற்படுகிறது. அவர் எந்த இடத்தைச் சேர்ந்தவர் என்பது குறித்து அவருக்கு உறுதியாகத் தெரியவில்லை. குழந்தையாக இருந்தபோது பம்பாயில் இருந்து அமெரிக்காவிற்கு வருகிறார். அவருக்கு பால்ய கால சிநேகிதர்கள் பம்பாயில் இருக்கிறார்கள். இப்போதைய நடுத்தர வயதில், கலிஃபோர்னியா மாநிலத்தில் சந்தோஷமாகக் காலங்கழிக்கிறார்; சௌகரியமான பல்கலைக்கழக வேலை. அவரைவிட, ராஜ் பட்டின் மனைவிக்கு அமெரிக்கா பாந்தமாகப் பொருந்துகிறது – குறிப்பாக டென்னிஸ் க்ளப் சமாச்சாரங்களில். டென்னிஸ் கிளப்பில் உறுப்பினராகக் கறுப்பர் தம்பதியர் விண்ணப்பிக்கிறார்கள். அவர்களுடனானத் துவக்க உரையாடலில் ஆப்பிரிக்க – அமெரிக்கர்களைச் சகஜமாக உணரவைக்க விரும்புகிறார் ராஜ். தெரியாத்தனமாக இனவெறி ஜோக் ஒன்றை உதிர்க்கிறார்.

இப்போது அவரின் டென்னிஸ் கிளப் அங்கத்தினர் அட்டையை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகள் துவங்குகிறது. இதுவரை ராஜ் பட்டின் மொழி, அவரின் உச்சரிப்பு, குடியுரிமை, நியு யார்க் டைம்ஸின் பார்வை கொண்டு இந்திய அரசியலை விமர்சிப்பது என்று சகலத்தையும் சகித்தவர்; இனவாதம் என்று தெரிந்தாலும் இன்முகத்தோடு அதைக் கண்டும் காணாமல் புறந்தள்ளியவர்மீது எழும் பழியை எப்படி எதிர்கொள்கிறார் என்பதைக் கொஞ்சம் நகைச்சுவையும், நிறைய உண்மையும், நேர்மையான அனுபவங்களையும் கொண்டு நாவல் ஆக்கியிருக்கிறார் சமீர் பாண்டியா. முன்னெப்போதோ கிறித்துவ மதவாதத்தை விமர்சித்த வகுப்பின் பதிவு வைரைல் ஆகிறது. பழமைவாத இயக்கங்கள் இவர்மீது சமயம் பார்த்துப் போர்க்கொடி தூக்குகின்றன.

தன்னுடைய 48வது வயதில் தன் முதன் முதல் நாவலைச் சமீர் எழுதியிருப்பது உங்களுக்கும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தரலாம். இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையே உள்ள வித்தியாசங்களையும் ஒற்றுமைகளையும் சம்பவங்கள் வழியாகச் சொல்வதற்கு எளிமையான நேரடித் தன்மையைப் பின்பற்றுகிறார்.

I was living out my American life, voting for presidents, learning and navigating color lines, understanding the insistent markers of class, reading Cheever on suburbia, Ellison and Morrison on race, and Roth on post war Jewish life. I finished graduate school, took an academic job, and eventually left it, finally ready to make a go at writing fiction. And I did: I wrote and published a book of stories on Indian American immigrants in California. …

… It became a novel about race—of living within and between black and white, of thinking about how we talk and don’t talk about race now. It became a novel about middle age and tennis and campus life. It became a novel about my American life, in the shadow of the 2016 presidential election, infused with an India that can’t seem to remain in the past. India is very much a part of this novel, but not in the way I envisioned it all those years ago when I wanted to write the next Midnight’s Children.Writing My Own “Indian-American Novel” Meant Looking to California | Literary Hub

  • Print Length: 363 pages
  • Page Numbers
  • ISBN: 0358098548
  • Publisher: Houghton Mifflin Harcourt (July 7, 2020)
  • Publication Date: July 7, 2020
  • Language: English
  • ASIN: B07T4KN2DC

ஆ) குறைந்த ஒளியில் – பிரபு காளிதாஸ்

புகைப்படக் கலைஞரின் நாவல் என்று அதிஷா அறிமுகம் செய்து பேசுகிறார்: “பிரபு காளிதாசின் வாழ்வில் நடந்த வெவ்வேறு சம்பவங்களைத் தொகுத்து இருக்கிறார். இதற்குள் குறைந்தது நூறு கதாபாத்திரங்கள் ஆவது உலாவுகின்றன. அவர்களின் மன வெளிப்பாடுகளும் நூறு தருணங்களும் அதற்கு ஃபேஸ்புக் பதிவரின் எண்ண பதில்களும் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இந்த நாவலில் வரக்கூடிய சம்பவங்களைப் பார்த்தீர்கள் என்றால், அனைத்துமே முகத்தில் அறைவதுபோல் இருக்கிறது. ஒட்டுமொத்தமாகப் படிக்கும்போது ஏன் ஒரு மனிதன் இத்தனை எதிர்மறையாக இருக்க வேண்டும் என்னும் எண்ணம் எழுந்தது. உலகத்தில் இருக்கும் எல்லா விஷயத்தையும் திட்ட வேண்டும் என்று இல்லை. ஆனால், திட்டினால்தான் முகப்புத்தகத்தில் லைக்குகளும் ஷேர்களும் அள்ளுகின்றன. உயர்ந்த ரசனை கொண்ட உலகத் திரைப்படங்கள் பார்க்கின்றவர்; நிறைய நூல்கள் வாசிக்கின்றவர் இவ்வாறு நெகடிவ் விஷயங்களை மட்டும் பேஸ்புக்கில் போடுவதில்லை. நல்ல விஷயங்களையும் சொல்கிறோம். குறிப்பாக ஒளிப்பட்ட நிபுணரின் பார்வை தனித்துவமாக இருக்கும். அதாவது புகைப்படக் கலைஞர் என்பவர் எல்லாவற்றையும் மாற்றுக் கோணத்தில் பார்க்கிறவர். எஃப்.பி.யில் இல்லாதவர்கள் மனிதப் புனிதனாக மாறிவிடுகிறார்கள். இந்த நூலில் சமூகத்தின்மேல், எழுத்தாளர்களின்மேல், சினிமாக் கலைஞர்களின்மேல் நிறைய விமர்சனங்கள் இருக்கின்றன. அதன்மேல் சென்று அந்தத் தருணத்தின் இருண்மைகளை அடுத்தடுத்த ஆக்கங்களில் கொணர்வார்.”

எஸ் ராமகிருஷ்ணன்: “பிரபு தேர்ந்த ஒளிப்பதிவாளர். சிறந்த இலக்கிய வாசகர். உலக சினிமாவைத் தேடித்தேடிப் பார்ப்பவர். முகநூலில் அவர் எழுதிய பதிவுகளைத் தொகுத்து  தனிநூலாக வெளியிடுகிறார். உயிர்மை பதிப்பகம் வெளியிட உள்ள குறைந்த ஒளியில் என்ற அவரது புத்தகம் உலகச் சினிமா, தமிழ்ச் சினிமா, இலக்கியம், தினசரி நிகழ்வுகள் எனப் பல தளங்களில் பிரபுவின் தனித்துவமிக்க பார்வைகளை முன்வைக்கின்றன. எள்ளலும் கூர்மையான விமர்சனமும் கொண்டாட்டமும் கொண்ட இந்தப் பதிவுகள் துடிதுடிப்பான அவரது தேடலின் சான்றுகள்.”

சசிதரன்:

பிரபு காளிதாஸிற்குக் கமல்மேல் ஏன் அவ்வளவு கோபம் என்று தெரியவில்லை . கமலை விமர்சிப்பதற்கு அவருக்கு முழு உரிமையுண்டு. அதுதான் இந்தப் புத்தகத்தின் வெற்றி . தனக்குச் சரியென்றுபட்டத்தை எந்த சமரசமும் இல்லாமல் எழுதியிருக்கிறார். அனுபவங்களைச் சுவாரசியமாகக் கூறுவது கடினம். ஆனால் பிரபு காளிதாஸ் அதைச் சிறப்பாகச் செய்துள்ளார் என்றுதான் எனக்குப்படுகிறது.

“நீங்க என்ன கேமரா வெச்சிருக்கீங்க?” என்னும் பத்தியில் நம்மில் பலர் செய்யும் முட்டாள்தனமான விசயத்தை எடுத்துக்கட்டிருக்கிறார். “என்ன நடக்கிறது குழந்தைகளுக்கு ..?” என்னும் பத்தியில், குழந்தைகளை மொபைல் போன் எப்படிக்  கெடுக்கிறது என்பக்ச் சொல்லியுள்ளார். நாம் தெரிந்ததுதான், ஆனால் நாம் மாறமாட்டோம். “பாட்டு மட்டும் எங்கேர்ந்து வருது?” என்னும் பத்தி ஒரு சிறுகதைபோல உள்ளது. “வெளித்தோற்றம்” என்னும் கட்டுரை சமகால நடுத்தர வர்க்கத்தின் வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறது.

ஒரு கட்டுரைக்கும்  அடுத்ததுக்கும் சுத்தமாக தொடர்ச்சியே இல்லை. ஆனாலும் சுவாரசியம் குறையவில்லை. http://sasitharan.blogspot.com/2018/07/blog-post_23.html

ஸ்ரீராம்:

பண பாக்கி வைக்கும் வாடிக்கையாளர்கள், கல்யாணத் தரகு இணையதளங்கள் என எண்ணற்ற மனிதர்கள். தான் அடிவாங்கியதைச் சுவாரசியமாக, பகடி கலந்து சொல்லியிருக்கிறார்.

சில கட்டுரைகள் சிறுகதைகளாக வந்திருக்க வேண்டியவை. ‘ராணி பேரடைஸ்’, ‘சொம்மா’, ‘சிலோன் பரோட்டாவும் முட்டைக் கறியும்’, ‘பாட்டு மட்டும் எங்கேர்ந்து வருது’, ‘பேச வேண்டும்’, ‘ங்கொப்பன் வூட்டு வண்டியாடா?’, ‘இருபது பர்சண்ட் குடுகன்னும்மா..’ ஆகிய கட்டுரைகளில் சிறுகதைக்கான கணங்கள் இருந்தன. இவற்றை, கொஞ்சம் விரிவாக்கி, செறிவாக்கி எழுதினால், நல்ல சிறுகதைகளாக உருமாறும்.

‘என்ன நடக்கிறது குழந்தைகளுக்கு’, ‘சாகும் வரை விடமாடார்கள்’ ஆகியவை நல்ல கட்டுரைகள்.

சில கட்டுரைகள் படிக்கப் படிக்கச் சிரிப்பு. உதாரணம்: ‘ங்கொப்பன் வூட்டு வண்டியாடா?’, ‘பீஸ்’, ‘போலீஸ் நாய்’, ‘நம்பிக்கை இல்லையா?’ ‘உயிரில் கலந்த எழுத்து’ கட்டுரையின் மொழி நன்றாக இருந்தது. ‘முடியுமா?’ என்று பத்து வரிகளில் அருமையான சிறுகதை ஒன்று உள்ளது. http://sriramintamil.blogspot.com/2016/04/blog-post_21.html

  • விலை: ₹120
  • முதல் பதிப்பு
  • வருடம்: 2016
  • ஐ.எஸ்.பி.என்: 9789385104466
  • பக்கங்கள்: 136
  • வடிவம்: தாள் அட்டையிட்ட நுல்
  • மொழி: Tamil
  • பதிப்பகம்: உயிர்மை வெளியீடு

இ) Becoming Wild: How Animal Cultures Raise Families, Create Beauty, and Achieve Peace – Carl Safina

விலங்குகள் சிந்திக்கவும், உணரவும், தங்களைப் பார்த்தே தாமே கற்றுக்கொள்வதையும் இப்போதுதான் நாம் புரிந்துகொள்ளத் துவங்கியிருக்கிறோம். இந்தப் பிரபஞ்சத்தில் இதுவரை ஆராய்ந்ததில் நம் பூமியில் மட்டுமே உயிர்கள் உலாவுகின்றன. அதைக் குறித்துக் கார்ல் சஃபினா எழுதிய ஏழாவது புத்தகம் இது. கலாசாரம் என்பது பாரம்பரியமான தகவலையும் காலம் காலமாகச் சொல்லப்படும் குணாதிசயங்களையும் தன் சமூகத்திற்கும் சந்ததியினருக்கும் பரப்புவது – கற்றதைத் தக்கவைத்தல் மற்றும் பகிர்தல்: இதை அடுத்தடுத்த தலைமுறைக்குச் சொல்லிக்கொடுத்து தங்களின் சுபாவத்தைப் புரியவைத்தலைக் கலாசாரம் என்போம்.

இவற்றில் சில, மரபணுக் குறியாக்கங்கள் மூலம் கடத்தப்படுகின்றன; சில விஷயங்கள் உள்ளுணர்வால் மிருகங்களுக்குள் இருக்கின்றன. அதைத்தவிர மற்ற சுட்டுதல்களையும் கற்பித்தல் முறைகளையும் சஃபினா, அமேசான் காடுகளில் பறந்து திரியும் பெரு நாட்டின் மெக்காவ் கிளி கொண்டும், கரீபியன் கடலின் திமிங்கிலங்களின் வாழ்வு கொண்டும் உகாண்டாவின் கிம்பேன்சி கொண்டும் விளக்குகிறார்.

ஒரு திமிங்கலம் வாழ்க்கையில் எவ்வாறு அர்த்தத்தைக் காண்கிறது? குடும்பம் மற்றும் குழு அடையாளம் கொண்டே அது தன் வாழ்வின் பொருளைக் கண்டடைகிறது. இதற்கான கதையையும் ஆராய்ச்சியையும் விரிவாக விளக்குகிறார் சபினா. தாய்மார்கள் ஆழ்கடலுக்குள் சென்று இரை தேடும்போது, அத்தைகளும் பாட்டிகளும் குழந்தைக் காப்பகம் நடத்துகிறார்கள்.

அடுத்ததாக மெக்காவ் கிளிகள். பறவைகளே அழகைப் பாராட்டுகின்றனவா? நிறமும் அவர்களின் சொந்தக் குரலில் பாடும் மகிழ்ச்சியான கானங்களும் துணையை நோக்கி அழைக்கின்றன. பிரகாசமான வண்ணத் தோழர்களைத்தான் பெண் பறவைகள் தேர்வு செய்கின்றன. பெண் கிளிகள்தான் அழகை உருவாக்குகின்றனவா? உலகம் அழகாகத் தோன்றுகிறது, இதனால் உயிருள்ளவர்கள் அதில் உயிருடன் இருப்பதை விரும்புகிறார்கள்.

  • Print Length: 375 pages
  • ISBN: 1250173337
  • Publisher: Henry Holt and Co. (April 14, 2020)
  • Publication Date: April 14, 2020
  • Sold by: Macmillan
  • Language: English
  • ASIN: B07R8P96KW
Series Navigation<< கைச்சிட்டா – 4நூல் அறிமுகங்கள் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.