- கொரொனா காலத்தில் ஹைக்கூ
- “அலர்தலும் உதிர்தலும்” – ஹைக்கூ கவிதைகள்
- “தோன்றி மறையும் மழை” – ஹைக்கூ கவிதைகள்
- கடிகாரச் சுவர் – அந்தரத்தில் கணங்கள்
- “முடிவிலா பயணம்” – ஹைக்கூ கவிதைகள்

1.
இமைகளுக்குள்
மறைகிறது கணம் –
மீண்டும் சிமிட்டல்.
2.
தழையும் மரம்
பகல் மறையும் நிலம்
அசைவின் கணம்.
3.
இந்த கணத்தில்
நின்று, பறக்கிறது
பறவைக் கீச்சு.
4.
முழு நிலவு
விளக்கணைந்த வீடு
மிதக்கும் கணம்.
5.
எப்படி இக்கணம்
கீச்சொலிகள் நிறைத்தன
இந்த மௌனத்தை!
6.
முடியா வெயில்
பொழுதின் ஜன்னல் வழி
கார்மேக நிழல்.
7.
தூக்கிய பாதம்
ஒருமையில் அணில் – நானும்
காத்திருக்கிறேன்.
8.
பதற மறந்த
அமைவுடன் நிற்கிறது
நனைந்த குருவி.
9.
கடிகாரச் சுவர்
படர்ந்த நிழல் முற்றம்
வரும் பறவை.
***
இன்னும் ஹைக்கூக்கள்:
7வது ஹைக்கூ அருமை. அணில் கண் முன் நிற்கிறது எதையோ எதிர்பார்த்தபடி. எப்போது அது தன் மனம் திருப்தியுற்று கீழே இறங்கி மரமேறி ஓடிச் செல்லும் எனக் காத்திருத்தல் ஒரு தியானத்திற்கு ஈடானது.