இங்கிலிஷிலிருந்து தமிழாக்கம்: அம்பை

ஒரு மென்மையான விவாகரத்து
சில விவாகரத்துகள்
வெறுமே பிரிதல்
வழக்குகள் தரவுகள்
பந்த முறிவுகள்
பாத்திர வகிப்புகள், உடைகள், விதிகள்
பணமாக, பொருண்மையாக, உணர்ச்சியாக
உள்ள சொத்தைப் பிரித்தல்
அன்றாடச் சில்லறைச் சாமான்களைச் சுற்றி
வட்டமாகக் கோடிட்டுக் குறித்தல்
தனக்கு, வீட்டுக்கு, வலைத் தளத்துக்கு
பெயரிடுதல் மறுபெயரிடுதல்
அதிகமான பங்கீட்டு விகிதத்தைப்
படுக்கையில், சாப்பாட்டு மேசையில், சந்தையில் கோரல்
பல வடிவங்களாக, திசைகளாக
அன்பைக் கூறிடுதல்
இவை மட்டுமே அல்ல
சில விவாகரத்துகள்
வெறும் தோலாய் மேலோட்டமாகத்
தெரிவதை விட ஆழமானவை
குறிப்பிட்டுச் சொல்லமுடியாதவை
மறுவிளக்கத்துக்குட்படுபவை
தரவுகளில்லாமல்
விடுபட்ட எண்ணங்கள், மனத்துடன்
ஆனால் போதையில் வரும் மயக்கம்போல் இல்லாமல்
தான் என்பது பல தரிசனங்களாகி
உடைபடாமல் தரகுக் கூலியில்லாமல்
நாட்பட்டதாகவும் அன்றலர்ந்ததாகவும்
படைப்புணர்வு பீறிட
புதிதாகக் கண்ணில் படும் பழைய பலவீனங்களூடே
திருடிக்கொள்ளும் உவகைக் கணங்கள்
பிடித்து நிறுத்தும் சம்மன்களும் கட்டளைகளும்
பரவசமும் கலந்துபோவதுமாய்
துப்பாக்கி, துப்பாக்கிச் சூடு இதையெல்லாம் விட்டகன்று
எளிமை மற்றும் அலங்காரக் கவிதையாய்
சொலவடையாய் தன்னிலேயே களிப்படைவதாய்
நீண்டதாய் சுருக்கமானதாய்
வாழ்க்கை டயரியின் இன்னும் எழுதப்படாத
வெற்று ஓரங்களில் முடங்கியபடி
பளீரிடும் சூரிய ஒளியில்
அடங்காப் பசிகூடிய இரவின் குகைகளில்
மறைந்திருப்பதுபோல் உணர்ந்து
சில விவாகரத்துகள்
மிக மென்மையானவை
சிக்கலில்லாமல் முடிபவை
ஒருதலையானவை
பொய்மயிர்த் தொப்பிகளும் கழுத்துப்பட்டிகளும்
கறுப்பு அங்கிகளும் இல்லாதவை
குறைவான கட்டணமும் அதிகக் குழப்பமுமில்லாதவை
ரத்தமும் சதையுமாய்
முடிவில்லாப் பாடலைப் பாடியபடி
தன்னுள்ளே
இணைந்துபோய்
A gentle divorce
Some divorces
Are more than
Mere detachments
Lawsuits and documents
Or breaking of bonds
Of roles, clothes and codes,
Or dividing the assets,
Financial, physical, emotional,
Or drawing circuitous lines
Around petty, everyday things,
Or naming and renaming,
Oneself, the house, the .Org,
Or claiming the greater shares,
On the bed, the dining table, the market,
Or dissecting affections,
Into myriad shapes and directions.
Some divorces
Are deeper than
The surface, the skin,
Go beyond the specifics,
Into redefinitions
Without all the paperwork,
With freedom of thoughts and Will
Sans the spacing out bit,
Revelations of selfhood
Minus the breakage or the brokerage,
Spurting creativity stale or fresh
Through newly found old chinks,
Stolen moments of delights
Withholding the summons and the decrees,
Of trances and fusions
Outside the shots and the guns,
Of poetry, plain and ornate, coupling and revelling, long and short,
Nesting in the still blank margins of life’s diary,
Concealed in broad sunlight
As in caves of a ravenous night.
Some divorces
Are simply gentle,
Settled smoothly,
Ex parte,
Without the wigs and the collars and the big black coats,
With far less fees and lesser clutter,
With flesh and blood,
Singing the eternal song
Together,
Within the Self.

நச்சுயிரி
எப்படி இருக்கிறது என்று கேட்கிறாய்
எப்படி விளக்குவது?
அது மோசமாக இருக்கிறது என்று சொல்லவா அப்படியானால்
நான் சரியாகத்தான் இருக்கிறேன் என்று தொனிக்கும்.
இல்லை அது சரியாக இருக்கிறது,
என்னை இன்னும் தொற்றியிருக்கிறது என்று கூறவா?
சரி, இப்படிச் சொல்கிறேன்.
அது மேலும் கீழும் படி படியாகப் போகிறது
முறை வைத்துக்கொண்டு அது என்னைத் தொற்றி
பின் தானும் தொற்றுக்குள்ளாகிறது.
எனக்குப் பாடம் கற்பிக்கிறது
தானும் சிலதைப் பயில்கிறது.
இது விரைவில் பரவும் நச்சுயிரி
இப்போது இதுதான் மோஸ்தர்
சிலர் வெறுக்கிறார்கள் இதை; சிலர் இதற்காக ஏங்குகிறார்கள்
நுண்ணுயிர்க்கொல்லி மருந்துகளுடன் கலந்து
புது சூத்திரங்களைப் படைக்கிறது
அது ஓடியபடி இடையிடையே நிறுத்தங்களை உண்டாக்குகிறது.
அகவயமாக புறவயப் பார்வையைச் சிந்தவைக்கிறது
குறைந்த அளவு மின்தேக்கி மூலம் அதிக அளவு சக்தியை
அது உந்த முயலும்போது
அதன் குறிக்கோள்கள் தடுக்கிவிழத்தான் செய்கின்றன.
அதன் செயல்பாடு பண்படுத்தப்படாதது
அதன் வெப்பநிலை நிலைப்படாதது.
மாறிக்கொண்டே இருக்கும் ஒன்றின் மூலம்
செய்யவேண்டியதோ அளவற்றது
அது பொய் உரைக்கும்போது உண்மையாகிறது
எழும்பியபடி தாழ்கிறது,
வெறும் நச்சுயிரி என்றாலும்
சாம்பலும் நீலமுமாக அதன் பாதிப்பு
என்னைப் பொருத்தவரை அது நன்றாக அதிகரிக்கட்டும்
பின்னால் அடங்க.
The Viral
How is it you ask.
How should I explain.
Shall I say it is bad, which would mean that I am good.
Or shall I say it is good, and that it infests me still.
Let me say this.
It heaves and dips by degrees.
Infects me and gets infected, by turns.
Educates me and learns a thing or two.
It is a viral viral, an in thing,
some detest it, and many crave for it,
It mingles with the antibiotic to create formulations anew,
It flows and sets interim stations as it goes.
It makes me pour objectivity subjectively,
It’s ambitions stumble loftily,
When it pumps great power via low grade capacitor.
It’s methods are primitive and its temperatures fluctuating.
Massive tasks to be accomplished through one so variable,
It lies and is true, it rises and lies,
It’s effects grey and blue, though it’s only a viral,
I’d rather it stays nice and high, eventually to subside.

எழுத்தாளர் பற்றிய குறிப்பு:
கல்யாணி ராஜன் தில்லி பல்கலைக்கழகத்தில் உள்ள ஷாஹீத் பகத் சிங் மாலை நேரக் கல்லூரியில் துணைப் பேராசிரியராக, இங்கிலிஷைப் போதிக்கிறார். பத்தாண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட கல்வியாளரும், தன் வேலையில் மிக்க ஆர்வம் கொண்டவருமான இவருடைய தீவிர விருப்பங்களில், இந்தியாவில் உள்ள இங்கிலிஷ் எழுத்தும், மொழிபெயர்ப்பும், வாசிப்பும் அடங்கும். தவிர, பல வகை இலக்கியங்களைச் சீர்தூக்கும் பணியிலும், கவிதைகளை எழுதுவதிலும், பொதுவில் வாசிப்பதிலும் ஈடுபட்டவர். இவற்றை ஹிந்தியிலும், இங்கிலிஷிலும் செய்கிறார். கல்வி போதிப்பதிலும், கற்பதையும் பற்றிய பட்டறைகளை நடத்தி வருகிறார். இயற்கை அறிவியல், மேலும் உலக அரசியல் குறித்தும் ஆர்வம் கொண்டவர். லாபிஸ் லாஸூலை (Lapis Lazuli) – எனப்பட்ட ஒரு பன்னாட்டு இலக்கிய சஞ்சிகையைத் துணைப் பதிப்பாசிரியராக நடத்துகிறார். அது நிபுணர்களால் வழிநடத்தப்பட்டு, துறை வல்லுநர்களால் சீர்தூக்கப்பட்ட படைப்புகளை, அனைவரும் பெறும் விதமாக வெளியிடப்படும் மின் சஞ்சிகை. இவரைத் தொடர்புகொள்ள முகவரி: kkrajan15@gmail.com
