ரொபெர்த்தோ பொலான்யோவின் 2666 குறித்த அறிமுகங்களையும், விமர்சனங்களையும் வாசித்து இருப்பீர்கள். கீழே அதை மேடை நாடகமாகக் காணலாம். ஐரோப்பாவின் மேற்கல்வி, ஆய்வு முதலியவற்றில் ஈடுபடும் அறிவியல், பண்பாட்டு ஆராய்ச்சியாளர் சமூகம், ஓர் எழுத்தாளரைத் தேடியலைகிறார்கள். அந்தத் தேடல் மெக்ஸிகோ நாட்டின் எல்லையோர நகரத்திற்கு அவர்களைக் கொணர்கிறது. அங்கே நூற்றுக்கணக்கான பெண்களின் கொலைகள் விடுவிக்கப்படாமல் அந்தரத்தில் தொங்குகிறது. இருபதாம் நூற்றாண்டில் தொடங்கும் கதை, நூறாண்டு காலம் பயணிக்கிறது. ஸ்பெயின் நாட்டில் தொடங்கி, அங்கிருந்து மெக்ஸிகோவிற்குப் பயணப்பட்டு, அதன் பிறகு ஜெர்மனிக்கு வந்தடைகிறது. நூலை நல்ல முறையில் அரங்கேற்றி இருக்கிறார்கள்.
Part 1: The Part About the Academics
II: The Part About Amalfitano &
III: The Part About Fate
IV: The Part About the Crimes
V: The Part About Archimboldi