எந்தெந்த நடிகர்கள் முகத்தை வெள்ளையடிக்கும் களிம்புகளைப் பரிந்துரை செய்து கொண்டே, “எல்லா நிறமும் ஒன்றே” என்று முழக்கமும் இடுகிறார்கள் என்னும் பட்டியலை இங்கே காணலாம். “கருப்பு நிறம், வெள்ளை நிறம் எல்லாம் ஓர் உயிர்!” என சொல்பவர்களால் எப்படி முகப்பூச்சுப் பொருட்களை உபயோகிக்கவும் சொல்லமுடிகிறது என்னும் வினாவை எழுப்புகிறது இந்த டிவிட்டர் திரி.
ப்ரியங்கா சோப்ரா, சோனம் கபூர், தீபிகா படுகோனே போன்றவர்களின் இரட்டை நிலையைக் காண முடிகிறது. ஷாரூக் கான், ஷாஹித் கபூர், வித்யா பாலன், கத்ரீனா கைஃப் போன்றோர் கப்சிப்பென்று எந்தக் குரலும் எழுப்பாமல் இருப்பதையும் சுட்டுகிறார்கள். கருப்பர்களின் உயிர்களை மதி (ப்ளாக் லைவ்ஸ் மேட்டர்), அனைத்து நிறங்களும் அழகு (ஆல் கலர்ஸ் ஆர் பியூடிஃபுல்) எனக் கவர்ச்சிகரமான வசனங்களை சமூக ஊடகங்களில் சொல்லிக்கொண்டே, இன்னொரு புறம் கருப்பு முகத்தை வெண்மையாக்குங்கள் என்று வலியுறுத்துவது நியாயமா என்னும் விவாதத்தை வாசிக்கலாம்.
