“தோன்றி மறையும் மழை” – ஹைக்கூ கவிதைகள்

This entry is part 3 of 5 in the series ஹைக்கூ வரிசை

தோன்றி மறையும் மழை

– கோடையில் ‘சார்லட்’ –

1.

கால் மணி நேரமாய்
கடந்து செல்கிறது
டொர்னடோ புயல்.

2.

வானம் மாறாமல்
சரிந்து கொட்டும் மழை –
மறதிச் சத்தம்.

3.

அடர்ந்த மழை
ஊடே சிட்டுக் குருவி
மறைந்த மின்னல்.

4.

மழைச் சரிவின்
மறைவெளிக்கு அப்பால்
ஆம்புலன்ஸ் சத்தம்.

5.

நீண்ட கீச்சுகள்
மினுங்கி மறையும் கீச்
மழை நின்றது.

6.

பற்றியிருக்கும்
நீர் துளிகளில் மழை
கீழ் மேலாய் உலகம்.

7.

மாயப் பொன்னொளி
வடியும் கருமழை –
வெற்றிடம் புகல்.

8.

ஈரம் மறைந்த
மறு நாள், நீல வெயில்
தொடரும் கோடை.

புகைப்படங்கள் – நன்றி : https://www.flickr.com/photos/60999792@N06/

Series Navigation<< “அலர்தலும் உதிர்தலும்” – ஹைக்கூ கவிதைகள்கடிகாரச் சுவர் – அந்தரத்தில் கணங்கள் >>