தமிழாக்கம்: கோரா
1. கதை

இந்தக் கதையில் இருக்கும் கதை
அவள் தனித்திருந்த தினங்களின் கதை
யாரும் எப்போதும் வருகை தராததால் சிதைவுறாமலிருக்கும் தினங்கள்,
விதி விலக்கென்றால் அது அவள் வீட்டுச் சாளர விதானத்திற்கு,*
ஒவ்வொரு மார்ச்சிலும் இனம் பெருக்க மறுவருகை தரும்
ஜோடிப் பறவைகள் அலகுகளில் மரக் கழிவும் புல்லும் சுமந்து
மீண்டுமொரு கூடு அமைத்துக் கொள்வது மட்டுமே.
அவள் ஜன்னலில் அமர்ந்து வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்தாள். கடந்த காலம் கண்முன் விரிந்தது – ஜனங்கள்,
ஊர்கள் மற்றும் பேச்சுக்குரல்கள்.
உபாதையால் அடிக்கடி பின்பக்கம் சரிந்து நிமிர்ந்தாள் .
கோடை முடிகையில்
அப்பறவைகள் இணங்கியோ பிரிந்தோ
பறக்கும் வலிமை பெற்ற இளங்குஞ்சுகள் சூழ
பறந்து போயின .
அவள் ஜன்னலில் அமர்ந்து
வெளிப்புற சாலையைப் பார்க்கிறாள்
வாழ்க்கையின் முடிவற்ற சுழற்சியை .
எவரின் கவனமும் அவள் மேல் விழவில்லை .
எவருக்கும் அவள் இன்னும் உயிர் வாழ்கிறாள் என்ற நினைவு வரவில்லை.
அவள் இறுதி விடுவிப்பு நேர்ந்த
ஜூலை முதல் நாள் காலை நேரம் ,
பறவைகள் வழக்கம்போல்
சாளர விதானங்களில் இருந்தன.
மழை பெய்து கொண்டிருந்தது .
கார்கள் இடைவிடாது உள்ளே வந்து கொண்டிருந்தன. .
காரில் வந்த
வீட்டை விற்கும் உரிமையுடையோர்
விற்று முடித்தனர் .
அப்பறவைகள் இனி இங்கு வரமாட்டா .
அவை இன்னும் அவளைத் தேடுகின்றன
வேறு ஜன்னல்களில்
வேறு விதானங்களிலிருந்துகொண்டு. ***
*window-awnings என்பதை சாளர விதானங்கள் என்று மொழிபெயர்த்திருக்கிறேன் விதானங்கள் கித்தானிலும் அமைக்கப்படும். இவற்றை நாம் சன் ஷேட் என்கிறோம் .
Story
The story in the story
Is the story of her days
Unbroken by anyone’s visit,
Except the birds in window-awnings,
Returning each March to build again
With barks and grass in beaks
Their nests for mating.
She sat in the window
And watched. Her past unreeled before her-people,
Places and voices.
Often she winced.
As the summer waned
the birds,satisfied or separated
flew away with their younglings,
now strong enough to fly.
She sat in the window
and looked at the road outside,
as life’s endless milling.
No one noticed her.
No one remembered that she was yet alive.
On her final release
that first day of July morning,
the birds were as always
in window-awnings.
It was raiining.
The cars poured in.
The ones who arrived
were the ones
who sold her house eventually.
They look for her
in other windows
and other awnings.
***
2. ஒரு வீட்டுக்குத் தெரியும்

ஒரு வீட்டுக்குத் தெரியும்
எப்போது யாருக்கும் தேவைப்படாமல் போய்விடுகிறது என்று.
அது கொஞ்சம் கொஞ்சமாக இடிகிறது —
முதலில் அதன் வெளி முகப்பு—-
அதற்கும் முன்பே
ஒரு அரச* வித்து வேர் விட்டு விடுகிறது
கூரையின் ஒரு மூலையில்.
அது உற்சாகத்துடன் வேகமாக வளர்ந்து வருவதுடன்
அருகில் உள்ள வடிகுழாய்ச் சந்தில்
சாய்ந்து கொள்கிறது.
ஓசையின்றி. சிறிதும் ஓசையின்றி. வீடு பெரு மூச்சு விடுகிறது
இரும்புக் கதவு தன் கீல்களில் புலம்புகிறது,
என்ஜினீயராய் அல்லது மணமக்களாய் ஆகுமுன் இங்கு
குழந்தைகளாய் வலம் வந்தவர்களை நினைத்து. அயல் நாடு , தொலை தூர
நகரம் என அவர்கள் பறந்து விட்டதற்கு முன்பு.
மேலும் நினைத்து வருந்திப் புலம்புகிறது
காலத்தின் கருணை கிட்டுமெனக் கைவிடப்பட்ட அந்த முதிய தம்பதியரை —
பூஜைப் பாட்டினூடே கூனிக் குறுகிவிட்ட அம்மா,
கைத்தடி வீசியும் குரைத்தும்
தெரு நாய்களைத் துரத்தி அடிக்கும்
சண்டைக்கார அப்பா.
இறந்து போய் விட்டார்கள் இப்போது. முதலில் அவர். பிறகு, மனமொடிந்த
அம்மா. வெகு நாள் கடந்து பிள்ளைகள் பிறந்த வீடு திரும்பினர்
வாரிசு சொத்தான வீட்டை விற்க —
காத்திருந்தும் சரியான விலை வராததால் சென்று விட்டனர்,
தங்கள் தொலை நகலி மற்றும் போன்
நம்பர்களைத் தந்து விட்டு ***
*Pipal- அரச மரத்தைக் குறிக்கும். அதன் பழ விதைகள் பறவை எச்சத்தின் மூலம் பரவி, ஈரத்தன்மையுள்ள சுவர், பாறை இடுக்குகளில் முளைத்து செடியாகும்.
மூலக் கவிதை: A house knows
A house knows
When it’s not wanted.
Bit by bit it cracks—
The outer facade—-
But even before that
The pipal takes root
In the roof’s nook.
It grows happily even rapidly
And leans on
The vent’s opening.
Silent.So silent. The house heaves .
The iron gate moans on its hinges,
As it remembers the children
Before they were engineers
Or married. Before they flew
To foreign lands, to distant cities.
It moans as it mourns
The old couple abandoned to time’s mercy—
The mother bent with her pooja chantings,
The father with his cantankerous
Walking stick, barking at the
Alley dogs
Now gone. First he. Then, as her heart broke,
She. It was much later
The children returned
To sell the house they inherited—
Waiting for the right bid they leave,
Leaving their fax and phone
behind.
***
மூலக் கவிதை ஆசிரியர் வாழ்க்கைக் குறிப்பு : சுனிதா ஜெயின் (1940-2017)
படிப்பு : BA, MA, Ph .D (University of Nebraska-Lincoln)
கவிஞர், எழுத்தாளர், பேராசிரியர் (ஹிந்தி, இங்கிலிஷ் )
பத்மஸ்ரீ மற்றும் பல விருதுகள் பெற்றவர். மூலக் கவிதைகள் American Desi and other Poems என்னும் கவிதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப் பட்ட கவிதைகள்.
அருமை