ஜாக் ப்ரிலட்ஸ்கி தமிழாக்கம்: இரா. இரமணன்

நான்கு இலை மணப்புல்லொன்று கண்டேன்.
அதிர்ஷ்டமென அக மகிழ்வு கொண்டேன்.
சிந்திக்கச் சிறிது நேரம்
செலவிட்ட பின்
மனம் மாறி மறைத்தேன் அதை
காகித உறைக்குள் கச்சிதமாய்
பொதிந்து சட்டைப் பைக்குள்
ஒளித்து வைத்தேன்.
அந்தோ! அதி விரைவாய்
அதிர்ஷ்டம் அல்லலாய்
மாறியதே!
கதவிடுக்கில் கை நசுங்கியது.
முட்டைகள் கை தவறின
கால் வழுக்கி தரை வீழ்ந்தேன்.
காலிரண்டையும் நாயொன்று
கவ்வியிழுத்ததுவே!
விரல் மோதிரம்
குளியலறை தொட்டியில் நழுவியதே!
சட்டையில் பேனா
மைக் கோலமிட்டது.
கெண்டைக்கால் சிதைந்தது.
தொடர்வண்டி விட்டேன்.
இனிப்புப் பொட்டலத்தை
இருக்கையென நினைத்தமர்ந்தேன்.
புத்தம் புதுக் கண்ணாடி
போட்டுடைத்தேன்.
வீட்டு சாவி தொலைத்தேன்.
குப்பை லாரி கொட்டிய
கருப்பஞ் சாற்றில்
கால் வைத்தேன்.
சினம் கொண்ட குளவிகள்
கொட்டி தீர்த்தன.
பூனைக் குட்டிகள்
திரைச் சீலை கிழித்தன.
சுடும் ரொட்டி
தீப்பற்றி எரிந்தது.
இதெற்கெல்லாம்
அந்த அதிர்ஷ்டப்
புல்லே காரணமென்று
அறுதியிட்டுக் கூறுவேன்.
மைதானத்தின் மையத்தில்
ரகசியமாய் புதைத்தேன்.
இப்பொழுது எல்லாம்
நல்லதாய் மாறியதே.
என் ரணமெல்லாம்
குணமாகியது.
இன்னொரு அதிர்ஷ்டப் புல்
எப்பொழுதாவது கிடைத்தால்
அதை அப்படியே விட்டுவிடுவேன்.
அல்லது அதை என்
சகோதரனுக்கு கொடுத்து விடுவேன்.
என்னைவிட அவனே
அதற்குத் தகுதியானவன்.
ஜாக் பிரிலட்ஸ்கி (1940) குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதும் அமெரிக்கக் கவிஞர்.இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். இரண்டு வருடம் (2006-2008) குழந்தைகள் கவியரசாக(Children’s Poet Laureate) இருந்திருக்கிறார். எழுத்தாளராவதற்கு முன் கார் ஓட்டுனர்,சரக்குகள் இடம் மாற்றுபவர், பஸ் பணியாள்,குயவர, தச்சர்,வீடு வீடாக செல்லும் விற்பனையாளர் போன்ற பணிகளை செய்தாராம்.அவருடைய கவிதைகளில் “found a four leaf clover” என்பதன் மொழிபெயர்ப்பு.
Found a Four-Leaf Clover
Jack Prelutsky
I found a four-leaf clover
and was happy with my find,
but with time to think it over,
I’ve entirely changed my mind.
I concealed it in my pocket,
safe inside a paper pad,
soon, much swifter than a rocket,
my good fortune turned to bad.
I smashed my fingers in a door,
I dropped a dozen eggs,
I slipped and tumbled to the floor,
a dog nipped both my legs,
my ring slid down the bathtub drain,
my pen leaked on my shirt,
I barked my shin, I missed my train,
I sat on my dessert.
I broke my brand-new glasses,
and I couldn’t find my keys,
I stepped in spilled molasses,
and was stung by angry bees.
When the kitten ripped the curtain,
and the toast burst into flame,
I was absolutely certain
that the clover was to blame.
I buried it discreetly
in the middle of a field,
now my luck has changed completely,
and my wounds have almost healed.
If I ever find another,
I will simply let it be,
or I’ll give it to my brother—
he deserves it more than me.