தமிழாக்கம்: கோரா
அமெரிக்கன் தேசி*

நீ பதினேழு வயதினள்.
அத்துடன் இன்னும் முத்தமிடப்படாத வாயில் கசப்பாக உணர்கிறாய்,
உன் பள்ளித் தோழிகள் அனைவரும்
கன்னிமை இழந்தவர்கள்
என்று அறிந்து கொண்டதால்.
வீட்டில், நீ அழுகிறாய்.
“என் கைகளைப் பிடித்துக்கொள், அப்பா
நான் மிகவும் அச்சுறுத்தப் பட்டவளாகவும்
தன்னந்தனியளாகவும் உணர்கிறேன்,” என்கிறாய்.
ஆனால் நீ வாழ்நாள் முழுதும் அறிந்திருக்கும்
உன் அப்பா
உன்னைத் தடுத்தவாறு எங்கோ பார்க்கிறார்
உன் பெண்ணுடல்
அவர் கண்களைச் சுடுகிறது
நீ பதினேழு வயதினள் ஆனாலும்
உன் தாய் உன்னைக் கடிந்து கொள்கிறாள்
தன் இயல்பான திறமையுடன் –
“அது சரியல்ல, கேட்கவே வேண்டாம்.
அவர்களைப் போன்றவர் அல்லர் நாம்.
எப்போதும் காம இச்சை கொண்டிருக்கும் மிருகங்கள்;
நாம் வேறு வகை. நினைவுறுத்திக் கொள்வாயா?”
எதை நினைவில் வைப்பது, அம்மா ?
என் இதயம் விரைந்தோடும் குதிரை.
என் ரத்தம் துள்ளி ஓடுகிறது
கணைகள் பறக்கின்றன நாளெல்லாம்.
மேலும் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் தம் காருக்குள்
ஒருவரோடு ஒருவர் மோதிச் சல்லாபிக்கையில் அவர்களின்
பரிகாசத்துக்கு இலக்காகிறவள் நான்.
நீ பதினேழு வயதினள். மேலும் கன்னிமை இழந்தவள்
அவர்கள் உனக்குப் பயண ஏற்பாடு செய்கிறார்கள்,
வேறு நாட்டிலுள்ள உன் சொந்த ஊருக்கு.
அங்கே உன் உண்மையான ஆரம்பங்களின்
வேர்களை அறிந்து கொள்ளக் கூடும்.
சுட்டெரிக்கும் புழுதிக் காற்றில் ,
உன் தொடைகள் வியர்வையில் நனைந்திருக்க,
சரித்திரம் கசிந்து கொண்டிருக்கும்
கடைத்தெருக்கள் வழியே நீ நடக்கிறாய்.
ஒரு கை உன் முலையைத் திடீரெனப் பிடிக்கிறது.
கள்ளத் தனமாக, ஒரு விரல்
உன் ஆசன மேட்டைக் கிள்ளுகிறது.
நீ பதினேழு வயதினள்.
கைகளை மடக்கி மூடு திரையாக்கி
உன் வெட்கத்துக்குரிய மார்பு வரியைப்
போர்த்துகிறாய். வளைந்தும் நெளிந்தும்,
பாம்புத் தீண்டலை, காம வெறி கொண்ட
கண்ணை, மொழி சாராத கண்ணியமற்ற
காம அழைப்பைத் தவிர்க்கிறாய்.
“புதைத்து விடு அம்மா என்னை, ஒரு
தொன்மையான குழியில்,” எனக் கதறுகிறாய். ***
*தேசி (DESI )-அமெரிக்காவில் பிறந்த இந்திய வம்சாவளி இளைஞர்களைக் குறிக்கும் சொல். இவர்களில் இளைஞர்களை ABCD (American Born Confused Desi) என்று சிலநேரம் அழைப்பார்கள். -அதாவது அமெரிக்காவில் பிறந்து (பண்பாட்டுக்) குழப்பமடைந்துள்ள இந்தியர் என்று சுட்டல்.
மூலக் கவிதை ஆசிரியர் வாழ்க்கைக் குறிப்பு :
சுனிதா ஜெயின் (1940-2017)
படிப்பு : BA MA Ph .D (university of nebraska-Lincoln)
கவிஞர், எழுத்தாளர், பேராசிரியர் (ஹிந்தி, இங்கிலிஷ் )
பத்மஸ்ரீ மற்றும் பல விருதுகள் பெற்றவர்.
மொழி பெயர்ப்புக்கான கவிதை:
American Desi and other Poems என்னும் கவிதைத் தொகுப்பிலிருந்து எடுக்கப் பட்டது .
மூலக் கவிதை :
AMERICAN DESI
You are seventeen
And your unkissed mouth is bitter
With the knowledge
That your friends at school
Have lost their virginity.
At home, you cry,
“Holdme, Daddy
I am so frightened
And lonely.” But he
Whom you have known all your life
Looks away forbiddingly.
Your woman’s body
Scalds his eyes.
You are seventeen
And your mother pickles you
With her native skills-
“No. Don’t even ask.
We are not like them.
Always rutting. Such animals:
We are different . Remember?”
Remember what, mother?
My heart’s a horse.
My blood trots.
The darts fly all day,
And when they pound each other
In their parked cars
The butt of jokes is me.
You are seventeen and lost.
They arrange a trip to your
Origins-another country.
There you may learn the roots
Of your real beginning.
In the hot dusty wind,
Your thighs moist with sweat.
You walk through bazaars
Oozing history.
A hand grabs your breast
Surreptitiously, a finger
Pinches your butt’s reef.
You are seventeen.
You fold your arms
Like a scarf over your shameful
Bust line. You wriggle free
Of the snacking touch,the leering
Eye, the lewd calls in a language
With broken hinges.
“Bury me , mother,” you weep,
“In some ancient pit of time”.