விருந்தாளி: ஜாக் ப்ரீலட்ஸ்கி

விருந்தாளி ஒன்று வீட்டிற்குள் நுழைந்தது.
யானையை விட சிறியது
எலியை விடப் பெரியது.
 
முதல் அடி என் சகோதரி மீது 
அடுத்து என் தந்தைக்கு ஒரு உதை
பின் என் தாயை தள்ளிவிட்டது.
நான் வெறி கொண்டவனானேன். 
 
ரோவரை கிச்சு கிச்சு மூட்டியது.
பூனையை பயங்காட்டியது.
கழுத்துப் பட்டையை கிழித்தது.
தொப்பியை முரட்டுத்தனமாய் நசுக்கியது.
 
தலையில் தேனை மெழுகியது.
குளியல் தொட்டியில் கற்களை நிரப்பியது.
கோபத்தில் கத்தும்போது  
காலணியையும் காலுறைகளையும் 
களவாடியது.
 
அப்படித்தான் அது சாதாரணமாய் நிகழ்ந்தது.
நாள் முழுவதும் நடந்தது.
பின் அது பவ்யமாய் தலை வணங்கி 
மென்மையாய் வெளியேறியது.

***

இங்கிலிஷ் மூலம்: ஜாக் ப்ரீலட்ஸ்கி

தமிழாக்கம்: இரா.இரமணன்

(இந்தப் பாடலில் குறிப்பிடப்படும் விருந்தாளி யார் என்பது குறித்து இணையதளத்தில் சுவாரசியமான விவாதங்கள் காணப்படுகின்றன.)

மூலக் கவிதை கீழே:

visitor

it came today to visit

and moved into the house

it was smaller than an elephant

but larger than a mouse

first it slapped my sister

then it kicked my dad

then it pushed my mother

oh! that really made me mad

it went and tickled rover

and terrified the cat

it sliced apart my necktie

and rudely crushed my hat

it smeared my head with honey

and filled the tub with rocks

and when i yelled in anger

it stole my shoes and socks

that’s just the way it happened

it happened all today

before it bowed politely

and softly went away.

Jack Prelutsky

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.