கோடிட்ட இடங்களில் நிரம்புகிறோம்

நமக்கு முன்பிருந்தவர்களால்
இடப்பட்ட கோடுகளில்
அவர்களைப் புகைப்படங்களாக இதயத்தின் நிகழ்வாணியில்
தொங்க வைத்து,
குரலை மனக்காதுகளில் கேட்டு,
நகைச்சுவைகளுக்குச் சிரித்து,
சோகங்களுக்கு அழுது,
அவர்களின் காயங்களுக்கு நமக்கு நாம் மருந்திட்டு,
அவர்களின் தேடலில் நம்மை உணர்ந்து
நாம் நிரம்பிக்கொள்கிறோம்
நிச்சயமின்மையுடன் இணைகையில் நம் எச்சமாகக்
கோடுகளே மிஞ்சுகின்றன
கோடுகள் என்றும்  
கோடுகளால் தான்
நிரப்பப்படுகின்றன.

One Reply to “கோடிட்ட இடங்களில் நிரம்புகிறோம்”

Comments are closed.