இங்கிலிஷ் மூலம் : விஜயா சிங் தமிழாக்கம்: கோரா
சமர்காண்ட் நீலத்தின் சுவடுகள்

அதை நான் துளியும் சாத்தியமற்ற இடங்களில் பார்த்தேன்
பளபளக்கும் வில்லைகளாக அல்ல.
டெல்லி ஹூமாயூன் கல்லறையின்
இரட்டைக் குவி மாடத்தில்.
ஆனால் வண்ணம் தீட்டி
நேரோலாக் நீலத்தில்
அல்வர் குறுக்குச் சாலைகளில் குவி மாடத்தின் உட்புறம்.
தொற்று நோய்க் கிருமியாய்ப் பல்கிப்
பெருகி பிரவகித்தது ஆறு திசைகளில்.
தோற்றம் காட்டியது நேர்த்தியான தலைக் கவசத்திலும்
சல்லாத்துணி மேலாடையி லும் நூறு மடிப்புக் குட்டைப் பாவாடையிலும் .
திருப்தி கொள்ளாமல்
ஒரு நீலக் கடவுளாய் வேடமிட்டது.
எங்கேயோ கை வளையலில்
கணீரென ஒலித்தது
மூக்குத்தியில் மினுங்கியது.
மஞ்சள் வெயில் பட்டு
புத்தரின் காதணியில் ஊஞ்சலாடியது
வார் செருப்பின் மென் நடையில் கரணமடித்தது .
நெற்றி மையத்துக்கு இறங்கி வந்தது.
அமைதியற்று
தப்பியோடியது
அந்திநேர வானத்துக்கு
இரவின் இருளில் மென் கோபால்ட் நீலமாய் மாறி
நிலை கொண்டது.
***
மொழிபெயர்ப்பாளர் குறிப்பு :
1.சமர்காண்ட்:
உஸ்பெகிஸ்தான் நாட்டின் தென் கிழக்குப் பகுதியின் தலை நகரான சமர்காண்ட், மத்திய ஆசியாவின் மிகப் பழமையான, தொடர்ச்சியாகப் புழக்கத்தில் இருந்துவரும் பெருநகரம் . அறிவார்ந்த படிப்புக்கான இஸ்லாமிய மையமாக நெடுங்காலமாக இருந்து வந்திருக்கிறது.
2.சமர்காண்ட் நீலம்:
சமர்காண்ட் நகரின் குவிமாடங்கள் , மசூதிகள் ,கல்லறைக் கட்டிடங்கள், கலை பொருட்கள் அனைத்திலும் , நீலத்தின் நிறபேதங்கள் மிகுந்து காணப்படுவதால் நீல நகர் எனப் பெயர் பெறுகிறது. குறிப்பாக குவிமாடங்களில் பளபளக்கும் வில்லைகளின் துடிப்பான நீலப்பச்சையே சமர்காண்ட் நீலம்( turqueoise blue. )
3.ஹுமாயுன் கல்லறை: இது சமர்காண்டில் அமைந்துள்ள அமீர் தைமூர் என்ற பேரரசரின் கல்லறைக் கட்டட நிர்மாணக் கலையைப் பின்பற்றி கட்டப் பட்டதால் குவி மாடங்களில் சமர்கண்ட் நீலம் மிகுந்து தெரிகிறது.
4.அல்வர் குறுக்குச் சாலை (ராஜஸ்தான் ): இங்குள்ள குவி மாடங்களின் உட்புறத்தில் சமர்கண்ட் நீலம் காணப்படுகிறது.
5.கோபால்ட் நீலம் :
கோபால்ட் தனிமம் கண்டுபிடிக்கும் முன்னரே தூய்மையற்ற கோபால்ட் நீலம் பயன்பாட்டில் இருந்தது. எட்டாம் நூற்றாண்டிலேயே சீனர்கள் நீலம் மற்றும் வெள்ளை பீங்கான் பாண்டங்கள் செய்வதற்கு பயன்படுத்தி வந்தார்கள். கி.பி 1777ல் தான் கோபால்ட் நீலம் ஒரு வண்ணமாகப் பதிவு பெற்றது. கி.பி 1802-ல் கோபால்ட் அலுமினேட் என்ற ரசாயனப் பெயர் கொண்ட நிறமி (தூய கோபால்ட் நீலம் ) கண்டுபிடிக்கப் பட்டது. நிலவொளியில் இரவு வானம் கோபால்ட் இளஞ்சாயம் தோய்ந்த நீல நிறமேற்கும் என்கிறார் ஆசிரியர்.
Samarkand blue
I found it in the unlikeliest of places
Not as glazed tiles
On double domes
In Humayun’s Delhi.
But painted
A Nerolac blue
On the insides
Of the domes of cross-roads in Alwar.
Spawning an epidemic
It proliferated in six directions
And emerged as an elaborate headgear
Asan adhani of transparence, a skirt of hundred folds.
Not content
It even impersonated a blue god.
Elsewhere
It clanged on bare arms as bangles
Flashed on a nose-pin
Under the yellow sun.
Dangled on Buddha ears
Flip-flopped on slippers
Alighted on the centre of a forehead.
Restless
It escaped
Into the evening sky
And settled
As cobalt tinged in the dark of the night. ***
இங்கிலிஷ் மூலக் கவிதை கிட்டிய இடம் :
First instinct: Anthology of poems of Vijaya singh , Sahitya Academy