இங்கிலிஷ் மூலம்: விஜயா சிங்; தமிழாக்கம்: கோரா
புதைந்த நகரை மீட்டெடுத்தல்

மனிதரைப் போலவே
நகரங்களும்
வழி தவறி விடுகின்றன
பூமிக்கடியில் புதைந்து கிடக்கின்றன. .
தடயமறிந்து வெளிக்கொணர்வாருக்காக
ஆவலுடன் காத்துக் கிடக்கின்றன.
இணங்காத தங்கத்தைச்
சுத்தியாலும் அடித்து நொறுக்கியும்
அகழ்ந்தெடுப்பது போலன்றி
மிருதுவாய்,
மென்முடித் தூரிகையாலும்
கனிவான மென்மூச்சால் ஊதியும்
பல் நூற்றாண்டுப் புழுதி அகற்றப்பட வேண்டும் .
மீட்டெடுக்கும் துணுக்குகளில்
மக்களையோ
சரியாகப் பொருத்திய
முழுமையையோ பற்றவியலாது
எவராலும்
இத்தனை விரிசல்கள் தெரிகையில்
காத்திரமாக மீள்வது ஏதுமிராது
இழப்பின் வரலாற்றைத்
தயங்கித் தயங்கி
விவரிப்பதையன்றி
வேறொன்றும் செய்வதற்கில்லை.
ஒருவேளை நகரங்களும் மானிடமும்
மீட்டெடுக்கப் படுவன அல்ல
அவை வெகுண்டு,
பிடிவாதமாய் சத்தமின்றி ஒளிந்து கிடக்கின்றன. ***
Unearthing a city
Cities like people
Lose their way
And lie buried underground
Waiting to be sniffed out, unearthed.
Not like unwilling gold
Hammered and browbeaten
But gently
Using sable hair brushes
And tender breath
To blow away the dust of centuries.
The act of restoration
Cannot people
Nor rejoin the fragments
Into a whole.
The cracks are too visible
Incapable of holding any thing robust.
Except to recount haltingly
The narratives of loss.
Sometimes
Cities and people are never recovered
They lie hidden
Angry, obstinately silent.
அமைதியும் காலமும்

அமைதியும் காலமும் குணப்படுத்தி விடுகின்றன .
ஆனால் சுற்று வழியில்.
ஒவ்வோர் அங்கமாக.
முதலாவது, இதயம்
உன் பெயரைக் கேட்டதும்
அபரிமிதமாகத் துடிப்பதை
நிறுத்தும்.
அடுத்ததாக
ஃபோனை விட்டகன்றபோது
அல்லது
சார்ஜ் தீர்ந்து போயிருந்த
சொற்ப நிமிடங்களில்
நீ அழைத்திருப்பாயோ எனும் எண்ணத்தால்
மார்புக்கூட்டினுள் முட்டிமோதிய சுவாசகோசங்கள்
சாந்தமடையும் .
ஓரிரு தந்திரங்களில் தேர்ச்சி பெற்றிருக்கும் உன் மனது ,
தலை விதி என்று ஏதுமில்லை
எப்படியோ, காலச்சக்கரச் சுழற்சியைத் திருப்பலாம்
என்றுன்னை ஏமாற்றும்.
கயிற்று மாயமிது. உன்னில் எழும்
பிராயச்சித்த முனைப்பை, உறுதியோடு
நீயே அடங்கச் சொல்கிறாய்.
உன் மனதொரு திருவிழாக் காணும் குழந்தை
விளக்குகளும் கரண வேடிக்கைகளும் பார்த்த
அயர்வில் அமைதியாய் அமரக் கற்கிறது.
விரைவில், உன் பெயரை எழுத முடியாத
லிபியை அது கற்றுக் கொள்ளும்.
You are right about silence and time
Silence and time do cure
But cure tortuously
One limb at a time.
First the heart
Stops beating so hard
At the mention of your name.
Then the lungs
Stop hammering the ribcage
At the thought you could be calling
The minute
phone gets left behind
Or when it is not charged.
The mind knowing a trick or two
Fools you into believing destiny is nothing
That the cycle of time can be reversed,somehow.
This is only a rope trick
Firmly you ask yourself
To not kickstart redemption.
The mind is but a child at a carnival
It tires of lights and somersaults
And learns to sit quietly.
Soon, it will learn
The script in which your name
Cannot be written.
தமிழில்: கோரா
மூலக் கவிதை ஆசிரியர் பற்றிய குறிப்பு:
விஜயா சிங், இங்கிலிஷ் இலக்கியத்தைச் சண்டிகர் நகரக் கல்லூரி ஒன்றில் போதிப்பவர். இங்கிலிஷில் கவிதை எழுதும் விஜயா சிங்கின் முதல் கவிதைத் தொகுப்பு சாஹித்ய அகதமியால் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. (நவோதயா வரிசை.) பிபிலியோ என்கிற பத்திரிகையில் ‘காலிப்ஸ் டூம்ப்’ என்கிற புத்தகத்தைச் சீராய்ந்திருக்கிறார்.
இங்கிலிஷ் மூலக் கவிதை கிட்டிய இடம்:
First Instinct: Anthology of Poems
Vijaya Singh / Sahitya Academy