விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம்

This entry is part 3 of 4 in the series ஹெரால்ட் ப்ளூம்

பாகம் III

பேட்டியாளர்: எழுத முடியாத சமயங்களில் எது எழுதுவதற்கு தடையாக இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?

ப்ளூம்: விரக்தி, சோர்வு. எழுத முடியாமல் போன நீண்ட இடைவெளிகளும் இருந்திருக்கின்றன. நீண்ட, நீண்ட இடைவெளிகள், சில சமயங்களில் பல வருடங்களுக்கும் நீடிக்கும் இடைவெளிகள். அச்சமயங்களில் தரிசு நிலம் போல்  காத்திருப்பதைத் தவிர செய்வதற்கு ஒன்றுமில்லை. மேலும், ஆர்வங்கள் மாறிக் கொண்டே இருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். வேறு வேறு முறைமைகளுக்கு அவை நம்மை இட்டுச் செல்கின்றன. ஜே-ஆசிரியர் பற்றிய விரிவுரை மிகக் கடினமாக இருந்தது. அவர் உண்மையில் ஒரு பெண்தான் என்று நான் எனக்கே மெய்ப்பித்துக் கொண்டபின் என்னுள் உண்மையான ஒரு மாற்றம் நிகழ்வதை என்னால் உணர முடிந்தது. ஒரு பெரிய வித்தியாசத்தை அது ஏற்படுத்தியது. இப்படியும் இருக்கலாம் அல்லது அப்படியும் இருக்கலாம் போன்ற சிக்கல்தான். மேலும் அவரை ஆணென்றோ பெண்ணென்றோ சந்தேகத்திற்கு இடமின்றி எவரும் நிறுவப் போவதுமில்லை. ஆனாலும் ஜேயை பெண்ணாக கற்பனை செய்வது கற்பனைத் திறன்மிக்க நுட்பமான விளைவுகளை ஏற்படுத்த ஏதாக இருந்தது. மாறாக நேரெதிர் திசையில் பயணித்திருந்தால் அவ்விளைவுகளை ஈட்டியிருக்க மாட்டேன் என்று தோன்றுகிறது.

பே: ஆனால் ஜெ-ஆசிரியரை பெண்ணாக அடையாளப்படுத்துவதின் முக்கியத்துவம் மிகைப்படுத்தப் பட்டிருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

பேட்டியாளர்: ஆனால் ஜெ-ஆசிரியரை பெண்ணாக அடையாளப்படுத்துவதின் முக்கியத்துவம் மிகைப்படுத்தப் பட்டிருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

ப்ளூம்: ஓ! அதிகமாகவே மிகைப்படுத்தப் பட்டிருக்கிறது. ‘த நியூ யார்க் டைம்ஸ்’ பதிப்பித்த ஒரு பேட்டியில் அதி கூர்மையான ரிச்சர்ட் பெர்ன்ஸ்டீன், இவ்விஷயம் குறித்து முன்னதைக் காட்டிலும் மூர்க்கமாகி விட்டிருந்த எனது ஆழ்ந்த நம்பிக்கையை சற்று விரிவாகவே வெளிப்படுத்த அனுமதி கொடுத்தார். பிரதியிலேயே காணக் கிடைக்கும், அதாவது உளவியல் மற்றும் இலக்கிய ஆதாரங்களை வைத்துப் பார்த்தால், அவ்வாசிரியர் ஆணாக இருந்திருப்பதைக் காட்டிலும் பெண்ணாக இருந்திருக்கக் கூடிய சாத்தியங்களே அதிகம் என்று குறிப்பிட்டேன். மேலும், மீண்டும் முதலிலிருந்து தொடங்க முடியுமானால், ஆசிரியரின் பாலினம் குறித்த அனுமானங்களை தவிர்த்து விடுவேன் என்று உறுதியாகவே நம்புகிறேன். அது பெரும் கவனச் சிதறலை விளைவிக்கும் செந்நிற நெத்திலியாக உருமாறி, புத்தகத்தின் உண்மையான, சர்ச்சைக்குரிய, அனைவரையும் சீற்றமடையச் செய்திருக்க வேண்டிய பகுதிகளிலிருந்து – கடவுளுக்கும்- அதாவது இலக்கிய கதாபாத்திரமான யாவே அல்லது படைத்தோனுக்கும் – தோராவை பூர்த்தி செய்த திருத்தர்களின் கடவுளிற்கும், அவர்கள் வழியே வந்த யூத நெறிமுறை மரபு, கிருத்தவம், இஸ்லாம் மற்றும் அவற்றின் அனைத்து கிளைகளின் கடவுள்களுக்கும் துளிகூட சம்பந்தமில்லை என்ற கூற்றிலிருந்து – அனைவரின் கவனத்தையும் திசைதிருப்பியது.

பேட்டியாளர்: ஆனால் புத்தகத்தின் அப்பகுதி நெறிமுறை மரபைச் சேர்ந்த யூத விமரிசகர்களின் கவனத்தைக் கண்டிப்பாக ஈர்த்தது.

ப்ளூம்: நெறிமுறை யூத விமரிசகர்கள், குறிப்பாக திரு. ராபர்ட் ஆல்டர், மிக மோசமாக எதிர்வினையாற்றினார்கள். மற்றொரு நார்மன் பாட்ஹாரெட்ஸ் வகை விமர்சனம், அவரது அடியாளும் ஹோட்டல் ஹில்டன் கிரேமர் அளவுகோல் விளம்பியுமான நீல் காஸடியால் எழுதப்பட்டது. (அபாரமான சர்ச்சையாளர் கோர் விடால் சந்தேகத்துக்குரிய அந்த அளவுகோல்களை ஹோட்டல் ஹில்டன் கிரேமர்[1] என்றுதான் எப்போதுமே அழைப்பார்). லோன் ரேஞ்சரின் சகா டோண்டோ வேடம் பூண்டிருக்கும் திரு. காஸடி, நெறிமுறை யூதத்தின் மீது நான் நிகழ்த்திய வன்மையான தாக்குதல் என்று அவர் அர்த்தப்படுத்திக் கொண்டதை திரு. ஆல்டரைக் காட்டிலும் தீவிரமாக கண்டனம் செய்தார். ஆமாம், இதே குற்றச்சாட்டை நான் பல தரப்பினரிடமிருந்து கேட்டுவிட்டேன். நியூஸ்டேயில் அதை விமர்சனம் செய்த அபத்தமான யூத சட்ட வித்தகக் கனவானும் அதில் சேர்த்தி. “எதை வைத்து மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் நகைமுரண் என்ற ஒன்று இருந்ததென்று ப்ரொஃபெஸர் ப்ளூம் கூறுகிறார்?” என்று பிரகடனம் செய்தார். அதுவே இந்தப் புத்தகத்தைப் பற்றி, ஏன் எந்தப் புத்தகத்தைப் பற்றியும்கூட, கூறப்பட்டதிலேயே மிக நகைச்சுவையான ஒற்றை வரியாகவும் இருக்கலாம்.

ஆனால் இது இன்னமும் முடிந்தபாடில்லை என்று நினைக்கிறேன். இது ஆரம்பம் மட்டுமே. சிம்ஃபொனி ஸ்பேஸ் நிகழ்வொன்றில் க்ளேர் ப்ளூமும் ஃப்ரிட்ஸ் வீவரும் வேதாகமத்தை உரத்த குரலில் வாசித்தார்கள். நான் பத்து நிமிடங்கள் நிகழ்வின் ஆரம்பத்திலும் இறுதியிலும் பேசினேன். உணர்ச்சிவசப்பட்டு சற்று அதிகமாகவே பேசிவிட்டேன் என்று நினைக்கிறேன். கடைசி பத்து நிமிடங்களை, என்னை விமர்சித்த யூத நெறிமுறை விமரிசகர்களுக்கு பதிலளிப்பதற்கான சந்தர்ப்பமாக மட்டும் பயன்படுத்திக் கொள்ளாமல், சமகாலத்து யூத அறிவுஜீவித்தனத்தின் அடிப்படையான ஆன்மீகப் போதாமைகளைப் பற்றியும் பேசத் தொடங்கினேன். அதன்பின் அது ஒளிபரப்பவும் பட்டது. களேபரங்கள் வெடிப்பதற்கும் வாய்ப்பிருக்கின்றன. பல ராபைக்களும் யூத பணித்துறை அதிகாரிகளும் என்னைக் காவு வாங்குவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். .

பேட்டியாளர்: என்ன பேசினீர்கள்?

ப்ளூம்: உண்மை பேசுவதற்கான சந்தர்ப்பத்தை அளித்துக் கொண்டேன். அது எப்போதுமே பெரும் தவறுதான். ஹோலோகாஸ்ட் நம் மதத்தில் ஒரு அம்சமாக ஆகிவிட்டிருப்பதைக் கண்டு வருத்தப்படும் ஒரே யூத அறிவுஜீவியாக நான் மட்டுமே இருக்க முடியாது. கிருத்தவர்கள் ஜீசஸ் என்று அழைப்பதை அறுபது லட்சம் விதங்களில் கற்பனை செய்யும் தரிசனமும் எனக்கு பிடித்தமானதல்ல. இது யூதம் என்ற பெயரில் எனக்களிக்கப்பட்டால் அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியும் என்று என்னால் நம்ப முடியவுமில்லை. ஜே-ஆசிரியரின் கடவுளை, அவர் நம் அனைவரின் மூச்சாகவும் உயிர்ப்பாகவும் இருந்தவர் என்பதால், ஒரு போதும் என்னால் நம்ப முடியாமல் இருக்க இயலாது என்பதைக் கூறும் அனுமதியையும் எனக்களித்துக் கொண்டேன். இதற்கு நேர்மாறாக, ஹீப்ரூ வேதாகமத்தின் ஆசிரியராக அல்லாது பெரும்பாலும் தணிக்கையாளர்களாகவே பணியாற்றிய ரிடாக்டர்கள் எனப்படும் தொகுப்பாசிரியர்களும், குருமார் ஆசிரியர்களும், அவர்களை அடுத்து யூத, கிருத்துவ, இஸ்லாம் மரபுகளிலிருந்து வந்தவர்களும் நமக்கு அளித்தது தற்போது இலக்கிய மனோபாவம் அல்லது உயர் ஆன்மீகத்தை விழையும் ஒருவனுக்கு நிச்சயம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக இருக்க முடியாது என்று கூறினேன்.

பேட்டியாளர்: பொதுமக்களின் “பார்வையில்” இருப்பது எப்படி இருக்கிறது. ‘புக் ஆஃப் ஜே’-யே அதிவிற்பனை பட்டியலில் இடம்பெற்ற உங்கள் முதல் புத்தகம் அல்லவா?

ப்ளூம்: இலக்கிய விமர்சனம் அல்லது விரிவுரைப் புத்தகம் அதில் இடம் பெற்றிருப்பது இதுவே முதல் முறை என்று கூறுகிறார்கள். ஆனாலும் அது இன்பகரமான அனுபவமாக அமையவில்லை.

பேட்டியாளர்: எதனால் அப்படி கூறுகிறீர்கள்?

ப்ளூம்: மொத்தத்தில், என் தொலைக்காட்சி வானொலி அனுபவங்கள் எனக்கு திருப்திகரமாக அமையவில்லை. என் பதிப்பகத்தின் போதாமைகளை ஈடுகட்டுவதற்காகவே அவற்றை ஏற்றுக் கொண்டேன். அதில் பணியாற்றியவர்கள் தங்களால் இயன்றதை திறம்படச் செய்தார்கள் என்றாலும் பணியாளர் மற்றும் நிர்வாகிகள் பற்றாக்குறை, தேவையான புத்தகங்களை நேரத்திற்கு பதிப்பிக்காதது, மிகவுமே போதாத விளம்பரத் திட்டம் என்று பல குறைகள்… எல்லா ஆசிரியர்களுமே குறைபட்டுக் கொள்வதுதான் என்றாலும், இது கண்கூடாகவே மோசமாக இருந்தது.

பேட்டியாளர்: போயும் போயும் குட் மார்னிங் அமெரிக்காவில் பங்கேற்றீர்கள் இல்லையா?

ப்ளூம்: குட் மார்னிங் அமெரிக்காவில் பங்கேற்றேன். லேரி கிங்கில் பங்கேற்றேன். இன்னும் பலதிலும்…முற்றிலும் வேறுபட்ட இரு அவதானிப்புகளுடன் திரும்பினேன் என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். முதலாவதாக, டிவியிலும் ரேடியோவிலும் என்னைப் பேட்டி எடுத்தவர்களின் மரியாதையும் தனிப்பட்ட பண்பாடும் மிகவுமே வியக்கும்படியாக இருந்தது. உண்மையில் பத்திரிகை நிருபர்களைக் காட்டிலும், கண்டிப்பாக புலமை மிக்கவர்கள் என்று அழைக்கப்பட்டாலும் கூலிக்கு கொலை செய்பவர்களையும் தாதாக்களையும் போல நடந்து கொள்ளும் கல்வித்துறை விமரிசகர்களைக் காட்டிலும், மிக நாகரீகமாக நடந்துகொள்ளும் கனவான்களும் சீமாட்டிகளும் அவர்கள். ஆனால், வாழ்நாள் முழுவதையும் படிப்பினை செய்வதில் கழித்துவிட்டு டிவி காமெராவின் பிரம்மாண்டமான வெற்றுக் கண்ணையும் ரேடியோ ஸ்டூடியோவின் வெறுமையையும் உணர்வுபூர்மாக ஏற்றுக் கொள்ள மிகக் கடினமாகவே இருந்தது. அவற்றின் மூர்க்கமான நிதர்சனமின்மை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

பேட்டியாளார்: ரௌத்திரத்தின் அழகியல் பற்றி எழுதப்போவதாக குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

ப்ளூம்: ஆமாம். ரௌத்திரம் பழகுதலின் அழகியலை பற்றி. ஆனால் அறுபதுகளின் பின்விளைவுகளாக நிகழ்ந்ததே, ரௌத்திரம் பழகுவதை அம்மாதிரியான அர்த்தத்தில் பேசவில்லை. மாக்பெத் மேலும் மேலும் கோபமுறுகிறானே, அந்த அர்த்தத்தில் கூறுகிறேன். சீற்றம் கொள்வதின் வெற்றிகரமான அல்லது காத்திரமான உருவகத்துடன் நாம் தீவிரமாக அடையாளப்படுத்திக் கொள்வது என்னை மிகவும் கவர்கிறது. அது எதனால் என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறேன். இறுதியில் நம் நிரந்தரமின்மையைக் குறித்தே சீற்றம் கொள்கிறோம் என்று நினைக்கிறேன். அத்தகைய சீற்றத்துடன் அடையாளப்படுத்திக் கொள்ளாமல் இருக்க முடியாது.

பேட்டியாளர்: ஏதோ ஒரு விதத்தில் ஃபீல்ட்சையும் ((W.C.Fields) இவ்விஷயம் தன்னுடன் இணைத்து கொண்டு விடுகிறது இல்லையா?

ப்ளூம்: ஓ! நிச்சயமாக, சீற்றம் கொள்வதில் இருக்கும் அமோகமான நகைச்சுவை சாத்தியங்களை அவர் ஓயாது நிரூபித்துக் கொண்டிருந்தார் என்பதே அவரது மிகப்பெரிய தாக்கம். The Fatal Glass of Beer என்ற அவரது குறும்படத்தை முதல் முறை பார்த்த அனுபவத்திலிருந்து நான் இன்னமும் முழுதாக மீளவில்லை. திரைப்படத்தின் உச்சமாகவே அதை நான் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறேன், கிரௌச்சோவின் Duck Soup- பையும் அது கடந்து செல்கிறது. The Fatal Glass of Beer பார்த்திருக்கிறீர்களா? அதை விவரிப்பதற்கான விமர்சனத்திறன் என்னிடமில்லை. அனேகமாக, படம் முழுவதிலுமே, W.C. Fields ஸிதர் இசைக்கருவியை இசைத்தபடியே சக மாணவர்களின் வற்புறுத்தலால் குடிப்பழக்கம் இல்லாத துரதிர்ஷ்சம் வாய்ந்த தன் மகன் குடித்துவிட்டு மரித்ததைப் பற்றி பாடிக் கொண்டிருப்பார். அதன்பின் இரட்சண்ய சேனையைச் சேர்ந்த நங்கையொருவளை அவதூறு செய்வார். அவளோ தற்போது திருந்தி வாழும், காலை உயரமாக உயர்த்தி உதைக்கும் பாணியில் ஆற்றுகை செய்யும் கூட்டுப்பாடற் குழுவில் பணியாற்றுபவர் என்பதால் காலை உயர்த்தி அளித்த முதல் உதையிலேயே அவர் அதிர்ச்சியுற்று ஸ்தம்பித்து விடுகிறார். ஆனால் அதை இப்படி விவரிப்பதென்பது, மாக்பெத்தை அதிகாரவெறி பிடித்த ஒருவன் ராஜாவைக் கொலை செய்யும் கதையாக விவரிப்பதைப் போன்றது.

பேட்டியாளார்: ஆக, சீற்றப்படுத்தும் ஒரு விமரிசகர் என்பதற்கு மேலதிகமாக நீங்கள் ஒரு சீற்றமுறும் விமரிசகரும்கூட என்று கூறலாமா?

பேட்டியாளார்: சே! சே! சீற்றப்படுத்தும் விமரிசகரெல்லாம் கிடையாது. ஆனால் ஒரு விதத்தில் அப்படியுமே இருக்கலாம் என்றும் தோன்றுகிறது. ஆனால் மற்றவர்களெல்லாம் வயசாகிவிட்டதால் வாலை சுருட்டிக் கொண்டிருப்பதாலோ அல்லது அரசியல் சரிமைக்கு உட்பட்டவர்களாகவோ, சமூக மாற்றத்திற்கும் இலக்கியத்திற்குமிடையே இருக்கும் பிணைப்பை பறைசாற்றும் சமூக சீர்திருத்தவாதிகளாக இருப்பதில் நிறைவடைபவர்களாகவோ இருப்பதாலேயே நான் அப்படித் தோன்றுகிறேன். சீற்றமுறும்? இல்லை நான் சீற்றப்படுவதில்லை. தனிமனிதனாக நான் கோபப்படுவதில்லை. அதற்கெல்லாம் தற்போது நேரம் கடந்துவிட்டது. சீற்றப்படுவதை அனுமதித்தால் உண்மையிலேயே என் ஆயுள் குறைந்துவிடும் என்று நினைக்கிறேன். உணர்வுத்திடத்தை பொறுத்தமட்டில் முன்னர் இருந்த வலிமை தற்போது எனக்கில்லை. அது போன்ற சக்தி விரயத்தையெல்லாம் தாங்கிக் கொள்ளும் நிலையில் நான் இல்லை. அனைத்திற்கும் மேலாக, இப்போதெல்லாம் எதுவுமே என்னை ஆச்சரியப்படுத்துவதில்லை. உங்களுக்கே தெரியும், இலக்கியம் அளவிற்கு மீறிய அபத்த நிலைகளை எந்த அளவுக்கு எட்டிவிட்டதென்று. பல்கலைகளில் விமர்சனம் புதியதொரு கட்டத்தை தொடங்கியிருக்கிறது. அதில் 95 சதவீதத்துடன் எனக்கு எவ்வித உடன்பாடும் கிடையாது. அது ஸ்டாலின் இல்லாத ஒரு ஸ்டாலினிஸம். 1930, 1940-களிலிருந்த ஸ்டாலினியக் கூறுகள் அனைத்துமே 1990-களில் பல்கலைகளில் அறச்சீற்றம் என்ற போர்வையில் மீண்டும் நிறுவப்பட்டிருக்கிறது. சகியாமை, சுயப் பாராட்டுரைகள், மிகைப் பெருமிதம், சமயப் பகட்டு, கற்பனை சார்ந்த மதிப்பீடுகளிலிருந்து பின்வாங்குதல், அழகியல் துறப்பு. உண்மையில் இதையெல்லாம் அருவருத்துச் சீற்றப்படுவதால் ஒரு லாபமும் இல்லை. இறுதியில் இதற்கான முறிமருந்தை தங்களுக்குத் தாம் இவர்களே அளித்துக் கொள்வார்கள். ஏனெனில் தாங்கவொண்ணா சலிப்பால் ஒழிந்து போவார்கள். நானே இறுதியில் வெற்றி பெறுவேன். தற்போது எழுதிக் கொண்டிருப்பவர்களில், தான் படித்ததை, படித்ததில் பிடித்ததை, அது பழங்காலத்ததோ, நவீனமானதோ அல்லது புத்தம் புதியதோ, எதுவாக இருப்பினும் அதை: எவ்வளவு சிறப்பாக இருக்கிறது? எதைக்காட்டிலும் சிறப்பாக இருக்கிறது? ஒப்பு நோக்குகையில் எதைக் காட்டிலும் சிறப்பாக இல்லை? அதன் பொருள் என்ன? அதன் பொருளுக்கும் தரத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா? எது நன்றாக அல்லது மோசமாக இருக்கிறது என்பது மட்டுமல்லாது எதனால் நன்றாக அல்லது மோசமாக இருக்கிறது? போன்ற கேள்விகளுக்கு எப்போதுமே உட்படுத்தும் விமரிசகர்களுள் நான் மட்டுமே சொல்லிக் கொள்ளும்படியானவன் என்று நினைக்கிறேன். (எவ்வளவுதான் ஆணவமாகவும் நாராசமாகவும் தொனித்தாலும் மற்ற ஒரு பெயர்கூட நினைவிற்கு வரவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்). என் முன்னோடியான திரு. ஃப்ரை இவை அனைத்தையுமே விமரிசனத்திலிருந்து ஒழித்துக்கட்ட முயற்சித்தார். அதே போல், அவரது பிளேடோனிய ஆதர்சத்துக்கு எதிராக ஒரு வகையான இருண்மை தோய்ந்த, காலம் சார்ந்த, உலகியல் தன்மையை அல்லது அத்தன்மையால் ஏற்படும் துயரங்களை இலக்கிய விமர்சனத்தில் மீண்டும் புகுத்த முயற்சித்தேன். தற்சமயத்தில், ஏன் ஜான்சன், ஹாஸ்லிட், காலத்திற்குப் பின் என்றுகூட சொல்லலாம், வேறெவரைக் காட்டிலும் வெளிப்படையாக, ‘எதனால் இதைப் பொருட்படுத்த வேண்டும்?’  என்ற கேள்வியை ஐயத்திற்கிடமின்றி நானே கேட்டிருக்கிறேன். நம்மை எதனால் பொருட்படுத்த வேண்டும் என்பதற்கும் நாம் எப்படி வாசிக்கிறோம் என்பதற்கும் ஏதோவொரு தொடர்பு கண்டிப்பாக இருந்தாக வேண்டும். இலக்கியத்தை இவ்விஷயங்களுடன் தொடர்புபடுத்தி இம்மாதிரி பேசி, எழுதுவது, தற்காலத்துக்கு ஒவ்வாததாகவோ, இலக்கிய விமர்சனத்திலேயே சேர்த்தியில்லை என்றோ, கழிவிரக்க அறச்சீற்றப்பள்ளிச் சார்பாளர்களுக்குத் தோன்றலாம். ஆனால் எவ்ரிபீடஸை (அவர் மட்டுப்படும் வகையில்) ஐஸ்கூலொசுடன் பக்க அணிமைப்படுத்தி விமர்சன கலையைத் கண்டுபிடித்த அரிஸ்டோஃபானெஸின் காலத்திலிருந்தே, அல்லது, பிளேடோவைக் குறித்த தனது மனக்கவலைகளை போக்கிக் கொள்ள ஹோமரைக் குறித்த பிளேட்டோவின் மனக்கவலைகளைப் பற்றிச் சிந்திக்க முயற்சித்த லாஞ்சினோஸின் காலத்திலிருந்தே, மேலை இலக்கிய விமர்சனத்தின் முறைமைகளாக இவை இருந்திருக்கின்றன என்று நம்புகிறேன். இதைத்தான் இலக்கிய விமர்சனம் எப்போதுமே செய்து வந்திருக்கிறது. நமக்கு அது ஏதொவொரு வழியிலாவது பயனளிக்க வேண்டுமென்றால் இதற்குத்தான் நாம் திரும்பிச் செல்ல வேண்டும். தரமானது, தரக்குறைவு, எப்படி, எதனால், சார்ந்த கேள்விகளுக்கு அது பதிலளித்தாக வேண்டும். இலக்கியம் நம் வாழ்வுடன் எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கிறது என்றும் நாம் எப்படி இருக்கிறோம் என்பதைப் பொருத்து அதன் பொருள் எப்படி வேறுபடுகிறது என்ற கேள்விக்கும் அது பதிலளித்தாக வேண்டும். மாபெரும் இலக்கியத்தின் கருணாரசத்தை விவாதிக்கவோ, ஒரு குறிப்பிட்ட படைப்பு நம்முள் பெரும் வலியை ஏன் ஏற்படுத்துகிறது அல்லது ஏற்படுத்தத் தவறுகிறது என்பதைப் பற்றி பேசுவதற்கோ சமகாலத்தில் என்னைத் தவிர வேறு விமரிசகரே இல்லை என்பது மிக வியப்பாக இருக்கிறது. இதெல்லாம் வெறும் தனிப்பட்ட அகநிலைச் சார்பாக புறந்தள்ளப்படுகிறது என்று சொல்ல வேண்டியதில்லை.

பேட்டியாளர்: ஹாஸ்லிட், ரஸ்கின், அல்லது பேட்டர், எழுதிய கட்டுரைகளைப் போல இன்னமும் எழுத வாய்ப்பிருக்கிறதா?

ப்ளூம்: பெரும்பான்மையானவர்கள் இல்லை என்றே கூறுவார்கள். இயன்றவரையில் முயற்சிக்கிறேன் என்பதை மட்டுமே என்னால் கூற முடியும். நான் சொல்லக்கூடியவற்றில் அதுவே துணிகரமானதும்கூட. யாரும் செவிமடுக்காவிடினும் அல்லது ஒரு சிலர் மட்டுமே மடுக்கிறார்கள் என்றபோதிலும் நானும் சொல்லிக் கொண்டேதான் இருக்கிறேன். விமர்சனம் இலக்கியத்தின் ஒரு வகைமையாக இருக்கவேண்டும், அல்லேல் அது ஏதுமில்லை. இலக்கிய வகைமையாக அல்லாது அதனால் உயிர்பிழைக்க முடியும் என்று தோன்றவில்லை. வேண்டுமானால் அதை ஒரு சிற்றிலக்கிய வகைமையாக கருதலாம், ஆனால் ஏன் அப்படிக் கூறுகிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. கவிதையோ அல்லது செய்யுள் எழுதுவதோ விமர்சனத்தைக் காட்டிலும் முன்னுரிமை பெற வேண்டும் என்ற கருத்து அதன் நேரடிப் பொருளில் எனக்கு அடிமுட்டாள்தனமாகவே படுகிறது. அப்படி சொல்வது வில்லியம் ஹாஸ்லிட்டைக் காட்டிலும் அவரது சமகாலத்தவரும் செய்யுள் எழுதியவருமான ஃபெலிசியா ஹெமன்ஸ் மிகவுமே காத்திரமான ஆளுமை என்று கூறுவதற்குச் சமம். அல்லது, நம் காலத்து ஃபெலிசியா ஹெமென்சான சில்வியா பிளாத்தை அண்மையில் மறைந்த வில்சன் நைட்டைவிட உயர்வான இலக்கிய ஆளுமையாக மதிப்பிடுவதற்குச் சமம். இது முற்றிலும் தவறென்பது வெளிப்படை. மிஸ் பிளாத் ஒரு மோசமான செய்யுளாசிரியர். நைட்டை படிப்பதோ எனக்கும் மகிழ்வூட்டுவதாகவும் பயனளிப்பதாகவும், சில சமயங்களில் ஆச்சரியமளிப்பதாகவும் அதிர்ச்சியூட்டுவதாகவுமே இருந்திருக்கிறது. இவை அனைத்துமே வெளிப்படைதான் என்றாலும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டுமென்பதும் வெளிப்படை. கவிதையை விட்டு விடுங்கள், செய்யுள் என்று அமெரிக்காவில் தற்போது எழுதி பதிக்கப்பட்டு கொண்டாடப்படுபவை அனைத்தையுமே அனேகமாக செய்யுட்களாகக்கூட கருத முடியாது. அவை வெறும் தட்டச்சு அல்லது சொற்செயலியைத் தட்டிக் கொண்டிருப்பதற்குச் சமம். சொல்லப் போனால், அனேகமாகவே அவை வெறும் பகட்டான பேச்சலங்காரம் அல்லது சமூக நலன் குறித்த அறச்சீற்றம் மட்டுமே. அதே போல் நாம் விமர்சனம் என்று அழைத்துக் கொண்டிருப்பது அனைத்துமே உண்மையில் அனேகமாக வெறும் பத்திரிகையியலே.

பேட்டியாளர்: அல்லது, நீங்கள் “சுலபமான இன்பங்கள்” என்று அழைக்கிறீர்களே, அவற்றுடன் இவையும் சேர்த்தியா? எவை சுலபமான இன்பங்கள்?

ப்ளூம்: நான் அக்கருத்தை என் நண்பரும் சமகாலத்தவருமான ஆங்கஸ் ஃபிளெட்சரிடமிருந்துதான் இரவல் பெற்றுக் கொண்டேன். அவரே அதை ஷெல்லியிடமிருந்தும் லாஞ்சினோசிடமிருந்தும்தான் பெற்றுக் கொண்டார். சில மிக நல்ல எழுத்தாளர்களால் சுளுவான இன்பங்களை மட்டுமே அளிக்க முடியுமென்பது நமக்குத் தெளிவாகவே தெரிகிறது. சமகாலத்தவர்களான இரு எழுத்தாளர்களை ஒப்பு நோக்குவோம் – ஹெரால்ட் பிராட்கியையும், ஜான் அப்டைக்கையும். அப்டைக், நான் எப்போதோ எழுதியது போல், பெரும் நடை கொண்டிருக்கும் குறும் நாவலாசிரியர். உண்மையிலேயே மிக அழகான, மிகவுமே போற்றத்தக்க நடை கொண்டிருக்கும் நடையாளர். நான் அவருடைய பல நாவல்களை படித்திருந்தாலும் ’த விச்சஸ் ஆஃப் ஈஸ்ட்விக்’கே எனக்கு பிடித்தமானது. ஆனால் பெரும்பாலும் அவர் சுலபமான இன்பங்களை அளிப்பதில்தான் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். மெய்யான இன்பங்கள்தான் என்றாலும் அவை நம் அறிவாற்றலுக்கு சவாலளிப்பதில்லை. பிராட்கி, நிறைவாக செய்யாவிட்டாலும் அப்டைக்கை காட்டிலும் கணிசமான அளவிற்கு இதைச் செய்கிறார். தாமஸ் பிஞ்சன் சமீப காலமாக இல்லையென்றாலும் மிகக் கடினமான இன்பங்களை அளிக்க வல்லவராக இருக்கிறார். உண்மையில், ’வைன்லண்டை’ எழுதியது அவர்தான் என்பதை என்னால் முற்றிலும் நம்ப முடியவில்லை, மெல்வில், ஹாதோர்ன், ஜேம்ஸிற்குப் பிறகு வந்த காத்திரமான நாவலாசிரியரை எடுத்துக் கொள்ளுங்கள். அது நிச்சயமாக ஃபாக்னராகத்தான் இருக்க முடியும். அவரது மிகச் சிறப்பான நாவலான ’ஆஸ் ஐ லே டையிங்’கிற்கும் மிக மோசமான நாவலான ’எ ஃபேபில்’லிற்குமிடையே உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள். சுலபமான இன்பங்களைத் தவிர ’எ ஃபேபில்’லில் வேறெதுவுமே இல்லை. அவை இன்பங்கள்கூட கிடையாது. அவ்வளவு சுலபமாக இருப்பதால் அவை இன்புறுத்துவதில்லை. ஆபாசமான, அருவருப்பான வேறு எதுவாகவோ மாறிவிடுகின்றன. ஆனால் ’ஆஸ் ஐ லே டையிங்’ மிக கடினமான படைப்பு. டார்ல் பண்ட்ரனை உள்வாங்கிக் கொள்வது கணிசமான கற்பனைத் திறன் கோருகிறது. இதில் ஃபாக்னர் தன்னையே விஞ்சிவிடுகிறார். நம் காலத்தில் காணக் கிடைக்கும் உன்னதத்திற்கான அசல் உதாரணமாகவும் அது எனக்குத் தோன்றுகிறது. அல்லது அமெரிக்க கவிதையை எடுத்துக் கொண்டால், ‘தி ஐடியா ஆஃப் ஆர்டர் இன் கீ வெஸ்ட்’ மற்றும் அதற்கும் முன்னே வந்த ’ஸண்டே மார்னிங்’கின் சுலபமான இன்பங்களில் தொடங்கி மிகக் கடினமான இன்பங்களை அளிக்கும் ‘நோட்ஸ் டுவொர்ட் அ சுப்ரீம் ஃபிக்‌ஷன்’ னூடே ‘த ஔல் இன் தி ஸாக்ரோஃபேகஸ்’ஸின் அளப்பறிய கடினங்களுக்கு வருவதையே ஒரு கவிஞராக வாலஸ் ஸ்டிவன்ஸ் வளர்ச்சி பெற்றதற்கான அடையாளமாக எடுத்துக் கொள்ளலாம். அவ்வளர்ச்சியுடன் கூடவே நடந்து செல்ல மிகத் தீவிரமான உழைப்பு தேவைப்படுகிறது. நீட்ஷாவும் பர்க்ஹார்ட்டும் வலியுறுத்திய, நான் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட, ‘அகனிஸ்டிக்’ என்ற போட்டி முறைமையுடன் இது சம்பந்தப்பட்டிருக்கிறது. பிளேடோவில் தொடங்கி, மேலைச் சிந்தனையின் வரலாற்றினூடே ஒரு மதிப்பீட்டுத் தரம் இருந்திருக்கிறது. அதன்படி ஒரு இலக்கியப் படைப்பின் தரத்தைப் பற்றிப் பேசுகையில் உள்ளடக்கமாக “அதிகமாகவா, சமமாகவா, அல்லது குறைவாகவா?” என்ற கேள்வியையே கேட்கிறோம். இறுதியில், “என்னையே கடக்கச் செய்யும் ஒன்றிற்காக சுலபமான இன்பங்களைக் காவு கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்,” என்று வாசகனை கூறச் செய்யும் உந்துவிசையே இக்கேள்விக்கான பதில். கண்டிப்பாக இதுவே புதிரானதும், என்னைப் பொறுத்தவரையில் பலவிதங்களில் குறைபாடுகள் நிறைந்த மார்லோவின் ‘த ஜூ ஆஃப் மால்டா’வை, ஷேக்ஸ்பியரின்  ‘த மெர்ச்செண்ட் ஆஃப் வெனிஸ்’ சிடமிருந்து வேறுபடுத்துவதாக இருக்க வேண்டும். ஆனால் ஐயப்பாடுள்ள ஷைலாக்கை காட்டிலும் பராபஸ்ஸே என்னை அதிகம் மகிழ்வூட்டுகிறான். என்றாலும் அவனளிக்கும் இன்பங்கள் சுலபமான இன்பங்களே என்பதையும் உணர்ந்திருக்கிறேன். ஷைலாக்கைப் பார்ப்பதில் கிட்டும் இன்பத்தை அனுபவிப்பதற்குள் ஷேக்ஸ்பியரிய உன்னதத்தை உள்வாங்கிக் கொள்வதற்கு இடையூறாக அமையும் மற்ற சில காரணங்கள் குறுக்கிடுகின்றன. கவிதையில் உன்னதத்தை பரிசோதிப்பதற்கான பிரமிப்பூட்டும் தேர்வாகவே த மெர்ச்செண்ட் ஆஃப் வெனிஸ்-சின் ஐந்தாவது அங்கத்தை அடையாளப்படுத்திக் கொள்கிறேன். அதில் பொருத்திக் கொள்வதென்பது நமக்கு சிக்கலான காரியமாகவே இருக்கிறது.

பேட்டியாளர்: அண்மையில் செல்சியா ஹவுஸ், பதிப்பித்த, ஒரு விதமான இலக்கியக் கலைக்களஞ்சியமாகப் பொருள்கொள்ளத்தக்க, கிட்டத்தட்ட ஐநூறு புத்தகங்கள் கொண்ட, வரிசையின் தொகுப்பாசிரியர் பணியை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறீர்கள்.

ப்ளூம்: இன்னும் செய்து முடிக்கவில்லை, வேகமும் சற்று குறைந்து விட்டது. அது ஒரு வினோதமான அனுபவமாக இருந்தது. ஒரு விதமான அபூர்வமான துரிதத்தில் என்னை அது இழுத்துச் சென்றது. அதே போல் மீண்டும் ஒரு முறை செய்ய முடியும் என்று தோன்றவில்லை; மேலும், அதில் எனக்கு விருப்பமும் இல்லை. ஆனால் நீடித்த வரையில் அது மிகத் தீவிரமாகவே இருந்தது. அதன் உச்சத்தில் ஒரு மாதம் இரண்டு நாளுக்கு ஒரு முன்னுரை என்ற கணக்கில், பதினைந்து முன்னுரைகள் எழுதிக் கொண்டிருந்தேன். அனைத்தையும் மீள்வாசிப்பிற்கு உட்படுத்தி பார்வைகளை படிகப்படுத்த வேண்டியிருந்தது. ஆனால் அப்படி எழுதுவது எனக்கு பிடித்தமானதே. அதிலிருந்து நிறையவே கற்றுக் கொண்டேன், ஏனெனில் ஒரு துளி நேரத்தையும் விரயம் செய்ய முடியாது என்ற நிலை. உட்கருவிற்கு உடனடியாக சென்று, ஏழிலிருந்து பன்னிரண்டு பக்கங்களுக்குள், புலமைத்தனத்தில் சுற்றி வளைத்து நேரத்தை வீணாக்காது, அதைப் பற்றி உண்மையில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை சொல்லிவிட வேண்டும்.

பேட்டியாளர்: இவ்வளவு விரைவாக எப்படி எழுதுகிறீர்கள்? உறக்கமின்மை ஒரு காரணமா?

ப்ளூம்: உறக்கமின்மையும் ஒரு காரணம். சிகிச்சையளித்துக் கொள்வதற்காகவே எழுதுகிறேன் என்று நினைக்கிறேன். இதைத்தான் உண்மையில் ஹார்ட் கிரேன் கற்றுத் தருகிறார். இதைப் பற்றி வில்லியம் எம்ப்சனுடன் ஒரு முறை பேசிக் கொண்டிருந்தேன். அவர் கிரேனை விமர்சித்ததே இல்லை; மேலும் கிரேனின் கவிதை தனக்குப் பிடிக்குமா பிடிக்காதா என்பதைக்கூட அவர் அறிந்திருக்கவில்லை. ஆனால் கிரேனின் கவிதையிலிருந்த நம்பிக்கை இழப்பிற்கு அருகாமையில் உருவாகும் மூர்க்கத்தனம் அவரைக் கவர்ந்தது. கவிதை தற்போது முட்டாள்களின் நிறைவளிக்காத விளையாட்டாகிவிட்டது என்பதையே கிரேனின் கவிதை காட்டுகிறது என்றும், ஒவ்வொரு கவிதையையும் தனது கடைசிக் கவிதையாக இருக்கக்கூடும் என்பது போல்தான் கிரேன் எப்போதுமே எழுதினார் என்றும் அவர் கூறினார். கிரேனைப் பற்றிய ஏதொவொரு உண்மையை அவர் கைப்பற்றிவிட்டார் என்றே தோன்றுகிறது; அதாவது, அதை எழுதி முடிக்கவில்லை என்றால் இறந்துவிடப் போவது போலவும், கவிஞராக மட்டுமல்லாது ஒரு தனிநபராக உயிர்பிழைப்பதே எப்படியோ அக்கவிதை ஒலிக்கப்படுவதைப் பொறுத்துதான் என்பது போலவும் அவர் ஒவ்வொரு பாடலையும் எழுதுகிறார் என்ற அர்த்தத்தில். கிரேனுடன் என்னை ஒப்புநோக்கும் அளவிற்கு எனக்கு துடுக்கில்லை. ஆனால் அவர் கவிதை எழுதிய விதத்தில்தான் நானும் விமர்சனம் எழுதுகிறேன் என்று நினைக்கிறேன். போய்க் கொண்டே இருப்பதற்காகவே எழுதிக்கொண்டு இருக்கிறோம், பித்து பிடித்தலைவதைத் தவிர்ப்பதற்காக. அடுத்த விமர்சனக் கட்டுரையை எழுத முடிவதற்காகவே ஒருவர் அதற்கு முந்தைய கட்டுரையை எழுதி முடிக்கிறார், அல்லது அடுத்த ஒன்றிரண்டு நாட்களை வாழ்ந்து முடிப்பதற்காக. ஒருகால் தீங்கு விலக்கும் செய்கையாகவோ அல்லது மரணத்தை ஒத்திப் போடுவதற்காகவோ கூட இருக்கலாம். நிச்சயமாகச் சொல்ல முடியவில்லை. ஆனால் இதைத்தான் கவிஞர்கள் செய்கிறார்கள் போலிருக்கிறது. தங்கள் மரணங்களை ஒத்திப் போடுவதற்காகவே கவிதை எழுதுகிறார்கள்.

பேட்டியாளர்: ‘ட்ரான்ஸ்ஃபெரன்ஸ் அண்ட் அதாரிட்டி’ என்ற தலைப்பில் ஃபிராய்டைப் பற்றி ஒரு பெரும் படைப்பைச் சிறிது காலமாக எழுதிக் கொண்டிருந்தீர்கள் இல்லையா? அது என்னவாயிற்று?

ப்ளூம்: பெரிய, பழுப்பேறிக் கொண்டிருக்கும் கையெழுத்துப்படியாக இருந்து கொண்டிருக்கிறது. அதை முடித்திருப்பேனா என்று எனக்கு சரியாக தெரியவில்லை. ஆனால் செல்சியா ஹவுஸ் பதிப்பகத்தின் நியூ ஹேவன் தொழிற்சாலை மூடப்படுவதற்கு முன், ஐந்து வருடங்களுக்கு மேலும் மேலும் அம்முன்னுரைகள் எழுதுவதிலேயே என் பணி நேரம் செலவழிந்து விட்டது. அதற்காக நான் வருத்தப்படவில்லை, ஏனெனில் முதல் முறையாக என்னை ஒரு பொது இலக்கிய விமரிசகனாக உருவாக்கிக் கொள்வதற்கு அது வழி வகுத்தது. ஆனால் ஃபிராய்டை மூட்டைகட்டி வைக்க வேண்டியதாகி விட்டது. நாலைந்து வருடங்களில் அதன்மீது மீண்டும் கவனம் செலுத்துவேன் என்று தோன்றுகிறது. இன்னமும் ஃபிராய்டை பற்றி ஒரு புத்தகம் எழுதிவிட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அந்தப் புத்தகம் ’ட்ரான்ஸ்ஃபெரன்ஸ் அண்ட் அதாரிட்டி’ என்ற புத்தகமாக இருக்காது என்று நினைக்கிறேன். ஃபிராய்டைப் பற்றிய ஒவ்வொரு முக்கியமான கட்டுரை அல்லது தனிவரைவு நூலைப் பற்றியும் கருத்து சொல்லும் பிரம்மாண்டமான கையெழுத்துப்படி என்னிடம் இருக்கிறது, ஆனால் அதைப் பதிப்பிக்க எனக்கு விருப்பமில்லை. ஃபிராய்டை ஒரு புனித நூலாக பாவித்து எழுதுவதில் எனக்கு நாட்டமில்லை. இந்த விஷயத்தை நான் முழுமையாக மீள்பரிசீலனை செய்தாக வேண்டும். புத்தகத் தலைப்பே அப்பன் குதிருக்குள் இல்லை என்ற அறைகூவுவதை இப்பொது உணர்கிறேன். ஃபிராய்டின் பிரதியுடன் எனக்கிருந்த மனச்சிக்கல்களின் இடமாற்றீடு உறவை என்னால் சரியாக பேண முடியவில்லை; மேலும் அது என் மீது எவ்வளவு ஆதிக்கம் செலுத்த வேண்டும் அல்லது வேண்டாம் என்பதை என்னால் சரியாக நிர்ணயிக்க முடியவில்லை. இச்சிக்கலால் பின்னடைவு அடைந்தேன் என்று கூறலாம், ஒரு விதமான, கந்தலாகிவிட்ட, ஒன்றுக்கும் உதவாத வெள்ளை யானையாக அது மாறிவிட்டது. இங்குதான் பரணில் இருக்கிறது – எழுநூறு எண்ணூறு பக்கங்களுக்கு நீளும் தட்டச்சுப் பிரதி. ஆனால் நான் பதிப்பித்ததை காட்டிலும் கையெழுத்துப்படியில் கைவிட்ட புத்தகங்களும் கட்டுரைகளுமே அதிகம் என்று நினைக்கிறேன். பரண் அவற்றால் நிரம்பி வழிகிறது. இறுதியில் அவற்றை ஒரு பெரும் சொக்கப்பனையில் கொளுத்தித் தள்ளினாலும் தள்ளுவேன் என்று தோன்றுகிறது.

[1] நியூ யார்க் டைம்ஸின் கலை விமரிசகராகவும் நியூ கிரைடீரியன் சிற்றிதழ் பதிப்பாசிரியராகவும் பணியாற்றிய ஹில்டன் கிரேமர் கலை விமர்சனத்தில் இடது சாரி சார்புநிலைகளை வன்மையாக எதிர்த்தவர். ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைப் போராட்டங்களை “ஆசனவாய் அரசியல்” என்று ஏளனம் செய்த கிரேமர் ஒரு முறை கோர் விடாலின் எழுத்தை “ஆசனவாய் புணர்ச்சியின் துதிபாடுதல்” என்று நக்கலடித்தார். பதிலுக்கு விடால் கிரேமர் மற்றும் அவரது நண்பர்களின் கருத்து நிலைப்பாடுகளை “ஹோட்டல் ஹில்டன் கிரேமர்” என்று அழைத்தார்.

பே: ஆனால் ஜெ-ஆசிரியரை பெண்ணாக அடையாளப்படுத்துவதின் முக்கியத்துவம் மிகைப்படுத்தப் பட்டிருக்கிறது என்று நினைக்கிறீர்களா?

ப்ளூம்: ஓ! அதிகமாகவே மிகைப்படுத்தப் பட்டிருக்கிறது. ‘த நியூ யார்க் டைம்ஸ்’ பதிப்பித்த ஒரு பேட்டியில் அதி கூர்மையான ரிச்சர்ட் பெர்ன்ஸ்டீன், இவ்விஷயம் குறித்து முன்னதைக் காட்டிலும் மூர்க்கமாகி விட்டிருந்த எனது ஆழ்ந்த நம்பிக்கையை சற்று விரிவாகவே வெளிப்படுத்த அனுமதி கொடுத்தார். பிரதியிலேயே காணக் கிடைக்கும், அதாவது உளவியல் மற்றும் இலக்கிய ஆதாரங்களை வைத்துப் பார்த்தால், அவ்வாசிரியர் ஆணாக இருந்திருப்பதைக் காட்டிலும் பெண்ணாக இருந்திருக்கக் கூடிய சாத்தியங்களே அதிகம் என்று குறிப்பிட்டேன். மேலும், மீண்டும் முதலிலிருந்து தொடங்க முடியுமானால், ஆசிரியரின் பாலினம் குறித்த அனுமானங்களை தவிர்த்து விடுவேன் என்று உறுதியாகவே நம்புகிறேன். அது பெரும் கவனச் சிதறலை விளைவிக்கும் செந்நிற நெத்திலியாக உருமாறி, புத்தகத்தின் உண்மையான, சர்ச்சைக்குரிய, அனைவரையும் சீற்றமடையச் செய்திருக்க வேண்டிய பகுதிகளிலிருந்து – கடவுளுக்கும்- அதாவது இலக்கிய கதாபாத்திரமான யாவே அல்லது படைத்தோனுக்கும் – தோராவை பூர்த்தி செய்த திருத்தர்களின் கடவுளிற்கும், அவர்கள் வழியே வந்த யூத நெறிமுறை மரபு, கிருத்தவம், இஸ்லாம் மற்றும் அவற்றின் அனைத்து கிளைகளின் கடவுள்களுக்கும் துளிகூட சம்பந்தமில்லை என்ற கூற்றிலிருந்து – அனைவரின் கவனத்தையும் திசைதிருப்பியது.

பே : ஆனால் புத்தகத்தின் அப்பகுதி நெறிமுறை மரபைச் சேர்ந்த யூத விமரிசகர்களின் கவனத்தைக் கண்டிப்பாக ஈர்த்தது.

ப்ளூம்: நெறிமுறை யூத விமரிசகர்கள், குறிப்பாக திரு. ராபர்ட் ஆல்டர், மிக மோசமாக எதிர்வினையாற்றினார்கள். மற்றொரு நார்மன் பாட்ஹாரெட்ஸ் வகை விமர்சனம், அவரது அடியாளும் ஹோட்டல் ஹில்டன் கிரேமர் அளவுகோல்  விளம்பியுமான நீல் காஸடியால் எழுதப்பட்டது. (அபாரமான சர்ச்சையாளர் கோர் விடால் சந்தேகத்துக்குரிய அந்த அளவுகோல்களை ஹோட்டல் ஹில்டன் கிரேமர்[1] என்றுதான் எப்போதுமே அழைப்பார்). லோன் ரேஞ்சரின் சகா டோண்டோ வேடம் பூண்டிருக்கும் திரு. காஸடி, நெறிமுறை யூதத்தின் மீது நான் நிகழ்த்திய வன்மையான தாக்குதல் என்று அவர் அர்த்தப்படுத்திக் கொண்டதை திரு. ஆல்டரைக் காட்டிலும் தீவிரமாக கண்டனம் செய்தார். ஆமாம், இதே குற்றச்சாட்டை நான் பல தரப்பினரிடமிருந்து கேட்டுவிட்டேன். நியூஸ்டேயில் அதை விமர்சனம் செய்த அபத்தமான யூத சட்ட வித்தகக் கனவானும் அதில் சேர்த்தி. “எதை வைத்து மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் நகைமுரண் என்ற ஒன்று இருந்ததென்று ப்ரொஃபெஸர் ப்ளூம் கூறுகிறார்?” என்று பிரகடனம் செய்தார். அதுவே இந்தப் புத்தகத்தைப் பற்றி, ஏன் எந்தப் புத்தகத்தைப் பற்றியும்கூட, கூறப்பட்டதிலேயே மிக நகைச்சுவையான ஒற்றை வரியாகவும் இருக்கலாம்.

ஆனால் இது இன்னமும் முடிந்தபாடில்லை என்று நினைக்கிறேன். இது ஆரம்பம் மட்டுமே. சிம்ஃபொனி ஸ்பேஸ் நிகழ்வொன்றில் க்ளேர் ப்ளூமும் ஃப்ரிட்ஸ் வீவரும் வேதாகமத்தை உரத்த குரலில் வாசித்தார்கள். நான் பத்து நிமிடங்கள்  நிகழ்வின் ஆரம்பத்திலும் இறுதியிலும் பேசினேன். உணர்ச்சிவசப்பட்டு சற்று அதிகமாகவே பேசிவிட்டேன் என்று நினைக்கிறேன். கடைசி பத்து நிமிடங்களை, என்னை விமர்சித்த யூத நெறிமுறை விமரிசகர்களுக்கு பதிலளிப்பதற்கான சந்தர்ப்பமாக மட்டும் பயன்படுத்திக் கொள்ளாமல், சமகாலத்து யூத அறிவுஜீவித்தனத்தின் அடிப்படையான ஆன்மீகப் போதாமைகளைப் பற்றியும் பேசத் தொடங்கினேன். அதன்பின் அது ஒளிபரப்பவும் பட்டது. களேபரங்கள் வெடிப்பதற்கும் வாய்ப்பிருக்கின்றன. பல ராபைக்களும் யூத பணித்துறை அதிகாரிகளும் என்னைக் காவு வாங்குவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். .

பே: என்ன பேசினீர்கள்?

ப்ளூம்: உண்மை பேசுவதற்கான சந்தர்ப்பத்தை அளித்துக் கொண்டேன். அது எப்போதுமே பெரும் தவறுதான். ஹோலோகாஸ்ட் நம் மதத்தில் ஒரு அம்சமாக ஆகிவிட்டிருப்பதைக் கண்டு வருத்தப்படும் ஒரே யூத அறிவுஜீவியாக நான் மட்டுமே இருக்க முடியாது. கிருத்தவர்கள் ஜீசஸ் என்று அழைப்பதை அறுபது லட்சம் விதங்களில் கற்பனை செய்யும் தரிசனமும் எனக்கு பிடித்தமானதல்ல. இது யூதம் என்ற பெயரில் எனக்களிக்கப்பட்டால் அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியும் என்று என்னால் நம்ப முடியவுமில்லை. ஜே-ஆசிரியரின் கடவுளை, அவர் நம் அனைவரின் மூச்சாகவும் உயிர்ப்பாகவும் இருந்தவர் என்பதால், ஒரு போதும் என்னால் நம்ப முடியாமல் இருக்க இயலாது என்பதைக் கூறும் அனுமதியையும் எனக்களித்துக் கொண்டேன். இதற்கு நேர்மாறாக, ஹீப்ரூ வேதாகமத்தின் ஆசிரியராக அல்லாது பெரும்பாலும் தணிக்கையாளர்களாகவே பணியாற்றிய ரிடாக்டர்கள் எனப்படும் தொகுப்பாசிரியர்களும், குருமார் ஆசிரியர்களும், அவர்களை அடுத்து யூத, கிருத்துவ, இஸ்லாம் மரபுகளிலிருந்து வந்தவர்களும் நமக்கு அளித்தது தற்போது இலக்கிய மனோபாவம் அல்லது உயர் ஆன்மீகத்தை விழையும் ஒருவனுக்கு நிச்சயம்  ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாக இருக்க முடியாது என்று கூறினேன்.

பே: பொதுமக்களின் “பார்வையில்” இருப்பது எப்படி இருக்கிறது. ‘புக் ஆஃப் ஜே’-யே அதிவிற்பனை பட்டியலில் இடம்பெற்ற உங்கள் முதல் புத்தகம் அல்லவா?

ப்ளூம்: இலக்கிய விமர்சனம் அல்லது விரிவுரைப் புத்தகம் அதில் இடம் பெற்றிருப்பது இதுவே முதல் முறை என்று கூறுகிறார்கள். ஆனாலும் அது இன்பகரமான அனுபவமாக அமையவில்லை.

பே: எதனால் அப்படி கூறுகிறீர்கள் ?

ப்ளூம்: மொத்தத்தில், என் தொலைக்காட்சி வானொலி அனுபவங்கள் எனக்கு திருப்திகரமாக அமையவில்லை. என் பதிப்பகத்தின் போதாமைகளை ஈடுகட்டுவதற்காகவே அவற்றை ஏற்றுக் கொண்டேன். அதில் பணியாற்றியவர்கள் தங்களால் இயன்றதை திறம்படச் செய்தார்கள் என்றாலும் பணியாளர் மற்றும் நிர்வாகிகள் பற்றாக்குறை, தேவையான புத்தகங்களை நேரத்திற்கு பதிப்பிக்காதது, மிகவுமே போதாத விளம்பரத் திட்டம் என்று பல குறைகள்… எல்லா ஆசிரியர்களுமே குறைபட்டுக் கொள்வதுதான் என்றாலும், இது கண்கூடாகவே மோசமாக இருந்தது.

பே: போயும் போயும் குட் மார்னிங் அமெரிக்காவில் பங்கேற்றீர்கள் இல்லையா?

ப்ளூம்: குட் மார்னிங் அமெரிக்காவில் பங்கேற்றேன். லேரி கிங்கில் பங்கேற்றேன். இன்னும் பலதிலும்…முற்றிலும் வேறுபட்ட இரு அவதானிப்புகளுடன் திரும்பினேன் என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். முதலாவதாக, டிவியிலும் ரேடியோவிலும் என்னைப் பேட்டி எடுத்தவர்களின் மரியாதையும் தனிப்பட்ட பண்பாடும் மிகவுமே வியக்கும்படியாக இருந்தது. உண்மையில் பத்திரிகை நிருபர்களைக் காட்டிலும், கண்டிப்பாக புலமை மிக்கவர்கள் என்று அழைக்கப்பட்டாலும் கூலிக்கு கொலை செய்பவர்களையும் தாதாக்களையும் போல நடந்து கொள்ளும் கல்வித்துறை விமரிசகர்களைக் காட்டிலும், மிக நாகரீகமாக நடந்துகொள்ளும் கனவான்களும் சீமாட்டிகளும் அவர்கள். ஆனால், வாழ்நாள் முழுவதையும் படிப்பினை செய்வதில் கழித்துவிட்டு டிவி காமெராவின் பிரம்மாண்டமான வெற்றுக் கண்ணையும் ரேடியோ ஸ்டூடியோவின் வெறுமையையும் உணர்வுபூர்மாக ஏற்றுக் கொள்ள மிகக் கடினமாகவே இருந்தது. அவற்றின் மூர்க்கமான நிதர்சனமின்மை எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

பேட்டியாளார்: ரௌத்திரத்தின் அழகியல் பற்றி எழுதப்போவதாக குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

ப்ளூம்: ஆமாம். ரௌத்திரம் பழகுதலின் அழகியலை பற்றி. ஆனால் அறுபதுகளின் பின்விளைவுகளாக நிகழ்ந்ததே, ரௌத்திரம் பழகுவதை  அம்மாதிரியான அர்த்தத்தில் பேசவில்லை. மாக்பெத் மேலும் மேலும் கோபமுறுகிறானே, அந்த அர்த்தத்தில் கூறுகிறேன். சீற்றம் கொள்வதின் வெற்றிகரமான அல்லது காத்திரமான உருவகத்துடன் நாம் தீவிரமாக அடையாளப்படுத்திக் கொள்வது என்னை மிகவும் கவர்கிறது. அது எதனால் என்பதை அறிந்துகொள்ள விரும்புகிறேன். இறுதியில் நம் நிரந்தரமின்மையைக் குறித்தே சீற்றம் கொள்கிறோம் என்று நினைக்கிறேன். அத்தகைய சீற்றத்துடன் அடையாளப்படுத்திக் கொள்ளாமல் இருக்க முடியாது.

பே: ஏதோ ஒரு விதத்தில்  W.C. ஃபீல்ட்சையும் இவ்விஷயம் தன்னுடன் இணைத்து கொண்டு விடுகிறது இல்லையா?

ப்ளூம்: ஓ! நிச்சயமாக, சீற்றம் கொள்வதில் இருக்கும் அமோகமான நகைச்சுவை சாத்தியங்களை அவர் ஓயாது நிரூபித்துக் கொண்டிருந்தார் என்பதே அவரது மிகப்பெரிய தாக்கம். த ஃபேடல் க்ளாஸ் ஆஃப் பியர் என்ற அவரது குறும்படத்தை முதல் முறை பார்த்த அனுபவத்திலிருந்து நான் இன்னமும் முழுதாக மீளவில்லை. திரைப்படத்தின் உச்சமாகவே அதை நான் அடையாளப்படுத்திக் கொண்டிருக்கிறேன், கிரௌச்சோவின் ’டக் ஸூப்’ பையும் அது கடந்து செல்கிறது. த ஃபேடல் க்ளாஸ் ஆஃப் பியர் -ஐப் பார்த்திருக்கிறீர்களா? அதை விவரிப்பதற்கான விமர்சனத்திறன் என்னிடமில்லை. அனேகமாக, படம் முழுவதிலுமே, W.C.ஃபீல்ட்ஸ் ஸிதர் (zither) இசைக்கருவியை இசைத்தபடியே சக மாணவர்களின் வற்புறுத்தலால் குடிப்பழக்கம் இல்லாத துரதிர்ஷ்சம் வாய்ந்த தன் மகன் குடித்துவிட்டு மரித்ததைப் பற்றி பாடிக் கொண்டிருப்பார். அதன்பின் இரட்சண்ய சேனையைச் சேர்ந்த நங்கையொருத்தியை அவதூறு செய்வார். அவளோ தற்போது திருந்தி வாழும், காலை உயரமாக உயர்த்தி உதைக்கும் பாணியில் ஆற்றுகை செய்யும் கூட்டுப்பாடற் குழுவில் பணியாற்றுபவர் என்பதால் காலை உயர்த்தி அளித்த முதல் உதையிலேயே அவர் அதிர்ச்சியுற்று ஸ்தம்பித்து விடுகிறார். ஆனால் அதை இப்படி விவரிப்பதென்பது, மாக்பெத்தை அதிகாரவெறி பிடித்த ஒருவன் ராஜாவைக் கொலை செய்யும் கதையாக விவரிப்பதைப் போன்றது.

பேட்டியாளார்: ஆக, சீற்றப்படுத்தும் ஒரு விமரிசகர் என்பதற்கு மேலதிகமாக நீங்கள் ஒரு சீற்றமுறும் விமரிசகரும்கூட என்று கூறலாமா?

பேட்டியாளார்: சே! சே! சீற்றப்படுத்தும் விமரிசகரெல்லாம் கிடையாது. ஆனால் ஒரு விதத்தில் அப்படியுமே இருக்கலாம் என்றும் தோன்றுகிறது. ஆனால் மற்றவர்களெல்லாம் வயசாகிவிட்டதால் வாலை சுருட்டிக் கொண்டிருப்பதாலோ அல்லது அரசியல் சரிமைக்கு உட்பட்டவர்களாகவோ, சமூக மாற்றத்திற்கும் இலக்கியத்திற்குமிடையே இருக்கும் பிணைப்பை பறைசாற்றும் சமூக சீர்திருத்தவாதிகளாக இருப்பதில் நிறைவடைபவர்களாகவோ இருப்பதாலேயே நான் அப்படித் தோன்றுகிறேன். சீற்றமுறும்? இல்லை நான் சீற்றப்படுவதில்லை. தனிமனிதனாக நான் கோபப்படுவதில்லை. அதற்கெல்லாம் தற்போது நேரம் கடந்துவிட்டது. சீற்றப்படுவதை அனுமதித்தால் உண்மையிலேயே என் ஆயுள் குறைந்துவிடும் என்று நினைக்கிறேன். உணர்வுத்திடத்தை பொறுத்தமட்டில் முன்னர் இருந்த வலிமை தற்போது எனக்கில்லை. அது போன்ற சக்தி விரயத்தையெல்லாம் தாங்கிக் கொள்ளும் நிலையில் நான் இல்லை. அனைத்திற்கும் மேலாக, இப்போதெல்லாம் எதுவுமே என்னை ஆச்சரியப்படுத்துவதில்லை. உங்களுக்கே தெரியும், இலக்கியம்  அளவிற்கு மீறிய அபத்த நிலைகளை எந்த அளவுக்கு  எட்டிவிட்டதென்று. பல்கலைகளில் விமர்சனம் புதியதொரு கட்டத்தை தொடங்கியிருக்கிறது. அதில் 95 சதவீதத்துடன் எனக்கு எவ்வித உடன்பாடும் கிடையாது. அது ஸ்டாலின் இல்லாத ஒரு ஸ்டாலினிஸம். 1930, 1940-களிலிருந்த ஸ்டாலினியக் கூறுகள் அனைத்துமே 1990-களில் பல்கலைகளில் அறச்சீற்றம் என்ற போர்வையில் மீண்டும் நிறுவப்பட்டிருக்கிறது. சகியாமை, சுயப் பாராட்டுரைகள், மிகைப் பெருமிதம், சமயப் பகட்டு, கற்பனை சார்ந்த மதிப்பீடுகளிலிருந்து பின்வாங்குதல், அழகியல் துறப்பு . உண்மையில் இதையெல்லாம் அருவருத்துச் சீற்றப்படுவதால் ஒரு லாபமும் இல்லை. இறுதியில் இதற்கான முறிமருந்தை தங்களுக்குத் தாம் இவர்களே அளித்துக் கொள்வார்கள். ஏனெனில் தாங்கவொண்ணா சலிப்பால் ஒழிந்து போவார்கள். நானே இறுதியில் வெற்றி பெறுவேன். தற்போது எழுதிக் கொண்டிருப்பவர்களில், தான் படித்ததை, படித்ததில் பிடித்ததை, அது பழங்காலத்ததோ, நவீனமானதோ அல்லது புத்தம் புதியதோ, எதுவாக இருப்பினும் அதை: எவ்வளவு சிறப்பாக இருக்கிறது? எதைக்காட்டிலும் சிறப்பாக இருக்கிறது? ஒப்பு நோக்குகையில் எதைக் காட்டிலும் சிறப்பாக இல்லை? அதன் பொருள் என்ன? அதன் பொருளுக்கும் தரத்திற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா? எது நன்றாக அல்லது மோசமாக இருக்கிறது என்பது மட்டுமல்லாது எதனால் நன்றாக அல்லது மோசமாக இருக்கிறது? போன்ற கேள்விகளுக்கு எப்போதுமே உட்படுத்தும் விமரிசகர்களுள் நான் மட்டுமே சொல்லிக் கொள்ளும்படியானவன் என்று நினைக்கிறேன். (எவ்வளவுதான் ஆணவமாகவும் நாராசமாகவும் தொனித்தாலும் மற்ற ஒரு பெயர்கூட நினைவிற்கு வரவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்). என் முன்னோடியான திரு. ஃப்ரை இவை அனைத்தையுமே விமரிசனத்திலிருந்து ஒழித்துக்கட்ட முயற்சித்தார். அதே போல், அவரது பிளேடோனிய ஆதர்சத்துக்கு எதிராக ஒரு வகையான இருண்மை தோய்ந்த, காலம் சார்ந்த, உலகியல் தன்மையை அல்லது அத்தன்மையால் ஏற்படும் துயரங்களை இலக்கிய விமர்சனத்தில் மீண்டும் புகுத்த முயற்சித்தேன். தற்சமயத்தில், ஏன் ஜான்சன், ஹாஸ்லிட், காலத்திற்குப் பின் என்றுகூட சொல்லலாம், வேறெவரைக் காட்டிலும் வெளிப்படையாக, ‘எதனால் இதைப் பொருட்படுத்த வேண்டும்?’  என்ற கேள்வியை ஐயத்திற்கிடமின்றி நானே கேட்டிருக்கிறேன். நம்மை எதனால் பொருட்படுத்த வேண்டும் என்பதற்கும் நாம் எப்படி வாசிக்கிறோம் என்பதற்கும் ஏதோவொரு தொடர்பு கண்டிப்பாக இருந்தாக வேண்டும். இலக்கியத்தை இவ்விஷயங்களுடன் தொடர்புபடுத்தி இம்மாதிரி பேசி, எழுதுவது, தற்காலத்துக்கு ஒவ்வாததாகவோ, இலக்கிய விமர்சனத்திலேயே சேர்த்தியில்லை என்றோ, கழிவிரக்க அறச்சீற்றப்பள்ளிச் சார்பாளர்களுக்குத் தோன்றலாம். ஆனால் எவ்ரிபீடஸை (அவர் மட்டுப்படும் வகையில்) ஐஸ்கூலொசுடன் பக்க அணிமைப்படுத்தி விமர்சன கலையைத் கண்டுபிடித்த அரிஸ்டோஃபானெஸின் காலத்திலிருந்தே, அல்லது, பிளேடோவைக் குறித்த தனது மனக்கவலைகளை போக்கிக் கொள்ள ஹோமரைக் குறித்த பிளேட்டோவின் மனக்கவலைகளைப் பற்றிச் சிந்திக்க முயற்சித்த லாஞ்சினோஸின் காலத்திலிருந்தே,  மேலை இலக்கிய விமர்சனத்தின் முறைமைகளாக இவை இருந்திருக்கின்றன என்று நம்புகிறேன். இதைத்தான் இலக்கிய விமர்சனம் எப்போதுமே செய்து வந்திருக்கிறது. நமக்கு அது ஏதொவொரு வழியிலாவது பயனளிக்க வேண்டுமென்றால் இதற்குத்தான் நாம் திரும்பிச் செல்ல வேண்டும். தரமானது, தரக்குறைவு, எப்படி, எதனால், சார்ந்த கேள்விகளுக்கு அது பதிலளித்தாக வேண்டும். இலக்கியம் நம் வாழ்வுடன் எவ்வாறு சம்பந்தப்பட்டிருக்கிறது என்றும் நாம் எப்படி இருக்கிறோம் என்பதைப் பொருத்து அதன் பொருள் எப்படி வேறுபடுகிறது என்ற கேள்விக்கும் அது பதிலளித்தாக வேண்டும். மாபெரும் இலக்கியத்தின் கருணாரசத்தை விவாதிக்கவோ, ஒரு குறிப்பிட்ட படைப்பு நம்முள் பெரும் வலியை ஏன் ஏற்படுத்துகிறது அல்லது ஏற்படுத்தத் தவறுகிறது என்பதைப் பற்றி பேசுவதற்கோ சமகாலத்தில் என்னைத் தவிர வேறு விமரிசகரே இல்லை என்பது மிக வியப்பாக இருக்கிறது. இதெல்லாம் வெறும் தனிப்பட்ட அகநிலைச் சார்பாக புறந்தள்ளப்படுகிறது என்று சொல்ல வேண்டியதில்லை.

பே: ஹாஸ்லிட், ரஸ்கின், அல்லது பேட்டர், எழுதிய கட்டுரைகளைப் போல இன்னமும் எழுத வாய்ப்பிருக்கிறதா?

ப்ளூம்: பெரும்பான்மையானவர்கள் இல்லை என்றே கூறுவார்கள். இயன்றவரையில் முயற்சிக்கிறேன் என்பதை மட்டுமே என்னால் கூற முடியும். நான் சொல்லக்கூடியவற்றில் அதுவே துணிகரமானதும்கூட. யாரும் செவிமடுக்காவிடினும் அல்லது ஒரு சிலர் மட்டுமே மடுக்கிறார்கள் என்றபோதிலும் நானும் சொல்லிக் கொண்டேதான் இருக்கிறேன். விமர்சனம் இலக்கியத்தின் ஒரு வகைமையாக இருக்கவேண்டும், அல்லேல் அது ஏதுமில்லை. இலக்கிய வகைமையாக அல்லாது அதனால் உயிர்பிழைக்க முடியும் என்று தோன்றவில்லை. வேண்டுமானால் அதை ஒரு சிற்றிலக்கிய வகைமையாக கருதலாம், ஆனால் ஏன் அப்படிக் கூறுகிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. கவிதையோ அல்லது செய்யுள் எழுதுவதோ விமர்சனத்தைக் காட்டிலும் முன்னுரிமை பெற வேண்டும் என்ற கருத்து அதன் நேரடிப் பொருளில் எனக்கு அடிமுட்டாள்தனமாகவே படுகிறது. அப்படி சொல்வது வில்லியம் ஹாஸ்லிட்டைக் காட்டிலும் அவரது சமகாலத்தவரும் செய்யுள் எழுதியவருமான ஃபெலிசியா ஹெமன்ஸ் மிகவுமே காத்திரமான ஆளுமை என்று கூறுவதற்குச் சமம். அல்லது, நம் காலத்து ஃபெலிசியா ஹெமென்சான சில்வியா பிளாத்தை அண்மையில் மறைந்த வில்சன் நைட்டைவிட உயர்வான இலக்கிய ஆளுமையாக மதிப்பிடுவதற்குச் சமம். இது முற்றிலும் தவறென்பது வெளிப்படை. மிஸ் பிளாத் ஒரு மோசமான செய்யுளாசிரியர். நைட்டை படிப்பதோ எனக்கும் மகிழ்வூட்டுவதாகவும் பயனளிப்பதாகவும், சில சமயங்களில் ஆச்சரியமளிப்பதாகவும் அதிர்ச்சியூட்டுவதாகவுமே இருந்திருக்கிறது. இவை அனைத்துமே வெளிப்படைதான் என்றாலும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டுமென்பதும் வெளிப்படை. கவிதையை விட்டு விடுங்கள், செய்யுள் என்று அமெரிக்காவில் தற்போது எழுதி பதிக்கப்பட்டு கொண்டாடப்படுபவை அனைத்தையுமே அனேகமாக செய்யுட்களாகக்கூட கருத முடியாது. அவை வெறும் தட்டச்சு அல்லது சொற்செயலியைத் தட்டிக் கொண்டிருப்பதற்குச் சமம். சொல்லப் போனால், அனேகமாகவே அவை வெறும் பகட்டான பேச்சலங்காரம் அல்லது சமூக நலன் குறித்த அறச்சீற்றம் மட்டுமே. அதே போல் நாம் விமர்சனம் என்று அழைத்துக் கொண்டிருப்பது அனைத்துமே உண்மையில் அனேகமாக வெறும் பத்திரிகையியலே.

பே: அல்லது, நீங்கள் “சுலபமான இன்பங்கள்” என்று அழைக்கிறீர்களே, அவற்றுடன் இவையும் சேர்த்தியா? எவை சுலபமான இன்பங்கள்?

ப்ளூம்: நான் அக்கருத்தை என் நண்பரும் சமகாலத்தவருமான ஆங்கஸ் ஃபிளெட்சரிடமிருந்துதான் இரவல் பெற்றுக் கொண்டேன். அவரே அதை ஷெல்லியிடமிருந்தும் லாஞ்சினோசிடமிருந்தும்தான் பெற்றுக் கொண்டார். சில மிக நல்ல எழுத்தாளர்களால் சுளுவான இன்பங்களை மட்டுமே அளிக்க முடியுமென்பது நமக்குத் தெளிவாகவே தெரிகிறது. சமகாலத்தவர்களான இரு எழுத்தாளர்களை ஒப்பு நோக்குவோம் – ஹெரால்ட் பிராட்கியையும், ஜான் அப்டைக்கையும். அப்டைக், நான் எப்போதோ எழுதியது போல், பெரும் நடை கொண்டிருக்கும் குறும் நாவலாசிரியர். உண்மையிலேயே மிக அழகான, மிகவுமே போற்றத்தக்க நடை கொண்டிருக்கும் நடையாளர். நான் அவருடைய பல நாவல்களை படித்திருந்தாலும் ’த விச்சஸ் ஆஃப் ஈஸ்ட்விக்’கே எனக்கு பிடித்தமானது. ஆனால் பெரும்பாலும் அவர் சுலபமான இன்பங்களை அளிப்பதில்தான் தன்னை ஈடுபடுத்திக் கொள்கிறார். மெய்யான இன்பங்கள்தான் என்றாலும் அவை நம் அறிவாற்றலுக்கு சவாலளிப்பதில்லை. பிராட்கி, நிறைவாக செய்யாவிட்டாலும் அப்டைக்கை காட்டிலும் கணிசமான அளவிற்கு இதைச் செய்கிறார். தாமஸ் பிஞ்சன் சமீப காலமாக இல்லையென்றாலும் மிகக் கடினமான இன்பங்களை அளிக்க வல்லவராக இருக்கிறார். உண்மையில், ’வைன்லண்டை’ எழுதியது அவர்தான் என்பதை என்னால் முற்றிலும் நம்ப முடியவில்லை, மெல்வில், ஹாதோர்ன், ஜேம்ஸிற்குப் பிறகு வந்த காத்திரமான நாவலாசிரியரை எடுத்துக் கொள்ளுங்கள். அது நிச்சயமாக ஃபாக்னராகத்தான் இருக்க முடியும். அவரது மிகச் சிறப்பான நாவலான ’ஆஸ் ஐ லே டையிங்’கிற்கும் மிக மோசமான நாவலான ’எ ஃபேபில்’லிற்குமிடையே உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள். சுலபமான இன்பங்களைத் தவிர ’எ ஃபேபில்’லில் வேறெதுவுமே இல்லை. அவை இன்பங்கள்கூட கிடையாது. அவ்வளவு சுலபமாக இருப்பதால் அவை இன்புறுத்துவதில்லை. ஆபாசமான, அருவருப்பான வேறு எதுவாகவோ மாறிவிடுகின்றன. ஆனால் ’ஆஸ் ஐ லே டையிங்’ மிக கடினமான படைப்பு. டார்ல் பண்ட்ரனை உள்வாங்கிக் கொள்வது கணிசமான கற்பனைத் திறன் கோருகிறது. இதில் ஃபாக்னர் தன்னையே விஞ்சிவிடுகிறார். நம் காலத்தில் காணக் கிடைக்கும் உன்னதத்திற்கான அசல் உதாரணமாகவும் அது எனக்குத் தோன்றுகிறது. அல்லது அமெரிக்க கவிதையை எடுத்துக் கொண்டால்,  ‘தி ஐடியா ஆஃப் ஆர்டர் இன் கீ வெஸ்ட்’ மற்றும் அதற்கும் முன்னே வந்த ’ஸண்டே மார்னிங்’கின் சுலபமான இன்பங்களில் தொடங்கி மிகக் கடினமான இன்பங்களை அளிக்கும்  ‘நோட்ஸ் டுவொர்ட் அ சுப்ரீம் ஃபிக்‌ஷன்’ னூடே ‘த ஔல் இன் தி ஸாக்ரோஃபேகஸ்’ஸின் அளப்பறிய கடினங்களுக்கு வருவதையே ஒரு கவிஞராக வாலஸ் ஸ்டிவன்ஸ் வளர்ச்சி பெற்றதற்கான அடையாளமாக எடுத்துக் கொள்ளலாம். அவ்வளர்ச்சியுடன் கூடவே நடந்து செல்ல மிகத் தீவிரமான உழைப்பு தேவைப்படுகிறது. நீட்ஷாவும் பர்க்ஹார்ட்டும் வலியுறுத்திய, நான் அவர்களிடமிருந்து பெற்றுக் கொண்ட, ‘அகனிஸ்டிக்’  என்ற போட்டி முறைமையுடன் இது சம்பந்தப்பட்டிருக்கிறது. பிளேடோவில் தொடங்கி, மேலைச் சிந்தனையின் வரலாற்றினூடே ஒரு மதிப்பீட்டுத் தரம் இருந்திருக்கிறது. அதன்படி ஒரு இலக்கியப் படைப்பின் தரத்தைப் பற்றிப் பேசுகையில் உள்ளடக்கமாக “அதிகமாகவா, சமமாகவா, அல்லது குறைவாகவா?” என்ற கேள்வியையே கேட்கிறோம். இறுதியில், “என்னையே கடக்கச் செய்யும் ஒன்றிற்காக சுலபமான இன்பங்களைக் காவு கொடுக்க நான் தயாராக இருக்கிறேன்,” என்று வாசகனை கூறச் செய்யும் உந்துவிசையே இக்கேள்விக்கான பதில். கண்டிப்பாக இதுவே புதிரானதும், என்னைப் பொறுத்தவரையில் பலவிதங்களில் குறைபாடுகள் நிறைந்த மார்லோவின்  ‘த ஜூ ஆஃப் மால்டா’வை, ஷேக்ஸ்பியரின்  ‘த மெர்ச்செண்ட் ஆஃப் வெனிஸ்’ சிடமிருந்து வேறுபடுத்துவதாக இருக்க வேண்டும். ஆனால் ஐயப்பாடுள்ள ஷைலாக்கை காட்டிலும் பராபஸ்ஸே என்னை அதிகம் மகிழ்வூட்டுகிறான். என்றாலும் அவனளிக்கும் இன்பங்கள் சுலபமான இன்பங்களே என்பதையும் உணர்ந்திருக்கிறேன். ஷைலாக்கைப் பார்ப்பதில் கிட்டும் இன்பத்தை அனுபவிப்பதற்குள் ஷேக்ஸ்பியரிய உன்னதத்தை உள்வாங்கிக் கொள்வதற்கு இடையூறாக அமையும் மற்ற சில காரணங்கள் குறுக்கிடுகின்றன. கவிதையில் உன்னதத்தை பரிசோதிப்பதற்கான பிரமிப்பூட்டும் தேர்வாகவே த மெர்ச்செண்ட் ஆஃப் வெனிஸ்-சின் ஐந்தாவது அங்கத்தை அடையாளப்படுத்திக் கொள்கிறேன். அதில் பொருத்திக் கொள்வதென்பது நமக்கு சிக்கலான காரியமாகவே இருக்கிறது.

பே: அண்மையில் செல்சியா ஹவுஸ், பதிப்பித்த, ஒரு விதமான இலக்கியக் கலைக்களஞ்சியமாகப் பொருள்கொள்ளத்தக்க, கிட்டத்தட்ட ஐநூறு புத்தகங்கள் கொண்ட, வரிசையின் தொகுப்பாசிரியர் பணியை வெற்றிகரமாக செய்து முடித்திருக்கிறீர்கள்.

ப்ளூம்: இன்னும் செய்து முடிக்கவில்லை, வேகமும் சற்று குறைந்து விட்டது. அது ஒரு வினோதமான அனுபவமாக இருந்தது. ஒரு விதமான அபூர்வமான துரிதத்தில் என்னை அது இழுத்துச் சென்றது. அதே போல் மீண்டும் ஒரு முறை செய்ய முடியும் என்று தோன்றவில்லை; மேலும், அதில் எனக்கு விருப்பமும் இல்லை. ஆனால் நீடித்த வரையில் அது மிகத் தீவிரமாகவே இருந்தது. அதன் உச்சத்தில் ஒரு மாதம் இரண்டு நாளுக்கு ஒரு முன்னுரை என்ற கணக்கில், பதினைந்து முன்னுரைகள் எழுதிக் கொண்டிருந்தேன். அனைத்தையும் மீள்வாசிப்பிற்கு உட்படுத்தி பார்வைகளை படிகப்படுத்த வேண்டியிருந்தது. ஆனால் அப்படி எழுதுவது எனக்கு பிடித்தமானதே. அதிலிருந்து நிறையவே கற்றுக் கொண்டேன், ஏனெனில் ஒரு துளி நேரத்தையும் விரயம் செய்ய முடியாது என்ற நிலை. உட்கருவிற்கு உடனடியாக சென்று, ஏழிலிருந்து பன்னிரண்டு பக்கங்களுக்குள், புலமைத்தனத்தில் சுற்றி வளைத்து நேரத்தை வீணாக்காது, அதைப் பற்றி உண்மையில் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதை சொல்லிவிட வேண்டும்.

பே: இவ்வளவு விரைவாக எப்படி எழுதுகிறீர்கள்? உறக்கமின்மை ஒரு காரணமா?

ப்ளூம்: உறக்கமின்மையும் ஒரு காரணம். சிகிச்சையளித்துக் கொள்வதற்காகவே எழுதுகிறேன் என்று நினைக்கிறேன். இதைத்தான் உண்மையில் ஹார்ட் கிரேன் கற்றுத் தருகிறார். இதைப் பற்றி வில்லியம் எம்ப்சனுடன் ஒரு முறை பேசிக் கொண்டிருந்தேன். அவர் கிரேனை விமர்சித்ததே இல்லை; மேலும் கிரேனின் கவிதை தனக்குப் பிடிக்குமா பிடிக்காதா என்பதைக்கூட அவர் அறிந்திருக்கவில்லை. ஆனால் கிரேனின் கவிதையிலிருந்த நம்பிக்கை இழப்பிற்கு அருகாமையில் உருவாகும் மூர்க்கத்தனம் அவரைக் கவர்ந்தது. கவிதை தற்போது முட்டாள்களின் நிறைவளிக்காத விளையாட்டாகிவிட்டது என்பதையே கிரேனின் கவிதை காட்டுகிறது என்றும், ஒவ்வொரு கவிதையையும் தனது கடைசிக் கவிதையாக இருக்கக்கூடும் என்பது போல்தான் கிரேன் எப்போதுமே எழுதினார் என்றும் அவர் கூறினார். கிரேனைப் பற்றிய ஏதொவொரு உண்மையை அவர் கைப்பற்றிவிட்டார் என்றே தோன்றுகிறது; அதாவது, அதை எழுதி முடிக்கவில்லை என்றால் இறந்துவிடப் போவது போலவும், கவிஞராக மட்டுமல்லாது ஒரு தனிநபராக உயிர்பிழைப்பதே எப்படியோ அக்கவிதை ஒலிக்கப்படுவதைப் பொறுத்துதான் என்பது போலவும் அவர் ஒவ்வொரு பாடலையும் எழுதுகிறார் என்ற அர்த்தத்தில். கிரேனுடன் என்னை ஒப்புநோக்கும் அளவிற்கு எனக்கு துடுக்கில்லை. ஆனால் அவர் கவிதை எழுதிய விதத்தில்தான் நானும் விமர்சனம் எழுதுகிறேன் என்று நினைக்கிறேன். போய்க் கொண்டே இருப்பதற்காகவே எழுதிக்கொண்டு இருக்கிறோம், பித்து பிடித்தலைவதைத் தவிர்ப்பதற்காக. அடுத்த விமர்சனக் கட்டுரையை எழுத முடிவதற்காகவே ஒருவர் அதற்கு முந்தைய கட்டுரையை எழுதி முடிக்கிறார், அல்லது அடுத்த ஒன்றிரண்டு நாட்களை வாழ்ந்து முடிப்பதற்காக. ஒருகால் தீங்கு விலக்கும் செய்கையாகவோ அல்லது மரணத்தை ஒத்திப் போடுவதற்காகவோ கூட இருக்கலாம். நிச்சயமாகச்  சொல்ல முடியவில்லை. ஆனால் இதைத்தான் கவிஞர்கள் செய்கிறார்கள் போலிருக்கிறது. தங்கள் மரணங்களை ஒத்திப் போடுவதற்காகவே கவிதை எழுதுகிறார்கள்.

பே:  ‘ட்ரான்ஸ்ஃபெரன்ஸ் அண்ட் அதாரிட்டி’ என்ற தலைப்பில் ஃபிராய்டைப் பற்றி ஒரு பெரும் படைப்பைச் சிறிது காலமாக எழுதிக் கொண்டிருந்தீர்கள் இல்லையா? அது என்னவாயிற்று ?

ப்ளூம்: பெரிய, பழுப்பேறிக் கொண்டிருக்கும் கையெழுத்துப்படியாக இருந்து கொண்டிருக்கிறது. அதை முடித்திருப்பேனா என்று எனக்கு சரியாக தெரியவில்லை. ஆனால் செல்சியா ஹவுஸ் பதிப்பகத்தின் நியூ ஹேவன் தொழிற்சாலை மூடப்படுவதற்கு முன், ஐந்து வருடங்களுக்கு மேலும் மேலும் அம்முன்னுரைகள் எழுதுவதிலேயே என் பணி நேரம் செலவழிந்து விட்டது. அதற்காக நான் வருத்தப்படவில்லை, ஏனெனில் முதல் முறையாக என்னை ஒரு பொது இலக்கிய விமரிசகனாக உருவாக்கிக் கொள்வதற்கு அது வழி வகுத்தது. ஆனால் ஃபிராய்டை மூட்டைகட்டி வைக்க வேண்டியதாகி விட்டது. நாலைந்து வருடங்களில் அதன்மீது மீண்டும் கவனம் செலுத்துவேன் என்று தோன்றுகிறது. இன்னமும் ஃபிராய்டை பற்றி ஒரு புத்தகம் எழுதிவிட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால் அந்தப் புத்தகம் ’ட்ரான்ஸ்ஃபெரன்ஸ் அண்ட் அதாரிட்டி’ என்ற புத்தகமாக இருக்காது என்று நினைக்கிறேன். ஃபிராய்டைப் பற்றிய ஒவ்வொரு முக்கியமான கட்டுரை அல்லது தனிவரைவு நூலைப் பற்றியும் கருத்து சொல்லும் பிரம்மாண்டமான கையெழுத்துப்படி என்னிடம் இருக்கிறது, ஆனால் அதைப் பதிப்பிக்க எனக்கு விருப்பமில்லை. ஃபிராய்டை ஒரு புனித நூலாக பாவித்து எழுதுவதில் எனக்கு நாட்டமில்லை. இந்த விஷயத்தை நான் முழுமையாக மீள்பரிசீலனை செய்தாக வேண்டும். புத்தகத் தலைப்பே அப்பன் குதிருக்குள் இல்லை என்ற அறைகூவுவதை இப்பொது உணர்கிறேன். ஃபிராய்டின் பிரதியுடன் எனக்கிருந்த மனச்சிக்கல்களின் இடமாற்றீடு உறவை என்னால் சரியாக பேண முடியவில்லை; மேலும் அது என் மீது எவ்வளவு ஆதிக்கம் செலுத்த வேண்டும் அல்லது வேண்டாம் என்பதை என்னால் சரியாக நிர்ணயிக்க முடியவில்லை. இச்சிக்கலால் பின்னடைவு அடைந்தேன் என்று கூறலாம், ஒரு விதமான, கந்தலாகிவிட்ட, ஒன்றுக்கும் உதவாத வெள்ளை யானையாக அது மாறிவிட்டது. இங்குதான் பரணில் இருக்கிறது – எழுநூறு எண்ணூறு பக்கங்களுக்கு நீளும் தட்டச்சுப் பிரதி. ஆனால் நான் பதிப்பித்ததை காட்டிலும் கையெழுத்துப்படியில் கைவிட்ட புத்தகங்களும் கட்டுரைகளுமே அதிகம் என்று நினைக்கிறேன். பரண் அவற்றால் நிரம்பி வழிகிறது. இறுதியில் அவற்றை ஒரு பெரும் சொக்கப்பனையில் கொளுத்தித் தள்ளினாலும் தள்ளுவேன் என்று தோன்றுகிறது.
(தொடரும்)

[1] நியூ யார்க் டைம்ஸின் கலை விமரிசகராகவும் நியூ கிரைடீரியன்  சிற்றிதழ் பதிப்பாசிரியராகவும் பணியாற்றிய ஹில்டன் கிரேமர் கலை விமர்சனத்தில் இடது சாரி சார்புநிலைகளை வன்மையாக எதிர்த்தவர். ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைப் போராட்டங்களை “ஆசனவாய் அரசியல்” என்று ஏளனம் செய்த கிரேமர் ஒரு முறை கோர் விடாலின் எழுத்தை “ஆசனவாய் புணர்ச்சியின் துதிபாடுதல்” என்று நக்கலடித்தார். பதிலுக்கு விடால் கிரேமர் மற்றும் அவரது நண்பர்களின் கருத்து நிலைப்பாடுகளை “ஹோட்டல் ஹில்டன் கிரேமர்” என்று அழைத்தார்.

Series Navigation<< விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம்விமர்சனத்தின் நிலைத்த தரிசனம்: ஹெரால்ட் ப்ளூம் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.