சூழ்ந்தவையெல்லாம்
தெளிவின்றி தெரியும்
வேறந்த ஓசையும்
செவியுள் புகாது
காண்பதெல்லாமே
அழகோவியமாய் தோன்றும்
உள்ளும் புறமும்
மென்குளுமை படரும்
வானெங்கும் மின்னொளி விட்டுவிட்டுச் சுடரும்
காத்திருப்பு வீணல்லவென்ற
எக்களிப்பு பொங்கும்
வருவதற்கான
அறிகுறிகளெல்லாம் அமைகிறது இனியதாகவே
பொழிந்தபின்தான்
தெளியும் …
வாழவைக்கிறதா அன்றி
அழித்துக் கடக்கிறதா என
காதலுக்கும் மழைக்கும்
வேறுபாடு ஏதுமில்லை
பருவம் தொடங்குவதில்

அருமை !!!