கிரவுட் ஸ்ட்ரைக் – உக்ரெயின் நாடும் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப்பும்

உக்ரெயின் நாட்டு அதிபரும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பும் பேசிக் கொண்டார்கள்.

அமெரிக்காவின் உளவுப்பிரிவைச் சேர்ந்த ஒருவர், அதிபர் டிரம்ப் உக்ரேன் நாட்டை சேர்ந்த அரசியல் தலைவரான ஜெலன்ஸ்கியுடன் தொலைப்பேசி உரையாடல் மேற்கொண்டதாக முறையாகப் புகார் வைத்தார்.

அதிபர் டிரம்ப் முன்னாள் அமெரிக்கத் துணை அதிபரான ஜோ பிடென் மற்றும் அவரது மகன் ஹண்டர் ஆகிய இருவர் மீதும் உக்ரேன் விசாரணை செய்ய வேண்டும் என்றும் , அவ்வாறு செய்யவில்லையெனில் அந்நாட்டுக்கு அழைத்து வரும் ராணுவ உதவியை அமெரிக்கா நிறுத்திவிடும் என்று அச்சுறுத்தியதாகவும் ஜனநாயக கட்சியின் குற்றம்சாட்டுகின்றனர்.

ட்ரம்ப் என்ன சொன்னார்?

“ I would like you to find out what happened with this whole situation with Ukraine, they say Crowdstrike… I guess you have one of your wealthy people… The server, they say Ukraine has it. ”

Breaking down the Trump-Ukraine memo's Crowdstrike

“உக்ரெயினில் இந்த விஷயத்தில் என்ன நடந்தது என்பதை நீங்கள் கண்டுபிடிப்பதை விரும்புகிறேன். கிரவுட் ஸ்டிரைக் என்கிறார்கள்… உங்களிடம் இருக்கும் செழிப்பான மக்களில் ஒருவர்… அந்த வழங்கி உக்ரெயினிடம் இருக்கிறது”

நான் பேசும்போதும் கோர்வையாகப் பேசுவதில்லை. ஒன்றை நினைப்பேன். அங்கிருந்து வேறெங்கோ தாவுவேன். பிறிதொன்றை சொல்வேன். மீண்டும் துவங்கிய இடத்திற்கே வருவேன். இப்பொழுது கூட நல்வழி ஔவையார் நினைவிற்கு வருகிறார்… சொல்லிவிடுகிறேன்:

ஒன்றை நினைக்கின் அதுஒழிந்திட் டொன்றாகும்
அன்றி அதுவரினும் வந்தெய்தும்-ஒன்றை
நினையாத முன் வந்து நிற்பினும் நிற்கும்
எனையாளும் ஈசன் செயல்.

இந்தப் பதிவின் தலைப்பிற்கே வந்துவிடுவோம். அமெரிக்க ஜனாதிபதி சொல்லும் கிரௌட்ஸ்ட்ரைக் என்பது யார்? என்னது அது? அவர்களின் துப்பறியும் திறன் குறித்தும், கணினியில் ஆராய்ந்து கண்டுபிடிக்கும் வித்தை குறித்தும் டிரம்பி நிறைய பகிர்ந்திருக்கிறார். ஒரு பணக்கார உக்ரெயினியன் இந்த கிரவுட் ஸ்ட்ரைக்கை நடத்துகிறார். அந்த செல்வந்தரின் செர்வர் ரொம்ப உக்கிரமானது என்கிறார்.

யார் இந்த கிரவுட் ஸ்ட்ரைக்

கிரவுட்ஸ்ட்ரைக் என்பது மின்வெளி பாதுகாப்பு நிறுவனம். கொந்தர்கள் உங்கள் கணினிகளை எவ்வாறு தாக்குவார்கள் என்பதை பத்திரமாக கண்காணித்து துப்பு சொல்வார்கள். உங்களை சீன நாடோ, இரானிய தேசமோ வேவு பார்த்து சந்தேகாஸ்தபமான சங்கடங்கள் நேர்ந்தால் கிரவுட் ஸ்டிரக்கை நாடுவீர்கள். கண்ணும் கருத்துமாக பூட்டி வைக்கப் பட வேண்டிய இராஜாங்க ரகசியங்கள் திருடு போனாலோ, திருடு போகும் நிலையில் உள்ளதோ என்று ஆராய வேண்டுமா? உங்களுக்கு கிரௌட்ஸ்ட்ரைக் தேவை.

டொனால்டு டிரம்ப் ஏன் கிரவுட் ஸ்ட்ரைக்கைக் குறித்துப் பேசினார்?

அமெரிக்காவில் 2016ல் அதிபர் பதவிக்கான தேர்தல் நடந்தது. அதில் ஹில்லரி க்ளிண்டன் மண்ணைக் கவ்வினார். அவரின் தனிப்பட்ட மின்னஞ்சல்கள் களவு போனதால் தோல்வியைத் தழுவினார். சொந்த மின்னஞ்சலைக் கூட பாதுகாப்பாக வைத்துக் கொள்ளாதவர், எவ்வாறு நாட்டை பாதுகாப்பாக வைத்துக் கொள்வார் என கேள்வி எழுப்பினார் டிரம்ப். மேலும் அந்த ரகசிய அஞ்சல்களில் விவகாரமானக் கருத்துகளை அனுப்பியிருந்தார் ஹில்லாரி கிளிண்டன்.

ஜனநாயகக் கட்சியின் வழங்கிகளை எந்தக் கொந்தர் களவு கொண்டார் என்பதை கிரவுட் ஸ்ட்ரைக் ஆராய்ந்தது. அவர்களின் ஆராய்ச்சியின் முடிவில் அந்தத் திருட்டுக்கு ருஷியாவே காரணம் என்பதை ஆதாரபூர்வமாக நிரூபித்து குற்றஞ்சாட்டினார்கள்.

டிரம்ப் ஆதரவாளர்களுக்கு இந்த செய்தி கசப்பைத் தந்தது. இது ஜனநாயகக் கட்சியின் உள் வேலை. அல்லது கிளிண்டன் குழுவிற்கு எதிரணியினரின் செயல் என்று நினைக்கிறார்கள். ட்ரம்ப்பிற்காக ரஷியா இந்த மாதிரி காரியம் எல்லாம் செய்திருக்காது என்று திடமாகக் கருதுகிறார்கள்.

அதாவது டிரம்ப்பிற்கு எதிராக இயங்கும் சக்திகளில் கிரவுட் ஸ்ட்ரைக்கும் ஒன்று. அவர்களும் ஜனநாயகக் கட்சியின் அடியாள்களில் ஒருவர். கிரௌட் ஸ்டிரைக்கிற்கு குடியரசுக் கட்சியும் டொனால்ட் ட்ரம்ப்பும் எட்டிக்காய்.

உதவி: Errata Security: CrowdStrike-Ukraine Explained

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.